பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

மோட்டர் வாகனச் சட்டம்

மோட்டர் வாகனச் சட்டம் பற்றிய குறிப்புகள்

தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராததையும் தெரிந்திருக்க வேண்டும்

 1. உரிமம் இல்லதவர்களை வண்டி ஓட்ட அனுமதிப்பது/பிரிவு 180. ரூ.50 அபராதம்
 2. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் 18 வயதிற்க்கு கீழ் உள்ளவர் வண்டி ஓட்டுதல் பிரிவு 181. ரூ.500 அபராதம்
 3. உரிமம் சார்ந்த குற்றங்கள் , ஓட்டுநர் தகுதி இழ்ந்தவர்கள் வண்டி ஓட்டுதல் பிரிவு 182(1). ரூ.500 அபராதம்
 4. அதிவேகத்தில் வண்டி ஓட்டுதல் பிரிவு 183(1) ரூ.400 அபராதம்
 5. மிகுதியான வேகத்தில் வண்டி ஓட்டுதல் .முதலானவை (ஓட்டுவதற்க்கான காரணம் வேகத்தின் அளவை தாண்டுதல் ) பிரிவு 183(2).ரூ.300 அபராதம்
 6. அபாயகரமாக ஓட்டுதல் பிரிவு 184. ரூ.1000 அபராதம்
 7. மற்றும் சென்போன் பேசிக் கொண்டு ஓட்டுதல் CMV R21(25) பிரிவு 177.ரூ.100 அபராதம்
 8. குடிப் போதையில் வண்டி ஓட்டுதல் பிரிவு 185 .ரூ.court
 9. மன நிலை,உடல் நிலை சரியில்லாத் நிலையில் வண்டி ஓட்டுதல் .பிரிவு 186. ரூ.200 அபராதம்
 10. போட்டி போட்டுக் கொண்டு வண்டி ஓட்டுதல்..வாகன சோதனை மேற்க் கொள்ளுதல் பிரிவு 189. ரூ 500 அபராதம்
 11. அதிகமான அளவில் கரும்புகை வெளியிடுவது பிரிவு 190(2) .ரூ.50 அபராதம்
 12. அனுமதியில்லாத மாற்றத்துடன் கூடிய சைலன்சர் பிரிவு 190(2).ரூ.50 அபராதம் .
 13. காற்று ஓலிப்பான் .பல்லிசை ஓலிப்பான் பிரிவு 190 (2) .ரூ.50 அபராதம்
 14. பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல் பிரிவு 192. ரூ.500 அபராதம்
 15. அனுமதிக்கப்பட்ட எடைக்குக் கூடுதல் எடைய்யுடன் ஓட்டுதல் பிரிவு 194.ரூ.100 அபராதம்
 16. காப்பீடு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல்( uninsured ) பிரிவு 196 .ரூ.1000 அபராதம்
 17. வண்டியில் அனுமதியின்றி மாறுதல் செய்தல் பிரிவு 198 .ரூ.100 அபராதம்
 18. போக்குவரத்திற்க்கு இடையூர் செய்தல் பிரிவு 201 .ரூ.50 அபராதம்....


பேருந்து நிறுத்துவதற்கான விதிகள்

ஆதாரம் : தமிழ்நாடு போக்குவரத்துத்துறை காவல்துறை

2.9900990099
சரவணன் Dec 18, 2017 11:16 AM

ஓட்டுநர் உரிமம் என்னென்ன காரணங்களால் ரத்து செய்யப்படுகிறது ?

பிரசாத் குமார் Nov 28, 2017 11:41 PM

ஐயா இன்று மதியம் வாகனம் அதிக பளு காரணமாக போக்குவரத்து சட்டம் 177, 181, 184, 194, ஆகிய பிரிவின் கீழ் 4770 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. நீங்கள் கொடுத்துள்ள விதியின் கீழ் பார்த்தால் எனக்கு விதிக்கப்பட்ட அபராதம் அதிகமாக தெரிகிறது. நான் எப்படி புரிந்துகொள்ள? எனக்கு புரிய வைக்கயும். அல்லது முன்னாள் குறிப்பிட்ட விதிகளை தெரிந்து கொள்ள வழி சொல்லவும். நன்றி.

மோகன்ராஜ் Nov 28, 2017 12:26 AM

சட்டங்கள் எல்லாம் சரி நான் மதிக்கிறேன் ஐயா செக்போஸ்டில் வாங்கும் கை கூலியை முதலில் நிறுத்த என்ன வலி

வ.முருகேஸ் Sep 27, 2017 08:59 PM

அனைத்து ஆவணங்கள் சரியாக இருந்தாலும் டாடாஏசி லோடு வண்டிக்கு சீட் பெல்ட் அணியாமல் வந்ததாக கூறி இராமநாதபுரத்தில் பணம் பறிக்கும் காவலர்கள் அதிகம் பெருகிவருகிறார்கள். இவர்களை யார்? கேட்பது.

நவீன்குமார் Aug 25, 2017 08:18 PM

இருசக்கர வாகனத்தை மாநிலம் விட்டு மாநிலம் எடுத்து செல்ல வாகனத்திற்கான சான்று என்ன என்ன தேவை?

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top