பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / மொபைல்வழி சேவைகள் / நம்ம சென்னை - கைப்பேசி செயலி
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நம்ம சென்னை - கைப்பேசி செயலி

சென்னை மக்களின் குறைதீர்ப்புக்கு உதவும் `நம்ம சென்னை' என்ற மொபைல் செயலி பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

சென்னை பொதுமக்களின் குறைகளை எவ்வித காலதாமதமின்றி உடனடியாக நிவர்த்தி செய்ய எளிய முறையில் குறைதீர்க்கும் செயலி, பெருநகர சென்னை மாநகராட்சியால் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது.

இதன் மூலம் பொதுமக்கள் தங்களுடைய குறைகளை பதிவு செய்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். (Android) கைபேசி உபயோகிப்பாளர்கள் ios (iphone) பயன்பாட்டாளர்களும் பதிவிறக்கம் செய்யும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கைபேசி செயலி மூலமாக பெறப்படும் மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உடனுக்குடன் அனுப்பப்பட்டு, அதன்மீது மேற்கொண்ட நடவடிக்கை விவரங்களை மனுதாரருக்கு கைபேசி செயலி மூலமாகவே உடனுக்குடன் தெரிவிக்கும் வண்ணம் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, தெருவிளக்கு பராமரிப்பு, குப்பை அகற்றுதல், நாய் தொல்லை, சாலைப் பணிகள் பராமரிப்பு, மழைநீர் வடிகால் பராமரிப்பு போன்ற பொதுமக்களின் புகார்கள் கைபேசி செயலி மூலமாக பதியப்பட்டு, புகார்கள் அனைத்தும் எல்லைக்குட்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று பொதுமக்களின் குறைகள் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள இந்த கைபேசி செயலி வழிவகை செய்கிறது. இதனால் பொதுமக்களின் குறைகள் எவ்வித காலதாமதமின்றி உடனடியாக நிறைவேற்றப்படுகிறது.

ஆதாரம் : சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம்

3.14285714286
கா.சத்தியா Oct 03, 2019 10:40 AM

போக்குவரத்து நெரிசல் பெரம்பூர் இரயில் நிலையம் அருகில் வலதுபுறம் பெருந்துநிருத்தம் இடதுபுறம் காவல்துறை கூடம்,எதிரில் உணவகங்கள் மக்கள் நடப்பதற்கு நடைபாதை இல்லை.

தனசேகரன் May 07, 2018 04:27 PM

நல்ல தகவல்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top