பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / பொதுவான தகவல்கள் / நிதி சார்ந்த தகவல்கள் / மாற்றத்தை ஏற்படுத்தும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.)
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மாற்றத்தை ஏற்படுத்தும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.)

மாற்றத்தை ஏற்படுத்தும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

ஜி.எஸ்.டி எனப்படும் சரக்குகள் மற்றும் சேவை வரி நாட்டில் அறிமுகம் செய்ய்ப்படுவதற்கான முதல் அறிவிப்பு 2006, பிப்ரவரி 28ம் தேதி அப்போதைய நிதி அமைச்சர் தனது வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட் உரையில் வெளியிட்டதுடன் இந்த சரக்கு மற்றும் சேவை வரி 2010ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார். அதன் பின்னர் ஜி.எஸ்.டி.யை நாட்டில் அறிமுகப்படுத்த ஒரு நிலையான முயற்சி மேற்கொள்ளப்பட்டு 2014 டிசம்பரில் அதற்கான அரசியல் சட்ட (122வது திருத்தம்) மசோதா அறிமுகம் செய்யப்பட்டதே இந்த முயற்சியின் தொடக்கமாக அமைந்தது.

சரக்கு மற்றும் சேவை வரியின் நோக்கம்

சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன என்பது தான் இதற்காக நடத்தப்பட்ட முக்கியமான விவாதங்களில் எழுப்பப்பட்ட பொதுவான பல்லவியாக இருந்தது. இந்தக் கேள்விக்கு பதில் அளிக்க தற்போது நமது நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள மறைமுக வரி கட்டமைப்பைப் புரிந்து கொள்வது முக்கியமாகும். தற்போது உற்பத்திக்கான வரி (மத்திய கலால் வரி), சேவைக்கான வரி (சேவை வரி), மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு விற்பனை (மத்திய அரசால் விதிக்கப்பட்டு மாநிலங்களால வசூலிக்கப்படும் மத்திய விற்பனை வரி), ஆகியவற்றை மத்திய அரசும், மதிப்பு கூட்டு வரி, நுழைவு வரி, ஆடம்பர வரி, கொள்முதல் வரி உள்ளிட்டவற்றை மாநில அரசுகளும் விதித்து வருகிறது. ஒரே விநியோகச் சங்கிலியில் பல்வேறு பெயர்களில் வரி வசூலிக்கப்படுவது தெளிவாகத் தெரிகிறது.

மாநில அரசுகள் விதிக்கும் வரிகளுக்கு எதிராக மத்திய அரசும் வரிகளை விதித்து அடுக்கடுக்காக வரி விதிப்புகள் உள்ளன. மாநில அரசுகள் விதிக்கும் சில வரிகளே அவர்கள் விதிக்கும் வேறு வரிகள் செலுத்தப்பட்டதற்கு எதிராக நீக்கப்படுவதில்லை. மேலும் பல்வேறு விதமான மதிப்பு கூட்டு வரி பல்வேறு விகிதங்களிலும் வெவ்வேறு வரி நடைமுறைகளிலும் வசூலிக்கப்படுவது நாட்டைத் தனித்தனி பொருளாதாரப் பகுதிகளாக பிரிக்கிறது. ஆக்ட்ராய், நுழைவு வரி, சுங்கச்சாவடி போன்ற கட்டண மற்றும் கட்டணமில்லா எல்லைகள் உருவாக்கப்பட்டு இருப்பது நாடு முழுவதும் வணிகம் எளிதாக பரவுவதற்கு தடை ஏற்படுத்துகிறது. இது தவிர ஏராளமான வரிகள் விதிக்கப்படுவது வரி செலுத்துவோருக்கு கூடுதல் செலவை ஏற்படுத்துகின்றன.

மேற்கூறப்பட்ட அனைத்து மறைமுக வரிகளும் சரக்குகள் மற்றும் சேவை வரி என்ற பெயரில் ஒரே வரியாக ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது சரக்கு அல்லது சேவை அல்லது இரண்டும் விநியோகிக்கப்படும் போது விநியோகச் சங்கிலியின் ஒவ்வொரு கட்டத்திலும் உற்பத்தி அல்லது இறக்குமதி தொடங்கி கடைசி கட்டம் வரை விதிக்கப்படும். எனவே சரக்கு அல்லது சேவை விநியோகிக்கப்படும் போது மத்திய அல்லது மாநில அரசு தற்போது விதிக்கும் எந்தவொரு வரியும் ஜி.எஸ்.டி.யாக மாற்றப்படும்.

மாநிலத்திற்குள் சரக்கு மற்றும் சேவை வினியோகிக்கப்படும் போது சரக்கு மற்றும் சேவை வரி என்பது இரு விதமாக விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும். மத்திய ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு விதித்து வசூலிக்கும், மாநில ஜி.எஸ்.டி.யை மாநில அரசு விதித்து வசூலிக்கும். மாநிலங்களுக்கு இடையே சரக்கு மற்றும் சேவை விநியோகிக்கப்படும் போது மத்திய அரசு ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.யை விதித்து வசூலிக்கும். எனவே ஜி.எஸ்.டி. என்பது மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் பல்வேறு வரிகளை ஒருங்கிணைத்து அதன் மூலம் நாட்டின் பொருளாதார ஒற்றுமையை ஏற்படுத்தும் ஒரு மேடையாகத் திகழும்.

இந்த வரிச் சீர்திருத்தமானது ஒற்றை தேசிய சந்தை, பொது வரித் தளம் மற்றும் பொது வரி சட்டங்களை மத்திய மாநில அரசுகளுக்கு உருவாக்குவதற்கான வழியை அளிக்கும். நமது அரசியல் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள கூட்டாட்சி முறையை எவ்வாறு நடைமுறைப்படுத்த முடியும் என்பதற்கான உதாரணமாக ஜி.எஸ்.டி உள்ளது.

விநியோகத்தின் தொடக்க நிலையில் செலுத்தப்பட்ட வரி குறித்த உள்ளிட்டு வரி இருப்பு விவரங்கள் விநியோகத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் இருக்கும் என்பது ஜி.எஸ்.டி.யின் மற்றும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்த அம்சம் இரட்டை வரி முறை மேலும் மேலும் வசூலிக்கப்படுவதை பெரும் அளவு ஒழிக்கும் என்பது இதன் சிறப்பம்சமாகும். இந்த வரிச் சீர்திருத்தம் என்பது தகவல் தொழில்நுட்பத்தின் (சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க் ஜி.எஸ்.டி.என்.) மூலம் விரிவான ஆதரவைப் பெறும் என்பதால் வரிச் சுமையில் அதிக வெளிப்படைத் தன்மை, மத்திய மாநில அரசுகளின் வரி நிர்வாகத்தின் மீது நம்பகத்தன்மை, ஆகியவற்றை ஏற்படுத்துவதுடன் வரி செலுத்துவோர் அதற்கு ஏற்ப நடந்துகொள்வதற்கான செலவுகளையும் குறைக்கும். இந்த ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்யப்படுவதால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்றும், அதன் காரணமாக ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி ஒன்று முதல் இரண்டு சதவிகிதம் கூடுதலாக வளர்ச்சி அடையும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

ஜி.எஸ்.டி.யின் பயன்கள்

அரசுக்கான பயன்கள்

இந்தியாவுக்கான ஒருங்கிணைந்த தேசிய சந்தையை உருவாக்க உதவுவதுடன், அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்க்கவும், மேக் இன் இந்தியா’இயக்கத்திற்கு ஊக்கமும் அளிக்கும்.

சரக்கு மற்றும் சேவை விநியோகத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் உள்ளிடு செய்யப்பட்ட வரி இருப்பு இருக்கும் என்பதால் அடுக்கடுக்கான வரிவிதிப்புகளைப் போக்கும் மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே சட்டங்கள், நடைமுறைகள் மற்றும் வரிவிகிதங்கள் ஒருங்கிணைக்கப்படும் அனைத்துக் கணக்குகளும் இணையவழியில் ஆன்லைனில் தாக்கல் செய்யப்படும் என்பதாலும், உள்ளிடப்பட்ட வரிகளும் இணைய வழியில் சரிபார்க்கப்படும் என்பதால் விநியோக சங்கிலியின் ஒவ்வொரு கட்டத்திலும் பரிவர்த்தனைகளின் அதிக காகித விசாரணைகள் ஊக்கப்படுத்தப்படும் வகையில் இணக்கத்திற்கான சூழல் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஒரே மாதிரியான மாநில ஜி. எஸ். டி மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி விகிதங்கள் அண்டை மாநிலங்களுக்கு இடையே விகித விவாதங்கள் நீக்கப்படுவதால் ஏய்ப்பு குறையும் வரிசெலுத்துவோர் பதிவு, வரியை திரும்பப்பெறுதல், வரி கணக்கு செலுத்துவதற்கான சீரான முறைகள், பொதுவான வரி அடித்தளம், சரக்குகள் மற்றும் சேவைகளை பிரிப்பதற்கான பொதுவான முறை ஆகியவை வரி முறைக்கு அதிக உறுதிப்பாட்டை அளிக்கும். தகவல் தொழில்நுட்பம் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால் வரி செலுத்துபவர் மற்றும் வரி நிர்வாகத்துக்கு இடையிலான நேரடித் தொடர்பு குறையும் என்பதால் நீண்ட கால அடிப்படையில் ஊழல் குறையும் இது ஏற்றுமதி மற்றும் உற்பத்திக்கு ஊக்கமளித்து, வேலைகளை உருவாக்குவதுடன் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து அதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் இறுதியாக இது அதிக வேலைகளை உருவாக்கி அதன் மூலம் நிதி ஆதாரங்களை பெருக்கி ஏழ்மையை ஒழிக்க உதவும்

வணிகம் மற்றும் தொழில்துறைக்கான பயன்கள்

சில விலக்குகளுடன் எளிமையான வரி விதிப்பு எளிதாக வர்த்தகம் செய்வது அதிகரிக்கப் பட்டுள்ளது தற்போதைய நிர்வாகத்தில் மறைமுக வரி விதிப்பில் உள்ள பல வரி விதிப்புகள் குறைக்கப்பட்டு எளிமை மற்றும் சீரான நிலை கொண்டுவரப்பட்டுள்ளது பணி ஒப்பந்தங்கள், மென்பொருள் மற்றும் உபசரிப்பு போன்ற துறைகளில் இரட்டை வரி விதிப்பு முறை நீக்கம் விநியோகத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் சரக்குகள் மற்றும் சேவைகளில் உள்ளிடப்பட்ட வரி கணக்கு இருப்பதால் அடுக்கடுக்கான வரி விதிப்பை போக்கும் இணக்கத்திற்கான செலவுகள் குறைப்பு பல்வேறு வரிகளுக்கான பல்வேறு ஆவண பராமரிப்பு இல்லை எனவே ஆதாரங்கள் மற்றும் ஆவண பராமரிப்புக்கான மனித ஆற்றல் குறைவு சிறந்த முறையில் வரிகள் குறைக்கப் பட்டுள்ளதால் குறிப்பாக ஏற்றுமதியில் குறைக்கப்பட்டுள்ளதால் சர்வதேச சந்தையில் நமது பொருட்களின் போட்டித்தன்மை அதிகரிக்கப்பட்டு ஏற்றுமதிக்கு ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது பதிவு, கணக்கு தாக்கல், வரி செலுத்துதல்கள் போன்ற பல்வேறு நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டு தானியங்கியாக ஆக்கப்பட்டுள்ளது சரக்கு அல்லது சேவைகள் விநியோகத்தில் சராசரி வரிச் சுமை குறையும் என எதிர்பார்க்கப்பட்டு அதன் மூலம் நுகர்வு அதிகரித்து, அதனால் உற்பத்தி அதிகரித்து இந்தியாவில் உற்பத்தித் தொழிற்சாலைகளில் உற்பத்தி அதிகரிக்கும்

நுகர்வோருக்கான பயன்கள்

உற்பத்தியாளர், சில்லறை வியாபாரி மற்றும் சேவை அளிப்பவர் இடையே உள்ளிடப்பட்ட வரி தடையின்றி செல்வதால் பொருட்களின் இறுதி விலை என்பது வெளிப்படையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அடுக்கடுக்கான வரி விதிப்பு குறையும் என்பதால் நீண்ட கால அடிப்படையில் பண்டங்கள் மற்றும் சரக்குகளின் விலை குறையும் அதிக அளவிலான சிறு வியாபாரிகள் வரி முறையில் இருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள் அல்லது மிகக் குறைந்த அளவு வரி விதிக்கப்படும் என்பதால் அவர்களிடம் இருந்து நுகர்வோர் பொருட்களை வாங்கும் போது விலை குறையும் அதிக வேலைகள் மற்றும் நிதி ஆதாரங்கள் அதிகமாகும் என்பதால் ஏழ்மை ஒழிக்கப்படும்.

மாநிலங்களுக்கான பயன்கள்

வரி அடித்தளம் விரிவுபடுத்தப்படுவதால் உற்பத்தி முதல் சில்லறை விற்பனை வரை ஒட்டுமொத்த விநியோக சங்கிலிக்கும் வரி விதிக்க முடியும் மத்திய அரசிடம் மட்டுமே இருந்து வந்த வரிச் சேவைகள் அதிகாரம் பொருளாதாரத்தின் வேகமாக வளரும் துறையை மாநிலங்களும் அணுகி வருவாய்க்கு ஊக்கமளிக்கும் ஜி.எஸ்.டி. என்பது இடம் அடிப்படையிலான நுகர்வு வரி என்பதால் நுகர்வு மாநிலங்களுக்கு சாதகமாக இருக்கும் நாட்டில் ஒட்டுமொத்த முதலீட்டு சூழ்நிலையை மேம்படுத்தும் என்பதால் மாநிலங்களிலும் இயல்பாக வளர்ச்சிப் பயன்களை அளிக்கும் சீரான எஸ்.ஜி.எஸ்.டி மற்றும் ஐ.ஜி.எஸ்.டி. விகிதங்கள் அண்டை மாநிலங்கள் மற்றும் மாநிலத்திற்குள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே விகித மாற்றத்தைப் போக்கி வரி ஏய்ப்புக்கான ஊக்கத்தைக் குறைக்கும் வரி செலுத்துவோரின் இணக்கத்தை மேம்படுத்தி அதன் மூலம் மாநிலங்களின் வருவாய் வசூலை அதிகரிக்க பெரும் அரசியல் சட்ட (நூற்று ஒன்றாவது திருத்த) சட்டத்திற்கு கடந்த 2016 செப்டம்பர் 8ம் தேதி ஒப்புதல் அளித்தார். அதன் தொடர்ச்சியாக ஜி. எஸ். டி. கவுன்சில் அறிவிக்கப்பட்டு ஜி.எஸ்.டி. தொடர்பான விவகாரங்கள் குறித்து முடிவு செய்யும் அமைப்பு செயல்பாட்டுக்கு வந்தது.

• 2016 செப்டம்பர் 16 அன்று இந்திய அரசு ஜி.எஸ்.டி.யை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான அரசியல் சட்ட திருத்தத்தில் உள்ள அனைத்து பிரிவுகள் குறித்த அறிவிக்கைகளையும் வெளியிட்டது. ஜி.எஸ்.டியை 15.09.2017க்கு முன்னதாக ஓர் ஆண்டுக்குள் அமல்படுத்துவதற்கான கால அவகாசத்தை இந்த அறிவிக்கை நிர்ணயித்தது.

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டங்கள்

அரசியல் சட்ட திருத்தத்தின்படி உயர் முடிவுகளை எடுக்கும் அமைப்பான ஜி. எஸ். டி. கவுன்சில் அமைக்கப்பட்டது முதல் பதின்மூன்று முறை சந்தித்து பல்வேறு கூட்டங்களில் எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள் வருமாறு:

ஜி.எஸ்.டி. கவுன்சிலில் பணிகள் மேற்கொள்வதற்கான விதிகள் ஜி.எஸ்.டி. நடைமுறைக்கான கால அட்டவணை :

• ஜி.எஸ்.டி. விதிப்பிற்கான விலக்கிற்கான உச்சவரம்பு சிறப்பு பிரிவு மாநிலங்கள் தவிர மற்றவைக்கு ரூ. 20 இலட்சமாக இருக்கும். அரசியல் சட்டத்தின் 279ஏவில் சேர்க்கப் பட்டுள்ள இந்த சிறப்பு மாநிலங்களுக்கான உச்சவரம்பு ரூ. 10 இலட்சமாக இருக்கும்.

* காம்போசிஷன் திட்டத்தை பெறுவதற்கான நுழைவு வரம்பு ரூ. 50 இலட்சமாக இருக்கும். சேவை அளிப்பவர்கள் மற்றும் இதர சிலர் இத்திட்டத்தில் இணைக்கப்படமாட்டார்கள்

• ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்துவதால் 2015-16 முதல் 5 ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு இழப்பீடு அளிக்க வளர்ச்சி விகிதம் 14 சதவிகிதமாக இருக்க வேண்டும்

* வரைவு ஜி.எஸ்.டி. விகிதங்களுக்கு பதிவு, கணக்கு தாக்கல், திருப்பி அளித்தல் மற்றும் இன்வாய்ஸ், டெபிட்/கிரெடிட் குறிப்புகள் ஒப்புதல் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் சட்டத் துறை அளிக்கும் சில மாற்றங்களுடன் அளிக்கப்படும்.

• தற்போது உள்ள வரி ஊக்கத் திட்டத்தின் கீழ் மறைமுக வரிசெலுத்துவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் ஜி.எஸ்.டி.யின் கீழ் வரி செலுத்த வேண்டும் என்பதுடன் அந்த நிறுவனத்துக்கு தொடர்ந்து விலக்கு அளிக்கும் முடிவு குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசு அல்லது மத்திய அரசால் முடிவு செய்யப்படும். தற்போதுள்ள விலக்கு அல்லது ஊக்கத் திட்டத்தைத் தொடர் மாநில அல்லது மத்திய அரசு முடிவு செய்தால் அது திருப்பி அளிக்கும் நுணுக்கத்தின் மூலமாக நடைமுறைப்படுத்தப்படும்.

• 5%, 12%, 18% மற்றும் 24% என்ற நான்கு வரி விதிப்பு அடுக்குகள் பின்பற்றப்படும். இது தவிர விலக்கப்பட்ட சரக்குகள் பிரிவு மற்றும் ஆடம்பர கார்கள், வாயு சேர்க்கப்பட்ட பானங்கள், பான் மசாலா மற்றும்

புகையிலை பொருட்கள் ஆகியவற்றுக்கு மாநிலங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய 28% வரிக்கு கூடுதலாக வரி விதிக்கப்படும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

Filed under:
3.05
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top