பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஈ.சி. சான்றிதழ் வாங்குவது எப்படி?

ஈ.சி. சான்றிதழ் வாங்குவது பற்றின தகவல்கள்

சொந்தமான வீடு, மனை வைத்திருப்பவர்களுக்கு வில்லங்கச் சான்றிதழ் (ஈ.சி.) (EC - Encumbrance Certificate) பற்றி நன்றாக தெரியும். சம்பந்தப்பட்ட சொத்து யார் பெயரில் இருக்கிறது என்பதையும், இதற்கு முன்பு யார்யார் கைகளில் சொத்து மாறியது என்பதைக் காட்டும் ஒரு பதிவு ஆவணம். இந்த ஆவணத்தை பத்திரப்பதிவு அலுவலகத்தில் வாங்க முடியும். இப்போது இந்த ஈ.சி.யை ஒரு ரூபாய் செலவு செய்தால் போதும், வாங்கிவிடலாம். இதை ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ளலாம்.

செலவு

ஈ.சி. எடுக்க 1 ரூபாய்தான். முதல் வருடத்துக்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷத்துக்கான கூடுதல் ஆவணம் பெற 5 ரூபாய் செலுத்த வேண்டும். பத்து வருடத்துக்குத் தோராயமாக 1+15+9 = 61 ரூபாய் தான் செலவாகும். இதை வீட்டுக்கு கொரியர் செய்ய 25 ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆன்லைனில் நேரடியாக தேடி பிரின்ட் அவுட் செய்து கொள்ள செலவு என மொத்தமே 100 ரூபாய் தான் செலவு.

வசதிகள்

பதிவு ஆவணம், சிட்டா அடங்கலின் நகல்கூட இங்கு கிடைக்கும். சென்னை, கடலூர், கோயம்புத்தூர், திருச்சி, சேலம், மதுரை, தஞ்சாவூர், வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் இந்த வசதி உள்ளது. இதற்கான விண்ணப்பத்தை ஆங்கிலம், தமிழில் பூர்த்தி செய்து தரலாம்.

இப்படி சொத்து சார்ந்த ஆவணங்கள் மட்டுமல்ல, பதிவு திருமண சான்றிதழ்கூட ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்யலாம். அதற்கு கட்டணம் ஒரு ரூபாய். அதை கொரியரில் அனுப்பி வைக்க ஒரு பக்கத்துக்கு 2 ரூபாய். கொரியர் கட்டணம் 25 ரூபாய் மட்டுமே. அது போக சிட் கம்பெனிகள், சொசைட்டிகளின் ஆவணங்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆன்லைன் லிங்குகள் உள்ளன. அரசாங்க சொத்து வழிகாட்டி மதிப்பு பெறவும் முடியும். இதனால் வாங்கும் சொத்துக்கு எவ்வளவு முத்திரைத் தாள் என்பதை முன்னமே திட்டமிடவும் முடியும். கீழே உள்ள இணையதள முகவரிகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

ஈ.சி. சான்றிதழ் பெற

https://tnreginet.gov.in/portal/

டாக்குமெண்ட் ரிஜிஸ்ட்ரேசன்

https://tnreginet.gov.in/portal/

திருமணத்தைப் பதிவு செய்ய

http://www.tnreginet.net/english/smar.asp

சீட்டு கம்பெனி ரிஜிஸ்டர்

http://www.tnreginet.net/english/schit.asp

சொசைட்டி ரிஜிஸ்டர்

http://www.tnreginet.net/english/society.asp

லேண்ட் வேல்யூ சர்டிபிகேட் பெற

http://www.tnreginet.net/guideline_value.asp

ஆதாரம் : தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறை

3.01538461538
தமிழ் Feb 21, 2018 08:18 AM

1-1-1987 க்கு முன்பு உள்ள வில்லங்கம் பெற என்ன செய்ய வேண்டும்?

ராஐ் Nov 21, 2016 12:23 PM

ஒரு வீடு வாங்க வேண்டும் என்றால் சட்டப்படி நடவடிக்கை என்னென்ன எவ்வளவு பணம் செலவு ஆகும்.

N.A.CHINNAPPAN Nov 16, 2016 10:49 AM

என் நிலத்தின் EC சான்றிதழ் வேண்டும் அதை எப்படி பெறுவது ?அந்த சான்றிதழ் எனக்கு உடனடியாக வேண்டும்

Anonymous Oct 15, 2016 01:01 PM

வீட்டு மனைக்கு பத்திரம் பதிய எவ்வளவு % மதிப்பீடு

ரா.வெங்கடேசன்/ராஜாமணிணி Oct 06, 2016 01:28 PM

சொத்துக்களின் ஈ.சி பார்க்க வேண்டும்

Rasathi Aug 21, 2016 11:12 AM

Sitta nakal

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top