செய்ய வேண்டியவை

முதலில் கட்சிகளின் சின்னம் அடங்கிய துண்டு சீட்டில் தங்களுக்கு பிடித்த சின்னத்துக்கு அருகில் டிக் அடிக்க வேண்டும் .

நாம் அடிக்கின்ற டிக் பக்கத்தில் இருக்கும் சின்னத்தில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

டிக் அடித்த துண்டு சீட்டை A என்ற இளஞ்சிவப்பு நிற அலுவலக கவரில் வைத்து ஒட்ட வேண்டும்.

ஸ்டேபில் பண்ணக்கூடாது.*

13A என்று ஒரு படிவம் இருக்கும். அதை சரியாக பூர்த்தி செய்து தங்களுக்கு தெரிந்த சான்றொப்பமிட தகுதி உடைய நண்பர்களிடம் அந்த படிவம் 13A ல் சான்றொப்பம் வாங்க வேண்டும்.

பின்னர் A என்ற ஒட்டிய இளஞ்சிவப்பு நிற அலுவலக கவரையும், 13A படிவத்தையும் சேர்த்து B என்ற கவரில் போட்டு ஒட்டி விட வேண்டும் .

செய்ய கூடாதவை

படிவம் 13A ல் சான்றொப்பம் வாங்காமல் இருக்கக் கூடாது.

இரண்டு அலுவலக கவரையும் ஒட்டாமல் இருக்கக் கூடாது.

படிவம் 13A ஐ A என்ற கவருக்குள் தப்பபித்தவரி கூட வைத்து விடக்கூடாது

மேலும் சந்தேகம் இருந்தால் உங்கள் நண்பர்களிடம் ஆலோசித்து தெளிவு படுத்தி கொள்ளுங்கள் .

இந்த முறை ஒரு தபால் வாக்கு கூட செல்லாத வாக்காக இருக்கக்கூடாது

ஆதாரம் : இந்திய தேர்தல் ஆணையம்