பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / மின்னணு பணப்பரிமாற்றம் / *99# என்ற புதுமையான பணப்பரிமாற்ற முறை
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

*99# என்ற புதுமையான பணப்பரிமாற்ற முறை

*99# என்ற புதுமையான பணப்பரிமாற்ற முறை பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

இந்திய தேசியப் பணம் வழங்கு கழகம் கட்டனமாக்கப்படாத துணைநிலை சேவைத்தரவு (USSD) மூலமாகச் செயல்படும் *99# என்ற புதுமையான சேவையை உருவாக்கியுள்ளது.  கைபேசிகள் மூலமான வங்கிச்சேவையின் ஆற்றலை அறிந்து, வங்கிச் சேவைகள் போதிய அளவில் கிடைக்காத மக்களுக்கு உடனடியாக குறைந்த மதிப்புடைய பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ள இந்தச் சேவை உருவாக்கப்பட்டுள்ளது.

வங்கியின் வாடிக்கையாளர்கள், தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் அனைத்தும் பொதுவாக உருவாக்கியுள்ள *99# என்ற குறியீடு / எண்களைத் தனது கைபேசிகளில் டயல் செய்து, வங்கிச் சேவைகளபப் பெறலாம். ஒரு வங்கியின் கணக்கில் இருந்து இன்னொரு வங்கியின் கணக்கிற்குப் பணம் அனுப்புதல், கணக்கில் இருப்பில் உள்ள தொகையை அறிதல், சிறுவிவரப்பட்டியல் (மினி ஸ்டேட்மெண்ட்) உள்ளிட்ட பல சேவைகளை இதன்மூலம் பெறலாம். தற்போது 55க்கும் மேற்பட்ட முன்னணி வங்கிகள் இந்தச் சேவையை வழங்குகின்றன.  ஆங்கிலம், இந்தி மற்றும் வேறு பல இந்திய மொழிகளிலும் இந்தச் சேவை கிடைக்கிறது.  சாதாரண கைபேசியிலும் இந்த வசதியைப் பெறமுடியும்.

படம் : இந்திய ரிசர்வ் வங்கி

*99# என்ற கைபேசி செயலியின் சிறப்பு அம்சங்கள்

 • இதனைச் செயல்படுத்த டேட்டா அல்லது இணையதளத் தொடர்பு தேவையில்லை
 • இருப்பில் உள்ள தொகையை அறிதல், பணம் அனுப்புதல், Mpin மாற்றுதல் போன்ற காரியங்களைச் செய்யலாம்.
 • ஆதார் எண்ணுடன் இணைந்த மிகைப்பற்று (Overdraft), பிரதமரின் ஜன்தன் யோஜனா கணக்கில் மிகைப் பற்று ஆகியவற்றைச் சரிபார்த்துக கொள்ளலாம்.
 • விடுமுறை நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்படுத்தலாம்
 • *99#என்ற பொதுவான குறியீடு மூலம் எளிதாக அணுகமுடிகிறது.
 • GSM சேவை வழங்குகிற அனைத்து நிறுவனங்களிலும் எல்லா விதமான கைபேசிகளிலும் இந்த வசதியைப் பெற முடிகிறது.
 • அனைவருக்குமான வங்கிச் சேவை என்ற  இலக்கினை நோக்கிய கூடுதல் வழியாக இது முடிகிறது.
 • கிராமப்புற மக்களும் பயன்பெறும் விதமாக, BC மைக்ரோ ஏடிஎம் மூலமாகவும் இந்தச்சேவை வழங்கப்படுகிறது.
 • பல்வேறு மொழிகளிலும் இந்தச் சேவை கிடைக்கிறது.

*99# சேவைகள்

பணம் அல்லாத பரிமாற்றங்கள்

 • இருப்புத் தொகையை அறிதல்: தன்னுடைய கைபேசி எண்ணுடன் இணைக்கப் பட்டுள்ள வங்கிக் கணக்கில் இருப்புத் தொகையை தெரிந்து கொள்ளலாம்.
 • மினி ஸ்டேட்மெண்ட் : கைபேசி இணைப்புப் பெற்றுள்ள வங்கிக் கணக்கில் சிறிய அளவிலான பரிமாற்ற விவரங்களை (Mini Statement) பார்க்கலாம்.
 • MMID தெரிதல் : மொபைல் பேங்கிங் என்ற கைபேசி வங்கிச் சேவையைப் பெறுவதற்காக வங்கியில் பதிவு செய்த போது வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட MMID  (Mobile Money Identifier) தெரிந்து கொள்ளலாம்.
 • MPIN உருவாக்குதல் :- வாடிக்கையாளர் தனது கைபேசி மூலமாகப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது பயன்படுத்தியாக வேண்டிய சந்தேக எண்ணாகிய MPIN  என்ற மொபைல் பின் நம்பரைத் தானே ஒருவாக்கி  கொள்ளலாம்.
 • MPIN  மாற்றுதல் : MPIN  என்பது ஒரு கடவுச் சொல் போன்றதால் அடிக்கடி மாற்றிக் கொள்ள வேண்டும்.  அதனையும் இந்தச் சேவை மூலம் மாற்றிக் கொள்ளமுடியும்.
 • ஒற்றை முறை கடவுச்சொல் (DTP) உருவாக்குதல் : வாடிக்கையாளர் தமது கைபேசி மூலம் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளுக்குக் கூடுதல் பாதுகாப்பாக ஒற்றைமுறை கடவுச் சொல்லைப் பயன்படுத்தலாம். அத்தகைய கடவுச் சொல்லை இந்தச் சேவையில் பெறலாம்.

பணம் சம்பந்தப்பட்ட பரிமாற்றங்கள்

 • கைபேசி எண் மற்றும் MMID மூலமான பண மாற்றம் : யாருக்குப் பணம் அனுப்புகிறோமோ அவருடைய கைபேசி எண்ணையும் நமது MMID ஐயும் பயன்படுத்திப் பணம் அனுப்பலாம்.
 • யாருக்கு பணம் அனுப்பிகிறோமோ அவருடைய வங்கிக்கிளையின் IFSC மற்றும் பெறுகிறவரின் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி அவருக்குப் பணம் அனுப்பலாம்.

பரிவர்த்தனைகள்

கைபேசியின் மூலம் வங்கிக்கணக்கில் இருப்பை அறிதல்

 • கைபேசியில் *99# என்பதை டயல் செய்க
 • கைபேசியில் வரவேற்புத்திரை வந்து உங்கள் வங்கியின் மூன்று எழுத்துக்களால் ஆன சுருக்கமான பெயர் அல்லது IFSC எண் மூலம் எழுத்துக்களைப் பதியுமாறு சொல்லும்.
 • சரியான விவரங்களைப் பதிந்து பின்னர் அடுத்ததாக எட்டு “ஆப்ஷன்கள்” திரையில் தெரியும்.  அவை (1) இருப்பை அறிதல் (Balance enquiry) (2) மினி ஸ்டேட்மெண்ட் (3) பணம் அனுப்புதல் (MMID) (Fund transfer MMID) (4) வங்கிக் கணக்கு எண் மூலம் பணம் அனுப்புதல்  (Fund Transfer – Account No) (5) ஆதார் மூலம் பணம் அனுப்புதல் (Fund transfer – AADHAR) (6)  MMID அறிதல் (Know MMID (7) M-pin மாற்றுதல் (Change – pin) (8) ஒற்றை முறை கடவுச் சொல் உருவாக்குதல் (Generate Otp) இந்த எட்டு ஆப்ஷன்களில் வாடிக்கையாளர் தமக்கு வேண்டியதைத் தெரிவு செய்தால் விவரங்கள் திரையில் வரும்.
 • உதாரணமாக இருப்பு அறிய கீழ்க்கண்டவாறு அடுத்தடுத்துத் திரைகளில் வரும்.

மினி ஸ்டேட்மெண்ட்

மினி ஸ்டேட்மெண்ட் பெற ஆப்ஷன் 2 ஐத் தெரிவு செய்யவேண்டும்.  இதற்கான வழிமுறை

MMID அறிய

MMID அறிய வேண்டுமானால் ஆப்ஷன் 6 ஐ த் தொட / அழுத்த வேண்டும் இதற்கான வழிமுறை கீழ்க்கண்டவாறு இருக்கும்.

Mpin உருவாக்குதல்

Mpin உருவாக்க ஆப்ஷன் 7 ஐத் தெரிவு செய்யவேண்டும்.  அதன்பிறகு திரையில் கேட்கப்படும் பற்று அட்டையின் (ATM CARD) கடைசி ஆறு இலக்கங்களையும் CVV எண்ணையும் பதிவிடவேண்டும். பின்னர் உங்களுக்கு விருப்பமான நான்கு இலக்க எண்ணைப் பதிவிட்டால் வெற்றிகரமாக Mpin உருவாக்கப்பட்ட செய்தி திரையில் காட்டப்படும். இதற்கான வழிமுறைகள்:

MPIN மாற்றுதல்

வாடிக்கையாளர்கள் *99# சேவையின் மூலமாகத் தனது MPIN ஐயும் மாற்றிக்கொள்ள முடியும்.  அவர்களுடைய வங்கி சேவைகளுக்கான கூடுதல் பாதுகாப்பாக இது அமையும். இதற்கு ஆப்ஷன் 7 ஐத் தெரிவு செய்துபின்னர் பழைய MPIN ஐப் பதிவிடவும். அடுத்து புதிய MPIN -ஐப்பதிவு செய்து, மீண்டும் அந்த எண்களைப் பதித்து உறுதிப்படுத்த வேண்டும். வெற்றிகரமாக MPIN மாற்றப்பட்ட தகவல் திரையில் தெரியும். இதற்கான வழிமுறை:

கடவுச் சொல் (OTP) உருவாக்குதல்

ஒற்றை முறை கடவுச் சொல் (OTP) உருவாக்கும் வசதியும் இதில் உள்ளது.  இந்தக் கடவுச் சொல்லை வெவ்வேறு பரிவர்த்தனைகளுக்கு இரண்டாவது உத்தரவாதமாக பயன்படுத்தலாம். OTP ஐ உருவாக்குவதற்கு ஆப்ஷன் 8 ஐத் தெரிவு செய்ய வேண்டும். அடுத்து Mpin ஐப் பதிவிட வேண்டும். OTP உருவாக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் செய்தி திரையில் தெரியும். இதற்கான வழிமுறை கீழ்க்கண்டவாறு அமையும்.

கைபேசி எண் மற்றும் MMID ஆகியவற்றின் மூலமாகப் பணம் அனுப்புதல்

 • *99# என்பதை டயல் செய்யயும்
 • வங்கியின் மூன்றெழுத்து சுருக்கப்பெயர் அல்லது IFSCன் முதல் நான்கு எழுத்துக்களைப் பதிவிடவும்
 • ஆப்ஷன் 3 ஐத் தெரிவு செய்யவும்
 • பணம் பெறுபவரின் கைபேசி எண், MMID தொகை ஆகியவற்றைப் பதிவிடவும்.
 • குறிப்புகள் (தேவைப்பட்டால்) என்று திரையில் தெரியும்
 • Mpin ஐப்பதியவும் ; வங்கிக்கணக்கின் கடைசி நான்கு இலக்கங்களையும் நீங்கள் விரும்பினால் பதியலாம்.
 • பணம் அனுப்பப்பட்ட விவரம் திரையில் தெரியும்
 • இதற்கான வழிமுறைக் கீழ்க்கண்டவாறு இருக்கும்

வங்கிக் கணக்கு எண் மற்றும் IFSC எண் மூலமாக பணம் அனுப்புதல்.

 • கைபேசியில் *99# டயல் செய்க
 • வங்கியின் மூன்றெழுத்துச் சுருக்கப்பெயர் அல்லது IFSC ன் முதல் நான்கு எடுத்துக்களை பதிவிடவும்.
 • ஆப்ஷன் 4 ஐத் தெரிவு செய்யவும்
 • பணம் பெறுபவரின் கணக்கு எண் அவருடைய வங்கிக் கிளையின் IFSC, பணம் ஆகியவற்றைப் பதிவிடவும்.
 • அடுத்துத்திரையில் குறிப்புகள் என்று தெரியும்
 • Mpin ஐப் பதியவும். நீங்கள் விரும்பினால் உங்கள் வங்கிக் கணக்கின் கடைசி நான்கு இலக்கங்களையும் பதியலாம்.
 • பணம் அனுப்பப்பட்ட விவரம் திரையில் தெரியும்
 • இதற்கான வழிமுறை வருமாறு.

ஆதார் எண்ணைப் பயனபடுத்திப் பணம் அனுப்புதல்

 • பைபேசியில் *99# டயல் செய்யவும்
 • வங்கியின் மூன்றெழுத்து சுருக்கப்பெயர் அல்லது IFSC ன் முதல் நான்கு எழுத்துக்களைப் பதிவிடவும்.
 • ஆப்ஷன் 5 ஐத் தெரிவு செய்யவும்
 • பணம் பெறுபவரின் ஆதார் எண்ணைப் பதியவும்
 • எவ்வளவு பணம் அனுப்பப்படுகிறது என்றும் குறிப்புகள் இருந்தால் அதையும் பதியவும். (எடுத்துக்காட்டு : வீட்டு வாடகைக்கு ரூ.500)
 • Mpin ஐப் பதியவும்
 • பணம் அனுப்பப்பட்ட விவரம் திரையில் தெரியும்

இதற்கான வழிமுறை வருமாறு

ஆதாரம் : இந்திய தேசியப் பணம் வழங்கு கழகம்

2.9
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top