অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

பிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவம்

பிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவம்

பிறப்பு - இறப்பு சான்றிதழ்

ஒரு மனிதன், பிறக்கும் போது, அவன் வாழும் காலம் வரை அவனது பிறப்புச்சான்றிதழ் பயன்படும். அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தாருக்கு அவனது இறப்புச் சான்றிதழ் பயன்படுகிறது. இதிலிருந்தே பிறப்பு இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவத்தை உணர்வீர்கள்.

குழந்தையை பள்ளியில் சேர்க்கும் போது கட்டாயமாக அக்குழந்தையின் பிறப்புச் சான்றிதழை பள்ளியில் சமர்ப்பித்தே ஆக வேண்டும். அப்ப‍டி சமர்ப்பிக்கும்  கல்வி ஆவணங்களில் தவறான பிறந்த தேதியை திருத்த பிறப்பு சான்றிதழ் கொடுத்து விண்ணப்பம் செய்து கல்வி ஆவணங்களில் உள்ள பிறந்த தேதியை திருத்திக் கொள்ளலாம் ஆனால் பிறப்பு சான்றிதழில் பதிவு அலுவலர் மருத்துவமனை தவறு காரணமான பிழையை மட்டும் மனு செய்து ஆவணங்களை காட்டி திருத்திக் கொள்ளலாம். கல்வி சாண்றிதழ்களில் ஒரு பிறந்த தேதியும் பிறப்பு சான்றிதழில் ஒரு பிறந்த தேதியும் என்று மாறுபட்ட இரு பிறந்த தேதிகள் பலருக்கு சில காரணங்களால் ஏற்பட்டு விடுகின்றது. பிறந்த தேதியை நீருபனம் செய்ய வேண்டிய தேவை ஏற்படும் போது
(எ.கா பாஸ்போர்ட் விண்ணப்பிக்க) இது பெரிய  சிக்கலை உருவாக்குக்குகின்றது.

பலர் பள்ளியில் சேர்க்கும் போது உரிய வயதை மாற்றி சொல்லி சேர்த்து விடுகின்றார்கள் அல்லது ஏதோ ஒரு தேதியை சொல்லி சேர்த்து விடுகின்றார்கள். குறுக்கு வழியில் நீதிமன்றத்தில் பிறப்பு இது வரையில் பதிவு செய்யப்பட வில்லை என்று பொய் சொல்லி பிறப்பினை புதியதாக பதிவு செய்து சான்றிதழ் பெறுகின்றார்கள். ஆனால் இவர்களுக்கு இரண்டு பிறப்பு சான்றிதழ் இருக்கும். இது ஆபத்தானது. எதிர்காலத்தில் பல சட்ட சிக்கல்களை உருவாக்கும். உரிமையியல் நீதிமன்றத்தில் மனு செய்து பிறந்த தேதியை சரி செய்வது மட்டுமே சரியான பாதுகாப்பன தீர்வு ஆனால் காலதாமதம் ஏற்படும்

பதிவு செய்ய கால கெடு

ஒரு பிறப்பு அல்லது இறப்பினை 30 நாட்களுக்குள் பதிவு செய்யவேன்டும்.

தவறினால் ஒராண்டிற்குள் பிறப்பு இறப்பு அலுவலர் காலதாமதத்திற்கான காரணத்தினை ஏற்று பதிவு செய்துக் கொள்ளலாம்

ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு பதிவாளருக்கு பதிவு செய்ய அதிகாரம் இல்லை நீதிமன்ற உத்திரவுமூலம் மட்டுமே ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு பதிவு செய்ய முடியும்

பிறப்பு- இறப்பு பதிவாளர்

பிறப்பு- இறப்பு பதிவாளர் என்பவர் கிராம ஊராட்சியை பொறுத்த வரை வட்டாட்சியர் ( கிராம நிர்வாக அலுவலர் ஒரு மாதம் வரை பிறப்பு இறப்பினை பதிவுசெய்து சான்று வழங்குவார் பின்னிட்டு வட்டாட்சியர்) பேரூராட்சி பகுதிக்கு அதன் செயல் அலுவலர்

நகராட்சி பகுதிக்கு ஆணையாளர் (சுகாதர ஆய்வாளர் – ஒரு மாதம் வரை பிறப்பு இறப்பினை பதிவு செய்து சான்று வழங்க்குவார்) மாநகராட்சி பகுதிக்கு ஆனையாளர் (சுகாதர ஆய்வாளர் – ஒரு மாதம் வரை பிறப்பு இறப்பினை பதிவுசெய்து சான்று வழங்குவார்)

நீதிமன்றம் மூலமாக உத்திரவு பெற

ஒரு பிறப்பு அல்லது இறப்பினை அது நடந்த ஒராண்டு கடந்த பின்பு பதிவு செய்ய பிறப்பு- இறப்பு பதிவாளருக்கு அதிகாரம் இல்லை. ஆனால் நீதிமன்ற உத்திரவு மூலம் மட்டுமே ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு பதிவு செய்ய முடியும்

நீதிமன்றத்தில் உத்திரவு பெற சம்பந்தபட்ட உள்ளாட்சி அல்லது சார்பதிவாளர் அல்லது வட்டாட்சியர் அலுவலகத்தில் (எந்த அலுவலகத்தில் ஆவணம் உள்ளதோ) பதிவு இல்லை என்பதற்கான சான்றிதழ் பெற்று நீதிமன்றத்தில் மனு செய்ய வேண்டும்

பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் இனிமேல் ஆன்லைனில் பெறலாம்:-

அதுவும் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் பிடிஎஃப் காப்பியில் சேவ் கூட செய்யலாம். உங்களிடம் ஏற்கனவே சான்றிதழ் இருந்தாலும் இந்த ஈ காப்பி டவுன்லோட் செய்து வைத்து கொண்டால் வேண்டும் போது பிரின்ட் அவுட் செய்து கொள்ளலாம். அது போக பரிமாற்றம் செய்ய அப்படியே ஈமெயிலில் பறிமாறிக்கொள்ளலாம்.

நம்மூர் அட்களுகும் வெளியூர் அட்களும் இதனால் பலன் அடையலாம். அது போக உங்களுக்கு தெரிய வேண்டியது எல்லாம் ஒரே விஷயம்தான். அது தான் பிறந்த தேதி மட்டும் அல்லது இறந்த தேதி மட்டும் போதும். இது இருந்தால் உடனே அந்நாளில் பிறந்த இறந்த அத்தனை ஆட்களின் பெயரும் ஏ – இசட் ஆல்ஃபபட் முறையில் வரும் அதில் உங்களுக்கு வேண்டிய பெயரை கிளிக் பண்ணி பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள் அல்லது சேவ் செய்து கொள்ளுங்கள்.

அது போக பிறந்த இறந்த சட்டிஃபிக்கட்டில் ஏதேனும் தவறு இருந்தால் இங்கேயே திருத்தும் வசதி உள்ளது. ஒவ்வொரு சர்டிஃபிக்கடுக்கும் ஒரு யுனிக் நம்பர் உண்டு.

அதனால் சொத்து வாரிசு சான்றிதழ் கூட இதை வைத்து தான் வழங்கப்படும் அதனால் வீட்டில் இருந்தே பெற்று கொள்ளுங்கள்.

பிறப்பு சான்றிதழ் பெற –

சென்னைவாசிகளுக்கு

http://www.chennaicorporation.gov.in/online-civic-services/birthCertificate.do?do=ShowBasicSearch

பிறப்பு சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தி கொள்ள –

http://www.chennaicorporation.gov.in/admin/birthCertificateList.do?method=editRecord&mode=enduser&regitrationNumber=COC%2F2011%2F08%2F116%2F000510%2F0

இறப்பு சான்றிதழ் பெற –

http://www.chennaicorporation.gov.in/online-civic-services/deathCertificateBasicSearch.jsp

இறப்பு சான்றிதழை திருத்தி கொள்ள –

http://www.chennaicorporation.gov.in/admin/deathCertificateList.do?method=editRecord&mode=enduser&registrationNumber=COC%2F2007%2F02%2F024%2F001095%2F0

கோயம்புத்தூர் –

https://www.ccmc.gov.in/ccmc/index.php?option=com_content&view=article&id=81&Itemid=150

திருச்சி மாநகராட்சி –

http://www.trichycorporation.gov.in/birth_search.php#menu

http://www.trichycorporation.gov.in/death_search.php#menu

ஆதாரம் : கல்விச்சோலை

கடைசியாக மாற்றப்பட்டது : 7/11/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate