பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

உடனடியாக மதிப்பெண் சான்றிதழ் பெறுவது எப்படி?

உடனடியாக மதிப்பெண் சான்றிதழ் பெறுவது பற்றின தகல்வல்கள்

மதிப்பெண் சான்றிதழையோ அல்லது பள்ளி இறுதி வகுப்பு மாற்றுச் சான்றிதழையோ தொலைத்த மாணவர், டூப்ளிகேட் சான்றிதழுக்கு விண்ணப்பித்து அது கிடைக்கும்வரை, சி.சி.எம். எனப்படும் சான்றிட்ட மதிப்பெண் நகலை (சர்ட்டிபைடு காப்பி ஆஃப் மார்க்‌ஷீட்) அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெற்று உபயோகிக்கலாம்.

சான்றிட்ட மதிப்பெண் நகலைப் பெற, அதற்கென அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் கிடைக்கும் விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும். அத்துடன் கடைசியாகப் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடமிருந்து சான்றிதழ் பெற்று, கட்டணத் தொகையாக ரூ.305-ஐ அரசுக் கருவூலத்தில் செலுத்தியதற்கான ரசீதை இணைத்து அனுப்பவேண்டும். இத்துடன், சுயமுகவரியுடன் கூடிய உறையில் ரூ.30 மதிப்புள்ள தபால் தலையை ஒட்டி அனுப்பவேண்டும்.

சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் கருவூலக் கிளையில் பணம் செலுத்த வேண்டும். மற்ற ஊரைச் சேர்ந்தவர்கள், அந்தந்த ஊரிலுள்ள ஸ்டேட் வங்கியின் கரூவூலக் கிளையில் பணம் செலுத்தி ரசீது பெற வேண்டும். சான்றிட்ட மதிப்பெண் சான்றிதழ், ஓரிரு நாட்களில் விண்ணப்பதாரரின் வீட்டு முகவரிக்கு அனுப்பப்படும்.

ஓர் ஆண்டு வரை இந்தச் சான்றிதழைப் பயன்படுத்தலாம். அதற்குள் டூப்ளிகேட் சான்றிதழுக்கு விண்ணப்பித்து புதிய சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஆதாரம் : பள்ளிக்கல்வித்துறை

2.89583333333
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
பரணிதரன் G Jul 21, 2017 11:53 AM

சார், என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரிகளில் மதிப்பு சான்றிதழ், மாற்றுச்சான்றிதழில் என் பெயரில் K BARANIDHARAN என்று பதிவாகியுள்ளது அதனை எப்படி மாற்றுவது. பத்தாம், பன்னிரெண்டாம் மாற்றுச்சான்றில் என் தந்தையின் பெயர் KANESAN என்று உள்ளது.
அது தவறு என் தந்தையின் சரியான பெயர் GANESAN இதற்கு ஆதாரமாக என் தந்தியின் இறப்புச் சான்று, என் ஆதார் கார்டு சான்று மற்றும் குடும்ப ரேஷன் கார்டு நகல் உள்ளது. மேலும் என் தங்கையின் மதிப்புச் சான்று நகல்.

பா.செல்வக்குமார் Feb 22, 2017 06:09 PM

சார்..
நான் என் பள்ளியில் படித்த சான்றிதழில்
எனக்கு அப்பா பெயர் மாற்றி எழுதியுள்ளனர்.
வீ.செல்வக்குமார் என்று உள்ளது .
என்னுடைய அப்பா பெயர் பாலையா .
டீசியில் வீரப்பன் என்று பெயர் உள்ளது.
இதை திருத்தம் செய்ய முடியாது . ஏனால் சான்றிதழிலை அறியாமல் லேமினேஷன்
செய்துவிட்டேன். இதை சரி செய்ய வழிவகை
ஏதும் இருக்கா.....நேர்மையாக

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top