অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

குழந்தைகள் பாலியல் கொடுமை தடுப்பு சட்டம், 2011

குழந்தைகள் பாலியல் கொடுமை தடுப்பு சட்டம், 2011

குழந்தைகள் பாலியல் கொடுமை தடுப்பு சட்டம்

இந்தியாவில் குழந்தைகளிடம் பாலியல் வன்முறை, சித்ரவதை, ஆபாச படம் எடுத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் இந்திய அரசால் குழந்தைகள் பாலியல் கொடுமை தடுப்பு சட்டம் (Protection of Children Against Sexual Offences Bill, 2011) கொண்டு வரப்படவுள்ளது.

முக்கிய கூறுகள்

  1. இந்த சட்டத்தின் படி ஒருவருக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூபாய் 50000ம் அபராதம் வசூலிக்கலாம்.
  2. வாய்வழி பாலியல் உறவுக்கு குறைந்தது 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50000 ரூபாய் அபராதமும் வசூலிக்கப்படும்
  3. குழந்தைகளிடம் தவறான முறையில்(Fondling) நடக்கும் பெரியவர்களின் செயல்கள் பாலியல் தொந்தரவாக கருதப்படும். இச்செயல்களுக்கு குறைந்தபட்ச தண்டனையாக 3 வருடம் சிறை தண்டனை விதிக்கலாம்
  4. இச் சட்டத்தின் பகுதி 7ல் 16 முதல் 18 வயது வரை உள்ளவர்கள் தங்கள் சுய விருப்பத்தின் பேரில் உறவு வைத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது
  5. சிறுவர்களுக்கான பாலியல் தொல்லைகளை தடுக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது
  6. அனாதை ஆசிரமங்கள், சிறுவர் காப்பகங்கள், போன்ற இடங்களில் குழந்தைகளை கவனிப்பவர்கள் குழந்தைகளின் காப்பாளர்களாக கருதப்படுவார்கள். அவர்கள் குழந்தைகளிடம் தவறான முறையில் நடக்கும் பட்சத்தில் அது அவலமாக கருதப்படும்(aggravated offence). பாதுகாப்பு துறை, காவல்துறை, அரசு ஊழியர்கள், குழந்தைகள் காப்பகத்தின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள், மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவை இந்த நம்பிக்கைக்குரியவர்கள் என்ற பட்டியலில் வருகிறார்கள்.
  7. இவ் அவலங்களை புரிபவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் ஆகியவர்கள் மீது பாலியல் குற்றங்கள் புரிபவர்களுக்கு 12 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை வழங்கப்படும்.
  8. குழந்தைகளின் ஆபாசப் படங்கள் வைத்திருப்பதும் அதை ஊடகங்களில் பயன்படுத்துவதும் தண்டனைக்குரிய சட்டமாக கருதப்படும். மேலும் ஊடகங்கள் மற்றும் புகைப்படம் எடுக்கும் நிலையங்கள் குழந்தைகளுகு எதிரான பாலியல் குற்றம் இழைக்கப்படும் தெரிந்த தகவல்களை அரசுக்கு தர அறிவுறுத்தப்படுகிறார்கள். தகவல் தராத பட்சத்தில் அது குற்றமாக கருதப்படும்
  9. இந்த புதிய சட்டம் குழந்தைகளை எல்லா விதமான பாலியல் குற்றங்களிலிருந்தும் பாதுகாக்கின்றது
.ஆதாரம் : Protection of Children Against Sexual Offences

கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate