பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தகவல்களை அணுகும் செயல்முறை

தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை அணுகும் செயல்முறை பற்றி இங்கு விளக்கப்பட்டுள்ளன.

தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை அணுகும் செயல்முறை

 1. எந்த பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி தேவைப்படும் தகவலைப் பெற்றுக்கொள்ளலாம். (அரசு நிறுவனம்/அரசு உதவிபெறும் நிறுவனம்)
 2. விண்ணப்பம் கைகளால் எழுதப்படலாம் அல்லது தட்டச்சு செய்யப்படலாம். www.vikaspedia.in என்ற இணைப்பிலிருந்து விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
 3. விண்ணப்பங்கள் ஆங்கிலம், இந்தி அல்லது எந்த மாநில மொழியிலாவது சமர்ப்பிக்கலாம்
 4. பின்வரும் தகவல்களோடு மனுவை தரவேண்டும்.
  1. மனுவைப் பெற்றுக்கொண்ட துணை பொது தகவல் அதிகாரி (APIO) அல்லது பொதுத்தகவல் அதிகாரியின் (PIO) பெயர்.
  2. பொருள்: தகவல் அறியும் சட்டம் பகுதி 6(1) இன் படி மேல் முறையீட்டுக்கான விண்ணப்பம்.
  3. பொதுத்தகவல் அதிகாரியிடமிருந்து எதிர்பார்க்கும் தகவல்கள்.
  4. விண்ணப்பதாரரின் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர்
  5. பிரிவு SC, ST & OBC
  6. விண்ணப்பக் கட்டணம்.
  7. வறுமைக்கோட்டிற்கு கீழ் நீங்கள் (BPL) வசிப்பவரா? ஆம்/இல்லை
  8. கைபேசி எண் (mobile no) மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் (இரண்டும் கட்டாயமில்லை) அஞ்சல் முகவரி.
  9. தேதி மற்றும் இடம்.
  10. மனுதாரரின் இடம்.
  11. மனுதாரரின் கையொப்பம்
  12. இணைக்கப்பட்டுள்ள ஆவணங்களின் பட்டியல்..
 5. மனு செய்வதற்குமுன் துணை பொதுதகவல் அதிகாரி/பொதுத்தகவல் அதிகாரியின் பெயர், கூறப்பட்டுள்ள கட்டணம் மற்றும் கட்டணம் செலுத்தப்பட வேண்டிய முறை ஆகியனவற்றைச் சரிபார்த்துக்கொள்ளவும்.
 6. தகவல் அறியும் சட்டம் மூலம் தகவல் அறியும் மனுவினுக்கான கட்டணம் இருந்த போதிலும், தாழ்த்தப்பட்டவர்கள், மலைஜாதியினர் மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வசிப்பவர்கள் ஆகியோருக்கு மனுவினைப்பெற கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.
 7. கட்டண விலக்கு வேண்டுபவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள், மலை சாதியினர் மற்றும் வறுமை கோட்டின் கீழ் வசிப்பவர்கள் என்பதற்கான சான்றிதழைச் சமர்ப்பிக்கவேண்டும்.
 8. மனுக்களை நேரிலோ அல்லது அஞ்சலிலோ சமர்ப்பிக்கலாம். அஞ்சலில் அனுப்புவதாக இருப்பின் பதிவுத்தபாலில் அனுப்ப வேண்டும். கூரியர் மூலம் (courier) அனுப்புவதை அறவே தவிர்க்க வேண்டும்.
 9. விண்ணப்பம்/மனுவினை இரண்டு நகல் எடுக்கவும். (அதாவது, மனு, பணம் கட்டியதற்கான ரசீது, நேரில் அல்லது அஞ்சலில் மனு அனுப்பப்பட்டதற்கான ஆதாரம் ஆகியன) அவைகளை பின்னாள் ஒப்பிடுதலுக்காக (future reference) பத்திரமாக வைத்திருக்கவும்.
 10. நேரில் உங்களது மனுவை சமர்ப்பித்திருந்தால் அலுவலகத்தில் தேதியும் முத்திரையும் கூடிய ரசீதைப்பெற்று மிகக் கவனமாக வைத்திருக்கவும்.
 11. கேட்ட தகவலைத் தரவேண்டிய காலம், பொதுத் தகவல் தொடர்பு அதிகாரி மனுவை பெற்றுக் கொண்ட நாளிலிருந்து தொடங்குகிறது.
பின் வருவனவற்றையும் கவனத்தில் கொள்க

வ. எண்

சூழல்
தகவலைத் தரவேண்டிய கால அவகாச எல்லை
1 சாதாரணமாக தகவலைத் தெரிவிக்க 30 நாள்
2 கேட்கப்படும் தகவல் ஒரு மனிதனின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தைக் குறித்ததாக இருப்பின் 48 மணி நேரம்
3 துணை பொதுதகவல் அதிகாரி(APIO) மனுவைப் பெற்றிருந்தால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரு சூழல்களுக்கான கால அவகாசத்துடன் மேலும் 5 நாள் சேர்த்துக்கொள்ளப்படும் (30 நாள்+5 நாள்)/48 மணி நேரம் + 5 நாள்)

தகவல் கோரும் விண்ணப்ப படிவம்

தகவல் பெறும் உரிமைச் (ஆர்டிஐ) சட்டப்படி, தகவல் பெறுவது எப்படி?

மாதிரிக் கேள்விகள்

மாதிரிக் கேள்விகள் (உங்களது விருப்பத்திற்கேற்றாற்போல, தேவைப்படும் மாற்றங்கள் செய்துகொள்ளலாம்)

1. எனது விண்ணப்பம்/கணக்குத் தகவல் அறிக்கை/மனு/புகாரின் மேல் எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைத் தேதிவாரியாகக் குறிப்பிடும்படி வேண்டுகிறேன். உதாரணமாக, எனது விண்ணப்பம்/கணக்குத் தகவல் அறிக்கை/மனு/புகார் எப்போது, எந்த அதிகாரியிடம் போய்ச் சேர்ந்தது? அந்த அதிகாரியிடம் எவ்வளவு காலம் இருந்தது? இந்த காலகட்டத்தில் அவர் அதன் மேல் என்ன நடவடிக்கை எடுத்தார்?.

2. எனது விண்ணப்பம்/கணக்குத்தகவல் அறிக்கை/மனு/புகாரின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளின் பெயர் என்ன? அவர்களது பதவிகளின் பெயர்கள் என்ன? ஏதாவதொரு அதிகாரி நடிவடிக்கை ஏதும் எடுக்காமல் இருக்கிறாரா?

3. தங்களது பணியைச் செய்யாமல் பொதுமக்களைத் தொந்திரவிற்கு உள்ளாக்கும் இந்த அதிகாரிகளுக்கு எதிராக என்ன நடிவடிக்கை எடுக்க முடியும்? இந்த நடவடிக்கை எடுக்க எவ்வளவு காலமாகும்?

4. இப்போதைய நிலையில் எனது வேலை எப்போது முடியும்?

5. என்னுடைய விண்ணப்பம்/கணக்குத் தகவல் அறிக்கை/மனு/புகார் உங்களால் பெற்றுக் கொண்ட பின்னர், உங்களிடம் விண்ணப்பம்/கணக்குத்தகவல் அறிக்கை/மனு புகார்/ ஆகியவற்றைக் கொடுத்த அனைத்து நபர்களின் பட்டியலையும் தயவு செய்து தெரியப்படுத்துங்கள். இந்தப் பட்டியலில் கீழ்க்கண்ட தகவல்கள் இருக்கவேண்டும்.

* விண்ணப்பதாரரின் / வரி செலுத்துபவரின் / மனுதாரரின் / பாதிக்கப்பட்டவரின் பெயர் மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட ரசீதின் எண்.

* விண்ணப்பம் / கணக்கு தகவல் அறிக்கை / மனு / புகார்-ன் தேதி.

* அவருக்கான பிரச்சினை தீர்க்கப்பட்ட தேதி.

6. மேற்படி விண்ணப்பங்கள்/கணக்குத்தகவல் அறிக்கைகள்/மனுக்கள்/புகார்கள் ஆகியவற்றில் அவற்றுக்கான வழங்கப்பட்ட ரசீதின் (பெறுகை ஒப்புதல் சீட்டு) எண் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகள் அடங்கிய ஆவணங்களின் நகல்கள் அல்லது அச்சுப் பிரதிகளை தயவு செய்து வழங்கவும்.

7. எனது மனுவை நீங்கள் பெற்றுக் கொண்ட பின்னர், பெறப்பட்ட விண்ணப்பங்கள் / கணக்குத் தகவல் அறிக்கைகள் / மனுக்கள் / புகார்கள் ஆகியவற்றில் எதிலேனும் வரிசைக்கு முன்னதாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அதையும், அதற்கான காரணங்களையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

8. இவ்வாறு நடந்திருந்தால் இது குறித்து எடுக்க வேண்டிய ஒழுங்கு நடவடிக்கைக்கான விசாரனை எப்போது நடைபெறத் தொடங்கும்?

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெறும் நடைமுறை

பாண்டிச்சேரி யூனியன் பிரதேசம்

இப்போது நீங்கள் உங்களது ஆர்டிஐ விண்ணப்பத்தை வெற்றிகரமாக எழுதி/தயார் செய்து விட்டீர்கள். உங்களது விண்ணப்ப மனுவை அதற்கான கட்டணத்துடன் கீழ்க்காணும் இரண்டு வழிகளில் ஏதாவது ஒன்றின் மூலம் அனுப்பலாம்.
1) தபால் மூலமாக: அனுப்ப வேண்டிய அரசு அலுவலகத்தின் கணக்கு அதிகாரிக்கு ரூ.10/- வரையோலை/வங்கியாளர் காசோலையை இணைத்து அவ்வலுவலகத்தின் தகவல் தொடர்பு அதிகாரிக்கு (பி.ஐ.ஓ.) அனுப்பலாம்.

(2) நேரடியாக: நீங்கள் நேரடியாகவோ (அல்லது மற்றொருவரை அனுப்பியோ) சம்பந்தப்பட்ட அரச அலுவலகத்திற்கு சென்று, அங்கே உங்களது மனுவை அவர்களிடம் அளித்து, அதற்கான கட்டணத்தை அதே அலுவலகத்தில் பணமாக அளிக்கலாம்.

தமிழ்நாடு

உங்களது ஆர்டிஐ விண்ணப்பத்தை வெற்றிகரமாக எழுதி/தயாரித்து விட்டீர்கள். உங்களது விண்ணப்பத்தை அதற்கான கட்டணத்துடன் பின்வரும் இரண்டு வழிகளில் எதன் மூலமாகவாவது அனுப்பலாம்.

1) தபால் மூலமாக: அனுப்பவேண்டிய அரச அலுவலகத்தின் தலைமைக் கணக்கு அதிகாரியின் பேருக்கு ரூ. 10/- வரையோலை அல்லது வங்கியாளர் காசோலை அல்லது ரூ. 10/- க்கு கோர்ட் ஸ்டாம்ப் எடுத்து உங்களது மனுவுடன் இணைத்து தபால் மூலம் அனுப்பலாம்.

2) நேரடியாக: நீங்களே நேரடியாகவோ அல்லது மற்றொருவர் மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரில் சென்று அங்கே உங்களது மனுவை அளித்து, அதற்கான கட்டணத்தைப் பணமாக அதே அலுவலகத்தில் நேரடியாகச் செலுத்தலாம்

இணையதள முகவரி : http://www.tn.gov.in/rti/sic.htm

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை பெற விண்ணப்பிப்பது எப்படி?

- அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும், பதில்களும்

கேள்வி: எங்கே, எவ்வாறு முறையிடுவது ?
பதில்

 • மத்திய அரசு அதிகாரிகள் சம்மந்தமான தகவல் பெற கீழ்கண்ட முகவரியில் உள்ளோரை தொடர்பு கொள்ளலாம்

மத்திய தகவல் ஆணையம்,
ஆகஸ்டு கிராந்தி பவன்,
பிகாஜி காமா வளாகம்,
புதுடெல்லி 110066
வலைதளம் : www.cic.gov.in

 • மாநில அரசு அதிகாரிகள் சம்பந்தமான தகவல் பெற, அந்தந்த மாநில தகவல் ஆணையத்தை அணுகி, விண்ணப்பங்களை கொடுக்கலாம்
 • மாநில தலைநகரத்தில் இருக்கும் தலைமை அதிகாரிகள் (தலைமைச் செயலாளர், துறையின் செயலாளர்) தலையீடுமாரு, அவர்களிடமும் விண்ணப்பிகலாம். இவ்வாரு செய்வதன் மூலம், தகவல் கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
 • முறையீடு அனுப்பியவுடன், அது பதிவு செய்யப்பட்டுள்ளதா, இல்லையா, பதிவு எண், நாள், அதன்மீது அப்போதைய நடவடிக்கை நிலவரம் போன்றவற்றை இது தொடர்பான வலைதளத்தில் பார்க்கவும்.
 • பொது தகவல் அலுவலர், மேல் முறையீட்டு முதன்மை அலுவலர்களுக்கும் கூடவே மத்திய தகவல் ஆணையம் மற்றும் மாநில தகவல் ஆணையம் ஆகியவற்றிற்கும் மனுவின் பிரிதியை அனுப்பலாம்.
 • மனுதாரருக்கு,  இரண்டாம் மற்றும் இறுதியான முறையீட்டு கோரிக்கையாடு சேர்த்து மனுவையும் கொடுக்கும் வசதி உண்டு.

கேள்வி : முறையீடுகளுக்கு ஏதேனும் வரையறுக்கப்பட்ட விண்ணப்பங்கள் உள்ளனவா? முறையீட்டில் என்ன மாதிரியான கோரிக்கைகள், குறைகள் தெரிவிக்கப்படலாம்?

பதில்:

 • மத்திய தகவல் ஆணையம் மற்றும் சில மாநில தகவல் ஆணையங்கள் குறிப்பிட்ட சில தகவல்களை மனுவுடன் அளிக்க வேண்டும் என வரையறுத்துள்ளது.
 • சில மாநில தகவல் ஆணையங்களிடம் வரையறுக்கப்பட்ட விண்ணப்பபடிவங்கள் உள்ளன
 • தகவல்கள் குறிப்பிட்ட காலவறையறைக்குள் கிடைக்கப் பெறாவிட்டால், பொதுமக்கள், தகவல் அலுவலர், முதன்மை மேல் முறையீட்டு அலுவலர், ஆகியோருக்கு, தண்டனை அல்லது குறித்த நேரத்தில் தகவல் பெற முடியாமைக்கு ஈட்டுத் தொகை ஆகியன வேண்டியும் விண்ணப்பம் செய்யலாம்.
 • வாழ்க்கை மற்றும் விடுதலை சம்பமந்தமான முறையீடுகளை “தெளிவாக” வாழ்க்கை மற்றும் விடுதலை-அவசரம் என அடிக்கோடிட்டு முறையீட்டை விண்ணப்பிக்கலாம். இது முன்னுரிமை அடிப்படையில் (கால தாமதம் இன்றி) உடனடியாக பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். மாநில தகவல் ஆணையத்துடன் மின் அஞ்சல் வழி, அடிக்கடி தொடர்பு மிகவும் பயனுள்ளது.

கேள்வி : முறையீடு செய்வதற்கு ஏதேனும் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா?
பதில்:

 • மத்திய தகவல் ஆணையம் முறையீடு செய்வதற்கு கட்டணம் வசூலிப்பதில்லை. ஆனால் சில மாநில தகவல் ஆணையங்கள் இதற்கு கட்டணம் வசூலிப்பதுண்டு

கேள்வி : முறையீட்டு விண்ணப்பத்திற்காண பதில்களை எவ்வாறு பெறலாம் ?
பதில் -

 • சில நேரங்களில் மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி அல்லது முதன்மை மேல் முறையீட்டு அலுவலர் மாநில தகவல் ஆணையம் மற்றும் மத்திய தகவல் ஆணையம் விசாரிக்கும் முன்னரே கோரிக்கைகளை தீர்வு செய்வார்.
 • தகவல் ஆணையங்கள் பொது நிதிமன்றங்களுக்கு உண்டான அதிகாரங்களை பெற்றுள்ளனர். உதாரணமாக தாக்கீது அனுப்புதல், நேரடியாக விசாரணைக்கு உட்படுத்துதல், வாய்மொழி மற்றும் பதிவு பூர்வ ஆதாரங்களை சமர்ப்பித்தல் போன்றவை.
 • பொது தகவல் அலுவலர்/முதன்மை மேல் முறையீட்டு அலுவலர் ஏராளமான முறையீடு மற்றும் மேல் முறையீடுகளை கவனிக்க வேண்டியுள்ளது. எனவே முறையீடு வந்தவுடன் அதிகபட்சம் ஒரு வருடத்தில் இருந்து 3 வருடம் வரை தீர்வு காண நேரிடலாம்.

கேள்வி : விண்ணப்பம் எழுதுவது எப்படி ?
பதில் :
தகவல் பெறும் உரிமை சட்டத்தில் விண்ணப்பம் செய்யும்போது, கேள்விகள் தொகுக்கப்படுவது மிகவும் முக்கியமானது. சிறு பிழை/தவறான அர்த்தம் கொள்ளக் கூடிய கேள்வி அல்லது தெளிவற்ற கேள்விகள், தகவல் உரிமை அலுவலருக்கு, தங்களது விண்ணப்பதை தள்ளுபடி செய்ய ஏதுவான காரணங்களாக அமையலாம்.
விண்ணப்பம் எழுத சில வழிகாட்டுதல்கள்

 • விண்ணப்பிப்பதற்கு ஒரு வெள்ளைத்தாள் போதும். எழுதும் நோட்டு பேப்பரிலேயே, விண்ணப்பிக்கலாம். நீதிமன்ற முத்திரைத்தாள் தேவையில்லை.
 • விண்ணப்பம் தட்டச்சில் இருக்க வேண்டிய அவசியமில்லை. கையால் எழுதிக் கொடுக்கலாம்.
 • விண்ணப்பம் தெளிவான எழுத்துக்களில், படித்து புரிந்து கொள்ளக்கூடிய அளவில் இருக்க வேண்டும்.
 • தகவல் வேண்டுவன எத்தனை பக்கங்களாகவும் இருக்கலாம்.
 • ஒரு விண்ணப்பத்தில் எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கப்படலாம்.  இருப்பினும் குறிப்பிட்ட அளவிலும், மற்றும் தொடர்புடைய கேள்விகளாகவும் இருத்தல் நல்லது.
 • வேண்டிய தகவலை சிறு கேள்விகள் மூலம் கேட்கலாம். நெடிய தகவல்கள் வேண்டி ஒரே விண்ணப்பத்தில் கேட்பதை தவிர்க்கவும். விண்ணப்பத்தில் உங்கள் பெயர், கையொப்பம் போதுமானது. பதவி மற்றும் இதர பொறுப்புகள் தேவையில்லை.  ஏனெனில் தகவல் பெறுவது ஒவ்வொரு குடிமகனின் உரிமை.
 • நேரடியாக ஏன் என்று ஆரம்பமாகும் விண்ணப்பங்கள், தகவல் உரிமைச் சட்டத்தின்படி நிராகரிக்கப்பட ஏதுவாகும். உதாரணமாக, ஏன் அந்தப் பில்  அனுமதிக்கப்படவில்லை? என்று எழுதுவது.
 • தாங்கள் பாதிக்கபட்டவராக இருப்பின், பகுதி 4(1)(d)-ன்படி நிர்வாக மற்றும் அரசு நீதித்துறையின் முடிவுக்குப் பின்னால் உள்ள காரணங்களை கேட்கலாம்.
 • கேள்விகள் அதிக பக்கங்கள் இருப்பின் ஒலித்தட்டு(CD) வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
 • தங்களுக்கு எதற்காக தகவல்கள் தேவைப்படுகின்றன என்பதை தெரிவிக்க அவசியமில்லை.
 • கட்டணம் செலுத்திய காசோலை, கோட்புகாசோலை, அஞ்சலக தபால் ஆணை ஆகியவை பற்றிய குறிப்புகளை, விண்ணப்பத்தின் இறுதியில் தவறாமல் குறிப்பிடவும்.

கேள்வி: விண்ணப்பம் யாருக்கு அனுப்பப்பட வேண்டும் ?
பதில்:

 • எந்த பொது தகவல் அலுவலருக்கு விண்ணப்பிக்கிறீர்களோ, அவர் முகவரிக்கு விண்ணப்பம் எழுதலாம்.
 • ஒரு வேளை அருகில் உள்ள பொது தகவல் அலுவலரின் தகவல்கள் அறிய முடியவில்லை எனில், பொது தகவல் அலுவலர், C/o தலைமை அலுவலர் என்று எழுதி,  மாவட்ட உயர் அலுவலருக்கு உரிய கட்டணத்துடன் விண்ணப்பிக்கலாம்.
 • அந்த துறை தலைமை அலுவலர் அதனை அதற்குண்டான தகவல் அலுவலருக்கு அனுப்புவார்.
 • தகவல் உரிமை அலுவலரின் பெயரிடாமல் விண்ணப்பம் சமர்ப்பித்தல் நலம், ஏனெனில் அலுவலர்கள் பணி இடமாற்றத்திற்கு உட்பட்டவர்கள்.

கேள்வி: தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ்  முறையீடு செய்யும் முறை மாநிலத்திற்கு மாநிலம் வித்யாசப்பட்டதா?

 • மாநில, மத்திய, நீதிமன்றங்கள் போன்றவை தனிதனியே தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்க விதிமுறைகளை வகுத்துள்ளனர்
 • கட்டணம் மற்றும் அதை செலுத்தும் முறை மாநிலத்திற்கு மாநிலம் வித்யாசப்பட்டவை. எனவே உங்களுக்கு பொருந்தக்கூடிய விதிமுறைகளை அறிந்து, அதை பின்பற்றுதல் அவசியம். உரிய கட்டணத்தை, டிமாண்ட் டிராப்ட், பாங்கர்ஸ் செக், அஞ்சலக தபால் ஆணை (சில மாநிலங்களில்), கோர்ட் ஸ்டாம்புகள் (சில மாநிலங்களில்), வரையறுக்கப்பட்ட வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்துதல் போன்றவை சில வழிமுறைகளாகும்.
 • மத்திய அரசின் கீழ் வரும் துறைகளுக்கு, மத்திய அஞ்சலகத்துறை, "Accounts officer" என்ற பெயருக்கு டிமாண்ட் டிராப்ட், கோட்புகாசோலை, அஞ்சலக தபால் ஆணை எடுத்து அனுப்பலாம்.

கேள்வி: தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் முதல் முறையீடு எவ்வாறு எழுதுவது ?

பதில்:
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 ன்படி, முதல் மேல்  முறையீடுக்கு கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்.

 • முதல் மேல் முறையீட்டு மனு, மத்திய தகவல் அலுவலரிடம் இருந்து  முடிவு பெறப்பட்ட 30 நாட்களுக்குள் முதன்மை மேல் முறையீட்டு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.
 • முப்பது நாட்களுக்குள் அதற்குண்டான பதில் கிடைக்கப் பெறவில்லை எனில் (இணை தகவல் உரிமை அலுவலரிடம் விண்ணப்பித்திருந்தால் 35 நாட்கள்), மத்திய தகவல் அலுவலரிடமிருந்து பதில் கிடைக்க வேண்டிய தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்ய வேண்டும்
 • முதல் மேல் முறையீடு மனுவை அனுப்ப வேண்டிய அதிகாரி, அவருடைய முகவரி போன்றவற்றை மத்திய தகவல் அலுவலரிடமிருந்து வந்த பதில் கடித்தத்திலிருந்து  கண்டறியலாம். குறிப்பிட்ட துறையின் வலைதளத்திலிருந்தும் இந்த தகவலை பெறலாம்.
 • மேற்கண்ட எந்த முயற்சியிலும் தங்களுக்கு முதல் மேல்முறையீட்டு அலுவலரின் விபரம் தெரியவில்லை எனில்,

முதன்மை மேல் முறையீட்டு அலுவலர்

C/o.தலைமை அலுவலர்,
......துறை க்கு நேரடியாக விண்ணப்பிக்கவும்.
(மேலும் அந்தந்த துறை தலைமை தகவல் அலுவலருக்கும் அனுப்பலாம்).

 • நீங்கள் முதல் மேல்முறையீட்டு விசாரணையின் போது இருக்க விருப்பப்பட்டால், முறையீட்டு மனுவின் கீழ் அதனை தெளிவாக குறிப்பிடவும்.
 • முதல் மேல் முறையீட்டிற்கு மத்திய தகவல் துறையின் கீழ்வருபவைக்கு கட்டணம் ஏதுமில்லை.
 • சில மாநிலங்கள் முதல் மேல் முறையீட்டுகளுக்கு கட்டணங்கள் மற்றும் படிவங்களை வடிவமைத்து உள்ளன.
 • அனைத்து இணைக்கப்பட்ட சான்றிதழ்களும் சுயமாக உண்மை நகல் சான்று ஒப்பமிடப்படவேண்டும். Attested என்று எழுதி, அதன் கீழ் கையொப்பமிட்டு பெயர் எழுதப்படவேண்டும்.
 • விண்ணப்பத்தின் முழுமையான பிரதியினையும், அனுப்பியதற்கு உண்டான அஞ்சல் ரசீது மற்றும் ஒப்புகையை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
 • நேரடி விண்ணப்பம் சரியானது, எனினும் பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல்/ அஞ்சலக சான்று அஞ்சல் மூலமாக அனுப்புதல் நல்லது. தனியார் அஞ்சல் சேவை மூலம் அனுப்பக் கூடாது.
 • முதல் மேல் முறையீட்டு  அலுவலர் 30 நாட்களுக்குள் தனது பதிலை / முடிவினை விவரிப்பார். தாமதத்திற்கு தகுந்த  காரணங்களை எழுத்து மூலம் தெரிவித்து விட்டு, அவர் மேலும் 15 நாட்கள் (மொத்தம் 45 நாட்கள்) எடுத்துக் கொள்ளலாம்.
 • முதல் மேல் முறையீட்டு அலுவலர் வாய்மொழி ஆணை அல்லது எழுத்து பூர்வ ஆணை அளிக்க அதிகாரம் பெற்றவர் ஆவார்.

கேள்வி: தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் இரண்டாம் மேல் முறையீட்டு மனு செய்வது எப்படி?
பதில்

 • மேல்முறையீட்டு மனுவை பூர்த்தி செய்து, இது வரை கிடைக்கப் பெற்ற பதில்களின் நகல்களை இணைத்து அனுப்பலாம்.
 • மேல்முறையீடு எனில் புகார்/ புகார்தாரர் ஆகியவற்றை நீக்கவும்.
 • முதல் மேல்முறையீட்டு மனுவின் நகல் மற்றும் இணைப்புகள் விண்ணப்பம் நிறப்புக் கட்டணமான ரூ.10-ஐ வங்கி கேட்பு காசோலை / செலுத்துசீட்டு / அஞ்சல் ஆணை / ரொக்கம் செலுத்திய ரசீது போன்றவை மூலம் செலுத்தலாம்.
 • தலைமை தகவல் உரிமை அலுவலரின் தாக்கீது கடிதத்தின் நகல் மற்றும் கட்டணங்கள் அனுப்பியமைக்கான அஞ்சலக சான்று (நகல்)
 • அஞ்சலக தபால் ஒப்புகை, மற்றும் தலைமை பொது தகவல் மைய அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட ஒப்புகை மற்றும் முதல் மேல்முறையீட்டு அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட ஒப்புகைகள்.
 • தலைமை பொது தகவல் அலுவலர் மற்றும் முதல் மேல் முறையீட்டு அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட முடிவுரை அறிவுறுத்தல்கள்
 • அனைத்து படிவங்களையும், தாள்களையும் குறியீடிட்டு வரிசைப்படுத்தி, ஒவ்வொரு தாளின் வலது பக்க மேல் மூலையில் வரிசையின்படி பக்க எண் குறிப்பிடவேண்டும். இது இரண்டும் மேல்முறையீட்டு மனுவின் முதல் பிரதி ஆகும்.
 • மேற்கண்ட அனைத்தையும் நான்கு தொகுப்புகள்/ புகைப் பிரதி எடுக்கப்படவேண்டும்.
 • ஒவ்வொரு பக்கத்தின் கீழ் கையொப்பமிடவேண்டும்.
 • முகவுரை பக்கம் மற்றும் தாக்கீது விபர பட்டியலிலும் கையொப்பமிட வேண்டும்.
 • புகை பிரதிகளின் கீழ், சுய உண்மை நகல் சான்று ஒப்பமிடல் வேண்டும் “உண்மை நகல்” என்று எழுதி அதன்கீழ் கையொப்பமிட்டு அதன் கீழ்முழுப்  பெயரை தெளிவாக எழுதுதல் வேண்டும்.
 • ஒரு தொகுப்பினை தலைமை தகவல் அலுவலருக்கு பதிவு அஞ்சல் (அ) விரைவு அஞ்சல் மூலம் அனுப்பவும். முதல் மேல் முறையீட்டு அலுவலருக்கு ஒரு தொகுப்பும் அனுப்பவேண்டும். அனுப்பியதற்குண்டான ரசீதுகளையும் இணைக்க வேண்டும்.
 • முதன்மை விண்ணப்பத்தினை, பதிவு அஞ்சல் மூலமாக கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்

The Registrar,
CENTRAL INFORMATION COMMISSION
II floor, August Kranti Bhavan,
Bhikaji Kama Place,
NEW DELHI 110066

 • ஒரு தொகுப்பினை தங்கள் பரிசீலனைக்கு பத்திரப்படுத்தவும்.
 • தலைமை தகவல் அலுவலரிடமிருந்து மனு கிடைத்ததற்கான ஆதாரம் 15 நாட்களுக்குள் பெறவில்லை எனில், மீண்டும் ஒரு நகலை விரைவு அஞ்சல் மூலம் அனுப்பவும்.
 • உங்கள் அருகாமையில் உள்ள தொண்டு நிறுவனங்கள் அல்லது தகவல் பெறும் உரிமை சம்பந்தமாக பணியாற்றும் நிறுவனங்களிடமிருந்து இது தொடர்பான ஆலோசனையும் பெறலாம்.

கேள்வி: தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் யார் யாரெல்லாம் தகவல் பெறலாம்?
பதில்

 • எந்த ஒரு இந்தியக்குடிமகனும் தகவல் பெறலாம்
 • இந்தச்சட்டம் இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் தவிர மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.
 • அயல்நாட்டு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் இந்த சட்டத்தின்கீழ் தகவல் பெறலாம்.
 • இந்திய குடிமகன்கள், அயல்நாட்டு வாழ் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தகவல் பெறும் உரிமைக்காக தங்களது விண்ணப்பங்களை, அந்தந்த நாடுகளில் உள்ள நமது நாட்டின் தூதரக அலுவலகங்களில் தேவையான கட்டணத் தொகை மற்றும் அதை செலுத்தும் முறை பற்றி அறிந்துக் கொள்ளலாம்.

கேள்வி : தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் விண்ணப்பத்தினை எவ்வாறு சமர்ப்பிக்கலாம்?
பதில்
தகவல் பெறும் உரிமைச்சட்டத்திற்கான உங்களுடைய விண்ணப்பம் உரிய தகவல் அலுவலரிடம் சென்றடைந்துள்ளதா, அதற்கான சான்றுகள் உள்ளனவா என்பதை அறிய, கீழ்கண்ட வழிமுறைகள் பெரிதளவில் உதவும்.

 • நேரடியாக கையில் விண்ணப்பதினை கொடுத்தல் - உங்கள் விண்ணப்பதினை பெற்றுக் கொண்டபின், அதற்கான நகல், கட்டணம் செலுத்தியமைக்கான ரசீது, அதில் கையெழுத்து, தேதி, அலுவலக முத்திரை அனைத்தும் இருக்கிறதா என உறுதி செய்து கொள்ளுதல்.
 • விரைவு அஞ்சல் (தபால் துறையின் ஒரு சேவை)- உங்கள் விண்ணப்பதினை விரைவு அஞ்சலில் அனுப்பி வைத்தல். https://www.indiapost.gov.in என்ற இணைய தளம் மூலம் உரிய அலுவலகத்திற்கு சென்று சேர்ந்துள்ளதா என்பதை அறிந்து அதற்கான நிலை குறித்து ஒரு அத்தாட்சி பெற்று வைத்துக் கொள்ள வேண்டும்.
 • சாதாரண அஞ்சல் அல்லது தனியார் விரைவு அஞ்சல் சேவை மூலம் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை அனுப்பக் கூடாது. காரணம், விண்ணப்பம் சேர்ந்தமைக்கான உத்திரவாதம் எதுவும் கிடைக்காது.

ஆதாரம் : மாநில தகவல் ஆணையம், சென்னை

3.08108108108
ராஜேஷ் Mar 14, 2018 08:55 AM

கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் கிறுஸ்துவர்கள் தாக்கப்பட்ட, கொலை செய்யப்பட்ட, கோவில்கள் இடிக்கப்பட்ட குற்றங்களின் FIR தகவல்கள் வேண்டும். எவ்வாறு பெற வேண்டும்?

மூ. வைகுண்டமாரி9585239088 Dec 22, 2017 05:24 PM

நான் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவன் எனது கிராமத்தில் பஞ்சாயத்து தலைவர் மூலம் மேற் கொண்ட பணிகள் அதன் செலவினங்கள் பற்றி அறிய எந்த துறை அலுவலர்க்கு கடிதம் அனுப்ப வேண்டும். துறை முகவரி அனுப்பவும். கடிதம் எழுதிய பின் விண்ணப்ப கட்டணம் Post office ல் செலுத்த முடியுமா?

என்னுடைய கைபேசி எண் .(95*****88)

சரவணன் Sep 18, 2017 12:21 PM

நான் சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி ஒன்றியம் கோவிலூர் ஊராட்சி மன்றத்தில் வசிக்கிறேன்.நான் 2015 ஆண்டு கழிவறை கட்டி அரசு வழங்கும் பண உதவிக்காக விண்ணப்பித்திருந்தேன்.கழிவறை கட்ட கதவு மட்டும் வழங்கினார்கள்.இதுவரை பணம் வழங்கப்படவில்லை.இதை அறிய எவ்வாறு விண்ணப்பிப்பது.

புஷ்பராஜ் Sep 11, 2017 07:22 PM

அய்யா நான் எனது விவசாய நிலத்துக்கு pmpfy என்ற பிரதமர் பயீர்காப்பீடு அமைப்பின் படி பயிர்காப்பீடு தொகை கட்டி உள்ளேன் எனக்கான இழப்பீட்டு தொகை இதுவரை வரவில்லை அதன் விவரங்களை தகவல் உரிமை சட்டதின் கீழ் எவ்வாறு பெறலாம்.?..

எந்த துறைக்கு நான் மணு அனுப்ப வேண்டும்.??..

பாலகிருஷ்ணன் Sep 04, 2017 10:42 AM

நான் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவன் எனது கிராமத்தில் பஞ்சாயத்து தலைவர் மூலம் மேற் கொண்ட பணிகள் அதன் செலவினங்கள் பற்றி அறிய எத்துறை அலுவலர்க்கு கடிதம் அனுப்ப வேண்டும். துறை முகவரி அனுப்பவும். கடிதம் எழுதிய பின் விண்ணப்ப கட்டணம் Post office ல் செலுத்த முடியுமா?

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top