অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

கர்நாடகா

கர்நாடகா

பூமி

பூமி (நிலப் பத்திர நிர்வாக அமைப்பு), பொது மக்களின் நன்மைக்காக வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்ட முதல் மின் நிர்வாகத் திட்டம் இது. கடந்த நான்கு வருடமாக, கர்நாடகாவின் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குச் சேவை செய்துவருகிறது.

இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு தாலுக்காவிலும், நிலப் பத்திரச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அது பின்வரும் சேவைகளை வழங்குகிறது.

  • பொது மக்கள் கேட்கும்பொழுது நிலப் பத்திர ஆவணங்களை வழங்குகிறது.
  • தவறு ஏதும் நிகழாதவாறு கைரேகைகளை உறுதி செய்கிறது.
  • தொடு திரை சாவடிகளைப் பயன்படுத்தி, நிலப்பத்திர ஆவணங்களை எளிதாகப் பெறலாம், மற்றும் நிலமாற்ற (மியூட்டேஷன்) நிலைமையைத் தெரிந்துகொள்ளலாம்.
  • முதலில் பதிவுசெய்பவர்களுக்கு முதல் சேவை அடிப்படையில் நிலமாற்ற கோரிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன.
  • பணியின் நிலவரத்தை அடிப்படையாகக் கொண்ட ஆன்லைன் அமைப்பு, நிலப்பதிவு தகவல்களில் மாற்றங்களைச் செய்கிறது.
  • பி.கே.ஜ - ஐப் பயன்படுத்தக்கூடிய பூமி மற்றும், சப் - ரெஜிஸ்டர் ‘டேட்டா’ உடனான ஒருங்கிணைப்பு, இவை இரண்டும் முன்னோட்ட முயற்சியாக நடைபெறுகிறது.

மேலும் விவரங்களுக்குக் கீழ்க்காணும் இணைய முகவரிக்குச் செல்லவும்: http://www.bhoomi.kar.nic.in/

சாமான்ய மஹிதி

சாமான்ய மஹிதி ஊரகத் துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் வலை தளத்தை அடிப்படையாகக் கொண்ட முன்முயற்சி. இது கர்நாடக மாநிலத்தின் குக்கிராமங்களில் கிடைக்கின்ற அடிப்படை வசதிகள் பற்றிய தகவல்களைத் தருகிறது. இது 21 துறைகளின், 387 அளவுகோல்களையும் உள்ளடக்கியது. இங்கே, தகவல்கள் குக்கிராமங்கள் வாரியாக, கிராமம் வாரியாக, ஹூப்ளி வாரியாக, கிராமப்பஞ்சாயத்து வாரியாக, தாலுகா பஞ்சாயத்துத் தொகுதி வாரியாக, ஜில்லாப் பஞ்சாயத்துத் தொகுதிவாரியாக, சட்டசபைத் தொகுதி வாரியாக,

நாடாளுமன்றத் தொகுதி வாரியாக, தாலுகா வாரியாக, மாவட்ட வாரியாக

மேலும் விவரங்களுக்கு http://rdpr.kar.nic.in

ஈ - கிராந்தாலயா

ஈ-கிராந்தாலயா ஒரு பொதுவான விண்டோஸை அடிப்படையாகக் கொண்ட நூலகத் தானியங்கு மென்பொருள். இது அமல்படுத்தப்படுவதற்காக, நாடு முழுவதும் என்.ஜ.சி.யால் நிலை நிறுத்தப்படுகிறது.

இதிலுள்ள சிறப்பம்சங்கள்
  • தேடிப் பெற்ற செய்தி, சீரியல்கள், ஓ.பி.ஏ.சி சுற்றோட்டம் மற்றும் நிர்வாகம், பார்கோடு வசதி.
  • எல்லாவற்றையும் உள்ளடக்கிய உதவி மற்றும் தேடல்
  • உறுப்பினர் அல்லாதவர்களுக்கான விருந்தினர் கணக்கு, இணைய தளத்தைப் பயன்படுத்தக்கூடிய வசதிகளும் இருக்கின்றன.

மேலும் விவரங்களுக்கு http://egranthalaya.kar.nic.in

சஹாரா தர்பனா

கூட்டுறவு ஆடிட் இயக்குனரகம்

சஹாரா தர்பனா, ஒரு இரட்டை மொழி வலையகம். நிர்வாகத்தில் ஒளிவு மறைவற்ற தன்மையைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. இது கர்நாடக என்.ஜ.சி. மற்றும் கூட்டுறவு ஆடிட் இயக்குனரகத்தின் முன்முயற்சி.

இந்த வலையகம், 30,000க்கும் மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களின் நிதி நிலைமையைக் காட்சிப்படுத்துகிறது மற்றும் அதன் பலம் மற்றும் பலவீனங்களையும் சித்தரிக்கிறது.

முக்கியமான அம்சங்கள்
  • கையிருப்பு ஏட்டின் சுருக்கம்
  • லாப, நஷ்டம் கணக்கிடுதல்
  • கணக்குத் தயாரித்தல்
  • அக்கவுண்ட் டிரேடிங்
  • விகித ஆய்வு
  • முறைகேடுகளைச் சோதனையிடுதல் (நிர்வாகம், நீதி மற்றும் பத்திரங்களை நிர்வகித்தல்)
  • கூட்டுறவு சொசைட்டிகளைத் தர மதிப்பிடுதல்

மேலும் விவரங்களுக்கு: http://sahakaradarpana.kar.nic.in/

சாரதி வாஹன்

போக்குவரத்துத் துறை

சாரதி & வாஹன், பிராந்தியப் போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) முழுமையான தானியங்கு வசதியைத் தருகிறது.

ணிக நடைமுறை (ட்ரான்சாக்ஷன்) கட்டணம் மற்றும் வரி செலுத்துதல் உட்பட, பதிவின் அனைத்து நிலைகள், உரிமம், பெர்மிட் மற்றும் ஒர்க்ஃபுலோ அடிப்படையாகக் கொண்ட அமைப்பின் மூலம் அமுலாக்குதல், தகுதி, கட்டணம் செலுத்துதல் மற்றும்

அலுவலர்கள் தலையீடு இல்லாமல் ஆன்லைன் முறை.

வரிப்பிரிவு போன்ற அனைத்து வசதிகளையும் தருகிறது. இது பின்வரும் சேவைகளையும் வழங்குகிறது. ஒர்க் ஃப்லோ மூலமாக ஆன்லைனில் பல்வேறு ஆவணங்களை வழங்குதல். போலீஸ் துறையுடன், போக்குவரத்துப் பிரிவின் ஒருங்கிணைப்பு ஓட்டுநர் உரிமத்திற்காகப் படம்பிடித்தல், மற்றும் விண்ணப்பதாரின் விபரங்களையும் பதிவுசெய்தல்.

மேலும் விபரங்களுக்கு http://rto.kar.nic.in/லாக் ஆன் செய்யவும்

வருமானக் கணக்கு பதிவுசெய்யும் முறை

வரி விகிதம் பற்றிய தகவல்களை எங்கும் பரவச் செய்யும் வகையில் வருமான கணக்குப் பதிவுமுறை பெங்களூரில் 330க்கும் மேற்பட்ட சர்க்கிள் அலுவலகங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது வரி நிர்வாகத்தில் வெளிப்படையான தன்மையைக் கொண்டு வருகிறது.

இந்த வலைதளம், வரி விகிதங்கள் உடன், வரி செலுத்தும் கால அட்டவணைகளின் விவரங்களையும் கொண்டுள்ளது மற்றும் அமலில் உள்ள வரி தொடர்பான அறிவிப்புகளும் இதில் உள்ளன.

முதன்மையான அம்சங்கள்
  • மாநிலம் முழுவதும், களஅளவு அலுவலங்கள் நிலை நிறுத்தல்
  • முகவர்களுக்கான சேவையில் மேம்பாடு.
  • அனைத்து நேரங்களிலும் துல்லியம்.
  • அனைத்து மட்டங்களிலும் தகவல் பாதுகாப்பு.
  • அனைத்து நேரங்களில் முகவர் விவரங்கள் கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு: http://ctax.kar.nic.in/index.asp

ஈ - மேன்

மின் - மேன் என்பது ஜெனிரிக் வலைதளத்தை, அடிப்படையாகக் கொண்ட மென்பொருள், தொழிற்நுட்பக் கடைகளில், நுகர்வோர் பயன்படுத்தக்கூடிய பொருட்கள், நுகர்வோர் பயன்படுத்தாத பொருட்கள், இவற்றின் ஒருங்கிணைந்த பராமரிப்புக்கு இந்த மென்பொருள் பயன்படுகிறது. மாநிலத்தின் என்.ஐ.சி இந்த வலைதளத்தை அடிப்படையாகக் கொண்ட மென்பொருளைப் பொருத்தியும் அமல்படுத்தியும் வருகிறது.

இந்த மென்பொருள் பொருட்களை வழங்குதல், தேவையான பொருட்களை ஆர்டர் செய்தல் மற்றும் அனுமதி அளித்தல், திரும்பி அனுப்புதல் மற்றும் கையிருப்பில் புதிய வகைப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளுதல் போன்ற வசதிகளை அளிக்கிறது.
முக்கிய அம்சங்கள்:

  • கடைகளை நிர்வகிக்கிறது.
  • கடையிலிருந்து பெற்றுக்கொள்ளுதல் / கொடுத்தல் / திருப்பி அனுப்புதல் போன்ற வசதிகள்.
  • ஒவ்வொரு ட்ரான்சாக்ஷனுக்குப் பிறகு, பெற்றுக்கொண்டவருக்குத் தானாக மின்னஞ்சல் அனுப்புதல்.
  • மாறுபட்ட அளவுகோல்களில் கையிருப்பு அறிக்கை தயார் செய்தல்.
  • ஏ.எம்.சியின் கீழ், வன்பொருள் பழுதுக்குப் புகார் அனுப்புதல்.
  • வன்பொருளில் ஏற்படும் பழுதுகளைக் கண்காணிக்க ஏ.எம்.சி. விற்பனையாளருக்குப் பார்வையிடும் வசதி.

மேலும் விவரங்களுக்கு : http://eman.kar.nic.in/

ஆஸ்தி டெரிஜ் (சொத்து வரி)

‘ஆஸ்தி டெரிஜ்’ என்னும் மென்பொருள், சொத்து வரியைக் கணக்கிடுவதற்காகவும் வசூலிப்பதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது. அதிகாரபூர்வ அரசாங்க அலுவலகங்கள், வருடாந்தர வாடகை மதிப்பையும், சொத்து வரியையும் நிர்ணயித்த பிறகு இந்த மென்பொருள் தானாகவே தொகையைக் கணக்கிட்டுவரும். கணினி மயமாக்கப்பட்ட இந்த இயந்திர நுட்பம், கர்நாடக அரசால், கிராமப் பஞ்சாயத்துகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்

  • டிமாண்டு நோட்ஸ் மற்றும் நோட்டீஸ்களுக்குக் கணினி மயமாக்கப்பட்ட பிரிண்டிங்.
  • கணினி மயமாக்கப்பட்ட கேஷ் கவுண்டர்கள் மூலம் வரி வசூலிப்பு.
  • உள்ளுர் மொழி ஆதரவு.
  • வெளிப்படையான அமைப்பு.

மேலும் விவரங்களுக்கு: http://rdpr.kar.nic.in

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புச் செயல்பாடுகள் தகவல் அமைப்பு

கர்நாடக மாநிலக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புத் திட்ட சொசைட்டி, தகவல்களை உள்ளிடுதல் (டேட்டா என்ட்ரி), விசாரணை மற்றும் கிராப் (CLEAIS) போன்ற வசதிகள் தருவதற்காக, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புச் செயல்பாடுகள் தகவல் அமைப்பை அமல்படுத்தியுள்ளது. இது தொடர்பான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • அமலாக்கச் செயல்பாடுகள்
  • வாதியின் வழக்குகள்
  • குறைந்தபட்ச சம்பள வழக்குகள்
  • ரொக்க வரி வழக்குகள்
  • டி.சி.யால் செலுத்த வேண்டிய பணத்தைத் திரும்பப் பெறுதல்
  • குழந்தைத் தொழிலாளரைக் கண்டறிதல்
  • பள்ளிகளோடு இணைத்தல்
  • வகை வாரியாகக் குழந்தைகளை இரு பிரிவுகளாகப் பிரித்தல்
  • அடிமைக் குழந்தைத் தொழிலாளி
  • ஊரகத் துறையிலும் மக்கள் தொடர்பு துறையிலும் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புச் செயல்பாடுகள்.
  • குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்புச் செயல்பாடுகள் நகர் வளச்சித் துறை
  • சமுதாய நல்வாழ்வுத் துறையில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு முயற்சிகள்.
  • அறிவுத் திறனை வளர்த்தல் மற்றும் பயிற்சிகள்
  • சுற்றுச் சூழல் வளர்ப்புச் செயல்பாடுகள்.
  • சமுதாய நிதி பற்றிய விவரங்கள்

கிரிஷி மராட்டா வாஹினி

கிரிஷி மராட்டா வாஹினி என்பது இணையத்தில் விவசாயப் பொருள்களின் விலை பற்றிய தகவல்களுக்கான அமைப்பு. இது தினமும் மாலை 4 மணிக்கு ஆங்கிலத்திலும் கன்னடத்திலும் சந்தை வாரியாக விலை பற்றிய தகவல்களைத் தருகிறது.

இந்த வலையகத்தின் மூலம் கிடைக்கும் தகவலைப் பயன்படுத்தி, விற்பனையாளர்களும் விவசாயிகளும் தங்களின் விவசாயப் பொருள்களுக்கு உரிய விலையை நிர்ணயிக்கிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு : http://maratavahini.kar.nic.in/

அஹாரா

உணவு, சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் உணவுத் துறை இந்த அஹாரா திட்டத்தைத் தொடங்கியது. வலைதளத்தை அடிப்படையாகக் கொண்ட இது, அரசாங்கத்தில் உணவுக் கொள்கையை, வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள பயனாளிகளிடம் கொண்டு செல்வதற்கான முன்முயற்சி. இந்தத் துறை வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள 50 லட்சம் குடும்பங்களுக்குப் பின்வரும் பல்வேறு தலைப்புகளில் இணையத்தில் தகவல்களைத் தருகிறது.

  • 20,000 நியாய விலைக் கடைகள் பற்றிய விவரங்கள்
  • அனைத்து மாவட்டங்களின், அத்தியாவசியப் பொருள்களின் அன்றாடச் சில்லறை விற்பனை விலைகள்.
  • அன்றாடச் சில்லறை விற்பனை விலைகளில் ஏற்படும் மாற்றங்கள்.
  • வாராந்தர விலைகளில் ஏற்படும் மாற்றங்கள்.
  • மாதாந்தரச் சில்லறை விற்பனை விலைகள் மற்றும் மாதக் கடைசி சில்லறை விற்பனை விலைகள்.
  • மாதக் கடைசி மொத்த விற்பனை விலைகள்
  • மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை இடையேயான ஒப்பீட்டு அறிக்கை.
  • குடிமக்களுக்கான சலுகை மற்றும் டி.பி.டி.எஸ் திட்ட விவரங்கள் மற்றும் பிற விவரங்கள்.
  • மாவட்ட வாரியாக உணவு தானிய ஒதுக்கீடு

மேலும் விவரங்களுக்கு : http://ahara.kar.nic.in/

தணிக்கைக் கண்காணிப்பு அமைப்பு (ஏ.எம்.எஸ்)

நிதித் துறையின் முன்னாள் செயலாளர் இருவரின் முன்முயற்சிதான் இந்தத் தணிக்கை (ஆடிட்0 கண்காணிப்பு அமைப்பு. இது பொதுமக்கள் நிதி நிர்வாகம் மற்றும் அதைக் கணக்கிடுவதில் அரசுக்கு இருக்கும் பொறுப்புக்களை ஒருங்கிணைப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
இவர்கள், அரசுத் துறைகளைக் கண்காணிப்பதற்கென, வலைதளத்தை வடிவமைத்துத் வளர்த்தெடுத்துள்ளனர்.

  • கணக்குப் பரிசோதனை ஆட்சேபணைகள் மற்றும் ஆய்வு (இன்ஸ்பெக்ஷன்) அறிக்கைகளை உற்று நோக்குதல்
  • கணக்குப் பரிசோதனை பத்திகள் தயாரித்தல், சி.ஏ.ஜி கணக்குப் பரிசோதனை அறிக்கையில் சேர்த்துக்கொள்வதற்கென முன் மொழியப்படும் மதிப்பீடுகள்.
  • பத்திகளுக்கெனத் துறை சார்ந்த குறிப்புகள் மற்றும் சி.ஏ.ஜி கணக்குப் பரிசோதனையில் உட்படுத்தப்பட்டுள்ள மதிப்பீடுகள்.
  • அதிகப்படியான அனுமதி வழங்கப்பட்டிருக்ப்பவற்றுக்காகத் துறை சார்ந்த குறிப்புகள் மற்றும் ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான பொருத்தமான நடவடிக்கை.
  • பி.ஏ.சி மற்றும் சி.ஓ.பியு அறிக்கைகள்மீதான நடவடிக்கை எடுத்த குறிப்புகள்.

மேலும் விவரங்களுக்கு : http://www.ams.kar.nic.in/

பத்தாம் வகுப்பிற்கு இணையத்தில் பாடப் புத்தகங்கள்

கர்நாடக அரசின் மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை பத்தாம் வகுப்புப் பாடப் புத்தகங்களை இணையத்தில் வழங்க முன்முயற்சி எடுத்துள்ளது. இத்துறை பின்வரும் பாடங்களுக்கான புத்தகங்களை ஆன்லைனில் கிடைக்கும்படி செய்திருக்கிறது.

அறிவியல், ஹிந்தி, ஆங்கிலம், கன்னடம், கணிதம், உயிரியல், சமூக அறிவியல், சமஸ்கிருதம், மராத்தி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது. இந்தப் பத்தாம் வகுப்பு பாடப் புத்தகங்கள் அனைத்து மொழிகளிலும் கிடைக்கின்றன. அதாவது, கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, தெலுங்கு, உருது மற்றும் தமிழ். இந்த அனைத்துப் புத்தகங்களும் பி.டி.எப் வடிவில் தரப்பட்டுள்ளன


ரய்தா மித்ரா விவசாயத் துறை

கர்நாடக அரசின் ரய்தா மித்ரா வலையகம், சிறந்த முறையில் வேளாண்மை செய்வதற்காக விவசாயிகளுக்குத் தின அடிப்படையில் குறிப்புகள், தகவல்கள் மற்றும் அறிக்கைகளைத் தருகிறது.

மேலும் விவரங்களுக்கு : http://raitamitra.kar.nic.in

மாநிலம் முழுவதும் 745 ரைய்டா மித்ரா மையங்கள் மூலமாகத் தகவல்கள் இலவசமாகவே தரப்படுகின்றன.

சி.ஏ.எஸ்.சி.ஈ.டி.

கல்வித் துறைக்காக

‘சி.ஏ.எஸ்.சி.ஈ.டி 2003’ என்பது ஒரு மென்பொருள், தொழிற்கல்வி, கல்லூரியில் மருத்துவம், மற்றும் பொறியியல் துறை படிப்பிற்கான அட்மிஷன் செயல் முறைகளில் இது துணை புரிகிறது. இத்திட்டம், தொடர்ந்து பத்தாவது ஆண்டாக வெற்றிகரமாக நடைபெற்றுவருகிறது. சி.ஈ.டி.யின் வெற்றி, இதைப் பிற பட்டப் படிப்புகளான டிப்ளமோ இன்ஜினீயரிங், நர்ஸஸ், ஆயுர்வேதிக், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான கவுன்சலிங் மற்றும் அட்மிஷனுக்கும் உதவி செய்யும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. இது ரேங்குகளைத் தயாரிப்பதில் வெளிப்படையான தன்மையைக் கொண்டிருப்பதுடன் இருக்கைகள் ஒதுக்குவதையும் எளிதாக்குகிறது.

சிறப்பம்சங்கள்

  • விடைத்தாள்களைக் கணினிமயமாக்கப்பட்ட முறையில் திருத்தம் செய்தல்.
  • மேட்ரிக்ஸ் டிஸ்பிளே போர்டில் தகுதிப் பட்டியலை அறிவித்தல் மற்றும் இருக்கைகளை ஒதுக்குதல்.
  • பயோ - மெட்ரிக் மூலம் அனுமதி வழங்குதல்
  • நுழைவுத் தேர்வுகளுக்கு வலைதளத்தைப் பயன்படுத்தும்படியான பதிவுகள்
  • விடைப் புத்தக மதிப்பின்படியும், உண்மையான விடையின் படியுமான ஒப்பீட்டு அறிக்கை.
  • தேர்வில் தகுதி பெறுவதற்கும் சி.ஏ.எஸ்.சி.ஈ.டிற்கும் இடையே உள்ள செயல் திறன் ஒப்பீடு.

மேலும் விவரங்களுக்கு: http://cet.kar.nic.in

இணைய ஆவணக் காப்பகம்

ஆவணக் காப்பகத் துறைக்காக

இணைய ஆவணக் காப்பகம் ஒரு வலைதளத்தைப் பயன்படுத்தும்படியான கேட்டலாக் மென்பொருள். ஐந்து லட்சம் ஆவணங்களுக்கான, றிலீஷீஸீமீtவீநீ தேடல் (ஒலியியல் தேடல்) உட்பட, சக்தி வாய்ந்த தேடுபொறி (சர்ச் இன்ஜின்) கொண்டது. 17ஆம் நூற்றாண்டிலிருந்து இருக்கக்கூடிய மதிப்பு வாய்ந்த ஆவணங்களைக் கொண்டிருக்கும் பண்டகச் சாலையை அணுகுவதற்காக, இந்த மென்பொருள் ஆவணக் காப்பகத் துறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வலைதளம் கன்னடம் மற்றும் அதன் கலாச்சாரம் பற்றிய முழுத் தகவலைத் தருகிறது. மாநில ஆவணக் காப்பகம், கர்நாடக நிலவியல் செய்திகளைக் குறிக்கும் அகராதி, தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் மியூசியங்கள், மரபு மற்றும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் போன்றவற்றை ஆங்கிலம், கன்னடம் என இரண்டிலும் தருகிறது.

மேலும் விபரங்களுக்கு http://kannadasiri.kar.nic.in

கடைசியாக மாற்றப்பட்டது : 5/27/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate