பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டத்தின் புள்ளி விவரங்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

விவரங்கள்

விரிவாக்கம்

பரப்பளவு

2715.83 சதுர கி.மீ. sq.kms

மக்கள் தொகை

1,487,055

மாவட்ட தலைமையகம்

நாகப்படடினம்

மொழி

தமிழ்

வலைதளம் http://www.nagapattinam.tn.nic.in/

வரலாறு மற்றும் புவியியல்

நாகைப்பட்டினம் பண்டைய சோழமண்டலத்தின் ஓர் அங்கமாக விளங்கியது. சோழமண்டலம் தமிழர்களின் ராஜ்ஜியத்தின் முக்கியமான ஒன்றாகும். இதன் சிறப்பம்சங்கள் மற்ற நகரங்களை காட்டிலும் சோழ மண்டலத்திற்கு அழகு சேர்த்தது. இதற்கு சோலைக்கொல்லை வல்லிப்பட்டினம் என்ற ஒரு பெயரும் உண்டு. இது கி.மு. மூன்றாம் நூற்றாண்டு பாரம்பரியமிக்கது. இந்த நூற்றாண்டினை சேர்ந்த எழுத்து வகைகளை அசோக சக்ரவர்த்தியால் உருவாக்கப்பட்ட புத்தவிஹாரிலும் காணலாம். புத்த இலக்கியங்களில் நாகை படவிதிதா எனும் பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது.நாகை தஞ்சையிலிருந்து 1991ம் ஆண்டு பிரிக்கப்பட்டது. இந்த மாவட்டம் கிழக்கு தஞ்சை எனவும் தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்துள்ள இந்த மாவட்டம் ஒரு தீபகற்பம் போல காட்சியளிக்கிறது.

சுற்றுலா

மிக நீண்ட கடற்கரை பகுதியை கொண்ட நாகை இந்தியாவின் செழித்தோங்கும் துறைமுகங்களில் ஒன்றாகும். இங்கு ஸ்ரீ காயஹோரனா சுவாமி நீலாயதாட்சியம்மன் கோயில், சௌரிராஜ பெருமாள் கோயில், மற்றும் நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் போன்றவை அமைந்துள்ளன. இங்கு ஒரு சிறு அருங்காட்சியகம், களங்கரை விளக்கம், நீண்ட அழகான கடற்கரை சாலை போன்றவை சுற்றுலாப் பயணிகளுக்கு ரம்மியமான ஒரு உணர்வை தருகின்றது.

ஆதாரம் : தமிழ்நாடு அரசு வலைதளம்

2.97619047619
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top