பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கடலூர் பெருநகராட்சி

கடலூர் பெருநகராட்சி சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

கடலூர் வருவாய் கிராமத்தை உள்ளடக்கிய கடலூர் நகரம் 1866 ஆம் ஆண்டில் நகராட்சியாக அமைக்கப்பட்டது. அரசாணை எண் 651 நாள் 09.03.1993 முதல் தேர்வு நிலை நகராட்சியாகவும், அரசாணை எண் 237 மற்றும் 238 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (தேர்தல்) நாள் 02.12.2008ன்படி 02.12.2008 முதல் சிறப்பு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. கடலூர் நகரத்தின் பரப்பளவு 27.69 சதுர கிலோ மீட்டர் ஆகும். 2001 மற்றும் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நகரின் மக்கள் தொகை முறையே 158481 மற்றும் 173031 ஆகும். இந்நகராட்சி 45 வார்டுகளைக் கொண்டது.

கடலூர் தாலுக்கா மற்றும் கடலூர் மாவட்டத்தின் தலைமையிடமாக கடலூர் நகரம் உள்ளது. கெடிலம் ஆறும் தென் பெண்ணையாறும் வங்காள விரிகுடாவில் கலக்கும் முகத்துவாரத்தில் இந்நகரம் அமையப் பெற்றுள்ளது. சென்னைக்கு தெற்கில் 11.740 வடக்கு அட்சய ரேகையிலும், 79.770 கிழக்கு தீர்க்க ரேகையிலும் அமைந்துள்ளது.

இந்நகரத்திற்கு பக்கத்தில் உள்ள சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் மற்றும் விழுப்புரம் ஆகிய நகரங்களுடன் சாலை மார்க்கமாகவும், இரயில் மார்க்கமாகவும் இணைக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேச நகரமான புதுச்சேரி நகரம் வடக்கில் 23 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கடலூர் துறைமுகம் (முதுநகர்) மற்றும் திருப்பாப்புலியூர் ரயில்வே நிலையம் ஆகியவை மாநிலத்தில் பிற பகுதிகளுக்கு செல்லும் பயணிகளுக்கு இணைப்பாக விளங்குகிறது. நகராட்சி பேருந்துநிலையம், திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்திற்கு மிகவும் அருகில் அமைந்துள்ளது.

நகரத்தை பற்றிய விபரங்கள்

வஎண்விபரங்கள்கடலூர்
1 தரம் சிறப்பு நிலை
2 கணக்குபரப்பளவு (சகிமீ) 27.69
3 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு 173031
4 மொத்த வார்டுகள் 45
5 மொத்த தெருக்கள் 924
6 மொத்த சொத்துவரிவிதிப்புகள் 30802
7 குடிநீர் இணைப்புகள் 11597
8 மொத்த வரியில்லா இனங்கள் 742
9 மொத்த தொழில் வரிகள் 2385
10 வரையறுக்கப்பட்ட பணியாளர்கள் 746
11 செலவினம் (2016-17) 14.95
வரவு செலவு சதவீதம் 54 %
12 மொத்த குடியிருப்புகள் 44152
13 கணக்கு நிலவரம் (கோடியில்)
வரவு 2012-13 15.65
வரவு 2013-14 19.04
வரவு 2014-15 20.71
வரவு 2015-16 27.43
வரவு 2016-17 14.82
செலவினம் 2012-13 18.43
செலவினம் 2013-14 19.32
செலவினம் 2014-15 28.58
14 உள்ளாட்சி சாலைகளின் நீளங்கள்
தார் சாலைகள் 78.323
சிமெண்ட் சாலைகள் 71.159
கப்பி சாலைகள் 27.390
கிராவல் சாலைகள் 0.000
பவர் பிளாக் சாலைகள் 0.000
மற்றவை 46.310
கூடுதல் 223.182
உள்ளாட்சி சாலைகள் அல்லாதவைகளின் நீளங்கள்
என்எச்ஏஐ
தேசிய நெடுஞ்சாலைகள் 11.500
மாநில நெடுஞ்சாலைகள் 17.140
முக்கிய மாவட்ட சாலைகள்
மற்ற மாவட்ட சாலைகள்
கிராம சாலைகள்
மற்ற சாலைகள்
கூடுதல் வரவு 28.640
15 மழைநீர் வடிகால் (கிமீ)
திறந்தவெளி வடிகால் 78.300
மூடிய வடிகால் 6.000
கூடுதல் 84.300
மொத்த சிறுபாலங்கள் 189
16 குடிநீர் ஆதாரங்கள் Own
குடிநீர் கிடைப்பது 14.50
குடிநீர் விநியோகம் 74.00
மொத்த உயர்மட்ட நீர்தேக்க தொட்டி 22
மொத்த கீழ்மட்ட நீர்தேக்க தொட்டி 2
பிரதான குடிநீர் ஏற்றும் பாதை (கிமீ) 54.5
விநியோகிக்கும் பாதை (கிமீ) 202
மொத்த குடிநீர் இணைப்புகள் 11597
மொத்த பொதுகுடிநீர் குழாய்கள் 534
குடிநீருக்காக மொத்த ஜெனரேட்டர் 1
மொத்த ஆழ்குழாய் கிணறு 0
வரவு மொத்த திறந்தவெளி கிணறு 2
மொத்த மினிபவர் பம்ப் 10
17 புதைவடிகால்
புதைவடிகால் நகராட்சி முழுவதும் உள்ளதா? பகுதியாக நிறைவேற்றபட்டுள்ளது
எஸ்டிபி தொழிலநுட்பம் ASP
எஸ்டிபி அளவு 12.50
கழிவுநீர் பாதைகளின் நீளம் 157.41
வரவு மொத்த சேகரிக்கும் கிணறு 19
மொத்த புதைசாக்கடை தொட்டி மூடி 5406
மொத்த கழிவுநீர் வெளியேற்றும் நிலையங்கள் 7
மொத்த பூஸ்டர் நிலையங்கள் 12
மொத்த வீட்டிணைப்புகள் 2385
மொத்த ஜெனரேட்டர்கள் (புதைவடிகால்) 18
18 தெருவிளக்குகளின் விபரம் – டியூப் விளக்கு 6754
சோலார் வேப்பர் விளக்கு 1066
சிஎப்எல் விளக்கு 88
சூரிய சக்தி விளக்கு 10
உயர்கோபுர விளக்கு 49
சிறிய உயர்கோபுர விளக்கு 0
கூடுதல் 8510
19 மொத்த பேருந்து நிலையங்கள் 1
பேருநதுநிலையங்கள் தரம் A
மொத்த பேருந்துகள் நிற்கும் இடம் 50
20 மொத்த நகராட்சி ஆரம்ப பள்ளி 15
நடுநிலைப்பள்ளி 5
உயர்நிலைப்பள்ளி
மேல்நிலைப்பள்ளி 1
கூடுதல் 21
21 திடகழிவு மேலாண்மை
ஒரு நாளைக்கு மொத்தகழிவுகள் உற்பத்தி (மெடன்) 48
ஒரு நாளைக்கு மொத்தகழிவுகள் சேகரித்தல் (மெடன்) 46
தனியாரால் பராமரிக்கப்படும் மொத்த வார்டுகள் 8
குப்பை கிடங்கு (ஏக்கர்) 18.16
வண்டி மூலம் முதல்நிலை குப்பைகள் சேகரித்தல் 205
வண்டி மூலம் இரண்டாம்நிலை குப்பைகள் சேகரித்தல் 18
மொத்த வரையறுக்கப்பட்ட துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை 456
தற்போதைய துப்புரவு பணியாளர்களின் மொத்த எண்ணிக்கை 242
அரசாணை 101/1997 –ன்படி மொத்த துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை 502
குழு மூலம் தற்காலிக துப்புரவு பணியாளர்கள் எண்ணிக்கை 107
22 கழிப்பிடங்களின் விபரங்கள் பொது கழிப்பிடம் 32
சுகாதார வளாகம் 14
நம்ம கழிப்பறை 0
கூடுதல் 46
23 ஆரம்ப பள்ளிகளில் கழிப்பறைகளின் எண்ணிக்கை 14
நடுநிலைப்பள்ளி 22
உயர்நிலைப்பள்ளி 01
மேல்நிலைப்பள்ளி 15
கூடுதல் 52
24 மொத்தம் பூங்காக்களின் எண்ணிக்கை 62
25 மொத்தம் குடிநீர் ஆதாரம் – உள்ளாட்சி 10
பொதுப்பணித்துறை
வருவாய்துறை 1
பஞ்சாயத்து யூனியன்
எச்ஆர் மற்றும் சிஇ 7
கூடுதல் 18
26 மொத்தம் மயானங்களின் எண்ணிக்கை 10
மொத்தம் மின் மயானம் 2
27 மொத்தம் ஆடு அறுக்குமிடங்களின் எண்ணிக்கை 2
28 நகராட்சி மருத்துவமனைகளின் விபரங்கள் 1
மகபேறு நிலையம் 3
ஆரம்பசுகாதார நிலையம் 5
மருந்தகங்கள் 2
கூடுதல் 11
29 மொத்தம் சத்துணவு மையங்களின் எண்ணிக்கை 21
30 மொத்தம் குடிசைகள் உள்ள இடங்கள் கண்டறியப்பட்டவை 29
குடிசைகள் உள்ள இடங்கள் கண்டறியப்படாதவை 24
கூடுதல் 53
குடிசைவாழும் மக்கள் தொகை 42058
குடிசையில் வசிக்கும் குடியிருப்புகளின் எண்ணிக்கை 10655
31 மொத்தம் சுயஉதவிக்குழுக்களின் எண்ணிக்கை 331
32 வறுமைக்கோட்டுக்கு கீழ்உள்ளவர்கள் 16184
33 மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அரசு கட்டிடங்கள் 294
சேகரிப்பு தொட்டிகள் வீடுகள் 22745
கூடுதல் 23039
34 நகராட்சி கட்டிடங்களில் ஊனமுற்றோருக்கான சாய்தள நடைபாதை 28
சாய்தள நடைபாதை தனியார் கட்டிடங்கள் 68

பேரிடர் மேலாண்மைக்கான அவசர உதவி எண்கள்

வ எண்பதவிதொலைபேசி எண்கள்
1 நகராட்சி ஆணையர் 04142-220679
2 நகராட்சி பொறியாளர் 04142-232121
3 நகர்நல அலுவலர் 04142-221799
4 மேலாளர் 04142-230021
5 உதவி நிகழ்வாளர் 04142-230021
6 வருவாய் அலுவலர் 04142-230021
7 நகரமைப்பு ஆய்வர் 04142-222022
8 நகரமைப்பு ஆய்வர் 04142-222022
9 கணக்கர் 04142-230021

மின்னாளுமை பயன்பாடு குறித்த உயர்ந்த சேவை

  • பிறப்பு இறப்பு சான்றுகள் 2000 வருடம் முதல் ஒவ்வொரு மாதமும் 300 சான்றுகள் வழங்கப்படுகிறது. மேலும், பிறப்பு இறப்பு சான்று மென்பொருள துணை இயக்குநர் சுகாதாரம் 2018 ஜனவரி முதல் அவர்களுடைய நிர்வாகத்திற்குள் வந்துள்ளது
  • விஷன் 2010-மைக்ரோசாப் பவர்பாய்ண்ட்ஆட்டோகார்டு டிசைனுடன் உள்ளது.
  • கிளையண்ட் / சர்வர் தொழில்நுட்பம் ஆரக்கல் உடையது
  • சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, வரியில்லா இனங்கள் மற்றும் புதைவடிகால் வரிகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளது.
  • இணையதள வரிசெலுத்தும் முறை 2003 ல் கொண்டுவரப்பட்டுள்ளது.
  • அச்சம் மற்றும அருவருக்கதக்க இனங்கள் மற்றும் கட்டிட அனுமதி ஆகியவை 2004 மற்றும் 2005 ல் கணினிமயமாக்கப்பட்டது.
  • அனைத்து பணியாளர்களுக்கும் தனிதனியாக கணினியில் டேட்டா உள்ளீடு செய்ய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
  • சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலகத்துடன் அனைத்து நகராட்சி இணையதள பொதுமக்கள் சேவை இணைக்கப்பட்டுள்ளது.
  • பணியாளர்களின் ஊதியம் கணினிமயமாக்கப்பட்டுள்ளது.
  • டைனமிக் இணையதளசேவை மற்றும் புள்ளியில் இணையதளசேவை
  • அனைத்து கணக்குகள் 2007 ஆண்டு முதல் கணினிமயமாக்கப்பட்டுள்ளது.
  • 2007 ஆண்டு முதல் ஒப்பந்தப்புள்ளி கணினிமயமாக்கப்பட்டுள்ளது.
  • இ ஒப்பந்தபுள்ளி பேஸ் 1 மற்றும் பேஸ் 2 2009 மற்றும் 2010 ஆண்டிலிருந்து செயல்பாட்டிற்கு வந்துள்ளது
  • பொறியியல் பிரிவு வேலைகள் அனைத்தும் 2013 முதல் இணையதள சேவையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • குடிநீர் வழங்கும் நிலையை 2014 ஆண்டு முதல் கைபேசி ஆப்பில் செயல்பட்டு வருகிறது.
  • இணையதள சேவையில் அனைத்து மாடல்களும் செய்யப்பட்டிருக்கிறது.

மின்னாளுமை சேவைகள்

அனைத்து இணையதள சேவைகளும், அலுவலக சேவைமையம் மற்றும் பொதுமக்கள் நேரிடையாக வீட்டிலிருந்து பயன்படுத்தும் வகையிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கீழ்கண்ட பேஸ் -1 சேவைகள் கணினிமயமாக்கப்பட்டு இணையதள சேவையில் வழங்கப்பட்டு வருகிறது.

  • சேவையில் பிறப்பு இறப்பு சான்றுகள் 2) சொத்து வரி 3) குடிநீர் கட்டணம் 4) வரியில்லா இனங்கள் 5) தொழில் வரி 6) கட்டிட அனுமதி 7) குறைதீர்வுகள் 8) அச்சம் மற்றும் அருவருக்கதக்க இனங்கள் 9) நீதிமன்ற வழக்கு

மேலும் பேஸ் -2 மாடல்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் தங்கள் சேவைகளை பயன்படுத்தும் இணையதள முகவரி-https://tnurbanepay.tn.gov.in/

ஒப்பந்தப்புள்ளி

தமிழக அரசு ஒப்பந்தப்புள்ளி சட்டம் 1998 (தமிழக அரசு சட்டம் 43/1998) ன்படி தமிழக அரசு மற்றும் உள்ளாட்சி துறை ஒப்பந்தப்புள்ளி இணையதளம் மூலமாக ஏற்றப்பட்டு வருகிறது. இந்த சட்டம் கீழ்கண்ட விபரபடி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

  • சிக்கனமாகவும் திறம்படவும் நடத்தபடுவதற்கு
  • வேகமாகவும் விரைவாகவும் ஒப்பந்தப்புள்ளி பெறப்படுவதற்கு
  • ஒப்பந்தப்புள்ளி போட்டியை குறைப்பதற்கு
  • ஒப்பந்தப்புள்ளி இணையதள முகவரி நகராட்சி http://municipality.tn.gov.in/tenders/​ தமிழக அரசு http://tntenders.gov.in/nicgep/app

சுற்றுலா தளங்கள்

* பாடலீஸ்வரர் கோவில்
* திருவத்திபுரம் தேவநாதசாமி கோயில்,
* வெள்ளி கடற்கரை,
* கடலூர் துறைமுகம் மற்றும்
* பழமையான ப்ரிடிஷ் கோட்டை

தொடர்பு கொள்ள

தொலைபேசி – 04142 – 230021

மின்னஞ்சல் – commr.cuddalore[at]tn[dot]gov[dot]in

இணையதளைசேவை முகவரி – https://tnurbanepay.tn.gov.in/

முகவரி – கடலுர் நகராட்சி அலுவலகம்,

பாரதி சாலை, கடலுர் – 607 001.

ஆதாரம் : https://cuddalore.nic.in/

3.05882352941
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top