பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இருப்பிடச்சான்றிதழ் பெறுவது எப்படி?

இருப்பிடச் சான்றிதழ் பெறுவது பற்றின தகவல்களை இங்கே காணலாம்

நம்மில் பலர் இருப்பிடச்சான்றிதழுக்கும் பிறப்பிடச் சான்றிதழுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை அறியாமல் குலம்பிக்கொள்கிறோம். இருப்பிடச்  சான்றிதழ் என்பது வழக்கமாக ஒருவர் எங்கு வசிக்கிறார் என்பதை காட்டும் சான்றிதழ் ஆகும்.

ஆனால் பிறப்பிடச் சான்றிதழ் என்பது ஒருவர் எங்கு பிறந்தார் அவர் பிறக்கும்போது அவர் குடும்பம் எங்கு வசித்தது போன்ற தகவல்களை தரும் சான்றிதழ் ஆகும். இவை இரண்டிற்குமே ஒருவர் விண்ணப்பிக்கும்போது எங்கு வசிக்கிறாரோ அந்தப் பகுதி வட்டாட்சியருக்கே விண்ணப்பிக்க வேண்டும். அந்த வட்டாட்சியர் தகுந்த   விசாரணை மூலமாக மனுவில் கூறப்பட்டுள்ள தகவல்களை உறுதி செய்த பின் மனுதாரருக்கு மேற்படிச் சான்றிதழை வழங்குவார்.

பொதுவாக இருப்பிட சான்றிதழ் என்பது குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்குத் தேவையற்றது. ஆனால் பெரும்பாலான பள்ளி மாணவர்கள் தாங்கள் பள்ளியில் சேர்வதற்குத் தேவையான சான்றிதழ் வாங்கும்போது இருப்பிட சான்றிதழையும் வாங்குகின்றனர். குடும்ப அட்டையே ஒரு இருப்பிட சான்றிதழ் தான். குடும்ப அட்டை இல்லாதவர்கள் வேண்டுமென்றால் தனியாக இருப்பிட சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கலாம்.

இதற்க்கு விண்ணப்பிக்கும்போது மனுவின் கோரிக்கைக்கு சான்றாக வழக்கமாக மற்ற சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கும்போது அளிக்கும் சான்றுகளைப்போலவே தங்கள் பகுதிப் பொதுமக்கள் பத்துப் பேருடைய வாக்குமூலங்களை இணைக்கலாம்.


3.14084507042
ஜான்சன் உடையார் Nov 21, 2019 06:40 PM

நீங்கள் குறிப்பிட்டது போல என்னிடம் குடும்ப அட்டை உள்ளது ஆனால் எனது சகோதரருக்கு மருத்துவமனையில் குழந்தை பிறந்த பொழுது பெயரில் சிறிய தவறு இருந்தது ஆனால் பிறப்பு இறப்பு பதிவாளர் இருப்பிடச் சான்றிதழ் வாங்கி வருமாறு கூறுகிறார்

அந்தோணி ராஜன் Jul 25, 2019 05:32 PM

ஜாதி ஒழிப்பு என்னும் அரசு

என் ஜாதி சான்றிதழ் தருகிறது

சகாய டென்சிங் Jun 20, 2019 10:04 AM

ஐயா
குடும்ப அட்டை இருந்தும் இருப்பிட சான்றிதழ் பள்ளியில் கேட்கிறார்கள் ஏன்

மா பரமேஸ்வரி May 10, 2019 11:30 AM

சார் கவர்மண்ட் வேலைக்கு டாகுமெண்ட் வெரிஃபிகேஷன் அப்போ இருப்பிட சான்றுக்கு பதில் குடும்ப அட்டையா கொடுக்கலாமா சார்

செல்வம் Mar 27, 2019 05:57 PM

எங்கள் குடும்ப அட்டை வேறு ஊரில் உள்ளது. தற்போது வேறு ஊரில் உள்ளோம். எப்படி இருப்பிடசான்று பெறுவது.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top