பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை

கடலூா் மாவட்டத்தின் பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நோக்கங்கள்

மாநில வருமான மதிப்பீடுகள், பொருளாதார கணக்கெடுப்பு, வேளாண் கணக்கெடுப்பு, சிறப்பு ஆய்வுகள் மற்றும் பொருளாதாரத்தின் மாதாந்திர அறிக்கைகள் உட்பட பொது மற்றும் தனியார் தரவு மூலங்களின் புள்ளி விவர தரவு சேகரிப்பு தொகுத்தல்.

பயிர்கள் வாரியாக பாசனம் மற்றும் நீர்ப்பாசன பரப்பளவு உள்ளிட்ட பல்வேறு வகைப்பாடுகளின் கீழ் புவியியல் நிலத்தைப் பயன்படுத்துவது பற்றிய தகவல்களை சேகரிக்கவும் மற்றும் நில பயன்பாட்டு முறை, பயிர் பல்வகைப்படுத்துதல், பாசனம் மற்றும் பயிர்கள் பற்றிய பல்வேறு திட்டங்களின் தாக்கம் ஆகியவற்றிற்கான தரவு பயன்படுத்தப்படுகிறது.

நடைமுறையில் உள்ள திட்டங்கள்

பயிர் மதிப்பீட்டு ஆய்வு

தமிழ்நாட்டில் நெல் சிறுதானியங்கள் (சோளம், கம்பு, கேழ்வரகு), வேர்க்கடலை, எள், சூரியகாந்தி, கரும்பு, பருத்தி, பயறுகள் (துவரை, உளுந்து, பச்சைப்பயிறு) ஆகிய பயிர்களின் சராசரி விளைச்சலையும், மொத்த உற்பத்தியையும் துல்லியமாகக் கணிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் புள்ளி இயல் துறை பயிர் மதிப்பீட்டு ஆய்வுகளை நடத்திவருகிறது. தேசிய மாதிரி ஆய்வு நிறுவன இயக்குநரின் தொழில் நுட்ப ஆலோசனைகளின் கீழ், பயிர் மதிப்பீட்டு ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

பயிர் மதிப்பீட்டு ஆய்வுகள் மேற்கொள்ளவேண்டிய மாதிரி கிராமங்கள் புள்ளி இயல் துறையால் தேர்வு செய்யப்பட்டு பயிர் அறுவடைப் பணி வேளாண்மைத் துறை பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு களப்பணி பல்வேறு நிலைகளில் குறிப்பாக அறுவடை நிலையில் புள்ளி இயல் துறை, வேளாண்மைத் துறை, தேசிய மாதிரி ஆய்வு நிறுவன அலுவலர்களால் மேற்பார்வையிடப்படுகின்றன

பாரதப் பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டம்

புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்ற பாதிப்பு ஏற்படும்போதும், பூச்சி மற்றும் நோயினால் பயிருக்கு சேதம் ஏற்படும்போதும் விவசாயிகளுக்கு காப்பீடு மற்றும் நிதி உதவி அளித்தல், தன் நோக்கமாகும்.

சிறுபான்மைப் பயிர் திட்டம்

இது தோட்டக்கலை துறையினராலும் புள்ளி இயல் துறையினராலும் மேற்கொள்ளப்படுகிறது. திட்டத்தின் கீழ் விளைச்சலை மாவட்ட அளவில் கணிப்பதற்காக மிளகாய், மல்லி, மரவள்ளி மற்றும் வெங்காயம் ஆகிய பயிர்கள் ஒவ்வொரு வருடமும் தேர்விடப்பட்ட கிராமங்களில் பயிரிடப்படுகின்றன.

பயிர் மேம்பாட்டுத் திட்டம்

கிராம நிர்வாக அலுவலர்களால் ஒவ்வொரு பருவத்திலும் பயிர் பரப்பாய்வு சரியான முறையில் மேற்கொள்ளப்படுகிறதா, கிராம நிர்வாக அலுவலர்களால் பேணப்படும் அடங்கலில் பயிர் பரப்பின் கூட்டுத்தொகை சரியாக உள்ளதா என சரிபார்த்தல் பணி புள்ளி இயல் துறையால் மேற்கொள்ளப்படுகிறது. நிலங்களின் பல்வேறு பயன்பாடுகள் கிராமப் பதிவேடுகளில் உள்ளதை உறுதிப்படுத்துவதே, தன் நோக்கமாகும்.

தென்னை கமுகு ஆய்வு

ஒரு வட்டாரத்தில் ஓர் கிராமம் தேர்வு செய்யப்பட்டு 2 தென்னந்தோப்புகள் மற்றும் கமுகு தோப்புகள் தேர்வு செய்யப்பட்டு விளைச்சல் கணக்கிடப்படுகிறது. இதில் சாகுபடி முறை மற்றும் தேங்காய் பயன்படுத்தும் முறைகள், சொந்த உபயோகம், விற்பனை அளவு மற்றும் எண்ணெய்க்குப் பயன்படுத்தும் அளவு ஆகியவை கணக்கிடப்படுகிறது.

பயிர் பரப்பு உரிய காலத்தில் மதிப்பிடும் திட்டம்

ஓவ்வொரு வட்டாரத்திலும் 20 கிராமங்கள் தேர்விடப்பட்டு அந்த கிராமங்களில் மட்டும் பயிர் அறுவடை ஆய்வு மற்ற திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த கிராமங்களில் அனைத்து பருவங்களிலும் அடங்கல் சரியாகப் பேணப்பட்டு காரீப், ராபி மற்றும் கோடைப் பருவங்களில் அடங்கல் மற்றும் முக்கியப்பயிர்களின் பரப்பு ஆய்விடப்படுகிறது.

விற்பனை மிகுதித் திட்டம்

குறிப்பிட்ட வட்டாரத்தில் தேர்விடப்பட்ட கிராமத்தில் நெல் பயிரில் விவசாயிகளுக்குக் கிடைக்கும் மொத்த மகசூல், விவசாயக் கூலி விவரங்கள், விதை அளவு, சொந்த நுகர்வு மற்றும் விற்பனை செய்த அளவு ஆகியவை கணக்கிடப்படுகின்றன.

வட்டாரப் புள்ளி இயல் கையேடு

ஓவ்வொரு வட்டாரத்திலும் கிராம வாரியான பரப்பு விவரங்கள், மக்கள் தொகை விவரங்கள், வேளாண்மைக் கணக்கெடுப்பு விவரங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவ நிலையங்கள், அஞ்சலங்கள் மற்றும் நூல் நிலையங்கள் பற்றிய விவரங்கள், ஊராட்சி ஒன்றிய திட்டங்கள் மற்றும், தர திட்டங்கள் குறித்த அட்டவணைத் தொகுப்பு கையேடு தயாரிக்கப்படுகிறது.

நகராட்சி புள்ளி இயல் கையேடு

ஓவ்வொரு நகராட்சியிலும் வார்டு வாரியான பரப்பு விவரங்கள், மக்கள் தொகை விவரங்கள், வேளாண்மைக் கணக்கெடுப்பு விவரங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவ நிலையங்கள், அஞ்சலங்கள் மற்றும் நூல் நிலையங்கள் பற்றிய விவரங்கள், ஊராட்சி ஒன்றிய திட்டங்கள் மற்றும், தர திட்டங்கள் குறித்த அட்டவணைத் தொகுப்பு கையேடு தயாரிக்கப்படுகிறது.

மாவட்டப் புள்ளி இயல் கையேடு

ஓவ்வொரு ஆண்டிற்கும் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் புள்ளி விவரங்களும், உரிய அட்டவணைகளில் தொகுத்து மாவட்டப் புள்ளி இயல் கையேடு தயாரிக்கப்படுகிறது.

வீட்டு வசதித் திட்டம்

பொதுத்துறை

ஊராட்சி ஒன்றியத்தால் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் ரூ.25,00,000-க்கு மேல் கட்டப்படும் கட்டிடங்கள் பற்றிய திட்டப் பட்டியல். புள்ளி விவரங்கள் அனுமதிக்கப்பட்ட நாள், மதிப்பீட்டுத் தொகை, கட்டிடம் ஆரம்பிக்கப்பட்ட மற்றும் கட்டி முடிக்கப்பட்ட விவரங்கள் ஒவ்வொரு ஆண்டும் சேகரித்து நேரடியாக மாநில அரசுக்கு அனுப்பப்படுகிறது.

தனியார்துறை

ஓவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளிலும்;, தனியாரால் கட்ட அனுமதி பெறப்பட்ட கட்டிடங்கள் பற்றிய புள்ளி விவரங்கள், ஒவ்வொரு காலாண்டிற்கும் சேகரித்து நேரடியாக மாநில அரசுக்கு அனுப்பப்படுகிறது. இது நகர வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி குறித்த திட்டமிடலுக்கு உதவுகிறது.

மொத்த விலைக் குறியீட்டெண்

மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட தொழிற்சாலையில் உற்பத்தியாகும் பொருட்களின் மொத்த விலை விவரங்கள் சேகரிக்கப்பட்டு துறைக்கு அனுப்பப்படுகிறது. இது மொத்த விலைக் குறியீட்டெண் தயாரிக்க உதவுகிறது

அங்காடி புலனாய்வுத் திட்டம்

கடலூர் மையத்தில் தினசரி குறிப்பிட்ட பொருட்களின் விலைகள் அங்காடி மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சேகரிக்கப்பட்டு புள்ளி இயல் துறைக்கு அனுப்பப்படுகிறது.

மழைப்புள்ளி விவரம்

இம்மாவட்டத்தில் உள்ள மழைமானி நிலையங்களில் இருந்து மழைப்புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு புள்ளி இயல் துறைக்கு அனுப்பப்படுகிறது. இது பருவகால மற்றும் ஆண்டு சராசரி இயல்பு மழை விவரங்கள் தயாரிக்க உதவுகிறது.

விவசாயக் கூலி விவரம்

ஓவ்வொரு வட்டாரத்திலும் ஒரு கிராமம் வீதம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு பல்வேறு வகை விவசாய தொழிலாளர்களின் விவசாயக் கூலி விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. இது அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச கூலி நிர்ணயம் செய்வதற்கு உதவுகிறது.

தேசிய மாதிரி ஆய்வு

இத்திட்டத்தின் கீழ் இம்மாவட்டத்தில் கிராமங்கள் மற்றும் நகரங்கள் எதேச்சை எண் முறையில் அரசால் தெரிவு செய்யப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. அரசின் திட்டங்களுக்காக கொள்கைகள் வகுக்க ஏதுவாக ஒவ்வொரு ஆண்டுக்கும் கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு, நுகர்வு போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறைக்கு அனுப்பப்படுகிறது. இது போன்று தேசிய மாதிரி ஆய்வு நிறுவனமும் ஒவ்வொரு ஆண்டும் இது தொடர்பாக தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராமங்களின் விவரங்களை சேகரித்து அரசுக்கு அனுப்புகிறது.

பழம் மற்றும் காய்கறித் திட்டம்

இத்திட்டத்தின் கீழ் கடலூர்; மாவட்டத்தில் மா, பலா, வாழை, கொய்யா, வெங்காயம், தக்காளி, கத்தரி மற்றும் வெண்டை ஆகியவற்றின் உற்பத்தியை கணிப்பதற்காக மேற்கண்ட பயிர்களுக்கான பயிர் அறுவடை பரிசோதனை ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளப்படுகிறது

ஆதாரம் : கடலூா் மாவட்டம்

3.11764705882
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top