অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

கணினி இடர், தரவுகள் மீட்பு முதலுதவி சேவைகள்

கணினி இடர், தரவுகள் மீட்பு முதலுதவி சேவைகள்

தரவுகள் மீட்பு

அழித்த ஃபைல்களை மீட்கப் பலவழிகள் உண்டு. அது நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. இதோ சில பயனுள்ள இணையதளங்கள் …

'Hard Disk' ல் இருந்து டெலிட் செய்யப்பட்ட ஃபைல்களை எப்படி மீட்பது

திடீரென நம்மை அறியாமலேயே தவறுதலாக கணினியில் இருந்து ஃபைல்களை நீக்கி விடுவோம். அந்த நிலையில் ரீசைக்கிள் பின்னில் தேடினால் நமக்கு அதிர்ச்சி மட்டுமே காத்திருக்கும். எந்த ஒரு ஃபைலும் இருக்காது. நம்முடைய கணினியில் எங்கு தேடினாலும் கிடைக்காது. அப்போது ஒரு யோசனை தோன்றும் கணினியை ரீஸ்டோர் செய்தால் டாக்குமெண்ட் கிடைக்கும் என்று, இருப்பினும் ஒருசில சூழ்நிலைகளில் டாக்குமெண்ட் கிடைக்காது. இதுபோன்ற நிலையில் இழந்த ஃபைலினை எப்படியாவது மீட்டெடுக்க நினைத்து இணையத்தில் உதவி கேட்போம். ஆனால் அந்த நேரத்தில் சரியான வழிமுறைகள் எதுவும் கிடைக்காது. அதுபோன்ற நிலையில் நம்முடைய ஃபைல்களை இழக்க நேரிடும் அவ்வாறு இல்லாமல் இழந்த கோப்புகளை மீட்டெடுக்க அருமையான மென்பொருள் ஒன்றுள்ளது.

நீங்கள் எந்த ட்ரைவில் இருந்து ஃபைலினை டெலிட் செய்தீர்களோ அதனை தேர்வு செய்து Scan என்னும் பட்டியை தேர்வு செய்யவும். நீங்கள் டெலிட் செய்யப்பட்ட ஃபைல்கள் அனைத்தும் பட்டியலிடப்படும். அதில் உங்களுக்கு வேண்டிய கோப்பினை தேர்வு செய்து Undelete என்னும் பட்டியை அழுத்தவும் இப்போது நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் ஃபைலானது ரீஸ்டோர் செய்யப்பட்டிருக்கும். இழந்த ஃபைலானது மீட்டெடுக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி திரையில் தோன்றுகிறது. இவ்வாறு நாம் இழந்த ஃபைல்களை மீட்டெடுத்துக்கொள்ள முடியும். இந்த மென்பொருளானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கணினியில் வைரஸினால் பழுதான ஃபைல்களை எப்படி ரிப்பேர் செய்வது

கணினியில் சில நேரங்களில் நம்முடைய ஃபைல்கள் சில எதிர்பாராத பிரச்சினைகளால் பழுதாகிவிடும். அந்த ஃபைல் பழுதாகிவிட்டால் நாம் அந்த ஃபைலில் சேமித்து வைத்திருக்கும் அனைத்து தகவல்களையும் இழக்கவும் நேரிடும். நம்முடைய ஃபைல்கள் பழுதாக சில காரணங்கள் நம்முடைய கணினியில் வைரஸ் புகுந்து முக்கியமான ஃபைல்களை அழித்து விடுவது, எதிர்பாராத மின் வெட்டுப் பிரச்சினை, தொழில் நுட்பக் கோளாறுகள் போன்ற காரணங்களால்தான் நாம் பெரும்பாலும் நம் முக்கியமான ஃபைல்களை இழக்க நேரிடுகிறது. இது போன்று பிரச்சினைகளைத் தவிர்க்க ஒரு அருமையான இலவச மென்பொருள் உள்ளது.

மென்பொருளால் ரிப்பேர் செய்யப்படும் ஃபைல் ஃபார்மட்கள்

◆ Word documents (.doc, .docx, .docm, .rtf)

◆ Excel spreadsheets (.xls, .xla, .xlsx)

◆ Zip or RAR archives (.zip, .rar)

◆ Videos (.avi, .mp4, .mov, .flv, .wmv, .asf, .mpg)

◆ Images (.jpg, .jpeg, .gif, .tiff, .bmp, .png)

◆ PDF documents (.pdf)

◆ Access databases (.mdb, .mde, .accdb, .accde)

◆ PowerPoint presentations (.ppt, .pps, .pptx)

◆ Music (.mp3, .wav)

இப்படி பல வகையான ஃபைல்களை மீண்டும் ரிப்பேர் செய்து உபயோகிக்க இந்த மென்பொருள் உதவி செய்கிறது.

உபயோகிக்கும் முறை

◆ முதலில் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

◆ பின்பு அந்த மென்பொருளை ஓப்பன் செய்து அதில் கீழே குறிப்பிட்டு இருக்கும் பட்டனை அழுத்தி உங்களின் பழுதான ஃபைலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

◆ பழுதான ஃபைலை தேர்வு செய்தவுடன் கீழே உள்ள ‘Start Repair’ என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்களுடைய ஃபைல் ரிப்பேர் ஆகத் தொடங்கி சிறிது நேரத்திலேயே முழுதும் சரிசெய்யப்பட்டு உங்களுடைய ஃபைல் திரும்பவும் உங்களுக்கு கிடைக்கும்.

இந்த மென்பொருளால் குறிப்பிட்ட ஃபைல்களை ரிப்பேர் செய்ய முடியாவிட்டாலும் கூட இந்த முகவரிக்கு repair@filerepair1.com உங்களின் பழுதான ஃபைலை அனுப்பினால் அவர்கள் அந்த ஃபைலை திருத்தி மீண்டும் செயல்படுத்தித் தருவார்கள் என்பது இந்த மென்பொருளின் கூடுதல் சிறப்பு.

www.filerepair1.com

பென் டிரைவில் அழிந்த ஃபைல்களை எப்படி மீட்பது

பென் ட்ரைவ் மற்றும் ‘எக்ஸ்டெர்னல் ஹார்டிஸ்க்’ ஆகியவற்றை நாம் தினசரி அலுவல் நிமித்தமாகவும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும் பல கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் பயன்படுத்தி வருகிறோம். இவ்வாறான பயன்பாட்டில் நம்மை அறியாமலேயே சில சமயங்களில் வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதலுக்கு உள்ளான கணினிகளில் பயன்படுத்தும் நிலை உண்டாகி விடுவது இயல்புதான். பெரும்பாலும் நமது அதி முக்கியமான கோப்புகள் (புகைப்படங்கள், பல நாட்கள் செலவழித்து உருவாக்கிய ஆவணங்கள்) அனைத்தையும் பென் ட்ரைவ்களில்தான் வைத்திருப்போம். மால்வேர் தாக்குதல்களுக்கு உள்ளான கணினிகளில் இவற்றை பயன்படுத்திய பிறகு, நமது பென் ட்ரைவை சோதித்துப் பார்த்தால், நாம் அதில் வைத்திருந்த ஃபோல்டர்கள் அனைத்தும் காணாமல் போய், வெறும் 1 KB மட்டுமே அளவுள்ள அவற்றின் ஷார்ட்கட்கள் மட்டுமே இருப்பதைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கலாம். ஒரு சிலர், பென் ட்ரைவில் உள்ள அனைத்தும் போய்விட்டது என்று எண்ணி ஃபார்மெட் கூட செய்திருக்கிறார்கள். பல நாள் உழைப்பு வீணாகிவிட்டதே என்றெண்ணி தலையில் கைவைத்து அமருவதை விட, கொஞ்சம் சிந்தித்தால் போதும் இழந்ததாக கருதிய கோப்புறைகளை மீட்டெடுத்து விடலாம். முதலில் நாம் செய்ய வேண்டியது, நமது பென் ட்ரைவ் அல்லது எக்ஸ்டர்னல் ட்ரைவ் லெட்டரை அறிந்து கொண்டு (உதாரணமாக G: ), ஸ்டார்ட் மெனுவில் ரன் கட்டளைக்கு சென்று CMD என டைப் செய்து DOS prompt இற்கு செல்லுங்கள். அங்கு ட்ரைவ் லெட்டரை டைப் செய்து (G:) என்டர் கீயை அழுத்தி, அந்த குறிப்பிட்ட ட்ரைவிற்கு செல்லுங்கள். அங்கு DIR/AD என டைப் செய்து என்டர் கீயை அழுத்த, நமது ட்ரைவில் உள்ள அனைத்து ஃபோல்டர்களும் (நாம் இழந்ததாக கருதிய) hidden வடிவில் மறைக்கப்பட்டிருப்பதை காணலாம்.

recover disc இவற்றை எப்படி மீட்டெடுப்பது

இதே DOS prompt -ல் இருந்து கொண்டு, Attrib -r -s -h /s /d G:*.* என்ற கட்டளையை கொடுங்கள். அவ்வளவுதான் உங்கள் ஃபைல்களை மீட்கப்பட்டன. பிறகு தேவையற்ற ஷார்ட்கட்கள், மற்றும் வைரஸ் என சந்தேகிக்கப்படும் கோப்புகள் அனைத்தையும் டெலிட் செய்து விடுங்கள்.

டாஸ் கட்டளைகளை பயன்படுத்த தயங்குபவர்கள் கீழே உள்ள சுட்டியிலிருந்து பேட்ச் ஃபைலை தரவிறக்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

www.recoverdisc.com

ஆதாரம் : வல்லமை

கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate