অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

பொதுப்பேரவை

பொதுப்பேரவை

பொதுப்பேரவை

  • இயக்கத்தின் உச்சநிலை அதிகாரங்களைக் கொண்டப் இப்பேரவையானது, பொதுச் செயலாளரின் தலைமையில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கூட்டப்படும்.
  • இடைப்பட்டக் காலங்களில் தேவையினடிப்படையில் பொதுச் செயலாளர் சிறப்புப் பொதுப்பேரவையைக் கூட்டலாம்.
  • அத்துடன், மையப்பேரவையின் வழிகாட்டுதலின் அடிப்படையிலோ அல்லது பொதுப் பேரவையின் உறுப்பினர்களில் மூன்றிலொரு பங்கினர் கையெழுத்திட்டுக் கேட்டுக் கொள்வதின் அடிப்படையிலோ சிறப்புப் பேரவையைக் கூட்டலாம்.

பிரிவு 1

  • பொதுப் பேரவையில் இடம் பெறும் உறுப்பினர்கள்
  • மையப்பேரவை உறுப்பினர்கள்.
  • மாநில மற்றும் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் பொதுப்பேரவை உறுப்பினர்கள்.
  • தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர்கள்.
  • தமிழ்நாடு மற்றும் பிறமாநில அமைப்புக்குழு நிர்வாகிகள்.
  • மாவட்ட, மாநகர, மாவட்ட நிர்வாகிகள்.
  • ஒன்றியம், நகரம், நகரியம் மற்றும் பகுதி அமைப்பாளர்கள்.
  • அணிகள் மற்றும் துணைநிலை அமைப்புகளின் மாநில நிர்வாகிகள்.
  • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்மன்றத் தலைவர்கள், ஒன்றியப் பெருந்தலைவர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள்.
  • மாநகரத் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
  • பொதுச்செயலாளரால் நியமிக்கப்படும் பொதுப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள்.

பிரிவு 2

பொதுப்பேரவைக் கூட்டங்கள்

  • பொதுப்பேரவை மற்றும் சிறப்புப் பொதுப்பேரவைக் கூட்டங்களுக்கான இடம் மற்றும் நாள் ஆகியவை மையப்பேரவையின் வழிகாட்டுதலின் பேரில் முடிவு செய்யப்படும்.

பிரிவு 3

பொதுப்பேரவையின் பணிகள்

  • மையப்பேரவையால் முன் வைக்கப்படுகின்ற இயக்கத்தின் அரசியலறிக்கைகள், செயலறிக்கைள், இயக்கத் தொடர்பான பிற அறிக்கைகள், செயல்திட்டங்கள் முதலியன குறித்துத் திறனாய்வு செய்தல் மற்றும் அவை மீதான நடவடிக்கைகளை மேற் கொள்ளுதல்.
  • இயக்கத்தின் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் விதிமுறைகளைத் திருத்துதல் மற்றும் மாற்றுதல்.
  • மையப்பேரவைக்கான உறுப்பினர்களைத் தேர்வு செய்தல்.
  • தணிக்கைக் குழுவின் அறிக்கையைத் திறனாய்வு செய்து ஒப்புதல் அளித்தல்.

விதி 1

பொதுப்பேரவையின் விதி 1

பொதுப்பேரவையின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பங்கேற்றால்தான் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் விதிமுறைகளை திருத்தவோ அல்லது மாற்றவோ முடியும்.

விதி 2

பொதுப்பேரவையின் விதி 2

பொதுப்பேரவையை நடத்துவதற்கு மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பங்கேற்க வேண்டும். இவ்வெண்ணிக்கைக்குக் குறைவாக இருப்பின், பொதுப்பேரவையை நடத்தக் கூடாது.

விதி 3

பொதுப்பேரவையின் விதி 3

பொதுப்பேரவையில் கலந்தாய்வு மற்றும் திறனாய்வு செய்ய வேண்டிய இயக்கத்தின் முன்வரைவு ஆவணங்கள் அனைத்தையும் முப்பது நாட்களுக்கு முன்னதாகவே பொதுப்பேரவையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் மையப்பேரவையின் வழிகாட்டுதலின்படி பொதுச் செயலாளர் அனுப்பிவைக்க வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு சட்டமன்ற பேரவை

கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate