பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / பொதுவான தகவல்கள் / சொத்து குறித்த தகவல்கள் / வீடு / மனை வாங்குதல் / வீட்டு மனை வாங்கிய பிறகும் வில்லங்கச் சான்று பெற வேண்டும்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வீட்டு மனை வாங்கிய பிறகும் வில்லங்கச் சான்று பெற வேண்டும்

வீட்டு மனை வாங்கிய பிறகும் வில்லங்கச் சான்று பெற வேண்டும் என்பதை பற்றிய குறிப்புகள்

ஒரு வீட்டுமனையை வாங்குவதற்கு முன்னர் அந்த நிலத்தின் உரிமையாளர் யார், அவர் அந்த உரிமையை யாரிடமிருந்து பெற்றார், அந்தச் சொத்து வேறு யாரிடமாவது அடமானத்தில் உள்ளதா, வேறு யாருக்கும் விற்கப்பட்டு உள்ளதா என்ற விவரங்களை வில்லங்கச் சான்றுகள் மூலமாக சரிபார்ப்பது வழக்கம். பொதுவாக பதினைந்து ஆண்டுகளில் இருந்து முப்பது ஆண்டுகள் வரையிலும் வில்லங்கச் சான்று சரிபார்க்கப்படுகிறது.

வீட்டுமனை வாங்குவதோடு வில்லங்க சான்றின் பணி முடிவடைந்து விடுவதில்லை. கிரயப் பத்திரத்தை பதிவு செய்தபிறகு, சில வாரங்கள் கழித்து மீண்டும் ஒருதடவை வில்லங்கச் சான்று பெறுவது நல்லது. உங்களுக்கு கிரயம் செய்யப்பட்ட நிலம் உங்களை அடுத்து வேறு யாருக்காவது விற்பனை செய்யப்பட்டுள்ளதா அல்லது அடமானம் வைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்த்துக்கொள்ள இது உதவும்.

வீட்டுக்கடன் வழங்குகிற சில வங்கிகள் இப்படி இடத்தை வாங்கிய பிறகும் வில்லங்கச்சான்று பெறுவதை கட்டாயமாக்கி உள்ளன. கடன் வாங்கா விட்டாலும் வில்லங்கச்சான்று பெற்று வீட்டுமனையின் உரிமையை சரி பார்த்துக் கொள்வது பாதுகாப்பானது.

ஆதாரம் : தினத்தந்தி

3.03448275862
மீராமொகய்தீன் Nov 16, 2017 08:01 PM

நமக்கு தேவையான தகவல்களைப்பெற எத்தனைமுறை முயற்சித்தாலும் நமக்கு கிடைக்கவில்லை.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top