பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

பிறப்பு பதிவு மற்றும் இறப்பு பதிவு சட்டம் 1969

பிறப்பு பதிவு மற்றும் இறப்பு பதிவு சட்டம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம்

பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம், 1969 ஒவ்வொரு பிறப்பும், இறப்பும் பதிவு செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்துகிறது. தமிழ் நாடு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு விதிகள் 2000-த்தின் படி ஒவ்வொரு பிறப்பும், இறப்பும் பதிவு செய்யப்படுகிறது.

பொறுப்பு அளிக்கப்பட்ட அதிகாரிகள்

  1. கிராம பஞ்சாயத்து: கிராம நிர்வாக அதிகாரிகள்
  2. நகர பஞ்சாயத்து: சுகாதார ஆய்வாளர்கள்/மேல் நிலை அதிகாரிகள்
  3. மாநகரம்/நகராட்சி பரப்பு: மண்டல சுகாதார ஆய்வாளர்கள்/மேல் நிலை அதிகாரிகள்
  4. தோட்டம்: தோட்டத்தின் மேலாளர்.

கால அவகாசம்

  1. இருபத்தொன்று நாட்களுக்குள் பதிவு செய்யப்படும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் இலவசமாக வழங்கப்படுகிறது.
  2. இருபத்தொன்று நாட்களுக்கு பின், ஆனால் முப்பது நாட்களுக்குள் பதிவு செய்யப்படுமானால் இரண்டு ரூபாய் தாமதக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது
  3. ஓராண்டுக்குள் தெரிவிக்கப்படும் பிறப்பு அல்லது இறப்பு பதிவு செய்யப்பட அங்கீகாரம் பெற்ற அதிகாரியின் எழுத்து ஆணையுடன் ஐந்து ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படுகிறது
  4. ஒரு வருடத்திற்கு பிறகு பிறப்பு அல்லது இறப்பு பதிவுசெய்யப்பட வேண்டுமானால் முதல் வகுப்பு மேஜிச்டரட்டின் உத்தரவு கட்டாயம் தேவை. மேலும் தாமதத்துக்கான அபராதமாக பத்து ரூபாயும் வசூலிக்கப்படுகிறது

ஆதாரம் : தமிழக அரசின் திட்டங்கள்

2.88888888889
TASNA Dec 14, 2015 11:10 AM

நீதி அதிகாரங்கள் கொண்ட க்ரூப் - A பிரிவைச் சார்ந்த நீதிபதிகளே முதல் வகுப்பு மேஜிஸ்டரட் என்றழைக்கப்படுவர்.

அகப்பிரியன் Dec 13, 2015 08:25 PM

முதல் வகுப்பு மேஜிச்டரட் யார்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top