অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

கல்வி

கல்வி

அனைவருக்கும் கல்வி இயக்கம்

அனைவருக்கும் கல்வி இயக்கம் 2000-2001 ஆம் கல்வி ஆண்டில் மத்திய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது, இத்திட்டம் 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்குவதை உறுதி செய்யும் வகையிலும் அவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் வகையிலும் தரமான கல்வியினை வழங்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.

நிர்வாக அமைப்பு

மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்பட்டு வரும் இத்திட்டம் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அனைவருக்கும் கல்வி இயக்கம் – மாவட்ட அமைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட திட்ட அலுவலகம் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் தலைமையில் செயல்பட்டு வருகிறது.

அலுவலக முகவரிஅலுவலர்கள் பதவிஅலுவலக எண்

மாவட்ட திட்ட அலுவலகம்,அனைவருக்கும் கல்வி இயக்கம்,

சி,வ அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், தூத்துக்குடி,628003

அலுவலக எண்:0461 2324730

மின்னஞ்சல் முகவரி: ssathoothukudi[at]yahoo[dot]co[dot]in

கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் 9788859166
மாவட்ட திட்ட அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்கம், சி,வ அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், தூத்துக்குடி - 628003, அலுவலக எண்:0461 2324730, மின்னஞ்சல் முகவரி: ssathoothukudi[at]yahoo[dot]co[dot]in உதவி திட்ட அலவலர் 9788859167

மாவட்ட திட்ட அலுவலகப் பணிகள்

  1. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் பணிகளை மாவட்ட அளவில் திட்டமிடல், செயலாற்றுதல் மற்றும் கண்காணித்தல்.
  2. வட்டார அளவிலான திட்டமிடல், பள்ளி/கிராம வரைபடம், திட்டங்களை உருவாக்குதல் மற்றும் இலக்கு நிர்ணயித்த பணிகளை ஒருங்கிணைத்தல்.
  3. பள்ளி / கிராம அளவிலான திட்டங்களை தொகுத்தல் மற்றும் வட்டார வளமைய அளவில் ஒருங்கிணைத்து அதனை மாவட்ட அளவிலான ஆண்டு திட்ட அறிக்கையாக தயாரித்தல்..
  4. சிறப்பு குறிக்கோள்கள் மற்றும் இலக்குகளுடன் கூடிய தனித்தன்மை வாய்ந்த கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை உருவாக்கி கண்காணித்தல்.
  5. வட்டார வாரியாக பள்ளி இடைநிற்றல் மற்றும் பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது தொடர்பான பணிகளை ஆய்வு செய்தல்.
  6. ஓர் ஆண்டின் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களை காலமுறை வாரியாக ஆய்வு செய்தல், வட்டார மற்றும் தொகுப்பு வளமையங்களை ஆய்விடல் பணிகளை கண்காணித்தல்.
  7. வீடு வாரியாக பள்ளி செல்லும் குழந்தைகள் கணக்கெடுப்பு பணியினை மேம்படுத்தி பராமரித்தல் மற்றும் பள்ளிகளுக்கு நூறு சதவீத மாணவர் வருகையினை மாவட்ட அளவில் தொகுத்தல்.
  8. பல்வேறு குழுக்களுக்கு மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியத் தொகைகள் சரியான வகையில் பயன்படுத்தப்படுவதை கண்காணித்தல்.
  9. பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கண்டறிந்து அதற்கான திட்டங்கள் தயாரித்தல் மற்றும் மாவட்டத்தில் நடைபெறும் அடிப்படை கட்டமைப்பு வசதி பணிகளை ஆய்விடல்.
  10. மாவட்ட அளவில் அடிப்படை கல்வி தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துதல் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை சரியாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணித்தல்.
  11. பள்ளி செல்லும் குழந்தைகளின் வருகையினை அதிகரிக்கவும், பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளிகளில் சேர்ப்பதையும், தரமான கல்வியினை உறுதிப்படுத்தவும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் அரசு துறைகளை ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதி செய்தல்.
  12. மாவட்ட மற்றும் வட்டார அளவில் நடைபெறும் பயிற்சிகளை கண்காணித்தல்.

வட்டார அளவிலான அமைப்பு

மாவட்டத்திலுள்ள 12 வட்டாரங்களிலும் வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் வட்டார அளவில் அனைவருக்கும் கல்வி இயக்க பணிகளை செயல்படுத்துகின்றனர்.

வ.எண்

ஒன்றியம்வட்டார வளமைய முகவரி மற்றும் தொலைபேசி எண்

தொகுப்பு வள மையங்களின் எண்ணிக்கை

பள்ளிகளின் எண்ணிக்கை

மேற்பார்வையாளர்களின் கைபேசி எண்

1 ஆழ்வார் திருநகரி வட்டார வள மையம் ஆழ்வார்திருநகரி (இருப்பு) அரசு மேல்நிலைப்பள்ளி, மாவடிப்பண்ணை 04639 / 27304 11 155 9788859176
2 கருங்குளம் வட்டார வள மையம், கருங்குளம், அரசு மேல்நிலைப்பள்ளி, கருங்குளம், 04630 / 292390 6 103 9788859177
3 கயத்தார் வட்டார வள மையம், கயத்தார்

வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் கயத்தார் 04632 / 222133

8 155 9788859178
4 கோவில்பட்டி வட்டார வள மையம், கோவில்பட்டி வ.உ.சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம், கோவில்பட்டி 04632 / 23918 11 173 9788859179
5 ஓட்டப்பிடாரம்

வட்டார வள மையம், ஓட்டப்பிடாரம், வ.உ.சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம், ஓட்டப்பிடாரம் 0461 2366766

8 165 9788859180
6 புதூர் வட்டார வள மையம், புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், புதூர் 04638 252155 6 112 9788859181
7 சாத்தான்குளம் வட்டார வள மையம், சாத்தான்குளம் இருப்பு) அரசு மேல்நிலைப்பள்ளி, கொமடிக்கோட்டை 04630 256535 8 158 9788859182
8 திருவைகுண்டம் வட்டார வள மையம், திருவைகுண்டம், மீன் மார்கெட் அருகில் திருவைகுண்டம், 04630 / 256535 9 141 9788859183
9 திருச்செந்தூர் வட்டார வள மையம், திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம், திருச்செந்தூர் 04639 246371 8 131 9788859184
10 தூத்துக்குடி ஊரகம் வட்டார வள மையம், தூத்துக்குடி ஊரகம், அரசு மேல்நிலைப்பள்ளி சோரீஸ்புரம் 04630 256535 9 143 9788859185
11 உடன்குடி வட்டார வள மையம், உடன்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, இடைச்சிவிளை 04639 250179 6 114 9788859186
12 விளாத்திகுளம் வட்டார வள மையம், விளாத்திகுளம், அரசு மேல்நிலைப்பள்ளி விளாத்திகுளம், 04638 233453 7 133 9788859187
13 தூத்துக்குடி நகர்புறம் வட்டார வள மையம், தூத்துக்குடி நகர்புறம், சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் தூத்துக்குடி 13 133 9788859188

தொகுப்பு வள மையம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 108 தொகுப்பு வள மையங்கள் செயல்படுகின்றன, தொகுப்பு வள மையங்கள் வட்டார வள மையங்களின் கீழ் செயல்படுகின்றன. தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியகளுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் பள்ளிகளில் தரமான மற்றும் பாதுக்காப்பான கல்வியினை வழங்கும் சூழ்நிலைகளை உருவாக்குவதும் இம்மையங்களின் முக்கியமான பணியாகும்.

பள்ளி மேலாண்மைக் குழு

மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழுவிற்கென தனியாக வங்கிக் கணக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளி மேலாண்மைக் குழுவிலும் பெண்கள், பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் / பாதுகாவலர்கள், பஞ்சாயத்து மற்றும் நகர பஞ்சாயத்துக்களின் மக்கள் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், உள்ளூர் கல்வியாளர்கள் மற்றும் கல்வி பயிலும் மாணவர்கள் என 20 நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். பள்ளியின் வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்குதல், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் பள்ளியில் நிறைவேற்றப்படும் பணிகளை கண்காணித்தல் இந்தக் குழுவின் முக்கிய பணியாகும். பள்ளி மேலாண்மைக் குழு மூலம் ஏற்படுத்தப்படும் அனைத்து செலவீனங்களும் வருடந்தோறும் தணிக்கைக்கு உட்படுத்தப்படும்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள்

  1. மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த கல்வித்திட்டம்.
  2. பள்ளி செல்லா குழந்தைகளுக்கான நலத்திட்டம்.
  3. ஆசிரியர்களுக்கான பயிற்சி அளித்தல்
  4. அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த புதிய கட்டிடங்களை கட்டுதல்.
  5. பள்ளிகளுக்கு பள்ளி மானியம், பராமரிப்பு மானியம், வழங்குதல்.
  6. கணினி வழிக் கல்வி திட்டம்
  7. செயல் வழிக் கற்றல் திட்டம்
  8. புதிய அணுகுமுறையிலான கல்வித் திட்டம்
  9. எஸ்,சி / எஸ்,டி குழந்தைகளுக்கான கல்வி நலத்திட்டம்.
  10. பெண் கல்வித் திட்டம்.
  11. சிறுபான்மையினருக்கான கல்வித் திட்டம்.
  12. நகர்புற நலிவுற்ற குழந்தைகளுக்கான கல்வித் திட்டம்.

ஆதாரம் - தூத்துக்குடி மாவட்டம்

கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate