অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை

சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை

அறிமுகம்

அரசாணை (நிலை) எண்.42, சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் (சந.3) துறை நாள். 17.05.2011ன்படி, சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறையால் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் ஐந்து திருமண நிதி உதவித் திட்டங்களிலும் மணப்பெண்ணிற்கு திருமண நிதியுதவி வழங்குவதற்கு ஏற்கனவே வழங்கப்படும் திருமண நிதியுதவியான ரூ. 25000/-த்துடன் திருமாங்கல்யம் செய்வதற்கான 22 காரட் கொண்ட 4 கிராம் தங்கம் மற்றும் பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு பயின்று தேர்ச்சி பெற்ற பெண்ணிற்கு திருமண நிதியுதவியாக ரூ. 50,000/- மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 22 காரட் கொண்ட 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு முதலமைச்சரின் தங்கம் வழங்கும் இம்மகத்தான திட்டம் 17.05.2011 முதல் தங்கத்துடன் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது அரசாணை (நிலை) எண்.47, சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் (சந.3) துறை நாள்.23.05.2016ன்படி, ஐந்து திருமண நிதி உதவித் திட்டங்களுக்கு நிதியுதவியுடன் 8 கிராம் தங்கமாக 23.05.2016 முதல் மாற்றம் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

மணப்பெண்ணிற்கு திருமண நிதியுதவி மற்றும் பயன்பெறுவதற்குரிய விதிமுறைகள் :

* ஏழை பெண்களின் திருமண நிதியுதவி முதலமைச்சரின் தங்கம் வழங்கும் திட்டம் (மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்)

* ஈ.வே.ரா மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவித் திட்டம்

* அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம்

* டாக்டர்.முத்துரட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு கலப்பு திருமண நிதி உதவித் திட்டம்

* டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண திருமண நிதி உதவித் திட்டம்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம்

தகுதிகள் விவரம் :

*பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். பழங்குடியினர் 5ம் வகுப்பு கல்வி பயின்றிருந்தால் போதுமானது. நிதியுதவித் தொகை ரூ.25000 மற்றும் 8 கிராம் தங்க நாணயமும், பட்டயப்படிப்பு / பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.50,000 மற்றும் 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படும்.

* பெண்ணின் வயது 18 பூர்த்தி அடைந்திருத்தல் வேண்டும்

* ஆண்டு வருமானம் ரூ.72000/-க்குள் இருக்க வேண்டும்

* திருமணத்திற்கு முன் 40 நாட்களுக்குள் இணைய வழி வாயிலாக அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்

* மணப்பெண் வீட்டார் மட்டும் இத்திட்டத்தில் பயன் பெற முடியும்

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் :

*ஆணையர், பஞ்சாயத்து யூனியன்

*சமூகநல விரிவாக்க அலுவலர்

*மாவட்ட சமூகநல அலுவலர்

ஈ.வே.ரா மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவித் திட்டம்

தகுதிகள் விவரம் :

*பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். நிதியுதவித் தொகை ரூ.25000 மற்றும் 8 கிராம் தங்க நாணயமும், பட்டப்படிப்பு / பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.50,000 மற்றும் 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படும்.

* பெண்ணின் வயது 18 பூர்த்தி அடைந்திருத்தல் வேண்டும் ஆண்டு வருமானம் ரூ.72000/-க்குள் இருக்க வேண்டும்

* திருமணத்திற்கு முன் 40 நாட்களுக்குள் இணைய வழி வாயிலாக அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்

* மணப்பெண் விதவை சான்றினை வட்டாட்சியர் மூலம் பெற்றிருக்கவேண்டும்

* மணப்பெண் வீட்டார் மட்டும் இத்திட்டத்தில் பயன் பெற முடியும் .

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் :

*ஆணையர், பஞ்சாயத்து யூனியன்

*சமூகநல விரிவாக்க அலுவலர்

*மாவட்ட சமூகநல அலுவலர்

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம்

தகுதிகள் விவரம் :

*பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். நிதியுதவித் தொகை ரூ.25000 மற்றும் 8 கிராம் தங்க நாணயமும், பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.50,000 மற்றும் 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படும்.

* பெண்ணின் வயது 18 பூர்த்தி அடைந்திருத்தல் வேண்டும். திட்டத்தில் பயன் பெறுவதற்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை.

*ஆண்டு வருமானம் அவசியம் இல்லை

*திருமணத்திற்கு முன் 40 நாட்களுக்குள் இணையவழி வாயிலாக அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

*ஆதரவற்றோர் சான்று வட்டாட்சியர், சட்டமன்ற உறுப்பினர் (அ) பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பெறவேண்டும் அல்லது தாய், தந்தை இறப்பு சான்று இணைக்கப்பட வேண்டும்.

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் :

*ஆணையர், பஞ்சாயத்து யூனியன்

*சமூகநல விரிவாக்க அலுவலர்

*மாவட்ட சமூகநல அலுவலர்

டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவித்திட்டம்

தகுதிகள் விவரம் :

*பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். நிதியுதவித் தொகை ரூ.25000 (15000/- தொகையாகவும், ரூ.10,000/- சேமிப்பு பத்திரமாகவும்) மற்றும் 8 கிராம் தங்க நாணயமும், பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.50,000 (30,000/- தொகையாகவும், ரூ.20,000/- சேமிப்பு பத்திரமாகவும்) மற்றும் 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படும்.

*பெண்ணின் வயது 18 பூர்த்தி அடைந்திருத்தல் வேண்டும். திட்டத்தில் பயன் பெறுவதற்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை.

*ஆண்டு வருமானம் அவசியம் இல்லை

*திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குள் இணையவழி வாயிலாக அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

*திருமண பத்திரிக்கை அல்லது திருமண பதிவுச் சான்று.

*மணமகள் மற்றும் மணமகன் சாதிச்சான்று மற்றும் வயதுச் சான்று, கலப்புத் திருமணச் சான்று பதிவு செய்து இணைக்க வேண்டும்.

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்

*ஆணையர், பஞ்சாயத்து யூனியன்

*சமூகநல விரிவாக்க அலுவலர்

*மாவட்ட சமூகநல அலுவலர்

டாக்டர். தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண திருமண நிதி உதவித்திட்டம்

தகுதிகள் விவரம் :

*பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். நிதியுதவித் தொகை ரூ.25000 (15000/- தொகையாகவும், ரூ.10,000/- சேமிப்பு பத்திரமாகவும்) மற்றும் 8 கிராம் தங்க நாணயமும், பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.50,000 (30,000/- தொகையாகவும், ரூ.20,000/- சேமிப்பு பத்திரமாகவும்) மற்றும் 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படும்.

*திருமணத்தின் போது குறைந்தபட்ச வயது 20-ஆக இருத்தல் வேண்டும். மணமகனின் வயது 40க்குள் இருத்தல் வேண்டும்

*ஆண்டு வருமானம் அவசியம் இல்ல

*திருமணமாகி ஆறு மாதத்திற்குள் இணையவழி வாயிலாக அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

*மறுமணம் பத்திரிக்கை மட்டும் போதுமானது.

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்

ஆணையர், பஞ்சாயத்து யூனியன்

மாவட்ட சமூகநல அலுவலர்

சமூகநல விரிவாக்க அலுவலர்

முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்

தகுதிகள் விவரம் :

திட்டம் 1 : ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் ரூ.50,000/- பெற்றோர் குடும்ப நல அறுவை சிகிச்சை சான்று, ஆண் வாரிசு இல்லை என்ற சான்று

திட்டம் 2 : இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் இருந்தால் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.25,000/- பெற்றோர் குடும்ப நல அறுவை சிகிச்சை சான்று, ஆண் வாரிசு இல்லை என்ற சான்று

*ஆண்டு வருமானம் ரூ.72000/-க்குள் இருத்தல் வேண்டும்

*இரண்டாவது குழந்தைக்கு மூன்று வயதிற்குள் இருத்தல் வேண்டும்.

*தாய், தந்தை வயதிற்கான சான்று

*இரண்டு பெண் குழந்தைகளின் பிறப்பு சான்று

*ஆண் வாரிசு இல்லை என்ற சான்று.

*பெற்றோரின் குடும்பல நல அறுவை சிகிச்சையின் போது 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்

1.ஆணையர், பஞ்சாயத்து யூனியன்

2.சமூகநல விரிவாக்க அலுவலர்

3. மாவட்ட சமூகநல அலுவலர்

தொட்டில் குழந்தை திட்டம்

பெண் சிசு கொலையை முற்றிலும் தடுக்கும் ஒரே நோக்கத்தோடு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் சீரிய எண்ணத்தில் உதித்த தொட்டில் குழந்தை திட்டத்தினை விரிவு படுத்தி, கடலூர் மாவட்டத்தில் 1999-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பிளஸ் ஹோம் நிறுவனம்

பாண்டி – கடலூர் மெயின் ரோடு,

ரெட்டிச்சாவடி,

கடலூர் மாவட்டம் – 607 402

தொலைபேசி எண். 9750365723

சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டம்

தகுதிகள் விவரம் :

*மாவட்ட சமூநலத்துறையின் வாயிலாக விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி (40 சதவிகிதம்) ஏழைப்பெண்களுக்கு மட்டும் வழங்கப்படும்.

*ஆண்டு வருமானம் ரூ.72000/-க்குள் இருத்தல் வேண்டும் (வட்டாட்சியரிடம் பெறவேண்டும்).

*இருப்பிட சான்று அல்லது ரேஷன் கார்டு வட்டாட்ச்சியரிடம் பெற வேண்டும்.

*தையல் பயிற்சி பெற்ற சான்று (பதிவு செய்யப்பட்ட தையல் நிறுவனத்தினரிடமிருந்து சுமார் ஆறுமாத கால பயிற்சி)

*வயது வரம்பு 21 முதல் 40 வயதிற்குள்ளாக இருத்தல் வேண்டும்.

*சாதி சான்று மற்றும் ஆதார் சான்று.

*விதவை சான்று, கணவரால் கைவிடப்பட்ட சான்று, ஆதரவற்ற மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளி சான்று.

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்

*மாவட்ட சமூகநல அலுவலர்

*சமூகநல விரிவாக்க அலுவலர்

திருநங்கைகள் நலன்

தமிழ்நாட்டில் உள்ள மூன்றாம் பாலினத்தவர்களுக்கு முழுமையான சமூக பாதுகாப்பை அளிக்க தேவையான திட்டங்களை வகுத்து சிறப்பான முறையில் செயல்படுத்த திருநங்கைகள் நலவாரியம் தோற்றுவிக்கப்பட்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சமூகநலத்துறையின் மூலம் தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்திற்கான அடையாள அட்டை வழங்குவதற்கு மருத்துவக்குழுவின் மூலம் வயது சான்று மற்றும் இருப்பிட சான்று அல்லது குடும்ப அட்டை திருநங்கைகள் பெற்றிருக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை வருவாய் ஆணையர் மூலம் வழங்கப்படுகிறது. உடல் ரீதியாக உழைத்து சம்பாதிக்க இயலாத திருநங்கைகளுக்கு குடும்ப உறுப்பினர்களாலோ அல்லது வேறு எந்த நபர்களாலும் உதவி பெறாதவர்களுக்கு 40 வயதிற்கு மேற்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் மாதம் ரூ.1000/- வீதம் வழங்கப்பட்டு வருகிறது.

பெண்கள் தையல் தொழிற் கூட்டுறவு சங்கம்

*கடலூர் பெண்கள் தையற் தொழில் கூட்டுறவு சங்கம் –லிட்.

12-ஏ, மிஷின் தெரு, மஞ்சக்குப்பம், கடலூர்-1.

*சிதம்பரம் பெண்கள் தையற் தொழில் கூட்டுறவு சங்கம் –லிட்.

14, கம்பர் சாலை, மின்நகர், சிதம்பரம்.

*இந்திராகாந்தி மகளிர் தையல் தொழிற் கூட்டுறவு சங்கம்.

விநாயகர் கோவில் தெரு, கீரப்பாளையம்.

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம்

இச்சட்டம் 2005 ஆண்டு கொண்டுவரப்பட்டது. 2006-ம் ஆண்டு அக்டோபர் முதல் நடைபடுத்தப்பட்டுள்ளது. குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இச்சட்டத்தின் மூலம் விரைந்து தீர்வு பெறமுடியும். மேலும், இச்சட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் சமூகநலத்துறையின் பாதுகாப்பு அலுவலர் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இச்சட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட பெண் நேரடியாகவோ அல்லது பாதுகாப்பு அலுவலர் மூலமாகவோ நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெற்றுக்கொள்ளலாம். மேலும், இச்சட்டத்தின் சிறப்பு என்னவென்றால் பாதிக்கப்ட்ட பெண் தனது கணவர் இல்லத்திலே வாழ நினைத்தாலும் அவற்றிற்கும் வழிவகை உள்ளது.

விதவை மகள்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் திட்டம்

தகுதிகள்

*மாவட்ட சமூநலத்துறையின் வாயிலாக விதவை, உயர் கல்வி பயிலும் ஏழை விதவை மகள்களுக்கு இலவச நோட் புத்தகம் வழங்கப்படும்.

*ஆண்டு வருமானம் ரூ.72000/-க்குள் இருத்தல் வேண்டும்

*1 முதல் 12 வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் :

*மாவட்ட சமூகநல அலுவலர்

*சமூகநல விரிவாக்க அலுவலர்

குழந்தை திருமண தடைச்சட்டம் – 2006

குழந்தை திருமண தடைச்சட்டம் – 2006ன்படி 18 வயது நிறைவடையாத பெண்ணிற்கும், 21 வயது நிறைவடையாத ஆணிற்கும் நடைபெறும் குழந்தை திருமணம் முற்றிலும் தடைசெய்யப்பட்டு வருகிறது. குழந்தை திருமணத்தை ஆதரிப்போர் மற்றும் பெற்றோர்கள் குழந்தை திருமணம் இல்லை என ஆதாரப்பூர்வாமாக நிரூபிக்கப்படாத பட்சத்தில் இரண்டு ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையும், ரூ.1,00,000/-வரை அபராதமும் நீட்டித்து வழங்கப்படும். 18 வயது நிறைவடையாத பெண் குழந்தையை திருமணம் செய்து கொள்ளும் வயது முதிர்வான ஆணிற்கும் இரண்டு ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையும், ரூ.1,00,000/-வரை அபராதமும் இரண்டும் சேர்ந்து தண்டனை விதிக்கப்படும். கடலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுக்க கிராம பஞ்சாயத்து அளவில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையிலும், தாய்மார்கள், ஆசிரியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனர்கள், கண்காணிப்பு குழு மூலம் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது. குழந்தை திருமணம் பற்றி புகார்களை அளிக்கலாம். இலவச தொலைபேசி எண். 1098 / 04142-221235, 04142-233911.

பெண் குழந்தைகளை பாதுகாப்போம் – பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்

இத்திட்டம் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள மாவட்டங்களில் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களால் ஜனவரி 2015 அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக துவக்கப்பட்ட 100 மாவட்டங்களில் இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக கடலூர் மாவட்டம் சிறந்த மாவட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டு 24.01.2018 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது. பெண் குழந்தையின் பிறப்பை கொண்டாடும் விதமாக பிரதி மாதம் 7-ம் தேதி பெண் குழந்தைகள் தினம் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பெண் குழந்தை செல்வத்தை ஈன்ற பெற்றோர் எனப்பாராட்டி மாவட்ட ஆடசித்தலைவர் கையொப்பமிட்ட பாராட்டுச்சான்றிதழ், மரக்கன்று மற்றும் அம்மா குழந்தைகள் நலப்பரிசு பெட்டகம் ஆகியவை அளித்து கொண்டாடப்படுகிறது.

இத்திட்டத்தின் நோக்கம் :

*கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கூறாமல் இருத்தல், இச்சட்டத்தினை மீறுவோர் மீது கடுமையான தண்டனை வழங்குதல்.

*பெண் குழந்தையின் உயிர் வாழ்தல், பாதுகாப்பு உறுதிப்படுத்துதல், பாலினப் பாகுபாட்டை குறைத்தல்.

*பெண் குழந்தையின் கல்வி மற்றும் சமுதாயப் பங்கேற்பினை உறுதி செய்தல்.

தொட்டில் குழந்தை தத்து நிறுவனம் : குடும்ப வன்முறை பாதுகாப்பு சட்டம் – 2005

வ.எண்

முதியோர் இல்லத்தின் பெயர் மற்றும் முகவரிதொடர்பு எண்
1 கிரீடு ஒருங்கிணைந்த வளாகம்

கரிக்குப்பம் கிராமம், பரங்கிப்பேட்டை மற்றும் அஞ்சல், சிதம்பரம் வட்டம்.

9443262222
2 அமலா குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லம்

வீராரெட்டிக்குப்பம், விருத்தாசலம் வட்டம், கடலூர் மாவட்டம்.

9786000217
3 புனித மரியன்னை முதியோர் இல்லம்,

பழைய மருத்துவமனை ரோடு, கடலூர் மாவட்டம்.

9047307259
4 அன்பகம் முதியோர் இல்லம்

24, 3வது சந்து, மின்நகர், சிதம்பரம், கடலூர் மாவட்டம்.

9865666099
5 மாதர் நல தொண்டு நிறுவனம்

பாதிரிக்குப்பம் மற்றும் அஞ்சல், திருவந்திரபுரம் மெயின் ரோடு,கடலூர் மாவட்டம்.

9442210977
6 ஹெல்பேஜ் இந்தியா முதியோர் இல்லம்

தாமரைக்குளம், சின்னகங்கணாங்குப்பம், கடலூர் மாவட்டம். (தனியார்)

9600237970
7 சமர்ப்பன் முதியோர் இல்லம் (தனியார்)

124/எ, மெயின் ரோடு, பொன்னன் தெரு, புதுப்பாளையம், கடலூர் மாவட்டம்.

9486103753

அலுவலக முகவரி

மாவட்ட சமூகநல அலுவலகம்

நெல்லிக்குப்பம் மெயின் ரோடு

சேவை இல்ல வளாகம்

கடலூர் மாவட்டம்.

தொலைபேசி எண் – 04142 221235

மின்னஞ்சல் முகவரி dswo_cud[at]yahoo.in

வட்டம் மற்றும் மாவட்ட தொடர்பு அலுவலர் விபரம்

வ.எண்

அலுவலக முகவரிதொடர்பு எண்

மின்னஞ்சல் முகவரி

1 வட்டார வளர்ச்சி அலுவலகம், கடலூர் 04142-230286 bdocud[at]gmail[dot]com
2 வட்டார வளர்ச்சி அலுவலகம், அண்ணாகிராமம் 04142-277238 blockang[at]gmail[dot]com
3 வட்டார வளர்ச்சி அலுவலகம், பண்ருட்டி 04142-242094 bdoprt[at]gmail[dot]com
4 வட்டார வளர்ச்சி அலுவலகம், குறிஞ்சிபாடி 04142-258355 pukpdi[at]gmail[dot]com
5 வட்டார வளர்ச்சி அலுவலகம், மேல்புவனகிரி 04144-241238 bdombh[at]yahoo[dot]co[dot]in
6 வட்டார வளர்ச்சி அலுவலகம், பரங்கிப்பேட்டை 04144-243227 bdoport[at]yahoo[dot]in
7 வட்டார வளர்ச்சி அலுவலகம், கீரப்பாளையம் 04144-241354 keepalayambdo[at]yahoo[dot]co[dot]in
8 வட்டார வளர்ச்சி அலுவலகம், குமராட்சி 04144-251224 kumaunion[at]yahoo[dot]co[dot]in
9 வட்டார வளர்ச்சி அலுவலகம், காட்டுமன்னார்கோயில் 04144-262029 bdo_kmk[at]yahoo[dot]co[dot]in
10 வட்டார வளர்ச்சி அலுவலகம், விருத்தாசலம் 04143-238217 bdovri[at]gmail[dot]com
11 ரோஸ்மேரி சமூகநல விரிவாக்க அலுவலர் 04143-249424 nallurbdo13[at]gmail[dot]com
12 வட்டார வளர்ச்சி அலுவலகம், கம்மாபுரம் 04142-267243 bdokam[at]gmail[dot]com
13 வட்டார வளர்ச்சி அலுவலகம், மங்களூர் 04143-248244 mangablock[at]yahoo[dot]com

உதவி எண்கள்

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் – 1091

  • பணியிடத்தில் பெண்களை பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் – 1091
  • வரதட்சணை தடுப்பு சட்டம் – 1091
  • பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம் – 1253
  • குழந்தை திருமண தடைச்சட்டம் – 1098

ஆதாரம் : https://cuddalore.nic.in/

கடைசியாக மாற்றப்பட்டது : 7/16/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate