অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

சைபர் குற்றங்கள்

சைபர் குற்றங்கள்

அறிமுகம்

இன்றைய உலகில் தொழில்நுட்பம் என்பது மிக பெரிய மாற்றங்களை மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்படுத்திவிட்டது. இனி இவையன்றி வாழ்வதே சிரமம் என்றாக கூடிய நிலைமையும் வந்துவிட்டது. நமது சந்ததிகளுக்கு பாரம்பரிய விளையாட்டுகளை கணினியில் விளையாடி பழக வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது.  இந்த தொழில்நுட்பங்களில் இன்று அதிகம் பேசப்படும் இணைய குற்றங்களை பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

இணைய குற்றங்கள் எனபது தகவல் தொழில்நுட்பங்களை குறிவைத்து அல்லது தகவல் தொழில்நுட்பங்களை உபயோகம் செய்து செய்யப்படும் குற்றங்கள் ஆகும்.

இன்னும் தெளிவாக  சொன்னால்,  இன்டர்நெட், மொபைல் மற்றும் மற்ற பல சாதனங்களை பயன்படுத்தியும் அல்லது அவற்றை தாக்கி அவற்றுள் ஊடுருவி தகவல்களை திருட அல்லது அழிக்கும் செயல்கள்  ஆகும்.

வகைகள்

  • தகவல் தொழிநுட்ப சேவைகளை திருடுவது (Data Hijack)
  • தகவல்களை அழிப்பது
  • இணயத்தில் முகம் தெரியாதவர்களை ஏமாற்றுவது கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப சாதனங்களிலிருந்து  தகவல்களை திருடுவது (Hacking, Virus/Worm attacks, DOS attack etc)
  • மற்றவர்களின் தகவல்களையோ, புகைப்படங்களையோ தவறாக பயன்படுத்துவது.
  • சட்டத்திற்கு புறம்பான பாலியல் குற்றங்களை இணையம் மூலம் ஏற்படுத்துவது (Pornography)
  • மின்னஞ்சல் மற்றும் இன்டர்நெட் கால் மூலம் கொலை மிரட்டல்கள்
  • இணையவழி பொருளாதார குற்றங்கள் (Cyber Terrorism, IPR violations, Credit card frauds, EFT frauds)
  • மற்றவர்களின் மின்னஞ்சல் மற்றும் சோசியல் நெட்வொர்கிங் கணக்குகளை திருடி அவதூறு பரப்புவது.

இந்த குற்றங்களை தடுக்க வேண்டுமெனில் இத்துறையில் மிகவும் திறமை வாய்ந்தவர்களும் அதி நவீன தொழில்நுட்பங்களும் அவசியம் தேவை. இணையகுற்றங்களை தடுப்பதில் மிகவும் கடுமையான முயற்சிகளை இந்திய அரசாங்கம் எடுத்துக்கொண்டுதான் உள்ளது. இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டங்கள் இதற்கான வழிமுறைகளையும் உள்ளடக்கியுள்ளது. ஒவ்வொரு மாநில அரசும்  இதெற்கென ஆராய்ச்சி நிறுவனங்களையும் ஏற்படுத்தவேண்டும்.

ஆதாரம் : சைபர் கிரைம் தகவல்

கடைசியாக மாற்றப்பட்டது : 6/26/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate