பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மின்னணு தரவுச் செயலாக்கம்

மின்னணு தரவுச் செயலாக்கம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

தரவு அல்லது விவரம் (Data) என்ற சொல் 'விவரங்கள் (datum) என்ற பன்மை சொல்லிலிருந்து பெறப்பட்டது. அதற்கு பதப்படுத்தப்படாத உண்மைகள் அல்லது படங்கள் என்று பொருள். மாணவனின் பெயர், மாணவர்கள் சில பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள், மாணவர்களின் தனி விவரங்கள், உண்மை விவரங்களாகவும் படங்களாகவும் மாணவரை தொடர்பு படுத்தி உள்ளன. இதற்கு விவரம் (data) (அ) தரவு என்று பெயர். பதப்படுத்தப்படாத தரவினால் எந்த சரியான பயனும் கிடைக்காது. வரிசைப்படுத்தப்படாமல் பெயர்களும் மதிப்பெண்களும் இடம்மாறி கொடுக்கப்பட்டிருந்தால் அவை சரியான பலனை அளிக்காது. (உம்) ஒரு நபரின் வயது, தகுதி பணிப்பெயர் இன்னபிற. அதே சமயத்தில் தரவுகள் அகர வரிசைப்படி வரிசைப்படுத்தப்பட்டிருந்தாலும் (அ) பெயர்கள் அவை சார்ந்த தரத்தைக் குறித்து தெரிவிப்பதாக இருந்தாலும் இது அளிப்புதரவு என்று அழைக்கப்படும். விவரம் என்பது தரவு செயலாக்கத்திற்காக, கணினியில் உள்ளீடாகக் கொடுக்கப்பட்ட பதப்படுத்தப்படாத உண்மைகள் (அ) எண் விவரங்களாகும். மேலும் செய்திகள் என்பது  பயன்படுத்துபவரின்  வடிவமைப்புக்கு ஏற்றார் போல் கணினியிலிருந்து பெறப்படும்  வெளியீட்டு விவரமாகும்.

தரவுகள், மதிப்பின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு பகுக்கப்படுகிறது.

தரம் சார்ந்தது : தரவு (data) பொருட்களின் பண்புகளை பெற்றிருந்தால் அவை தரம் சார்ந்தவை எனப்படும்.  (உம்) மேகமூட்டமான நாட்கள், அழுகிய முட்டைகள் இன்னபிற. ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய தரவுகள் ஒரு பதிவாக வடிவமைக்கப்படுகிறது. இப்பதிவுகளின் தொகுப்பு ஒரு கோப்பாக மாறுகிறது. ஒரு தரவுத்தளம் என்பது தரவுகள் வரிசைகளில் குறுக்கும் நெடுக்குமாக ஒழுங்கமைக்கப்பட்டு வைக்கப்படுவதாகும். ஒவ்வொரு குறுக்கு வரிசையும் ஒரு பதிவாக அங்கீகரிக்கப்படுவதுடன் மற்றும் ஒவ்வொரு நீண்ட வரிசையும் ஒரு கோப்பாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

உம்) பணியாளரின் தரவுத்தரம் கீழ்கண்டவற்றை உள்ளடக்கியதாக இருக்கும் : பளி எண், பனிப் பெயர், பணி வடிவம், பிறந்த தேதி, தரம், அடிப்படை ஊதியம் இன்னப்பிற

தரவுச்செயலாக்கம்

இன்றைய சூழலில் பெருமளவு தரவுகள் தேக்கி வைக்கப்பட்டு அவற்றை செயலாக்கம் செய்யப்பட வேண்டி உள்ளது. எவ்வகை அமைப்புகளாக இருந்தாலும் அதாவது அலுவலகம், கல்லூரி, பள்ளி, மருத்துவமனை, வங்கி, இரயில் பயன முன்பதிவு, தொழிற்சாலைகள், திரை அரங்குகள், இன்னபிற, அவர்கள் அதிக அளவிளான தரவை செயலாக்கம் செய்கின்றனர். தரவுச் செயலாக்கம் என்பதை இவ்வாறு வரையறுக்கலாம். "ஒரு இயக்கம் மூலமாக பதப்படுத்தப்படாத தரவை உள்ளீடாக கணினியில் சமர்பித்து தகுந்த தகவலாக பயன்படுத்துபவருடைய அறிவுரைகளுக்கேற்றவாறு மாற்றுவதாகும். தரவு செயலாக்கம் என்பது சாதாரணமாக மனித சக்தியால் செய்யக்கூடிய பணியை எளிதாக்குகிறது. தரவுகளைக் கையாளுவதில் உள்ள கடினத் தன்மையும் தரவை தேக்கி வைத்தலில் உள்ள எளிமையை நடைமுறைபடுத்துவதும் தரவு செயலாக்கத்தை அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாததாக்கியுள்ளது. மேலும் தரவு செயலாக்கம், பயன்படுத்துபவருக்கு தேவையான தகவலை ஒரு அழகான படிவத்தில் சரியான தலைப்புகளுடன் தேவைப்படும் கருத்துத் தொகுப்புகளுடனும் வழங்குகிறது.

தரவு செயலாக்கத்தின் நோக்கங்கள்

கீழ்க்கண்டவைகள் தரவு செயலாக்கத்தின் நோக்கங்களாகும் :

கணினி மூலமாக தரவுகளை செயலாக்கம் செய்வது என்பது தகவலை உற்பத்தி செய்து எளிதாக்கி உபயோகிப்பாளரின் தேவைக்கேற்ப தருவதாகும். இதன் வேகம் ஒரு முக்கியமான அளவுறுப்பாக விளங்குகிறது. எனவே மக்கள் தரவு செயலாக்கத்தை விரும்புகின்றார்.

தரவு செயலாக்கத்தின் முக்கிய நோக்கம் பெருமளவு தகவலை கையாளுதல் மற்றும் பல்வேறான வினாக்களுக்கு பதிலளிக்க செயலாக்கத்துக்கு உதவி புரிதலாகும். தரவை ஒரு குறிப்பிட்ட படிவத்தில் தேக்கினால்தான் திரும்பப் பெற முடியும்.

அதிக அளவு கணக்கீடுகள் தரவு செயலாக்கத்துக்கு வழிவகுக்கின்றது. தகவல் அனைத்து முக்கியமான அம்சங்களையும் அதை உபயோகிப்பவருக்கு தெரிவிக்க வேண்டும். இவை ஒருநிறுமம் தனது இலாப நட்டம் மற்றும் அதன் அந்தஸ்து நிலை குறித்துத் தெரிந்துகொள்ளும் வண்ணமும் துல்லியமான முடிவுகள் எடுக்கும் வகையிலும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மற்றும் துல்லியமான முடிவெடுத்தலுக்கும் வழிவகுக்க வேண்டும்.

தரவு செயலாக்கத்தின் வழிகள்

ஒற்றைப் பயனாளர் (Single user)

இந்த ஒற்றைப் பயனாளரைப் பயன்படுத்தும் பட்சத்தில் ஒரே ஒரு பயனாளர் மட்டும் ஒரே நேரத்தில் பயன்பெற முடியும்.

பல் பயனாளர் (Multi User)

இந்நிலையில் கணினி அதே நுண்செயலியைப் பயன்படுத்தி ஒற்றைப் பயனாளர் முறையில் உள்ளது போல் ராம் (Ram), ரோம் (Rom) சில்லுகளையும் பயன்படுத்துகிறது. ஆனால் இங்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பயனாளர்கள் முதன்மை செயலியை பகிர்ந்து கொண்டு தங்கள் பணியை நிறைவு செய்கின்றனர்.

தொகுதி செயலாக்கம் (Batch Processing)

இங்கு அனைத்து வகையான வேலைகளும் உள்ளீடாக புகுத்தப்படுகிறது. மற்றும் மொத்தமாக சேகரிப்பட்டு, பகுதிபகுதியாக வேலைகள் செயலாக்கப் படுகிறது. சமர்ப்பிக்கப்பட்ட செயல்பாடு வரிசையாகச் செய்யப்படுகிறது. இதனுடைய குறைபாடு என்னவென்றால் ஒரு தனிப் பணியைத் திரும்ப செய்யும் பட்சத்தில் மீண்டும் தனிப்பணியை செய்வது கடினமாக உள்ளது. மேலும் மொத்த செயலாக்கத்தையே திரும்பசெய்யும்படி உள்ளது.

பல் நிரலாக்கம் : (Multi Programming)

இதில் பல நிரல்களை ஒரே நேரத்தில் கவனிக்க வேண்டியுள்ளது. அதாவது பல சுதந்திரமான நிரல்களை செயலாக்க வேண்டும். அதை உள்ளுக்குள் புகுத்தியும் அல்லது ஒன்றன் மேல் ஒன்று படியுமாறும் ஒரே நேரத்தில் செய்யவேண்டும். இதற்கு ஒரே நேர ஆணைத்தொடர் அமைத்தல் என்று பெயர்.

பன்முகச் செயல்முறைப்படுத்தல் (Multi Processing)

பல் செயலாக்கம் மூலமாக இரண்டு அல்லது அதற்கு மேலுள்ள அறிவுரை (Instruction) வரிசையில் ஒரு தனிக் கணிப்பொறி வலைப்பணிமூலம் ஒரே நேரத்தில் செய்யப்படுகிறது.

நிகழ்நிலை மற்றும் இயல்பு நேரச் செயல்முறைப் படுத்தல் (Online and realtime Processing)

இந்த இயக்க செயலாக்க முறைக்கு நேரடி செயலாக்கம் என்றும் பெயர். நிகழ்நிலை முறைகள் என்பது தரவு செயல்பாடுகள் உள்ளீடுகளைப் பெற்றவுடனே உடனடியாக செயலாக்கம் செய்யப்படுகிறது.

தரவுதளம் நாளது வரை தகவல் பெற்று அந்த தரவு தொடர்பான எந்த கேள்வியாக இருந்தாலும் கணிப்பொறி பதிலளிக்கத் தயாராகி விடுகிறது. (உ.ம்) இரயில்வே மற்றும் விமான பயணச்சீட்டு பதிவு நிகழ்நிலை (Online) முறைகள். மெய் நேர செயலாக்க முறையில் தரவு பெறப்பட்டு உடனடியாக செயல்படுத்தி நடைபெற்றுக் கொண்டிருக்கும் செயல்கள் மற்றும் நிகழ்வுகளின் விளைவுகளைக் கட்டுப்படுத்துகிறது. (உம்) விமான போக்குவரத்து கட்டுப்பாடு, மற்றும் முறைமைக் கட்டுப்பாடு மற்றும்  எண்ணெய் உற்பத்தியில் வெப்பத்தை ஆய்வுசெய்தல், இன்னபிற.

காலப் பகிர்வு கருத்துக்கள் (Time Sharing Concept)

காலப் பகிர்வு முறை என்பது ஒரு செயலாக்க முறை. இதில் ஒன்றுக்கு அதிகமான தன்னிச்சையான கணிப்பொறி முறை உள்ளது. இந்த கணிப்பொறிகள் நிகழ்நிலை (Online) வழியில் பணிபுரிகின்றன மற்றும் இது செயலாக்கியை நேரடியாக அணுகும் திறன் வாய்ந்ததாகும்.

முதன்மை செயலாக்கி (Main Processor)

ஒவ்வொரு முறையிலுள்ள செயல்பாட்டுக்கும் ஒரு செயலாக்கி குறிப்பிட்ட நேரத்துடன் கொடுக்கப்படுகிறது. இதற்கு காலக்கூறு (time sice) என்று பெயர். செயலாக்கம் மிகவும் வேகத்துடன் செய்யப்படுகிறது மற்றும் பயனாளர் செயலாக்கி எப்பொழுதும் தன்னுடைய கேட்பின்படி பணி செய்கிறது என்று கற்பனையில் இருக்கிறார்.

பகிர்மான முறைகள் (Distributed System)

இது அளவியல் தொடர்புடைய தகவல் தொகுப்பை கணிப்பொறி மற்றும் இதர சாதனங்களை பயன்படுத்தி செயலாக்கப் பணியை செய்கிறது. இவை ஒரு அகப்பரப்பு வலை அல்லது தொலைவிடப் பரப்பு வலை அல்லது விரிபரப்பு வலை மூலம் இணைக்கப்படுகிறது. இங்கே முறைகள் ஒரு மையப்படுத்தப்பட்ட சேவையகம் மூலமாக கட்டுப்படுத்தப்படுகிறது. இது நேரப் பகிர்மான முறையின் விரிவாக்கமாக கருதப்படுகிறது.

மின்னணுத்தரவுச் செயலாக்கத்தின் அங்கங்கள்

ஒரு கணிப்பொறி தன்னுடைய திறமையான இயக்கத்துக்கு இரு முக்கியமான பொருட்களைச் சார்ந்து உள்ளது. அவை  வன்பொருள் மற்றும் மென் பொருளாகும். இவற்றைப் பற்றிய விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வன்பொருள்

கணிப்பொறி முறைமையை உள்ளடக்கிய பாகங்களுக்கு வன்பொருள் என்று பெயர். வன்பொருள் என்பது திரையகம், வட்டு இயக்கி, வன்வட்டு, விசைப் பலகை, சுட்டி, ஒலிப்பெருக்கி மற்றும் இதர உபகரணங்களை உள்ளடக்கியதாகும். சில உள்ளீடு சாதனங்களான ஒளிப்பேனா (ight pen), இயக்கப்பிடி (Joy Elex) இன்னபிற மற்றும் வெளியீடு சாதனங்களான அச்சுப்பொறி (paters), வரைவி, இன்ன பிற போன்றவை வன்பொருளாக கருதப்படுகிறது. கணிப்பொறியில் உள்ளேயிருக்கக் கூடிய சாதனங்கான மின்மப் பெருக்கி (transistor) சில்லுகள், கம்பிகள் போன்ற அனைத்தும் வன்பொருளின் பகுதிகளாகும்.

மின்னணு உபகரணங்களான மின்மப்பெருக்கி மற்றும் இதர பொருட்கள் இணைக்கப்பட்டு கணிப்பொறிச் சுழல் பாதை உருவாகுகிறது. ஆயிரக்கணக்கான பாதைகள் ஒரு சிறிய சிலிகான் சில்லில் ஒன்றிணைக்கப்படுகிறது. இந்த சில்லின் அளவு ஒவ்வொரு ஆண்டும் குறைகிறது. மிகப் பெரிய அளவிளான ஒருங்கினைக்கும் கட்டமைப்பிற்கு கோடிக்கணக்கான வழிப்பாதை தேக்கும் திறமையுள்ளது. அளவு குறையக்குறைய கணிப்பொறியின் வேகம் அதிகரிக்கிறது.

மென்பொருள்

கணிப்பொறிக்குள் செலுத்தப்பட்ட, தரவை நிர்வகிக்கும் அறிவுரைகளும், கட்டளைகளும் மற்றும் தரவை செயலாக்கம் செய்ய பொறுப்பேற்பவைகளையும் மென்பொருள் என்று அழைக்கலாம். பொதுவாக மென்பொருள் மூன்று வகைப்படும்.

அமைப்பு மென்பொருள்

கணிப்பொறி முறையோடு தொடர்புடைய நிரல்களின் தொகுப்பை அமைப்பு மென்பொருள் எனலாம். கணிப்பொறியின் சார்தொகுதிகளின் உள் கட்டுப்பாட்டுக்கு இந்த அறிவுரைகள் பொறுப்பேற்கின்றன. இயக்கும் முறை என்பது ஒரு முக்கியமான அமைப்பு மென்பொருள் ஆகும். இதன் மூலமாகத்தான் மற்ற மென்பொருள் வேலை செய்கிறது. இந்த நிரல்களின் சேகரிப்பு தான் கணிப்பொறியின் ஒட்டு மொத்த இயக்குதலையும் கட்டுப்படுத்துகிறது.

இயக்குவிக்கும் முறையின் முக்கியப் பணிகள் :

  • இயக்கி மேலாண்மை, நினைவூட்டு மேலாண்மை, உள்ளீடு, வெளியீடு மேலாண்மை, சாதன மேலாண்மை மற்றும் தகவல் மேலாண்மை பணிகளை கட்டுப்படுத்துகிறது.
  • உள்ளிடு மற்றும் வெளியீடு செய்யும் இயக்கிகளுக்கு உரிய நேரத்தை ஒதுக்குகின்றது.
  • கோப்பு வடிவமைப்புகளை பராமரிக்கிறது.
  • இது பயன்படுத்துபவர் பணியை உள்ளே செலுத்தவும் தேக்கவும் பள்படுகிறது மற்றும் பயன்படுத்துபவர் கணிப்பொறிகளுடன் செயலாக்க உதவுகிறது.

பயன்பாட்டு மென்பொருள் (Applicationsoftware)

பயன்படுத்துபவரின் தேவைக்கேற்ப எழுதப்பட்ட நிரல்களின் தொகுப்பு பயன்பாட்டு மென்பொருள் எனப்படுகிறது. இவை குறிப்பிட்ட பணிகளை செய்வதோடு வெளியீடுகள் அல்லது தகவல்களை பயன்படுத்துபவர் தேவைக்கேற்ப உற்பத்தி செய்கின்றன. பயன்பாட்டு பொட்டலம், பயன்படுத்துபவரை வசதியாக வேலை செய்யவும் கணிப்பொறிகள் மூலமாக தேவையான வெளியீடு முடிவுகளை பெறவும் உதவுகிறது. மாணவர் தகவல் முறை, ஊதிய பட்டியல் முறை, இருப்பு கட்டுப்பாட்டு முறை போன்றவை பயன்பாட்டு மென்பொருளின் எடுத்துக்காட்டாகும்.

பயன்பாட்டு மென்பொருள் இருவகைப் படுகிறது. முன்கூட்டியே எழுதப்பட்ட பயன்பாட்டு பொட்டலங்கள் மற்றும் உபயோகிப்பாளர் சார்ந்த நிரல்கள் ஆகியவை ஆகும். முன்கூட்டியே எழுதப்பட்ட பொட்டலங்கள் நிரல்களின் தொகுப்பாகும் மற்றும் அவை தயாராக கிடைக்கின்றன. பயன்படுத்துபவர் அவருடைய தேவைக்கேற்ப முன்கூட்டியே எழுதப்பட்ட பொட்டலங்களை உபயோகித்துக் கொள்ளலாம். உபயோகிப்பாளர் சார்ந்த நிரல்கள் பயன்படுத்துபவரின் தேவைக்கேற்ப எழுதப்படுபவையாகும். அதாவது உபயோகிப்பவரின் தேவைக்கேற்ற அடிப்படை உடையதாகும்.

மொழிப்பெயர்ப்பு மென்பொருள்

உபயோகிப்பாளர் சார்ந்த நிரல்களை செயலாக்க உதவுகிறது. மொழிப்பெயர்க்கும் மென்பொருள் உபயோகிப்பாளர் தயாரித்த அறிவுரைகளை வசதியான மொழிகளிலிருந்து இயந்திர மொழிக்கு மாற்றுகிறது மற்றும் கணினி புரிந்து கொள்ளும் குறியீடுகளுக்கும் மாற்றுகிறது. இவை உபயோகிப்பாளருக்கு புலப்படுவதில்லை.

மொழிபெயர்ப்பு மென்பொருளின் எடுத்துக்காட்டுகள்

  1. தொகுப்பான்கள்,
  2. எடுத்துரைப்பான்கள்,
  3. சேர்ப்பான்கள்,

தொகுப்பான்கள் பெரும்பாலும் உயர்நிலை மொழியில் உள்ள மூலகுறியீட்டை இயந்திர நிலை மொழிக்கு மாற்றுகிறது. மூலக்குறியீட்டில் உள்ள தவறுகளை ஆய்வு செய்து அடையாளம் காண்கிறது.  பயனாளர்கள் தவறுகளை சரி செய்த பிறகு தவறுகள் இல்லாத மூலக்குறியீடு இயந்திரக் குறியீடாக மொழிபெயர்க்கப்பட்டு மீண்டும் பயன்படுத்துமாறு தயாரிக்கப்படுகிறது.

எடுத்துரைப்பான்கள் தொகுப்பான்களுக்கு பணியாற்றுகின்றன. இவை மூல குறியீடுகளை வரிவரியாக மொழி பெயர்க்கின்றன. இயந்திர குறியீடு சில நேரங்களில் இலக்கு நிரல் அல்லது இலக்கு குறியீடு என்றும் அழைக்கப்படுகிறது. உபயோகிப்பாளர் சார்ந்த நிரல்களை ஒப்பிடும் பொழுது முன்கூட்டியே எழுதப்படும் மென்பொருள் பொட்டலங்கள் வெளியீட்டை முன்னதாகவே சமர்ப்பிக்கின்றன. இதை கீழ்க்காணும் சூழ்நிலையோடு ஒப்பிடலாம். ஒருவர் ஒரு சட்டையை அணிய விரும்புகிறார் என்று கற்பனை செய்வோம். தனது விருப்பத்துக்கு உகந்தபடி நிறத்திலும், வடிவத்திலும் ஒரு சட்டையை தேர்ந்தெடுத்தவுடன் அவர் திருப்தியடைகிறார். இதை முன்கூட்டியே எழுதப்படும் பயன்பாட்டு பொட்டலங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

ஒருவர் சட்டையை பெற மற்றொரு முறை என்னவென்றால், அவர் ஒரு தையல்காரரை அணுகி அவரிடம் துணி கொடுத்து (அவருடைய தேவைக்கேற்ப நிறம், வடிவம் இன்னபிற). உரிய மற்றும் சரியான அறிவுரைகள் வழங்கி அவருடைய விருப்பத்திற்கேற்ப சட்டையைத் தைத்துக்கொள்ளலாம். சட்டை தைக்கப்பட்ட பிறகு அதை உடுத்திப் பார்த்து அதில் ஏதேனும் மாறுதல் செய்யவேண்டும் என்றால் செய்து கொள்ளலாம். இதை தன்னுடைய பயன்பாட்டுக்கு, பயனாளர் எழுதும் உபயோகிப்பாளர் சார்ந்த நிரல்களோடு ஒப்பிடலாம். இதில் தையல்காரர் மொழிப்பெயர்ப்பு மென்பொருளின் பங்கினை செய்கிறார்.

அலுவலகங்களில் கணினியின் பங்கு

கீழ்க்காண்பவை தரவு செயலாக்கம் பரவியுள்ள இடங்களில் ஆற்றுகின்ற முக்கியமான பங்கு. இது பெரும்பாலும் வணிக அமைப்புகளுக்கு உரியதாகும்.

ஊதியபட்டியல் முறைகள் (Payrol System)

அமைப்பில் உள்ள ஒவ்வொரு பணியாளரின் ஊதிய பட்டியலை தயாரிக்கும் பணிக்கு ஊதியப் பட்டியல் முறை பொறுப்பேற்கிறது. தொகுப்பு மற்றும் பணியாளரின் பணப்பயன்களும் மற்றும் அவருடைய ஊதியத்துக்கு சம்பந்தமான தகவல்களையும் கணிக்கிறது. தரவு செயலாக்கம் பணியாளரின் தரவு தளத்தில் செயல்படுத்தப்பட்டு மற்றும் பணியாளர்களின் இயக்க அமைப்புகளில் பதிவு செய்யப்பட்ட பிறகு இந்த முறை முழுமையடைகிறது.

விற்பனைக் கட்டுப்படுத்தல் மற்றும் ஆய்வு முறைகள் (Sales monitoring & analysis system)

இம்முறை ஒவ்வொரு நபருடைய விற்பனையை இடவாரியாகவும், மண்டல வாரியாகவும் பராமரிப்பதாகும். விற்பனை கணிப்புகள் மற்றும் விற்பனை அறிக்கைகள் இம்முறையின் முக்கியமான வெளியீடுகளாகும்.

அலுவலகத் தன்னியக்கம் (Office automation)

இந்நாட்களில் பெரும்பாலும் ஒவ்வொரு அமைப்பும், பெரியதோ அல்லது சிறியதோ, தன்னுடைய அலுவலக செயல்பாடுகளை அதனுடைய திறமையான மேலாண்மை மற்றும் சரியான நிர்வாகத்துக்காக அவற்றை கணினி மயமாக்க விழைகின்றனர். அலுவலகத் தானியக்கம் என்ற செயல்பாடு மூலமாகத்தான் அலுவலகத்தின் அன்றாட நடவடிக்கைகளான நிகழ்வுகள், தகவல் தொடர்புகள், கணினிகள் மூலமாக செய்யப்படுகின்றன. பலதரப்பட்ட அலுவலக நடவடிக்கைகளுக்கு சிறப்பு மென்பாருள்கள் கிடைக்கின்றன. இவை அலுவலக தானியக்கத்தை சுலபமாக்கிவிடுகிறது.

கணக்கீடு மற்றும் நிதிக்கட்டுப்பாட்டு முறைகள் (Accounting & financial control system)

இது தரவுச் செயலாக்க முறை மூலமாக கணக்குகள் தயாரிக்கவும், வரவுச் சீட்டுகளை சரிபார்க்கவும், பட்டியலிடவும், இதர நிதி நடவடிக்கைகளை சரிபார்க்கவும், கணக்கீட்டு பதிவேடுகளை பராமரிக்கவும், பொதுப்பேரேட்டை தயாரிக்கவும் பயன்படுகிறது. செலுத்தப்படும் மற்றும் பெறப்படும் கணக்குகள், வியாபார இலாப நட்டக் கணக்குகள், சரிபார்க்கும் பட்டியல்கள், பண ஓட்ட ஆய்வு, விகித ஆய்வு, இன்னபிற எளிதாக்கப்படுகிறது. இது ஒரு முழுமையான கணினி முறை. இதன் மூலமாக அதிகத் தொகை நிகழ்வுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதனால் அதிக அக்கறைக் கொண்டு இந்த தரவுப் பதிவுப் பணியை நிர்வகிக்க வேண்டும் மேலும் பல சரிபார்ப்புகள் தகுந்த ஆதாரங்கள் இந்த முறையில் செயல்படுத்தப்பட வேண்டும்.

சரக்கு மேலாண்மை முறை

உற்பத்தி துறையில் சரக்கு பற்றிய விவரங்களை பராமரிப்பது சரக்கு மேலாண்மையில் அடங்கும். இந்த முறையில் மிகவும் விழிப்புடன் இருத்தல் வேண்டும். ஏனென்றால் இது ஒரு அமைப்பில் பொருட்களின் உற்பத்திக்கு துணை செய்வதாகும். தரவு செயலாக்க முறை சில விவரங்களான, கையிலுள்ள இருப்பு, அதன் விலை, மறு-ஆணை நிலை, பாதுகாப்புநிலை, விநியோகிப்பாளர் விவரம் இன்ன பிறவற்றை அளிக்கிறது மற்றும் நிர்வாகத்துறைக்கு ஆணையை பராமரிக்கவும், விலைச்சீட்டை குறித்த நேரத்தில் தயார் செய்யவும் துணை புரிகிறது.

வங்கியியல், காப்பீடு மற்றும் வரிமுறை

வங்கியியல் துறை மூலமாக அதிக அளவிலான நிகழ்வும் தகவல் தொடர்பும் திறமையாக செய்யப்படுகின்றது. இந்த துறை துரிதமான தரவுச் செயலாக்கத்தை கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு துரிதமான மற்றும் குறித்த நேரத்தில் சேவை செய்கிறது. வாடிக்கையாளர் பற்றிய விவரங்களை பராமரித்தல் நிகழ்வுகளான வைப்பீடு, எடுப்புகள் இன்ன பிறவற்றைப் பற்றிய முக்கிய தகவல் வங்கியியல் நிகழ்வுகளுக்கு தேவைப்படுகிறது. மேலும் வங்கியின் நடவடிக்கைகளை எளிதாக்க தானியங்கி பணம் வழங்கும் முறை வங்கிகளில் பின்பற்றப்படுகிறது. தரவுச் செயலாக்கத்தின் உதவியுடன் வங்கிகள் மையப்படுத்தப்படுகின்றன.

மேலாண்மை மற்றும் நிர்வாக முறை

ஒரு நிறுமத்தை ஒழுங்கமைக்க மற்றும் தலைமையேற்று கொண்டு செல்ல, முடிவெடுத்தல் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதற்கு தரவு செயலாக்கம் ஒரு திறமையான உபகரணமாக முடிவுகளை ஆய்வு செய்ய பயன்படுகிறது. ஆதலால் தரவு செயலாக்கம், பணியாளர்களின் பணிகள், பணிகளுக்கு உரிய நேரம் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இதனால் வியாபார பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு மற்றும் அமைப்பிலுள்ள நடு, மேல்நிலை மேலாண்மை முடிவுகளை எடுக்க உதவுகின்றது.

செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் முறைகள்(Process control system)

இம்மாதிரி முறைகளில் கணினி நேரடியாக உள்ளீட்டை அளிக்கும் தொகுதிக்கு இணைக்கப்படுகிறது. இதனால் கணிணி உள்ளீடு தரவை தொகுதி அல்லது அகத்திட்டம் மூலமாகப் பெறுகிறது. உள்ளிட்டை ஆய்வு செய்து செயல்களை நடைமுறைப்படுத்துகிறது. நடக்கின்ற செயல்பாட்டுக்கு கட்டுப்பாட்டு சமிக்ஞைகளை அளிக்கிறது. இம்மாதிரியான செயலாக்கம் மிகப்பெரிய அளவில் உள்ள உற்பத்தி நிலையங்களில் சாதாரணமாக அமைக்கப்படுகின்றன.

நூலக மேலாண்மை மற்றும் தகவல் முறை

இதில் புத்தகத்தின் பெயர் தொடர்பான அதிக அளவிலான தரவுகளும், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், விலை இன்ன பிற போன்றவை செயலாக்கப்படுகின்றன. இம்முறையில் புத்தகங்களை திருப்புதல், உறுப்பினரின் புத்தகங்களை பராமரித்தல் மற்றும் இதர தகவல் முறைகளை கொண்டுள்ளது.

மின்னணுதரவுச்செயலாக்கத்தின் நன்மைகளும் குறைபாடுகளும்

நன்மைகள்

  1. துரிதம் : கணிப்பொறி பல தரவு கோப்புகளில் உள்ள தரவை சிறிது நேரத்திலேயே தரவு செய்கிறது. இது மிக்க துரிதமாக செயல்படும் கணிணிகளாலேயே சாத்தியப்படுகிறது.
  2. சரித்தன்மை : கணிப்பொறியின் மூலமாக செயலாக்கப்படும் தரவு மிகவும் உயர்ந்த சரித்தன்மை உடையதாகும். கணினி முறையில் எழுதப்பட்டுள்ள நிரல்கள் செயலாக்கத்துக்கு முன்பும் பின்பும் தரவை கட்டுப்படுத்துகிறது. இது சரியில்லாத தரவை கண்டுபிடித்து சரித்தன்மையை அதிக அளவில் உறுதிப்படுத்துகிறது. மற்றும் வெளியீடு செய்யும் அறிக்கைகளை சார்ந்திருத்தலையும் சரிபார்க்கின்றது.
  3. நெகிழ்வுத்தன்மை : நவீன டிஜிட்டல் கணிப்பொறிகளை பலவகையான காரணங்களுக்காக உபயோகப்படுத்திக் கொள்ளலாம். (உ.ம்) நிகழ்நிலைச் செயலாக்கம், பல நிரல்கள், இன்னபிற.
  4. உருவாக்கும் உபகரணங்களை தேர்ந்தெடுத்தல் : கணிணி முறைகளுக்குத் தேவையான பல உபகரணங்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் வியாபார நிறுவனங்கள் தங்களுக்கு உகந்த செயலாக்கத் தேவைகளுக்கேற்ப உபகரணங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
  5. தேக்க அளவு : அதிக அளவிலான தரவுகளை வசதியாக தேக்கவும், எடுக்கவும் மற்றும் மாற்றிக்கொள்ளவும் செய்யலாம்.
  6. மேலாண்மை தகவல் : இவை மேலாண்மையை கட்டுப்படுத்த உபயோகமான தகவலை அளிப்பதுடன் முடிவெடுத்தலுக்கும் துணைபுரிகிறது.
  7. அளவு : கணிப்பொறிகள் தரவுகளை அதிக அளவில் தேக்குகிறது மற்றும் தேவைப்படும் தகவலை துரிதமாக எடுக்க இயல்கிறது.
  8. தரவுக் களம்: கணிப்பொறி தரவுக்களத்தை உருவாக்க துணை புரிகிறது. அத்தகைய தரவுக் களங்கள் மூலமாக தரவு பதிவுகளை ஒருங்கிணைக்கவும் தரவு மிகை மையாக்கத்தை (redundancy) குறைக்கவும் செய்கிறது.
  9. காகித வேலையைக் குறைத்தல் : கணினியை தரவுச் செயலாக்கத்துக்கு பயன்படுத்துவது வியாபார நிறுவனங்களின் மேலாண்மையை அதிகரிக்கும். காகித பணியை குறைப்பதற்கு உதவிபுரிகிறது.
  10. குறைந்த செலவு: கணினியை நிறுவும் முதல் முதலீடு அதிக செலவுள்ளதாக இருந்தாலும் அடுத்தடுத்து நிகழக்கூடிய நிகழ்வுக்கான செலவை குறைக்கிறது. அதிக தரவை செயலாக்கம் செய்வதாலும், பதிவுகளை வைப்பதாலும் செலவை குறைக்க முடிகிறது.
  11. அறிக்கை தயாரித்தலை வசதிப்படுத்துகிறது : முடிவெடுத்தலுக்கும், கட்டுப்பாட்டுக்கும் தேவையான பல்வேறு அறிக்கைகளை நிறும அமைப்பிலுள்ள அதிகாரிகள் தயார் செய்ய கணினி வசதி அளிக்கிறது.
  12. இடத்தேவைகளைக் குறைத்தல் : கணினியை அலுவலக நடவடிக்கைகளுக்கு உபயோகப்படுத்துவதால் அலுவலக இடத்தேவை குறைகின்றது.
  13. மனித சக்தி தேவைகளைக் குறைத்தல் : பல்வேறு நிறும அமைப்பின் நடவடிக்கைகளை செய்யத் தேவைப்படும் நபர்களின் எண்ணிக்கை கணினியை பயன்படுத்துவதன் மூலம் குறைக்கப்படுகிறது.
  14. கணிக்கும் வேலைகளை செய்ய அதிகரிக்கும் திறமை : கணினி கணிப்புகளை அதிக துரிதத்துடன் செயல்புரிகிறது. இது திறமையை அதிகரிக்கிறது.
  15. விறுப்பு வெறுப்பின்றி செயல்படுகிறது: கோடிக்கணக்கான கணிப்புகளை செய்தாலும் ஒரு இயந்திரமாக இருப்பதால் வெறுப்பு, கலைப்பு அல்லது கவனமின்மையிலிருந்து கணினி விடுவிக்கப்படுகிறது. இது கணிப்புகளை அதே சரித்தன்மையிலும், துரிதத்துடன் செய்கிறது.

குறைபாடுகள்

  • கணினியை நிறுவுவதற்கு அதிக அளவிலான உழைப்பு மற்றும் செலவு தேவைப்படுகிறது. இதை செய்ய கணினி தொழில் வல்லுநர்களுக்குப் பற்றாக்குறை உள்ளது.
  • கணினியை நிறுவ நேரம் அதிகம் தேவைப்படுவதாலும் வன்பொருள் தொழில் நுட்பம் மிகவும் முன்னேற்றமான பாதையில் இருப்பதாலும் சில உபகரணங்கள் நிறுவுவதற்கு முன்பே தேவையற்றதாகி விடுகின்றன.
  • கணினி முறைகள் வேலை செய்யாது இருக்கும் பொழுது மாற்று ஏற்பாடுகள் செய்யும் தேவையுள்ளது.
  • மனித முறைகள் வேகமில்லாமல் இருந்தாலும் அதிக நெகிழும் தன்மையுடையதாகும். எடுத்துக்காட்டாக அறிக்கையின் படிவத்தை மாற்றும் பொழுது இது தயார் நிலையில் செய்ய வேண்டுமென்றால் இதை பற்றிய தேவையான அறிவுரைகளை தகுந்த பணியாளருக்கு தெரிவிக்க வேண்டும். மற்றபடி கணினி முறையாக இருந்தால் இதை வடிவமைப்பதற்கு முன்னால் கணினி முறைகளின் ஆய்வு நிலைகளுக்குச் சொல்ல வேண்டும்.

கணினி வலையம்

கணினி வலையம் என்பது கணிணிகளையும் செய்தித் தொடர்புடன் தொடர்புடைய உபகரணங்களையும் இணைத்து பயனாளிகளுக்கு செய்திகளைத் தருவதோடு பிற பயனாளிகளுடன் வளங்களை பகிர்ந்துகொள்ளவும் உதவுகிறது.

அகப்பரப்பு வலைக்கான மென்பொருள்

அகப்பரப்பு வலைக்கான செயல் முறைமை அகப்பரப்பு வலை திட்டத்தில் தான் செயல்பட வேண்டும். அது அடிப்படையில் இரண்டு வழியினைக் கொண்டது.

  1. தரவு தருபவர் மென்பொருள்
  2. பணி நிலைய மென்பொருள்

பரந்த வலை

பரந்த எல்லை வலைப்பரப்பு தொலைதூரத்தால் பிரிக்கப்பட்ட அகப்பரப்பு வலையை இணைக்கிறது. இது ஒரு நிலப்பரப்பு எல்லையை பிரிதொரு நிலப்பரப்பு எல்லையுடன் இணைக்கிறது. பரந்த எல்லை வலைப்பரப்பு தொலைவான இடங்களிலிருந்து தரவுகளத்தை இணைக்க உதவுவதன் மூலம் தரவுப் பரிமாற்றத்திற்கு உதவுகிறது.

இதன் ஆக்ரமிப்பு எல்லை பரந்த தன்மையுடையது. ஏனெனில் இது உலகின் மொத்தப் பரப்பையும் இணைக்கிறது. இதன் செய்தித் தொடர்பு விகிதம் நொடிக்கு சில நூறு அலகுகளிலிருந்து சில ஆயிரம் அலகுகளில் செல்கிறது.

இவை அரசு முகமை நிறுவனங்களால் ஒழுங்காற்றப்படும் செயற்கைக்கோள் மற்றும் நுண்அலைகளாலும் செயல்படுத்தப்படும்.

இணையம் மற்றும் உள்வலை அறிமுகம்

இணையம் என்பது உலக அளவில் 65 நாடுகளுக்கு மேலான இடங்களில் உள்ள கணினிகளை இணைக்கும் ஒரு தொழில்நுட்பத்தை உணர்த்தும் பதமாகும். இக்கணிணிகள் வலையமைப்பின் தத்துவத்தின் அடிப்படையில் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு ஒரு நபர் பூமியின் ஒரு முனையில் இருந்து மிக தூரத்தில் ஒரு மூலையில் இருக்கும் பிரிதொரு நபருடன் தொடர்பு கொள்ள உதவுகிறது. இந்த இணைய தளம் எப்பொழுதும் மாறத்தக்கதாகவும் மறுவடிவமைப்புக்கு உட்பட்டும் மறு உருவாக்கத்திற்கு உட்பட்டும் உள்ளது.

அடிப்படைக் கட்டிடத் தொகுதிகள்

  • சேவையகம் (ஹாஸ்ட்)
  • ரூட்டர்ஸ்,
  • கிளையன்ட்
  • இணைப்புகள்

தரவு பிரிதொரு கணினிக்கு பொட்டல வடிவில் அனுப்பப்படுகிறது. ஒரு பொட்டலம் எந்த தரவினை மாற்ற வேண்டுமோ அந்த தரவினையும் எந்த இடத்திலிருந்து அனுப்பப்படுகிறதோ, அந்த முகவரியையும், எங்கு அனுப்பப்பட வேண்டுமோ அந்த முகவரியையும் உள்ளடக்கியது. ரூட்டர் என்பது ஒரு சிறப்பு உபகரணம் ஆகும்.

அஞ்சல் அனுப்புதல்

ஒருவருக்கு மின்னணு அஞ்சல் அனுப்பவேண்டுமானால் அவரது மின்னணு முகவரி தெரிய வேண்டும். எப்படி சாதாரண தபாலில் தெருவின் பெயர் தெரிய வேண்டுமோ அதே போல் மின்னணு அஞ்சலில் மற்றைய நபரின் மின்னணு அஞ்சல் கணக்கு பெயர் தெரியவேண்டும்.

பலகோடிக்கணக்கான மக்கள் மின்னணு அஞ்சல் இணைப்பு வைத்திருப்பதால் கூகுல், யாஹூ, ஹாட்மெயில் போன்ற நிறவனங்கள் இலவச மின்னணு சேவை தருகின்றனர். மக்கள் இந்நிறுவனங்களுடன் தங்கள் பெயரை இணைத்துக் கொண்டு அவர்கள் தரும் சேவையைப் பெற்றுக்கொள்கின்றனர்.

மின்னணு அஞ்சல் பெறுதல்

சரியான மின்னணு அஞ்சல் முகவரி வைத்திருப்பவர்கள் அஞ்சலைப் பெற்றுக் கொள்ளலாம். இவை பல நபர்களாலும் நிறுவனங்களாலும் அனுப்பப்படுகின்றன. ஒவ்வொரு மின்னணு அஞ்சலும் முதலில் முறையான ISPயை சென்றடைகிறது. அதன்பின் சரியான உள்பெட்டியை அடைகிறது. உள்பெட்டி என்பது மின்னணு அஞ்சல்களை சேகரித்து வைக்கும் கோப்புகள். ஒவ்வொரு பயனாளியும் ஒரு உள்பெட்டி பரப்பினைக் கொண்டுள்ளார்.

இணைப்புக் கோப்புகளை இணைத்தல்

கோப்புகள் இணைப்பு செய்திகளுடன் அனுப்பப்படலாம். இதற்கான மென்பொருள் அவசியம் தேவை.

  • உரைக்கோப்பு,
  • ஆவணக் கோப்பு,
  • செயலாக்கும் கோப்பு,
  • ஒலிக் கோப்பு
  • படக் கோப்பு

போன்றவை. இவை பல்வேறு இடங்களிலுள்ள பயனாளிகளுக்கு அனுப்பப்படலாம். இணைப்புகள் கிடைக்கப்பெற்ற உடன் அவற்றை சேமிக்கும் கட்டளைகளைப் பயன்படுத்தி சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

முகவரிப்புத்தகம்

மின்னணு அஞ்சல் தொழில்நுட்பத்தின் அடிப்படை எண்ணமே செய்தித் தொடர்பு. இது ஒரு நபர் தன் நண்பர்கள், உறவினர்கள், வியாபார நிறுவனங்களுடன் தொடர்புகொள்ள அவசியமாகிறது. ஒவ்வொரு முறையும் அஞ்சல் அனுப்பும் போது அவரது புத்தகத்தில் உள்ள முகவரி இதற்கு பயன்படுகிறது. முழுமுகவரியையும் அனுப்ப வேண்டியதில்லை முகவரியின் முதல் எழுத்தை தட்டச்சு செய்யும் போதே முகவரிப் புத்தகத்தில் உள் முகவரிக்கு சென்று முழு மின்னணு அஞ்சல் முகவரிக்குச் சென்று விடுகிறது.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்.

Filed under:
2.5
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top