பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / இ-சேவை / அரசு பொது இ சேவை மையங்களில் சான்றிதழ்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

அரசு பொது இ சேவை மையங்களில் சான்றிதழ்கள்

அரசு பொது இ சேவை மையங்களில் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளலாம்.

இ-சேவை மையங்கள்

தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் முதல் பட்டதாரி சான்றிதழ்களை அரசு பொது இ-சேவை மையங்களில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

பெறும் மையங்கள்

  1. மக்கள் கணினி மையம் (அரசு பொது இ சேவை மையம் )
  2. எல்காட்
  3. வட்ட அலுவலகங்கள்,
  4. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள்,
  5. புது வாழ்வு திட்ட அலுவலகங்கள்

சான்றிதழ்கள்

6-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே சாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

சான்றிதழ்களைப் பெறாத மாணவர்கள் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ்களை தங்களுக்கு அருகிலுள்ள அரசு பொது இ சேவை மையங்களில் விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.

தேர்வு முடிவுகள் வெளியான பிறகு இந்த சான்றிதழ்களை பெற வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அரசு பொது இ சேவை மையங்களுக்கு மாணவர்கள் ஒரே நேரத்தில் விண்ணப்பிப்பதால் காலதாமதம் ஏற்படும் என்பதற்காக இந்த முன்னேற்பாடு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை அனைத்து பள்ளி மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


பொது இ - சேவை மையம்

ஆதாரம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

2.99193548387
TASNA Oct 13, 2015 02:09 PM

http://www.esevaworld.com/Home.aspx என்ற இணையத்தைக் காணவும்.

mkm Sep 27, 2015 03:44 PM

ப்ரைவைட் இ-சேவை மையம் தொடங்கலாமா

ஜெயக்குமார் Sep 15, 2015 03:37 PM

எனது மகள் +2 படித்துக்கொண்டுள்ளது எனக்கு ஒரே மகள்தான் அதற்கன சான்றிதள்இ சேவையில் வாங்க என்ன செய்யவேண்டும் எனது இ மெயில் www.jayakumar3547@ஜிமெயில்.com

saravanan Dec 27, 2015 07:25 AM

இதே நிலை தான் திருவண்ணாமலை மாவட்டத்திலும்

சென்றாயன் Sep 13, 2015 09:43 PM

இ-சேவை மூலம் ஒருவர் ரேசன் கார்டில் 5வது நபருக்கு வருமான சான்றிதழ் வாங்குகிறார். வாங்கிய பிறகுதான் தெரிகிறது அவரது தந்தை பெயர் தவறாக பதிவாகி உள்ளது. மீண்டும் விண்ணப்பிக்கும் போது அவருக்கு புதிய கேன் எண் உருவாக்க வேண்டி உள்ளது. அப்போது ரேசன் கார்டில் உள்ள வரிசை எண் 6 என்று பொய்யாக கொடுத்து கேன் உருவாக்க வேண்டி உள்ளது. இது தவறு என்று மின் ஆளுமை திட்டத்திற்கு தெரியாதா?. கேன் எடிட் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட வருமான சான்றிதழ்களும் வாங்குவது சரியானதா? மேலும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள வி.எல்.இ அழைத்து இது வரை எந்த கருத்து கணிப்பும் ...மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்தப்படவில்லை என்பது வருந்த தக்கது. இந்த மாவட்டத்தில் மின் ஆளுமை சேவை ஆரம்பித்து ஓராண்டு முடிவடைகிறது. இ டிஸ்டிக் சொசைடி என்று மாவட்டத்தில் உள்ளது. அதன் பணி என்ன என்றே தெரியவில்லை.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top