অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

தாட்கோ

தாட்கோ

தாட்கோ திட்டங்களுக்கான தகுதிகள்

*இந்து ஆதிதிராவிடராக இருத்தல் வேண்டும்

*வயது வரம்பு 18 முதல் 65 வரை இருத்தல் வேண்டும்

*குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரு.1.00 இலட்சம் இருக்க வேண்டும். குழுக்களுக்கு குழு உறுப்பினா்களின் குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரு.2.00 இலட்சம் இருக்க வேண்டும்.

*வாகன திட்டத்திற்கு ஓட்டுநா் உரிமம் மற்றும் பேட்சு பெற்றிருத்தல் வேண்டும்.

*கால்நடை வளா்ப்பு தொழிலுக்கு விண்ணப்பிப்பவா்கள் வாங்கப்படும் கால்நடைகளின் எண்ணிக்கை, திட்ட அறிக்கை, மருத்துவ உடல் தகுதிச்சான்றிதழ் அந்தந்த மாவட்டங்களிலுள்ள கால்நடை மருத்துவரிடம் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்..

*துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின்கீழ் விண்ணப்பிப்பவா்கள் அவா்கள் பெயரிலேயே நிலப்பட்டா இருத்தல் வேண்டும். தமிழ்நாடு மின் வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும்.

மகளிர் நிலம் வாங்கும் திட்டம் (பெண்கள் மட்டும்)

*நிலம் வாங்கும் திட்டத்தில் மகளிர் பெயரில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

*இத்திட்டத்தில் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவிகிதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.

*நிலம் விற்பவா் மற்ற இனத்தவராக இருத்தல் வேண்டும்.

நிலம் மேம்படுத்துதல் திட்டம்

*நிலம் மேம்பாடு செய்வதற்கு, நிலம் விண்ணப்பதாரரின் பெயரிலேயே இருக்க வேண்டும்.

*நிலத்தினுடைய சிட்டா, பட்டா, ”அ” பதிவேடு, அடங்கல், பத்திரம், 20 வருட வில்லங்க சான்று, வழிகாட்டு மதிப்பு ஆகியவற்றின் நகல் வைத்திருக்க வேண்டும்.

*திட்ட அறிக்கை வைத்திருக்க வேண்டும். (மண் வளத்தன்மையை மேம்படுத்துவதற்கு நீர் ஆதாரம் உள்ளதை உறுதி செய்தல் வேண்டும்.  இத்திட்டத்தின்கீழ் கிணறு சரி செய்தல், ஆழ்குழாய் கிணறு அமைத்தல், சொட்டு நீர் பாசனம், நிலவளத்தை மேம்படுத்துதல், பம்ப் செட் அமைத்தல்)

*விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் நஞ்சை 5 ஏக்கர் அல்லது புஞ்சை 5 ஏக்கருக்குள் இருக்க வேண்டும்.

துரித மின் இணைப்பு வழங்கும் திட்டம்

*நிலம் விண்ணப்பதாரருக்கு சொந்தமாக இருப்பதுடன் அவரது பெயரில் நிலப்பட்டா இருத்தல் வேண்டும்.

*மேற்கண்ட நிலத்தில் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

*தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும்.

தொழில் முனைவோர் திட்டம்

*கடன் கோரும் தொழிலில் முன் அனுபவராக இருத்தல் வேண்டும்.

*பால் பண்ணை தொழிலுக்கு ஆவின் போன்ற நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தம் பெற்றிருத்தல் வேண்டும்.

*உள்நாட்டு மீன் வளர்ப்பு, நன்னீர் இறால் வளர்ப்பு மற்றும் நீர் குழாய் மீன்பிடி போன்ற தொழில் புரிய விருப்பமுள்ளவர்கள் குறைந்தபட்சம் அரை ஏக்கர் நிலம் வைத்திருத்தல் வேண்டும்.

இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்புத் திட்டம்

*தாட்கோவில் பயிற்சி பெற்றவர்களுக்கு பயனாளிகளின் எண்ணிக்கையில் 25 சதவிதம் முன்னுரிமை அளிக்கப்படும்.

*வயது வரம்பு 18 முதல் 45 வரை

*கடன் கோரும் தொழிலில் முன் அனுபவராக இருத்தல் வேண்டும்.

*அந்தந்த பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

*முடிநீக்கு மையம் அமைப்பதற்கு உரிய முடநீக்கவியல் பட்டபடிப்பு படித்து உரிய கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

*குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்தபட்சம் 5 வரை இருக்கலாம்.

*குழு ஊக்குநர் மற்றும் குழுவின் உறுப்பினர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சம் வரை இருக்கலாம்.

*சுய உதவிக் குழு வேறு எந்த அரசு திட்டத்திலும் சுழல்நிதி கடனுக்கான மானியம் பெற்றிருக்கக்கூடாது.

சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி திட்டம்

*குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்தபட்சம் 5 வரை இருக்கலாம்.

*சுழல்நிதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

*இரண்டாவது முறை குழு தர நிர்ணம் செய்திருத்தல் வேண்டும்

*குழு தீர்மான நகல் வைத்திருக்க வேண்டும்.

*வங்கி சேமிப்பு புத்தகம் வைத்திருத்தல் வேண்டும்.

மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதி திட்டம்.

*மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதி திட்டத்தின்கீழ் ஆதரவற்ற விதவைகள், மாற்றுத் திறனாளிகள் 30 வயதுக்குட்பட்ட திருமணம் ஆகாத பெண்கள் மற்றும் பெற்றோர் (அ) பாதுகாவலர் இல்லாத குழந்தைகள், *குணப்படுத்த இயலாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

*வயது வரம்பு ஏதுமில்லை

*மாவட்ட ஆட்சியரிடம் இத்திட்டத்தில் பயன்பெற நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

தாட்கோ தலைவரின் விருப்புரிமை நிதி திட்டம்

ஆதிதிராவிட விதவைகள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள், நலிந்த கலைஞர்கள், பெற்றோர் (அ) பாதுகாவலர் இல்லாத குழந்தைகள், குணப்படுத்த இயலாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன் திறன் வளர்க்கும் பயிற்சிகள் அளித்தல், கல்வி தொடர்வதற்கு தேவைப்படும் கூடுதல் நிதி உதவி, தீ விபத்து (அ) சாதி கலவரத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கலாம்.

தாட்கோ  –  அணுகவேண்டிய முகவரி :

மாவட்ட மேலாளர்,

அறை எண்.313,316 மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

ஆல்பேட்டை, கடலூர்.

ஆதாரம் : https://cuddalore.nic.in/

கடைசியாக மாற்றப்பட்டது : 6/18/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate