பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / மொபைல்வழி சேவைகள் / தமிழ்நாடு காவல்துறையின் புதிய கைப்பேசி செயலி
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழ்நாடு காவல்துறையின் புதிய கைப்பேசி செயலி

பெண்கள் மற்றும் தனியாக இருக்கும் முதியவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட காவலன் SOS என்ற செயலி பற்றி விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

மக்கள் நலன் காக்கவும், ஆபத்திலிருந்து மக்களை விரைவான முறையில் பாதுகாக்கவும், தமிழ்நாடு காவல்துறை “காவலன்-SOS’ என்கிற நவீன செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக அதிகாரிகளுக்கு உரியநேரத்தில் உதவி புரிய, நிகழ்வுகள் பற்றிய அனைத்து விவரங்களை விரவான முறையில் இணையதளவசதி மூலமாக அனுப்பிவைக்கப்படும். காவல்துறையினரால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இச்செயலி ‘தமிழ்நாடு காவல் துறையால்’ இணைந்து Amtex உடன் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தொழிற்நுட்பங்கள்

“KAVALAN SOS” அவசர பாதுகாப்புச் செயலியானது, பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பிற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. அவசரத் தேவையின் போது, அந்த கைப்பேசியை அதிரச் செய்தாலே, காவல் தலைமைக் கட்டுப்பாட்டு அறைக்கும் மற்றும் அவர்கள் “KAVALAN SOS” செயலியில் பதிவு செய்துள்ள மூன்று உறவினர்கள், நண்பர்கள் எண்ணிற்கு இருப்பிடத் தகவலுடன் எச்சரிக்கை குறுஞ்செய்தியும் அனுப்பப்படும்

KAVALAN Dial 100 100

“KAVALAN Dial 100 100” அழைப்பு செயலியை பொதுமக்கள் தங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டால், அவசர காலத்தில் “100” என்ற எண்ணை டயல் செய்யாமலேயே, இந்த செயலியை தொடுவதின் மூலம், நேரடியாக மாநில காவல் தலைமைக் கட்டுப்பாட்டு அறையை தங்களுடைய இருப்பிட தகவல்களுடன் தொடர்பு கொள்ள இயலும்.

பயன்கள்

  1. அனைத்து Android மற்றும் iPHONE – களில் பயன்படுத்தலாம்.
  2. அவசர உதவிக்கு SOS பட்டனை தொட்டாலே போதும்.
  3. அழைப்பவரின் இருப்பிடம் உடனே GPS மூலம் அறியப்படும்.
  4. அழைப்பவரை உடனடியாக திரும்ப அழைக்கும் SPMCR-ல் உள்ளது.
  5. அழைப்பவரின் கணநேரம் கண்காணிப்பு (Real Time Traking) வசதி உள்ளது.
  6. அழைப்பவரின் இருப்பிட தகவல்கள் மற்றும் வரைபடம் அவர் இந்த செயலியில் பதிவு செய்துள்ளவர்களின் எண்களுக்கு தானாகவே பகிரப்படும்.
  7. காவலன் SOS பட்டனில் தொட்டாலே போதும் உடனடியாக GPS இயங்க ஆரம்பித்து அலைப்பேசி கேமரா தானாகவே 15 வினாடிகள் ஒலி, ஒளியுடன் கூடிய வீடியோ எடுத்து காவல் கட்டுப்பாட்டு மையத்தில் அனுப்பிவிடும்.
  8. இணைய இணைப்பு இல்லாத (Data available Places) இடங்களிலும் தானியங்கி SMS எச்சரிக்கை Auto SMS Alert) மூலமாக செயல்படும்.
  9. அதிர்வு தூண்டல் (Shake Trigger) வசதியின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
  10. ஆங்கிலம் மற்றும் தமிழ் என இருமொழிகளின் வசதி உள்ளது.

இக் கைப்பேசி செயலியை பதிவிறக்கம் செய்து (Android; iOS ) தாங்களும் பயன்பெற்று அனைத்து பொதுமக்கள், பெண்கள் மற்றும் முதியோர்களுக்கு இத்தகவலை பரப்பி உதவி செய்யலாம்.

ஆதாரம் : தமிழ்நாடு காவல்துறை

Filed under:
2.92307692308
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top