பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / பொதுவான தகவல்கள் / கிராம நிர்வாக அலுவலரின் பணிகள் மற்றும் கடமைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கிராம நிர்வாக அலுவலரின் பணிகள் மற்றும் கடமைகள்

கிராம நிர்வாக அலுவலரின் பணிகள் மற்றும் கடமைகள்

 1. கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல்.
 2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல்.
 3. சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்பு சான்று ஆகிவையவை வழங்குவது குறித்து அறிக்கை அனுப்புதல்.
 4. பொது மக்களுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கடன்கள் பெறுவதற்கு சிட்டா மற்றும் அடங்கல்களின் நகல்களை வழங்குதல்.
 5. பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளை பராமரித்தல்.
 6. தீ விபத்து, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் பொழுது உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புதல், இயற்கை பேரிடர்களின் பொழுது ஏற்பட்ட இழப்புகளை வருவாய் ஆய்வாளர் மதிப்பிடு செய்யும் பொழுது உதவி செய்தல்.
 7. கொலை, தற்கொலை மற்றும் அசாதாரண மரணங்கள் ஆகியவை குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தல் மற்றும் விசாரணைக்கு உதவி புரிதல்.
 8. காலரா, பிளேக் உள்ளிட்ட நோய்களும் மற்றும் கால்நடை தோற்று நோய்கள் பற்றிய அறிக்கை அனுப்புதல்.
 9. இருப்பு பாதை கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்தல்.
 10. கிராம ஊழியர்களின் சம்பளப் பட்டியல் தயாரித்தல்.
 11. கால்நடைப் பட்டியல் மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமரித்தல்.
 12. கட்டிடங்கள், மரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களைப் பாதுக்காத்தல்.
 13. புதையல்கள் பற்றி மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தல்.
 14. முதியோர் ஓய்வு ஊதியம் வழங்குவது குறித்த பணிகளை கவனித்தல்.
 15. பொது சொத்துக்கள் பற்றிய பதிவேட்டை பராமரித்தல்.
 16. முதியோர் ஓய்வு ஊதிய பதிவேட்டை பராமரித்தல்.
 17. வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற, சேவை நிறுவனங்களுக்கு தேவையான விவரங்கள் அளித்தல் மற்றும் ஒத்துழைப்பு செய்தல்.
 18. உழவர்கள் நிலப் பட்டாக்காளை மாறுதல் செய்து பெறவும், புலங்களை உட்பிரிவு செய்துக் கொள்ளவும், தனிப் பட்டாக்காளை பெறவும், இயலும் வகையில் நிலப்பதிவேடு, நில அளவை ஆவணங்கள் தொடர்பாக கணக்குகளை முறையாகவும் சரியாகவும் வைத்து வருதல்.
 19. பாசன வாயில்களை முறையாக பராமரித்தல், ஏரிகளிலும், நீர் வழங்கு பாசனக் கால்வாய்களிலும் ஆக்கிரமிப்புக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் நீர்பாசனத்திற்கு வகை செய்தல்.
 20. சட்டம் ஒழுங்கு பேணுதல், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதின் மூலம் குற்றங்களைத் தடுத்தல், குற்ற நிகழ்ச்சிகள் நடந்தவுடனே அவை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அனுப்புதல்.
 21. நிலச்சீர்திருத்த சட்டங்கள் தொடர்பான முறையான நடவடிக்கை எடுத்தல்.
 22. முறையாக துப்புரவு பணிகளை பேணி வருதல்.
 23. அரசாங்கம் அவ்வபொழுது தொடங்கும் ஏனைய நலத்திட்டங்கள் முதலியவற்றை நடைமுறைபடுத்த அளிக்கப்படும் பணிகளை நிறைவேற்றல்.
 24. கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் பட்டியல் தயாரித்து வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தல் போன்றவை..

ஆதாரம் : தமிழ்நாடு பொது சேவை ஆணைக்குழு

3.16393442623
மணிவண்ணன் Jul 05, 2019 11:52 PM

பொது சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது விஏஓ மற்றும் பேருராட்சி செயல் அலுவலர் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்.
நடவடிக்கை எடுக்காத வி ஏ ஓ மற்றும் பேருராட்சி செயல் அலுவலர் மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும் . ஆலோசை

P . டில்லி Mar 05, 2019 09:16 AM

வண்டி பாதை ஆக்கரிமிப்பு செய்யும் நபருக்கு துனை போகும் கிராம நிர்வாக அலுவலைரை யார் இடம் புகார் தெரிவிப்பது

மெ.ராஜேந்திரன் Jan 21, 2019 11:08 AM

மேலே குறிப்பிட்டுள்ள 24 திட்டங்களையும் முறையாக ஊராட்சியில் செயல்படுத்தினால் அந்த ஊராட்சி மிகவும் சிறப்பாக இருக்கும் ஆனால் ஒருசில நபர் செயல்படுத்தாத காரணத்தினால் அந்த கிராமம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது சாதாரண குடிமக்களுக்கு இந்த அரசு திட்டங்களும் கிடைப்பதில்லை

ஜோதிமுத்து Aug 10, 2018 07:28 AM

தவறாக பணிபுரிவருக்கு என்ன பண்ணலாம்... சார்.

செ.சதீஷ்குமார் Jul 16, 2018 11:58 AM

கிராம நிர்வாக அலுவலர் அவரது கடமைகளை செய்யவில்லை எனில் அவருக்கான தன்டனை என்னவாக இருக்கும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top