பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

உடனடி பணப்பரிமாற்ற முறை

உடனடி பணப்பரிமாற்ற முறை பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

ஒருங்கிணைந்த பணம் செலுத்து ஊடுமுகம் (Unified Payments Interface UPI) என்பது பலவங்கிகளின் கணக்குகளையும் ஒரே ஒரு கைப்பேசி செயலி (Mobile App) மூலம் இயக்குவதாகும். வங்கிகள் வழங்கும் பலவித சேவைகளையும், பணப்பரிமாற்றத்தையும் இதன் மூலம் செய்து விடலாம்.

நம் நாட்டில் அனைத்து விதமான வங்கி மூலமான பணம் வழங்குதல்களுக்கு மையமான ஒருங்கிணைந்த அமைப்பாக தேசிய பணம் வழங்கும் கழகம் (National Payments Corporation of India NPCI) செயல்படுகிறது. இந்தக்கழகம் – ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவதற்கான புதிய தீர்வு முறையாக ஒருங்கிணைந்த பணம் செலுத்த ஊடுமுகத்தை உருவாக்கியுள்ளது. நம் நாட்டில் ஸ்மார்ட் கைப்பேசியையும், மொபைல் இணையதளவசதியையும் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வேகமாகப் பெருகி வருகின்ற சூழலில் இந்தப்புதிய தீர்வு மக்களுக்குப் பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

ஒருங்கிணைந்த பணம் செலுத்து ஊடுமுகத்தின் தனிச்சிறப்புகள்

 • கைப்பேசி செயலிமூலமாக இரவு பகல் எந்நேரமும் எல்லாநாட்களிலும் உடனடியாகப் பணப்பரிமாற்றம் செய்யலாம்.
 • எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும் ஒரே ஒரு கைப்பேசி செயலி போதுமானது.
 • ஒற்றை கிளிக் ; இருகாரணி உறுதிப்படுத்தல் – பணப்பரிமாற்ற ஒழுங்கு முறை விதிகளுக்கு ஏற்பச் செயல்படுவதோடு, எவ்விதத் தடங்கலும் இன்றி ஒற்றை கிளிக் மூலம் பணம் செலுத்தி விடலாம்.
 • யாருக்குப்பணம் செலுத்தப்படுகிறதோ அவருடைய வங்கிக் கணக்கு எண். டெபிகார்ட் எண். IFSC குறியீடு போன்ற விபரங்களை பதிய வேண்டிய அவசியம் இல்லாமல், எளிதாகப் பணம் செலுத்தும் இழுவை – தள்ளுகை மூலம் கூடுதலான பாதுகாப்பு.
 • ஒரு கட்டணத்தை நண்பர்கள் பலரும் பகிர்ந்து கொண்டு செலுத்தும் வசதி
 • சாமான்கள் வீட்டில் தந்துவிட்டுப்பணம் பெற்றுக்கொள்கின்ற விற்பனையாளர்களிடம், சில்லரைத்தட்டுப்பாடு போன்ற தொல்லைகள் இன்றி, ATM ல் இருந்து பணம் எடுத்துவந்து செலுத்த வேண்டிய அவசியம் இன்றி, எளிதாக இந்த செயலிமூலம் பணம் செலுத்திவிடலாம்.
 • வியாபாரிகள் கடைகளுக்கு இதே முறையில் பணம் செலுத்திவிடலாம்.
 • உடனடியாக அல்லாமல் பின்னர் செலுத்துகின்ற கட்டணங்களை ((எ.டு) மின்கட்டணம், பள்ளிக்கட்டணம் போன்றவை) பின்தேதியிட்டு செலுத்துவதற்காக இப்போதே உரிய பதிவுகளைச் செய்து வைத்துவிடலாம்.
 • நன்கொடைகள், பிற பணப்பட்டுவாடா போன்றவற்றையும் எளிதாக மேற்கொள்ளலாம்.
 • பணம் செலுத்தியது / பரிமாற்றியது குறித்துப் புகார்கள் இருந்தாலும் அவற்றையும் இந்த கைப்பேசி செயலியின் மூலம் தெரிவிக்கும் வசதி.

பங்கேற்பாளர்கள்

 1. பணம் செலுத்தும் வங்கியாளர்
 2. பணம் பெறும் வங்கியாளர்
 3. தேசிய பணம் செலுத்தும் கழகம்
 4. வங்கியில் கணக்கு வைத்திருப்போர்
 5. வியாபாரிகள் / கடைகள் / நிறுவனங்கள்

பங்கேற்பாளர்களுக்கான நன்மைகள்

வங்கிகளுக்கு ஏற்படும் பயன்கள்

 1. ஒற்றை கிளிக் – இருகாரணி உறுதிப்படுத்தல்
 2. எல்லாவிதமான வங்கிச்சேவைக்கும் பயன்படுதல்
 3. தற்போதுள்ள வங்கி வசதிகளையே தக்கவாறு மாற்றிக் கொள்ள இயலுதல்
 4. பாதுகாப்பானது, நம்பிக்கையானது, புதுமையானது
 5. பிரத்யேக நபரே பணம் செலுத்துவதற்கு அடிப்படை ஆதல்
 6. தடங்கல் இல்லாத வாணிகப் பணப்பரிமாற்றம்

வாடிக்கையாளர் – தனிமனிதர்களுக்குப் பயன்கள்

 1. எந்நேரமும் எல்லா நாளும் கிடைக்கும் வசதி
 2. வெவ்வேறு வங்கிகளின் கணக்கையும் இயக்க ஒரே ஒரு செயலி
 3. மெய்நிகர் (Virtual) அடையாளத்தைப் பயன்படுத்துவதால் எவ்விதமான விவரங்களும், பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை.
 4. ஒற்றைக் கிளிக் மூலம் உறுதிப்படுத்துதல்
 5. புகார்கள் இருந்தால் கைப்பேசி செயலி மூலமே தெரிவிக்கும் வசதி

வணிகர்களுக்குப் பயன்கள்

 1. வாடிக்கையாளர்களிடம் இருந்து எவ்விதத்தடங்கலும் இன்றி நேரிடையாக பணம் வரவு பெற்றுக்கொள்ளும் வசதி
 2. கடன் / பற்று அட்டைகளில் உள்ளது போல வாடிக்கையாளர் விவரங்களைச் சேமித்து வைத்துக்கொள்ளும் அபாயம் இல்லை.
 3. கடன் அட்டை / பற்று அட்டை இல்லாதவர்களையும் வாடிக்கையாளர்களாகப் பெறமுடியும்.
 4. ஆன்லைன் வாணிகம் (இ- காமர்ஸ்) போன்றவற்றுக்கு உகந்தது)

பதிவு செய்வதற்கான நடைமுறைகள்

 • கைப்பேசி செயலி ஸ்டோரில் (Mobile app store) அல்லது வங்கியின் இணையதளத்தில் இருந்து UPI விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
 • தம்முடைய பெயர், மெய்நிகர் அடையாளம் (Virtual ID) கடவுச்சொல் போன்ற விவரங்களைத் தந்து தமது புரொபைல் உருவாக்க வேண்டும்.
 • வங்கிக்கணக்கை சேர் / இணண / நிர்வகி (add/link/manage Bank Account) என்ற இணைப்பைக் கிளிக் செய்து, வங்கி மற்றும் வங்கிக்கணக்கு எண்களை இணைத்துக்கொள்ள வேண்டும்.

M.PIN உருவாக்குதல்

எந்த வங்கிக் கணக்கில் இருந்து பரிமாற்றம் செய்ய விரும்புகிறோமோ அந்த வங்கிக் கணக்கை செலக்ட் செய்யவும்.

(a) Mobile Banking Registration? Generate MPIN அல்லது

(b) Change MPIN என்ற இரண்டில் ஏதேனும் ஒன்றைக் கிளக் செய்யவும்.

 • முதலாவதான Mobile Banking Registration – Generate PIN என்பதை கிளிக் செய்தால், ஒருமுறை மட்டும் பயன்படும் கடவுச்சொல் (OTP) அவருடைய பதிவுசெய்த கைபேசிக்கு வரும்
 • பின்னர் தமது பற்று அட்டையின் கடைசி ஆறு இலக்கங்களையும், அட்டையின் காலாவதியாகும் தேதியையும் பதியவும்.
 • தொடர்ந்து கடவுச்சொல்லையும் (OTP) தனக்கு விருப்பமான MPIN ஐயும், (தமது விருப்பமான இலக்கங்கள்) பதிய வேண்டும்.
 • அனுப்பு என்று (Submit) செய்த பிறகு, வெற்றிகரமாகப் பதியப்பட்டு விட்டதா இல்லையா என்று திரையில் விபரம் தெரிவிக்கப்படும். இரண்டாவதான Change MPIN என்பதை கிளிக்செய்தால், தனது தற்போதைய MPIN ஐயும், புதிதாகப் பெற்றுக்கொள்ள விரும்புகிற MPIN ஐயும் குறிப்பிட்டு அனுப்பினால், மாற்றப்பட்டு விட்டதா, இல்லையா என்ற விவரம் தெரியும்.

UPI பரிமாற்றம்

(அ) தள்ளுகை (PULL ) – பணம் அனுப்புதல்

 • UPI செயலிக்குள் செல்ல வேண்டும்
 • வெற்றிகரமாக லாக்-இன் செய்தபிறகு பணம் அனுப்பு / செலுத்து என்பதைக் கிளிக்செய்யவும்.
 • பணம் பெறுகிறவரின் மெய்நிகர் அடையாளம் (Virtual ID) குறிப்பிட்டு, எவ்வளவு தொகை என்பதையும் குறிப்பிடவேண்டும்.
 • அந்தப் பரிமாற்றத்தொகை விவரங்கள் திரையில் தெரிந்தும், உறுதிப்படுத்து என்பதை கிளிக் செய்யவும்.
 • பின்னர் தமது MPIN ஐப் பதியவும்
 • பணப்பரிமாற்றம் நிறைவேறியதா – இல்லையா என்ற விவரம் செய்தியாக வரும்.

(ஆ) இழுவை (PULL) பணம் பெறுதல்

 • தனது வங்கிக்கணக்கின் UPI செயலிக்குள் செல்க
 • வெற்றிகரமாக லாக்கின் செய்த பின்னர், பணம் பெறுக என்பதைத் தெரிவு செய்க
 • பணம் அனுப்புபவரின் மெய்நிகர் அடையாளத்தையும், தொகையையும், எந்தக்கணக்கில் வரவு வைக்கவேண்டும் என்ற விவரத்தையும் பதியவும்.
 • அந்த விவரங்கள் திரையில் தெரிந்த பின் உறுதிசெய்க
 • பணம் கேட்டது பற்றிய விவரம் அறிவிக்கையாகக் கிடைக்கப்பெறும். அந்த அறிக்கையில் கிளிக்செய்து, தனது வங்கியின் UPI செயலியைத் திறந்து பார்க்கவும்.
 • பணம் செலுத்துபவர் அதை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது மறுக்கலாம் ஏற்றுக்கொண்டால், தனது MPIN ஐ பதிவுசெய்து அந்தப்பரிமாற்றத்திற்கு அங்கீகாரம் அளிக்கலாம்.
 • பரிமாற்றம் முழுமையானதும், பணம் செலுத்தியவருக்கு அறிவிக்கைவரும்.
 • பணம் கேட்டவருக்குச் சம்பந்தப்பட்ட வங்கியில், இருந்து , அவர் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது பற்றிய குறுஞ்செய்தி வரும்.

ஆதாரம் : http://www.npci.org.in/

3.11764705882
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top