பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / பொதுவான தகவல்கள் / வாகன ஓட்டுநர் உரிமம் அடிப்படைத் தகவல்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வாகன ஓட்டுநர் உரிமம் அடிப்படைத் தகவல்கள்

வாகன ஓட்டுநர் உரிமம் அடிப்படைத் தகவல்கள்

ஒருவருக்கு வாகன ஓட்டுநர் உரிமம் ஏன் தேவை?

ஒருவர் முறையாக பயிற்சி எடுத்து, அவர் நன்றாக வாகனம் ஓட்டுவார் என்பதற்கான அத்தாட்சி அது. மேலும், அவருக்கு போக்குவரத்து, சாலை விதிமுறைகள் தெரியும் என்பதற்கான அத்தாட்சியும் அதுவே. தவிர, ஓர் ஓட்டுநர் வாகனம் ஓட்டும் விஷயத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும் அதுவும் அந்த ஓட்டுநர் உரிமத்தில் குறிப்பிடப்படும். எனவே, வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம் தேவை.

ஒருவர் எத்தனை ஆண்டுகள்வரை வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுவார்?

அது உடல் ஆரோக்கியத்தைப் பொருத்தது. ஒருவரது வயது, உடல் நிலையைப் பொருத்து அவருக்கு குறிப்பிட்ட ஆண்டுகள் வரை மட்டுமே வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படும். அதற்கான அத்தாட்சியும் ஓட்டுநர் உரிமம்தான்.

வாகன ஓட்டுநர் உரிமம் பெற வயது வரம்பு என்ன?

வாகன ஓட்டுநர் உரிமம் பெற 16 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும். 50 சி.சி.க்கு குறைந்த, கியர் இல்லாத வாகனங்கள் ஓட்டுவதற்கு மட்டுமே அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். 50 சி.சி.க்கு அதிகமான மற்றும் நான்கு சக்கர வாகன (எல்.எம்.வி - இலகு ரக வாகனம்) ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும்.

இலகு ரக வாகனங்கள் என்றால் என்ன?

  • இருசக்கர வாகனம், ஆட்டோ, கார் உள்ளிட்டவை இலகு ரக வாகனங்கள். அவற்றை பொதுப் போக்குவரத்து வாகனமாக பயன் படுத்த பேட்ச் (அடையாள அட்டை) பெறவேண்டும். அதற்கு 20 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
  • கனரக வாகனம் (ஹெச்எம்வி-ஹெவி மோட்டார் வெஹிக்கிள்) ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி?
  • பேருந்து, லாரி போன்றவை கனரக வாகனங்கள். இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று ஓராண்டு பூர்த்தியடைந்த பின்பே கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற முடியும். இதற்கு 20 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

வாகன ஓட்டுநர் உரிமம் பெற கல்வித் தகுதி உண்டா?

போக்குவரத்து வாகனங்கள் இயக்குவதற்கான கல்வித் தகுதி 8-ம் வகுப்பு. சொந்த பயன்பாட்டுக்காக வாகனம் ஓட்டுபவர், வாகன ஓட்டுநர் உரிமம் பெற கல்வித் தகுதி தேவை இல்லை.

ஓட்டுநர் உரிமம் பெறும் முறை என்ன?

ஓட்டுநர் உரிமம் பெற ஒருவர் கொண்டுவரும் வாகனத்துக்கு ஆர்.சி. (பதிவுச் சான்று), வாகனக் காப்பீடு, மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் போன்றவை நடப்பில் இருக்க வேண்டும். பின்பு, ஆய்வாளர் முன்னிலையில் வாகனத்தை ஓட்டிக் காட்டவேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற ரூ.350 கட்டணம் செலுத்தவேண்டும்.

ஆதாரம் : வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்.

3.20731707317
கௌதமராஜ் Aug 19, 2019 03:00 AM

ஓட்டுனர் உரிமம் பெற எட்டாம் வகுப்பு தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது இந்த சட்டம் எப்போது வரும் என்று கெஞ்சி கெட்டு சொல்லுங்க

கா கிருஷ்ணசாமி Aug 12, 2019 02:40 PM

முன்னாள் இராணுவத்தினர் இராணுவத்தில் ஓட்டுநராக இருந்தவர் இங்கு கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற சலுகை உண்டா?

கௌதம் May 29, 2019 10:32 AM

தமிழ்நாட்டு அரசு வழங்கும் ஓட்டுநர் உரிமம் இந்தியாவில் உள்ள எத்துணை மாநிலங்களுக்கும் அனுமதி உள்ளது?

Suresh.k Apr 09, 2019 02:34 PM

ஒட்டுநர் உரிமம் இந்தியாவில் ஏங்கேள்ளாம் செல்லுபடியாகும்

மைதின் Feb 06, 2019 01:24 PM

பொது உபயோக பயன்பாட்டு வாகனம் ஓட்டுவதற்கு வெளிநாடுகளில் இது போல் இல்லை ஓட்டுநர் உரிமம் இருந்தால் போதும் கேரளா மாநிலத் திலும் இதே நடைமுறைதான் வாகனம் ஓட்டுவதற்கு தகுதி சாலைவிதிமுறைகள்
மற்றும் சரியாக வாகனம் இயக்க தெரிந்திருக்க வேண்டும் அதே போல் சாலையோரத்திலுள்ள பெயர் பலகைகளில் உள்ள விபரங்களை வாசிப்பதற்கு தமிழும் ஆங்கிலமும் தெரிந்திருப்பது அவசியம் எட்டாம் வகுப்பு
என்பதல்ல ஐந்தாம் வகுப்பு படித்தவருக்கும் ஆங்கிலம் தெரியம்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top