பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஆதார் அட்டை தொலைந்து போனால்?

ஆதார் அட்டை தொலைந்து போனால் பின்பற்றவேண்டிய நடைமுறைகள்

உங்கள் ஆதார் அட்டை தொலைந்து போனால் பயம் கொள்ளாதீர்கள். அதன் பிரதியை பெற்றுக்கொள்வதற்கு மீண்டும் விண்ணப்பம் செய்ய எளிமையான வழிகள் உள்ளது. இருப்பினும் ஆதார் அட்டையை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அதற்கு காரணம் அதில் உள்ள உங்கள் தகவல்களை கொண்டு உங்கள் நிதி சார்ந்த தரவுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். உங்களுக்கு உங்களுடைய ஆதார் எண் நினைவிருந்தால் மற்றும் / அல்லது பதிந்த போது கொடுக்கப்பட்ட ஆதார் அட்டை ஒப்புகை சீட்டு உங்களிடம் இருந்தால், ஆன்லைன் மூலம் ஆதார் அட்டையின் பிரதியை எடுத்துக் கொள்ளலாம்.

தொலைந்த ஆதார் அட்டை அல்லது அதன் பிரதியை ஆன்லைன் மூலம் எப்படி விண்ணப்பிக்க கீழ்கூறிய வழிமுறைகளை பின்பற்றவும்:

  1. ஈ-ஆதார் ஆன்லைன் முகவாயிலுக்கு செல்லவும்.
  2. ஆதார் ஒப்புகை சீட்டில் உள்ள பதிவீடு விவரங்களை (பதிவு எண் மற்றும் தேதி நேரம், குடியிருப்பவரின் பெயர், மற்றும் பின்கோட்) நிரப்ப வேண்டும்.
  3. மாறாக, உங்களுக்கு உங்கள் ஆதார் அட்டை எண் தெரிந்திருந்தால்,
  4. மேலே உள்ள "I have" தேர்வில் உள்ள "Aadhaar" என்ற ரேடியோ பட்டனை அழுத்தவும்.
  5. நீங்கள் பதிந்துள்ள கைப்பேசி எண்ணில் ஓ.டி.பி. (ஒன் டைம் பின்) கடவுச்சொல் ஒன்றை குறுந்தகவல் மூலம் பெறுவீர்கள்.
  6. கடவுச்சொல்லை உள்ளீடு செய்தவுடன்
  7. ஆதார் அட்டையின் பிரதியை தரவிறக்கம் செய்யும் தேர்வை நீங்கள் காணலாம். இந்த கோப்பு பி.டி.ஃஎப். வடிவத்தில் இருக்கும். மேலும் பாதுகாப்பிற்காக அது கடவுச்சொல் மூலமாக பாதுகாக்கப்பட்டிருக்கும். கடவுச்சொல் தெரியவில்லையே என பயப்பட வேண்டாம். உங்கள் பின் கோடே உங்கள் கடவுச்சொல்லாகும். அசலை போலவே அச்சிடப்பட்ட பிரதியும் அனைத்து இடங்களிலும் செல்லுபடியாகும்.


ஆதார் அட்டை தொலைந்து விட்டால்?
ஆதாரம் : மாநில ஆதார் மையம். தமிழ்நாடு அரசு

3.23762376238
விஸ்வநாதன் Sep 27, 2019 11:07 PM

எனக்கு பிறந்த தேதி மற்றும் பெயரை மாற்ற நான்கு முறை update பன்னிவிட்டேன் மாறவில்லை என்னிடம் பத்தாவது மதிப்பெண் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளது இதை வைத்து பிறந்த தேதி மற்றும் பெயரை மாற்ற முடியுமா? அல்லது புதிதாக ஆதார்கார்டு எடுக்கலாமா?

தனேஷ்பிரபு Mar 09, 2018 06:54 PM

ஐயா எனது மனைவியின்.ஆதார் அட்டை.தொலைந்து விட்டது .ஆதார் எண் நியாபகம் இல்லை .என் மனைவியின் அப்பா அலைபேசி எண்னை.மாற்றி விட்டார் .என் மனைவிக்கு ஆதார் அட்டை எடுக்க வாய்ப்பு உள்ளத

elen Apr 30, 2017 12:46 PM

ஆதார் அட்டை தொலைந்தால் -
அருகில் உள்ள தாலுக்கா அலுவலகத்திற்கு சென்று இ சேவை மையத்தில் ( Advance Search )
மூலம் உங்கள் பெயர் ,dob , pincode ,ஊர் ஆகியவற்றை சரியாக கூறி கட்டை விறல் ரேகை வைத்தல் உங்கள் ஆதார் கார்டு -ஐ பெற்று கொள்ளலாம் ......

பிரபு Mar 30, 2017 07:51 PM

ஆதாரில் பழைய enrolment number மற்றும் தேதி நேரம் உள்ளது ஆனால் பெயர் எப்படி வழங்கினாலும் ஆதார் பெற முடியவில்லை என்ன செய்யலாம்

சதீஷ்குமார் Mar 23, 2017 11:33 AM

பெயர் திருத்தம் செய்ய வேண்டும், போன் நெம்பர் மாற்றி விட்டேன். ஆதார் கார்டுடன் இணைத்த நெம்பர் உபயோகத்தில் இல்லை,
என்ன செய்யலாம்?
பயன்படுத்தும் நெம்பர்: 97*****06

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top