பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / இந்தியாவிலுள்ள - சட்டங்கள் / தமிழக அரசின் சட்டங்கள் / தமிழ்நாடு மருந்துச் சரக்குகள் (சட்டமுரணான உடைமை) சட்டம் - 1986
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழ்நாடு மருந்துச் சரக்குகள் (சட்டமுரணான உடைமை) சட்டம் - 1986

தமிழ்நாடு மருந்துச் சரக்குகள் (சட்டமுரணான உடைமை) சட்டம் - 1986 பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பொருள் வரையறைகள்

"மருந்துச் சரக்கு” என்பது, மனிதர்கள் அல்லது விலங்குகளிடம் நோயை விளைவிக்கின்ற புழு அல்லது பூச்சிகளை அழிப்பதற்காக பயன்படுத்தப்படக் கூடிய (உணவு அல்லாத பிற) பொருள்கள் அனைத்தையும் மற்றும் மனிதர்கள் அல்லது விலங்குகளிடம் உள்ள நோயினை கண்டறிவதில், குணப்படுத்துவதில், தணிப்பதில் அல்லது தடுப்பதில் பயன்படுத்தக் கருதப்பட்டுள்ள பொருள்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகும்.

1940-ஆம் ஆண்டு மருந்துச் சரக்குகள் மற்றும் ஒப்பனைப் பொருட்கள் சட்டத்தின் கீழ் மைய அரசால் அவ்வப்போது குறித்துரைக்கப்பட்டு வந்திருப்பவையும், மற்றும் அரசுத் துறையொன்றுக்குச் சொந்தமான அல்லது அதன் பொறுப்பில் அல்லது உடைமையில் உள்ளவையும், இதன் பொருட்டு அரசு முத்திரை அல்லது அடையாளக் குறியினை கொண்டிருகின்றவையுமான பொருட்களையும் உள்ளடக்கும்

(1) “அரசு” என்பது மாநில அரசு என்று பொருள்படும்;

(2) “ஆய்வாளர்” என்பது அரசால் 1940- ஆம் ஆண்டு மருந்துச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XXIII/I940) 21-ஆம் பிரிவின்படி அமர்த்தப்பட்ட ஓர் ஆய்வாளர் என்று பொருள்படும்; மற்றும் சார் ஆய்வாளரின் படி நிலைக்குக் கீழல்லாத, காவல் துறை அலுவலர் எவரையும் மற்றும் இதன் பொருட்டு அறிவிக்கையின் மூலம் அரசால் குறித்துரைக்கப்படும் பிற அலுவலர் எவரையும் உள்ளடக்கும்;

(3) “பிற (மருத்துவப்) பொருட்கள்”, என்பது மெத்தென்ற கணல் துணி (linen) கருவிகள், துணைக்கருவிகள் அல்லது அரசுத் துறையொன்றுக்குச் சொந்தமான அல்லது அதன் பொறுப்பில் அல்லது உடைமையில் உள்ளவையும், அவை அரசுத் துறைக்குச் சொந்தமானவை என்று அடையாளப்படுத்திக் காட்டுகின்ற இதன் பொருட்டு அரசால் அறிவிக்கப்படலாகும் முத்திரை அல்லது அடையாளக் குறியினைக் கொண்டிருக்கின்றவையும் இதன் பொருட்டு அரசினால் குறித்துரைகப்படக்கூடியவையுமான பிற பொருட்களை உள்ளடக்கும்.

மருந்துச் சரக்குகள் அல்லது பிற (மருத்துவப்) பொருட்களின் சட்டமுரணான உடைமை

(1) எவரேனும், திருடப்பட்டவையென்றோ அல்லது சட்ட முரணாகப் பெறப்பட்டவையென்றோ தவறான முறையில் ஐயங்கொள்ளப்படுகின்ற, அரசுத் துறையொன்றுக்குச் சொந்தமான அல்லது அதன் பொறுப்பில் அல்லது உடைமையில் உள்ளவையும் மற்றும் 2 –ஆம் பிரிவின் (1) மற்றும் (4) –ஆம் கூறுகளின்படி அறிவிக்கப்பட்ட முத்திரையையோ அல்லது அடையாளச் குறியையோ கொண்டிருக்கின்றவையுமான மருந்துச் சரக்குகள் அல்லது பிற மருத்துவப் பொருட்கள் எவற்றையேனும். உடைமையில் வைத்திருக்கின்றார் என்பது காணப்பட்டு அல்லது உடைமையில் வைத்திருகிறார் என்பது மெய்ப்பிக்கப்பட்டு அல்லது அவற்றை எவ்வாறு உடைமையில் பெற்றார் என்பதற்கு நிறைவுறுதியளிக்கின்ற வகையில் அவரால் காரணங்கூற முடியவில்லை என்றால் முதல் முறையான குற்றச்செயல் ஒன்றுக்கு மூன்றாண்டு வரையில் நீடிக்கலாகும் சிறைத்தண்டனையும் மூவாயிரம் ரூபாய் வரையில் நீடிக்கலாகும் அபராதமும் விதிக்கப்பட்டு அவர் தண்டிக்கப்படுதல் வேண்டும். ஆனால் அத்தகைய சிறைத் தண்டனையானது ஓராண்டிற்குக் குறையாமலிருத்தல் வேண்டும்; மற்றும் அத்தகைய அபராதமானது ஓராயிரம் ரூபாய்க்குக் குறையாமல் இருத்தல் வேண்டும்.

(2) இரண்டாம் முறையான அல்லது அதற்குப் பின்னரான குற்றச் செயலைப் பொறுத்த அளவில் அத்தகைய எவரும் ஏழாண்டு வரையில் நீடிக்கலாகும் சிறைத்தண்டனையும் ஐயாயிரம் ரூபாய் வரையில் நீடிக்கலாகும் அபராதமும் விதிக்கப்பட்டுத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.

ஆய்வாளரின் அதிகாரங்கள்

ஓர் ஆய்வாளரானவர், தான் அமர்த்தப்பட்டிருக்கின்ற பரப்பிடத்தின் உள்ளூர் எல்லைக்குள் இந்தச் சட்டத்தின்படியான குற்றச்செயல் ஒன்று புரியப்பட்டுள்ளதென்றோ அல்லது புரியப்பட்டுவருகின்றதென்றோ தான் நம்புவதற்குக் காரணம் கொண்டுள்ள இடமெதிலும் தான் தேவையெனக் கருதுகின்ற உதவியாளர்கள் எவரேனும் இருப்பின் அவர்களுடன், எல்லா தகுமான நேரங்களிலும் (reasonable times) நுழைந்து சோதனையிடலாம்;

எந்த மருந்துச் சரக்குகள் மற்றும் பிற (மருத்துவப்) பொருட்கள் பொறுத்து இந்தச் சட்டத்தின்படி குற்றச்செயல் ஒன்று புரியப்பட்டுள்ளதென்றோ அல்லது புரியப்பட்டுவருகின்றதென்றோ தான் நம்புவதற்குக் காரணங்கொண்டுள்ள அந்த மருந்துச் சரக்குகள் மற்றும் பிற மருத்துவப் பொருட்களின் இருப்பைக் கைப்பற்றலாம்; மற்றும்

கூறில் சொல்லப்பட்டுள்ள இடமெதிலும் காணப்படும் பதுவுரு, பதிவேடு ஆவணம் எதனையும் அல்லது பிற சான்றுப் பொருள் எதனையும் ஆய்வு செய்து இந்தச் சட்டத்தின்படி தண்டிக்கப்படத்தக்க குற்றச்செயல் ஒன்றைப் புரிந்தமைக்கு அது சான்றினை அளிக்கக்கூடும் என்று தான் நம்புவதற்குக் காரணங்கொண்டிருப்பின், அதனைக் கைப்பற்றலாம்.

ஓர் ஆய்வாளரானவார் (a)-ஆம் உட்பிரிவின் (l) கூற்றின்படி மருந்துச் சரக்கு அல்லது பிற (மருத்துவப்) பொருட்களின் இருப்புக்களைக் கைப்பற்றுகிறவிடத்து, அவர் எவ்வளவு விரைவில், இயலுமோ அவ்வளவு விரைவில் குற்றவியல் நடுவர் ஒருவரிடம் தகவல் தெரிவித்து அவற்றின் பாதுகாப்பு குறித்து ஆணைகள் பெறுதல் வேண்டும்.

ஓர் ஆய்வாளரானவர், 1-ஆம் உட்பிரிவின் (b)-கூறின்படி, பதிவுரு, பதிவேடு, ஆவணம் அல்லது பிற சான்றுப்பொருள் எதையும் கைப்பற்றுகின்றவிடத்து, அவர் எவ்வளவு விரைவில் இயலுமோ அவ்வலவு விரைவில், குற்றவியல் நடுவர் ஒருவரிடம் தகவல் தெரிவித்து அவற்றின் பாதுகாப்புக் குறித்து அவரது ஆணைகளைப் பெறுதல் வேண்டும்.

ஆய்வாளரொருவர் இந்தச் சட்டத்திலோ அல்லது அதன்படியோ தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைச் செலுத்துகையில் அவரை எவரேனும் வேண்டுமென்றே தடுப்பாராயின், அவர் ஓராண்டு வரையில் நீடிக்கலாகும் சிறைத்தண்டனையோ அல்லது ஓராயிரம் ரூபாய் வரையில் நீடிக்கலாகும் அபராதமோ அல்லது இரண்டுமோ விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.

சட்டமுறை காப்பளிப்பு

இந்தச் சட்டத்தினாலோ அல்லது அதன்படியோ, நல்லெண்ணத்தில் செய்யப்படும் அல்லது செய்யக் கருதப்படும் ஏதொன்றையும் பொறுத்து, அரசுக்கு அல்லது அரசு அலுவலர் எவருக்கும் எதிராக, உரிமையியல் வழக்கு அல்லது பிற சட்ட நடவடிக்கை எதற்கும் இடமில்லை.

பறிமுதலுக்கு உள்ளாகின்ற பொருட்கள்

இந்தச் சட்டத்திற்கெதிராகக் குற்றவியல் ஒன்று புரியப்பட்டிருக்கின்ற தேர்வு எதிலும், எந்த மருண்டுச் சரக்கு அல்லது பிற (மருத்துவ) பொருட்கள் பொறுத்து, அக்குற்றச் செயல் புரியப்பட்டிருக்கின்றதோ அந்த மருந்துச் சரக்கு அல்லது பிற மருத்துவப் பொருட்கள் அரசிற்குப் பறிமுதல் ஆதல் வேண்டும்.

பறிமுதல் செய்யப்படுதலுக்கு எவ்வாறு ஆணையிடப்படுதல் வேண்டும்

குற்றவாளிக்குக் குற்றத்தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கும் போது அல்லது இந்தச் சட்டத்திற்கெதிரான குற்றச் செயலொன்றைப் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர் அக்குறிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்து, ஆனால், நீதி மன்றமானது பொருள் எதுவும் பறிமுதல் செய்யப்படுவதற்கு உள்ளாகும் என முடிவு செய்யும்போது, அத்தகைய பறிமுதலானது நீதிமன்றத்தினால் ஆணையிடப்படலாம்.

இந்தச் சட்டத்திற்கெதிரான குற்றச்செயல் ஒன்றிற்கான வழக்கொன்றின் விசாரணையின் போது, நீதிமன்றமானது பொருள் எதுவும் பறிமுதல் செய்யப்படுவதற்கு உள்ளாகும் என்று முடிவு செய்யுமிடத்து, அந்நீதிமன்றமானது அப்பறிமுதலுக்கு ஆணையிடுதல் வேண்டும்.

மருந்துச் சரக்குகளையும் பிற (மருத்துவப்) பொருள்களையும் முடிவு செய்தல்

மருந்துச் சரக்கு அல்லது பிற (மருத்துவப்) பொருள் எதுவும் இந்தச் சட்டத்தின்படி, பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றபோது, அத்தகைய மருந்துச் சரக்கு அல்லது பிற (மருத்துவப்) பொருட்கள், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய மருத்துவப் பணித்துறை அலுவலரால் உடைமையில் கைக்கொள்ளப்படுதல் வேண்டும்.

குறிப்பிட்ட சிலர் பொதுப் பணியாளர்களாகக் கருதப்படுதல்

ஆய்வாளரும் அரசால் அதிகாரமளிக்கப்பட்ட ஒவ்வொரு அலுவலரும், இந்தச் சட்டத்தின்படி அதிகாரம் எதனையும் செலுத்துகின்றபோது அல்லது கடமை எதனையும் புரிகின்ற போது, இந்தியத் தண்டணைச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XLV/1860) 21-ஆம் பிரிவின் பொருளின்படி, ஒரு பொதுப் பணியாளராக இருப்பதாகக் கருதப்படல் வேண்டும்

விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்

விதிகளும் அறிவிக்கைகளும் சட்டமன்றத்தின் முன்னர் வைக்கப்படவேண்டும் என்பது :

இந்தச் சட்டத்தின்படி செய்யப்படும் விதிகள் மற்றும் அறிவிக்கைகள் அனைத்தும் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும்; மற்றும் குறிப்பிட்டதொரு நாளன்று அவை செல்லாற்றல் பெறுதல் வேண்டும் என்று வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்படும் நாளன்றோ செல்லாற்றல் பெறுதல் வேண்டும்.

இந்தச் சட்டத்தின்படி செய்யப்படும் ஒவ்வொரு விதியும் அல்லது பிறப்பிக்கப்படும் ஒவ்வோர் அறிவிக்கையும், அது செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர் கூடிய விரைவில், சட்டமன்றத்தின் இரு அவைகளின் முன்பும் வைக்கப்படுதல் வேண்டும்; மற்றும் அது அவ்வாறு வைக்கப்படும் கூட்டத்தொடரோ அல்லது அதற்கு அடுத்த கூட்டத்தொடரோ முடிவடைவதற்கு, முன்னர் இரு அவைகளும் அத்தகைய விதி அல்லது அறிவிக்கை எதிலும் மாறுதல் எதையேனும் செய்வதில் உடன்படுமானால், அல்லது அந்த விதியோ அல்லது அறிவிக்கையோ செய்யப்படுதலோ அல்லது பிறபிக்கப்படுதலோ ஆகாது என்று அவைகள் உடன்படுமானால், அதன் பின்னர், அந்த விதியோ அறிவிக்கையோ அத்தகைய மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில் மட்டுமே செல்லாற்றல் பெறுதல் வேண்டும்; அல்லது நேர்விற்கேற்ப செல்லாற்றல் பெறாமல் போதல் வேண்டும்; எனினும், அவ்வாறு மாறுதல் செய்வது அல்லது ரத்து செய்வது எதுவும், அந்த விதி அல்லது அறிக்கையின்படி முன்னதாகச் செய்யப்பட்ட ஏதொன்றின் செல்லும்தன்மைக்கும் ஊறின்றி இருத்தல் வேண்டும்.

ஆதாரம் : தினமணி நாளிதழ்

ஆக்கம் : வழக்கறிஞர் சரவணன்.

2.94736842105
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top