பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / தேர்தல் தகவல்கள் / தமிழக சட்டமன்ற தேர்தல் / தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் / சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், படிகள் மற்றும் ஏனைய வசதிகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், படிகள் மற்றும் ஏனைய வசதிகள்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், படிகள் மற்றும் ஏனைய வசதிகள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம், படிகள், ஏனைய வசதிகள் மற்றும் இயற்கை எய்திய உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பெறும் நிதியுதவி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை முன்னாள் உறுப்பினர்களுக்கு வழங்கப்பெறும் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் ஏனைய வசதிகள் குறித்த விவரங்கள் 15-5-2015  அன்றுள்ளவாறு இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளன.

1. உறுப்பினர்கள்

சம்பளம் : மாதமொன்றுக்கு ரூ.8,000/-

 

 

ஏனைய படிகள்

மாதமொன்றுக்கு

ஈட்டுப்படி

ரூ.7,000/-

தொலைபேசிப் படி

ரூ.5,000/-

தொகுதி படி

ரூ.10,000/-

அஞ்சல் படி

ரூ.2,500/-

தொகுப்புப் படி

ரூ.2,500/-

வாகனப் படி

ரூ.20,000/-

மொத்தம்

ரூ.55,000/-

தினப்படி

சட்டமன்றப் பேரவை கூட்டத் தொடரில் கலந்து கொண்ட நாட்களுக்கும், சட்டமன்றப் பேரவைக் கூட்டம் தொடர்ந்து நடைபெறும்போது இரண்டு நாட்கள் முன்னருக்கும், ஒரு நாள் பின்னருக்கும் மற்றும் சட்டமன்றப்பேரவை குழு கூட்டம் நடைபெறும் போது ஒரு நாள் முன்னரும், பின்னரும் நாளொன்றுக்கு ரூ.500/- தினப்படி வழங்கப்படும்.

பயணப்படி

இரயில் வழியாக இரயிலில் குளிர் பதன வசதி செய்யப்பட்ட இரண்டடுக்கு படுக்கை வசதி கொண்ட) பெட்டியில் சென்று வருவதற்கான இரயில் கட்டணத்துடன் கிலோ மீட்டர் ஒன்றுக்குப் பின்னக் கட்டணம் 10 காசுகள்.

சாலை வழியாக பேருந்து வழித்தடம் உள்ள வழிகள் மூலமாக பயணம் செய்ய கிலோ மீட்டர் ஒன்றுக்கு 25 காசுகளும், பேருந்து வழித்தடமில்லாத ஏனைய வழியில் பயணம் செய்ய கிலோ மீட்டர் ஒன்றுக்கு 50 காசுகளும் வழங்கப்படும்.

பயணச் சலுகைகள்

பேருந்து பயணச் சலுகை:

ஒவ்வொரு உறுப்பினருக்கும், உறுப்பினர் அடையாள அட்டை பேரவைச் செயலகத்தால் வழங்கப்பெறுகிறது. உறுப்பினர்கள், இந்த அடையாள அட்டையுடன் மாநில அரசுக்குச் சொந்தமான போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும், எந்தவொரு பேருந்து மூலமாக தமிழ்நாடு மாநிலத்தில் எந்தவொரு பகுதியிலும், எந்த நேரத்திலும் தனியாகவோ அல்லது அவருடைய கணவன்/மனைவியுடனோ அல்லது ஏதேனுமொரு பிற துணையுடன் பயணம் செய்யலாம்.

இந்தியாவின் எந்தவொரு இரயிலிலும், எந்தவொரு வகுப்பிலும், தனியாகவோ அல்லது அவருடைய கணவன் / மனைவியுடனோ அல்லது வேறு ஒரு உறவினருடனோ ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பயணங்கள் செய்வதற்காக, ஒவ்வொரு நிதியாண்டிலும், இரண்டு சம தவணைகளில் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் வழங்கத்தக்க வகையில் இரயிலில் பயணம் செய்வதற்கான படியாக ரூ.20,000/- வழங்கப்படுகிறது.

சட்டமன்றப் பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு உறுப்பினரும் அவருடைய கணவன்/மனைவியுடன் அவர் வசிக்குமிடத்திலிருந்து சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் இடத்திற்கு வந்து மீண்டும் அவர் இருப்பிடம் திரும்பிச் செல்வதற்கு குளிர் சாதன அமைப்புடைய இரண்டடுக்கு படுக்கை வசதி கொண்ட இரயிலில் பயணம் செய்வதற்கான கட்டணத்தை ஒருமுறை பெறத் தகுதியுடையவராவார்.

தங்குமிட வசதிகள்

ஒவ்வொரு உறுப்பினரும் மாதமொன்றுக்கு ரூ.250/- வாடகை செலுத்துவதன் பேரில் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒதுக்கீடு பெற தகுதியுடையவராவார்.

தொலைபேசி வசதிகள்

(i) அடுக்குமாடிக் குடியிருப்பு :

உறுப்பினர்களின் விருப்பத்திற்கேற்ப சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களின் அடுக்குமாடி குடியிருப்புகளில் நேரடி தொலைபேசி வசதி அமைக்கப்படுகிறது.

மேற்சொன்ன தொலைபேசியை நிறுவுவதற்கான கட்டணம் (Installation Charges) மற்றும் இரு மாதத்திற்கான வாடகையை அரசே செலுத்துகிறது. ஏனைய கட்டணங்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட உறுப்பினரே செலுத்த வேண்டும்.

(ii) இருப்பிடத் தொலைபேசி:

ஒவ்வொரு உறுப்பினரும் தன்னுடைய இருப்பிடத்திற்கு தொலைபேசி இணைப்பு பெறத்தகுதியுடையவர். இதனை நிறுவுவதற்கான செலவை இச்செயலகமே ஏற்றுக் கொள்ளும். தொலைபேசியை நிறுவுவதற்கான வைப்புத் தொகையை செலுத்துவது தொடர்பாக உறுப்பினர், வட்டியில்லாமல் வசூலிக்கத்தக்க முன்பணத்தை இச்செயலகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

மருத்துவ வசதிகள்

ஒவ்வொரு உறுப்பினரும், அவருடைய குடும்ப உறுப்பினர்களும் மாநில அரசு பராமரிக்கும் மருத்துவமனைகளில் கட்டணமின்றி தங்கும் இடவசதியைப் பெறவும், மருத்துவச் சிகிச்சைப் பெறவும் தகுதியுடையவராவர். அவர்களுடைய மருத்துவச் சிகிச்சை தொடர்பாக வெளி அங்காடியில் வாங்கும் மருந்துகளுக்காகும் செலவுத் தொகை திருப்பிக் கொடுக்கப்படுகிறது.

முக்கியமான அறுவை சிகிச்சைகளுக்கு நிதியுதவி

மத்திய அரசு ஏதேனும், மாநில அரசு அல்லது மத்திய அரசின் நேரடி ஆட்சிப் பகுதியின் ஏதேனும் நிருவாகத்தினர் பராமரித்து வருகின்ற ஏதேனும் மருத்துவமனையில் அல்லது இந்திய அரசின் ஆட்சிப் பகுதியில் அமைந்துள்ள ஏதேனும் தனியார் மருத்துவமனையில், மாநில அரசுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவிப்பதன் பேரில் இருதயம், சிறுநீரகம் அல்லது உடம்பின் வேறு ஏதேனும் பாகம் தொடர்பாக, முக்கியமானதொரு அறுவைச் சிகிச்சை என மாநில அரசு கருதுகின்ற அறுவைச் சிகிச்சையை மேற்கொள்கிற சட்டமன்றப்பேரவையின் ஒவ்வொரு உறுப்பினரும், வரையறுக்கப்படுகின்ற அத்தகைய நிபந்தனைகளுக்குட்பட்டு, நிதியுதவி பெறுவதற்கு உரிமையுடையவராவர்.

ஏனைய வசதிகள்

(i) நூலகம்: சட்டமன்ற நூலகம், அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. அதன் சேவைகள் எல்லா உறுப்பினர்களுக்கும் கிடைக்கப்பெறுகின்றன.

(ii) எழுது பொருட்கள் வழங்கல்: ஒவ்வோராண்டும், ஒவ்வொரு உறுப்பினருக்கும் ‘உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை’ என்ற வாசகத்தோடு மாநில அரசுச் சின்னம் பொறிக்கப்பட்ட பின்வரும் எழுது பொருட்கள் வழங்கப்படுகின்றன:-

(அ) சிறிய கடிதத் தாள்கள் 3,700

(ஆ) பெரிய கடிதத் தாள்கள் 1,500

(இ) உறைகள் (நீள் சதுர அளவில்) 750

(ஈ) உறைகள் (சிறிய அளவில்) 1,500

(உ) ஹிரோ பேனா ஒன்று

(ஊ) சட்டமன்றப் பேரவை உறுப்பினர் நாட்குறிப்பேடு ஒன்று மற்றும் சுவரில் மாட்டக்கூடிய நாட்காட்டி இரண்டு.

உறுப்பினர்கள் தாங்களாகவே பெயர் விவரத்தாள் கற்றைகளை அச்சிடுவதற்காக உறுப்பினர்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் சட்டமன்றப் பேரவை உறுப்பினர் சின்னம் கொண்ட அச்சுக்கட்டையினை இச்செயலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். உபயோகித்த பின்னர் 15 நாட்களுக்குள் இச்செயலகத்திற்குத் திரும்பச் சேர்ப்பித்திட வேண்டும்.

(iii) செயலக உதவி: உறுப்பினர்களுக்குத் தேவைப்படும் தட்டச்சுத் தேவையை நிறைவு செய்வதற்காக, சட்டமன்றப் பேரவைக் கூட்டம் நடைபெறும் போது மட்டும் கூடுதலாக ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சர்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர்.

(iv) இரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி : தென்னக இரயில்வேயுடன் இணைந்து உறுப்பினர்களின் வசதிக்காக, குடியிருப்பு வளாகத்தில் இரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு மையம் ஒன்று செயல்பட்டு வருகின்றது.

(v) பேருந்து போக்குவரத்து வசதிகள்: சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறும் காலத்தில் உறுப்பினர்களின் பயனுக்காக சென்னை சென்ட்ரல் / எழும்பூரிலிருந்து அரசினர் தோட்டத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களின் குடியிருப்பு வளாகம், சென்னை-2-ற்கும், அங்கிருந்து சட்டமன்றப் பேரவைச் செயலகம், சென்னை-9-க்கு இடையிலும் சிறப்பு பேருந்துகளை இயக்க சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்துடன் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

(vi) உணவக வசதிகள் : உறுப்பினர்களின் பயன்பாட்டிற்காக, சட்டமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பு வளாகம், உபவசதிக் கட்டிடத்தில் தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணியாளர்கள் கூட்டுறவு சங்க உணவகக் கிளை (சைவம்) ஒன்று இயங்கி வருகின்றது. மேலும், உபவசதிக் கட்டிடத்தின் பின்புறம் சில்லறை விற்பனைக் கடை தேநீர் மற்றும் குளிர்பானக் கடை, பேப்பர் கடை ஆகியன இயங்கி வருகின்றன.

(vii) வங்கி வசதி : உறுப்பினர்களின் வசதிக்காக, குடியிருப்பு வளாகத்தில் தானியங்கி பணம் வழங்கும் இயந்திர (ATM) வசதியுடன் கூடிய இந்தியன் வங்கிக் கிளை ஒன்று செயல்பட்டு வருகின்றது.

(viii) மருத்துவமனை வசதி: உறுப்பினர்களின் பயன்பாட்டிற்காக, அரசு பொது மருத்துவமனையுடன் இணைக்கப்பட்ட 24 மணிநேர மருந்தகம் ஒன்று குடியிருப்பு வளாகத்தில் அனைத்து நாட்களிலும் செயல்படுகின்றது.

(ix) உடற்பயிற்சிக் கூட வசதிகள்: ஆண்/பெண் சட்டமன்ற உறுப்பினர்களின் பயன்பாட்டிற்காக அனைத்து வசதிகளுடன் கூடிய குளிர்சாதன வசதி செய்யப்பட்ட உடற்பயிற்சிக் கூடங்கள் இரண்டு தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன.

மேற்கூறிய வசதிகள்/சலுகைகள் தவிர கீழ்க்காணும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

1. யோகா பயிற்சி: சட்டமன்றப் பேரவை கூடும் நாட்களில், குடியிருப்பில் தங்கியுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் குடியிருப்பு வளாகத்தில் உள்ள பூங்காவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் காலை நேரத்தில் யோகா பயிற்சி அளிக்கப்படுகின்றது.

2. சிறுவர் பூங்கா : சட்டமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பு வளாகத்தில் சிறுவர் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.

3. இறகுப்பந்து விளையாட்டுத் திடல்: உறுப்பினர்கள் பயன்பாட்டிற்கென இறகுப்பந்து விளையாட்டுத் திடல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

(x) வாகன அனுமதி சீட்டுகள் : அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இரண்டு வாகனங்களுக்கு ஹோலோகிராம் பதிக்கப்பட்ட வாகன அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன.

(xi) இலவச நாளிதழ்கள் : சட்டமன்றப் பேரவை கூடும் நாட்களில் சென்னையிலுள்ள சட்டமன்றப் பேரவை உறுப்பினர்கள் குடியிருப்புகளில், உறுப்பினர்கள் விரும்பும் இரண்டு நாளிதழ்கள் வழங்கப்படுகின்றன.

மரணமடைந்த சட்டமன்றப்பேரவை உறுப்பினர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி

(1) அவசர கால ஊர்தி வசதி: சட்டமன்றப்பேரவை உறுப்பினர் ஒருவர், அவருடைய தொகுதிக்கு வெளியே ஏதேனுமொரு இடத்தில் எதிர்பாராமல் இறந்துவிடுகிற நேர்வில், மரணமடைந்த உறுப்பினரின் உடலை, அவருடைய சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்காக, வாடகை அடிப்படையில் கார் ஒன்றுக்கு ஏற்பாடு செய்து கொடுக்க அல்லது இதற்காக அவருடைய குடும்பத்தினர் மேற்கொண்ட செலவை ஈடுசெய்ய சட்டமன்றப் பேரவைச் செயலகம் ஏற்பாடு செய்யும்.

(05.02.1998 ஆம் நாளிட்ட சட்டமன்றப் பேரவைச் செயலக ஆணை எண். 14)

(ii) உறுப்பினரின் குடும்பப்படி : பதவிக் காலம் முடிவடைவதற்கு முன், இறந்து விடுகிற சட்டமன்றப் பேரவை உறுப்பினரின் குடும்பத்தினருக்கு எஞ்சியுள்ள அவருடைய பதவிக்காலத்திற்கு திங்கள் ஒன்றுக்கு ரூ.1,000/- குடும்பப்படித் தொகையாக வழங்கப்படுகிறது.

(iii) ஒட்டுமொத்தப்படி : பதவிக்காலம் முடிவடைவதற்கு முன், மரணமடைகின்ற உறுப்பினரின் குடும்பத்திற்கு, ஒட்டுமொத்தப் படியாக ரூ.2.00,000/- வழங்கப்படுகிறது.

(iv) மரணமடைந்த சட்டமன்றப்பேரவை உறுப்பினரின் குடும்பத்தினருக்குக் குடும்ப ஓய்வூதியம் : சட்டமன்றப்பேரவை உறுப்பினர் மரணமடைகின்றபோது, அத்தகைய உறுப்பினரின் குடும்பத்தினர், திங்கள் ஒன்றுக்கு ரூ.6,000/- குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு உரிமையுடையவராவர்.

முன்னாள் சட்டமன்றப்பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வசதிகள்

(i) ஓய்வூதியம்: ஒவ்வொரு சட்டமன்றப்பேரவை / மேலவை உறுப்பினருக்கும் திங்கள் ஒன்றுக்கு ரூ.12000/- ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.

(ii) குடும்ப ஓய்வூதியம்: ஓய்வூதியம் பெறுவதற்கு உரிமையுடைய சட்டமன்றப்பேரவை / மேலவை உறுப்பினர் மரணமடைகிற நேர்வில், அத்தகைய உறுப்பினரின் குடும்பத்தினர், வரையறுக்கப்படக் கூடிய நிபந்தனைகளுக்குட்பட்டு, அத்தகைய ஓய்வூதியத்தில் 50 சதவீதத்தை பெறுவதற்கு உரிமையுடையவர் ஆவர்.

(ii) மருத்துவ சிகிச்சை : முன்னாள் சட்டமன்றப்பேரவை / மேலவை உறுப்பினர்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அரசு மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு உரிமையுடையவர்கள் ஆவர். முன்னாள் சட்டமன்றப்பேரவை / மேலவை உறுப்பினர்கள், ஒவ்வொரு நிதியாண்டிற்கும் மருத்துவப்படியாக ரூ.12,000/- பெறுவதற்கும் உரிமை உடையவர்கள் ஆவர்.

(V) இலவசப் பேருந்து பயணச்சீட்டு : சட்டமன்றப்பேரவை அல்லது சட்டமன்ற மேலவை அல்லது இரண்டின் உறுப்பினராக இருந்து வந்து, ஆனால், அத்தகைய உறுப்பினராக இருப்பது அற்றுப்போன ஒவ்வொரு உறுப்பினருக்கும், மாற்றத்தகாத இலவசப் பேருந்து பயணச்சீட்டு ஒன்று வழங்கப்படும். அப்பயணச் சீட்டின் மூலம் மாநில அரசுக்குச் சொந்தமான போக்குவரத்துக் கழகம் இயக்குகின்ற அனைத்து பேருந்துகளிலும், தமிழ்நாடு மாநிலத்தின் அனைத்து பகுதிக்குள்ளும், எந்த சமயத்திலும், தனியாக அல்லது அவருடைய வாழ்க்கைத் துணைவருடன் அல்லது வாழ்க்கைத் துணைவியுடன் அல்லது பிறிதொரு துணை நபருடன் பயணம் செய்ய, உரிமையுடையவராவர்.

ஆதாரம் : தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

3.0
தமிழன் இராஜா Mar 23, 2020 08:26 PM

சட்டமன்ற உறுப்பினர்கள் ஐந்து ஆண்டுகள் முழுமையாக பணி செய்து இருக்க வேண்டுமா!இல்லை குறைந்தது எத்தனை ஆண்டுகள் பணி செய்து இருக்க வேண்டும்.....

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top