பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பற்றிய குறிப்புகள்

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்

  • வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்பது இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்கள் எனப்படும் பட்டியலினத்தவருக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பதற்காகவும், அச்சமூகத்தினருக்கு எதிரான கொடுமைகள், வன்முறைகள், துன்புறுத்தல்கள் செய்பவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுத்துத் தண்டனை பெற்றுத் தரு‍வதற்கும் கொண்டு வரப்பட்ட சட்டமாகும்.
  • இந்தியாவில் கடந்த 1955 ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1976 இல் அது பி.சி.ஆர். சட்டம் (குடியுரிமை பாதுகாப்புச் சட்டம்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தச் சட்டம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே பொருந்தும். பழங்குடியினருக்குப் பொருந்தவில்லை. இந்தச் சட்டம் சரியாக செயல்படாததால், இளைய பெருமாள் என்பவரது தலைமையில் ஒரு கமிட்டியை பாராளுமன்றம் அமைத்தது. அந்த கமிட்டியின் பரிந்துரையின் பேரில் 1989ல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், மிகத் தாமதமாக 1995ல் தான் இந்தச் சட்டம் நடைமுறைக்கே வந்தது.
  • பழங்குடியினர் மீது காவல்துறை மற்றும் ராணுவத்தினர் நடத்திய தாக்குதல் பலாத்காரம் தொடர்பான புகார்கள் அதிகரித்தபோது இந்தச் சட்டம் உருவானது. இந்தச் சட்டத்தைக் காவல்துறையினர் தங்களுக்கு எதிரானதாகவே நினைத்தனர். இதனால் இந்தச் சட்டமும் முறையாகப் பயன்படுத்தப்படாமலேயே இருக்கிறது.

சட்டத்தின் விதிகள்

கீழ்க்காணும் செயல்களுக்கு‍ இச்சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும்

  1. சாதியை கொச்சைப்படுத்தி பேசுதல்
  2. சாதி பெயரை சொல்லி திட்டுவது
  3. சாதியின் பெயரால் விலக்கி கொள்வது.

 

ஆதாரம் : இந்தியாவின் சட்டங்கள்

3.02941176471
ஆ.குமரவேல், நெல்லிக்குப்பம், கடலூர் மாவட்டம். Jan 25, 2017 06:14 PM

தற்போது தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள்வசிக்கும் பகுதியில் உள்ள கம்பெனிகள் ரசாயனங்களை பயன்படுத்தி தலித் இன அழிப்பு நடத்தி வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

மா.நாகராஜன்.மடத்துக்குளம் Jul 22, 2016 01:01 PM

அய்யா நான் வசிக்கும் அருந்ததியர் காலணியில் பேரூராட்சி மூலம் சாக்கடைக் கால்வாய் தரக்குறைவாக கட்டி அதில் வெளியேறும் கழிவுநீர் எனது வீட்டு முன்பு தேங்கி நிற்கும்படி பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தாழ்த்தப்பட்டவன்தான என்ற உள்நோக்கம் தான் காரணம்.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top