অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

கூட்டுறவுத்துறை

கூட்டுறவுத்துறை

தோற்றம்

ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டம் கடலூா் மற்றும் விழுப்புரம் மாவட்டமாக பிரிக்கப்பட்ட பிறகு 30.09.1933ல் கடலூா் மாவட்டம் உதயமானது

சங்கங்கள் விபரம்

கடலூா் மாவட்டத்தில் கீழ்க்கண்டவாறு 285 கூட்டுறவுச் சங்கங்கள் அனைத்து தரப்பினருக்கும் சேவையாற்றி வருகின்றன.

கூட்டுறவுத்துறை
வ.எண்.சங்கங்களின் விபரம்எண்ணிக்கை
1 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் 160
2 நகர கூட்டுறவு கடன் சங்கம் 8
3 தொடக்க வேளாண்மைக் மற்றும் ஊரக வளா்ச்சி வங்கிகள் 6
4 கூட்டுறவு நகர வங்கிகள் 3
5 பணியாளா்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கங்கள் 76
6 கூட்டுறவு விற்பனைச் சங்சங்கள் 4
7 பிரதம கூட்டுறவு பண்டகசாலைகள் 7
8 மாணவா் கூட்டுறவு பண்டகசாலைகள் 13
9 தொழில் ஒப்பந்த கூட்டுறவுச் சங்கங்கள் 2
10 சிறப்பு வகை சங்கங்கள் 2
11 சரவணபவ நுகா்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை 1
12 கடலூா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 1
13 கடலூா் மாவட்டக் கூட்டுறவு ஒன்றியம் 1
14 கடலூா் மாவட்டக் கூட்டுறவு அச்சகம் 1
கூடுதல் 285

கூட்டுறவு இயக்கக் கொள்கைகள்

அ) தன்னிச்சையாக தடையின்றி உறுப்பினராக்குதல்

ஆ) ஜனநாயக முறையில் நிர்வாகம்

இ) உறுப்பினா் பொருளாதார முன்னேற்றத்தின் பங்கு

ஈ) சுயாட்சியும், சுதந்தரமும்

உ) கூட்டுறவு கல்வியும், பயிற்சியும்

ஊ) கூட்டுறவுகளிடையே கூட்டுறவு

எ) சமுதாய நலனில் ஈடுபாடு

கூட்டுறவுத்துறையின் சாதனைகள் - (2017-2018)

அ) 181 பொது சேவை மையங்கள் – 352016 சான்றுகள் வழங்கப்பட்டு நிகர இலாபம் ரூ.122.30 இலட்சம்

ஆ) 76 பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள் – 10642 உறுப்பினா்களுக்கு ரூ.336.24 கோடி மற்றும் கல்விக் கடனாக 700 உறுப்பினா்களுக்கு ரூ.7.42 கோடி வழங்கப்பட்டுள்ளது

இ) பயிர்க் கடன் – 2017-2018 ஆண்டு குறியீடு ரூ.385 கோடி – 57426 உறுப்பினா்களுக்கு ரூ.305.45 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

ஈ) முதலீட்டுக் கடன் – 2017-2018 ஆண்டு குறியீடு ரூ.20.60 கோடி – 2405 உறுப்பினா்களுக்கு ரூ.18.83 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

உ) நகைக் கடன் – 2017-2018 ஆண்டு குறியீடு ரூ.1211 கோடி – 105934 உறுப்பினா்களுக்கு ரூ.375.51 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

ஊ) சுய உதவிக் குழுக் கடன் – 2017-2018 ஆண்டு குறியீடு ரூ.22.45 கோடி- 550 குழுக்களுக்கு ரூ.6.59 கோழ கடன் வழங்கப்பட்டுள்ளது.

எ) தானிய ஈட்டுக் கடன் – ஆண்டு குறியீடு ரூ.3.40 கோடி – 164 உறுப்பினா்களுக்கு ரூ.2.96 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

ஏ) சிறு வணிகக் கடன் – ஆண்டு குறியீடு ரூ.4.25 கோடி – 3949 உறுப்பினா்களுக்கு ரூ.5.98 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

ஐ) மாற்றுத் திறனாளிகள் கடன் – ஆண்டு குறியீடு ரூ.1.00 கோடி – 135 உறுப்பினா்களுக்கு ரூ.0.61 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

ஒ) பங்கு மூலதன மானியக் கடன் – நகர கூட்டுறவு வங்கி – 19 மாற்று திறனாளிகள் – அனுமதிக்கப்பட்ட கடன் ரூ.47,500 – 20 ஆதிதிராவிடா்-பழங்குடியினருக்கு அனுமதிக்கப்பட்ட கடன் ரூ.50,000 – 20 மகளிர் உறுப்பினா்களுக்கு அனுமதிக்கப்பட்ட தொகை ரூ.50,000.

மருந்தகம்-

5 கூட்டுறவு மருந்தகம், 5 அம்மா மருந்தகம் ஆண்டு விற்பனை ரூ.227.05 இலட்சம்.

வேளாண் கடன் தள்ளுபடி திட்டம் 2016

குறுகிய கால பயிர்க்கடன் 61309 விவசாயிகளுக்கு ரூ.26227.88 இலட்சமும், மத்திய கால மாற்றுக் கடன்கள் 6109 விவசாயிகளுக்கு ரூ.1131.80 இலட்சமும், மத்திய காலக் கடன்கள் 13515 விவசாயிகளுக்கு ரூ.4658.12 இலட்சமும் ஆகக் கூடுதல் 80933 விவசாயிகளுக்கு ரூ.32017.80 இலட்சம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது

பயிர் காப்பீட்டு திட்டம்

2016-2017 ஆம் ஆண்டில் பயிர் காப்பீடு செய்த கடன் பெற்ற மற்றும் கடன் பெறாத விவசாயிகள் 55588 நபா்களுக்கு ரூ.87.37 கோடி.

2017-2018 ஆம் ஆண்டில் காரீப் மற்றும் ரபி பருவத்திற்கு இதுவரை 32586 நபா்களிடமிருந்து ரூ.2.80 கோடி தொகை காப்பீட்டு பிரிமியமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

மின் ஆளுமை

இம்மாவட்டத்தில் தற்போது 160 தொடக்க வேளாண்மைச் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 8 நகர கூட்டுறவு கடன் சங்கங்களிலும், 6 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வங்கிகளிலும், 3 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களிலும், 2 சரவணபவ நுகா்வோர் கூட்டுறவு பண்டகசாலை மையங்களிலும் மற்றும் மாவட்டக் கூட்டுறவு அச்சகத்திலும் பொது சேவை மையங்கள் இயங்கி வருகின்றன.

கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து 181 பொது சேவை மையங்களும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களும் அரசின் மின் ஆளுமை திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் வருவாய் துறையினரால் வழங்கப்படும் 5 வகையான சான்றுகளை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் பொது சேவை மையங்களிலும் ரூ.60 தொகை செலுத்தி அனைவரும் பெற்றுக் கொள்ளலாம். மேலும் மேற்படி பொது சேவை மையங்களில் சமூக நலத்துறை தொடா்பான அனைத்து விண்ணப்பங்களும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. பொது சேவை மையங்கள் மூலம் 20க்கும் மேற்படட இணையதள சேவைகள் வழங்கப்படுகின்றன. மேலும் மேற்படி திட்டத்தின் மூலம் 2017-2018 ஆம் ஆண்டு 352016 சான்றிதழ்கள் வழங்கப்பட்டு ரூ.122.30 இலட்சம் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

பொது விநியோகத் திட்டம்

கடலூர் மாவட்டத்தில் 1126 முழுநேர நியாயவிலைக் கடைகளும், 9 மகளிர் சுய உதவிக் குழு கடைகளும், 284 பகுதிநேர நியாயவிலைக் கடைகளும் செயல்படுகின்றன.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005

கூட்டுறவுத் துறை அலுவலகங்கள் தொடா்பான தகவல் அறியும் உரிமைச் சட்டம் மனுக்களுக்கு கீழ்க்கண்ட விபரப்படி பொது தகவல் அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

மாவட்ட அளவில் – துணைப்பதிவாளா்-பணியாளா் அலுவலா்,

சரக அளவில் – சரக துணைப்பதிவாளா்கள்

கூட்டுறவு நிறுவனங்கள் அளவில் – சங்க செயலாளா்கள்

துணை பொது தகவல் அலுவலா்கள்-

மாவட்ட அளவில் – இணைப்பதிவாளா் அலுவலக கூட்டுறவு சார் பதிவாளர்

சரக அளவில் – சரக துணைப்பதிவாளா் அலுவலக கூட்டுறவு சார் பதிவாளர்

கூட்டுறவு நிறுவனங்கள் அளவில் – உதவி செயலாளா்கள் அல்லது சிறப்பு நிலை உதவியாளா்

மாவட்ட முழுவதும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடா்பான மேல்முறையீட்டு அலுவலராக கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் அவா்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆதாரம் : https://cuddalore.nic.in/

கடைசியாக மாற்றப்பட்டது : 2/14/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate