பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / குடிமக்களுக்கான சேவைகள் / ஆன்லைன் சேவைகள் / பான் கார்டு முகவரியை ஆன்லைனில் எளிமையாக மாற்றுவது எப்படி?
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பான் கார்டு முகவரியை ஆன்லைனில் எளிமையாக மாற்றுவது எப்படி?

பான் கார்டு முகவரியை ஆன்லைனில் எளிமையாக மாற்றுவது எப்படி?

ஆன்லைனில் முகவரியைத் திருத்தும் வழிகள்

ஒரு தனி நபர் அல்லது நிறுவனம் புது முகவரிக்கு மாற்றினால், அதை உடனே பான் கார்டில் பதிவு அல்லது சரி செய்யவேண்டியது அவசியம். பான் கார்டில் உள்ள முகவரி வருமான வரித்துறை பதிவு செய்யப்படுவதால் இதனை உடனடியாகத் திருத்துவது சாலச்சிறந்தது. இதனை நீங்கள் எளிமையாக ஆன்லைனிலேயே செய்துகொள்ளலாம்.

https://tin.tin.nsdl.com/pantan/StatusTrack.html இணைய முகவரி அந்த இணைய முகவரிக்குச் சென்று PAN Data Request Form என்ற தொடர்பில் மாற்றம் அல்லது திருத்தம் தொடர்பான (changes or correction) வசதியை பயன்படுத்த வேண்டும். இந்த விண்ணப்பத்தில் "update communication address" என்ற கோரிக்கையில் டிக் செய்ய மறந்து விடாதீர்கள்.

முக்கிய விபரங்கள்

உங்கள் பான் கார்டில் உள்ள விவரங்களில் செய்யவேண்டிய மாற்றங்களுக்கு விண்ணப்பத்தில் அனைத்து கட்டாய விவரங்களையும் (* குறியிடப்பட்ட விவரங்கள்) பூர்த்தி செய்து மாற்றம் தேவையான இடங்களில் எதிரே இடது புறம் கொடுக்கப்பட்டிருக்கும் பெட்டியில் தேர்வு (செலக்ட்) செய்யவேண்டும்.

கட்டணம்

உங்கள் தொடர்பு முகவரி இந்தியாவிற்குள் இருந்தால் பான் கார்டை அனுப்ப ரூபாய் 105 செலுத்த வேண்டும் (93 ருபாய் மற்றும் 12.36 சதவிகிதம் சேவை வரி).

கிரெடிட் கார்டுக்கு கூடுதல் கட்டணம்

கட்டணத்தை டிமாண்ட் டிராப்ட், காசோலை, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது இணைய வங்கிதளம் மூலமாகச் செலுத்தலாம். கிரெடிட் கார்டு உபயோகத்திற்கு 2 சதவிகித கூடுதல் கட்டணம் உண்டு.

ரசீது

கட்டணம் செலுத்துகை முடிந்த பிறகு அதற்கான ரசீது (acknowledgement) திரையில் தெரியும். அதனை நீங்கள் உங்கள் கணினியில் பதியவோ அல்லது பிரிண்ட் செய்தோ வைத்துக்கொள்ளலாம்.

புகைப்படங்கள்

தனி நபர் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தின் இடதுபுறத்தில் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் தங்களுடைய அண்மையில் எடுக்கப்பட்ட 2 புகைப்படங்களை ஒட்டி பாதிப் புகைப்படத்திலும் பாதி விண்ணப்பத்தில் வருமாறும் கையொப்பமிட வேண்டும்.

விண்ணப்பம்

இந்த ரசீது அல்லது விண்ணப்பத்தைப் புகைப்படத்துடன் கையொப்பமிட்ட பின்னர் (தனி நபர்களுக்கு மட்டும்) அதனுடன் கட்டணத்திற்கான டிடி அல்லது காசோலை (ஆன்லைனில் செலுத்தாதமல் நேரடியாகச் செலுத்த விரும்புவோர்) மற்றும் தற்போதுள்ள பான்கார்டின் நகல், முகவரி, பிறந்த தேதி ஆகியவற்றிற்கான அடையாளச்சான்று ஆகியவற்றுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்பவேண்டும்.

முகவரி

NSDL e-Governance Infrastructure Limited, 5th floor, Mantri Sterling, Plot No. 341, Survey No. 997/8, Model Colony, Near Deep Bungalow Chowk, Pune - 411016'. பின் குறிப்பு: நீங்கள் அனுப்பும் விண்ணப்ப கவரின் மீது 'APPLICATION FOR PAN CHANGE REQUEST-Acknowledgment Number' என்று குறிப்பிடவும் (உதாரணம்: APPLICATION FOR PAN CHANGE REQUEST-881010200000097).

ஆதாரம் : NSDL e-Governance Infrastructure Limited

3.0
விஜய் Jun 11, 2016 02:58 AM

2 புகைபடத்திலும் கையொப்பம் இட வேண்டுமா ?

TASNA Mar 18, 2016 05:11 PM

https://tin.tin.nsdl.com/pan/changerequest.html என்ற இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கவும். நன்றி

RAMESH Mar 18, 2016 01:09 PM

என்னுடைய PAN CARD ல் MINOR என்று போட்டோ இல்லாமல் வந்திருக்கிறது.தற்பொழுது எனக்கு 18 வயது முடிவடைந்தது.நான் எனது PAN card ஐ எப்படி major (with photo ) ஆக update செய்வது?

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top