பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / மின்னணு பணப்பரிமாற்றம் / ஒருங்கிணைந்த பணம் செலுத்து ஊடுமுகம் / ஒருங்கிணைந்த பணம் செலுத்து ஊடுமுகம் (UPI) – மாதிரிப்பயண்பாடுகள் / எடுத்துக்காட்டுகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ஒருங்கிணைந்த பணம் செலுத்து ஊடுமுகம் (UPI) – மாதிரிப்பயண்பாடுகள் / எடுத்துக்காட்டுகள்

ஒருங்கிணைந்த பணம் செலுத்து ஊடுமுகம் (UPI) – மாதிரிப்பயண்பாடுகள் / எடுத்துக்காட்டுகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நம் நாட்டின் அனைத்துவிதமான வங்கி மூலமான பணம் வழங்குதல்களுக்கும் மையமான ஒருங்கிணைந்த அமைப்பான தேசிய பணம் வழங்கு கழகம் (NPCI), ஒருங்கிணைந்த பணம் செலுத்து ஊடுமுகம் (UPI) என்ற ஆன்லைன்மூலம் பணம் செலுத்துவதற்கான புதிய வசதி ஒன்றை உருவாக்கியுள்ளது. நம் நாட்டில் அதிக அளவில் மக்கள் ஸ்மார்ட் கைபேசிகளையும், மொபைல் இணையதள வசதியையும் பயன்படுத்தி வருகின்ற சூழலில், மக்களிடையே எவ்வித தடங்கலும் இல்லாமல் ரொக்கமாக அல்லாமல் பணப்பரிமாற்றம் நடப்பதற்கு இந்தப்புதிய வசதி பெரிதும் பயன்படும்.

ஒருங்கிணைந்த பணம் செலுத்து ஊடுமுகம் (UPI)

மக்கள் தமது கைபேசி மூலமாகப் பணப்பரிவர்த்தனை செய்ய இது உதவுகிறது. பணத்தை அனுப்பவும் பெறவும் ஒற்றை கிளிக் மற்றும் இருகாரணி உறுதிப்படுத்தல் மூலம் இது செயல்படுகிறது. இதன்மூலம் மற்றவர்களுக்கு பணம் செலுத்துதலாம், மற்றவர்களிடம் இருந்து பணம் பெறலாம். ஆன்லைனில் வாங்கிய பொருள்கள் வீடுதேடி வரும்போதும், மின்கட்டணம் போன்ற பயன்பாட்டுக் கட்டணங்களைச் செலுத்தவும், பார்கோடு மூலம் ஸ்கேன் செய்து செலுத்தவும், நன்கொடைகள் பள்ளிக்கட்டணம் போன்றவற்றைச் செலுத்தவும் இந்த UPI உதவும்.

நவீன வசதி கொண்ட UPI, எல்லா நாட்களிலும் எந்நேரமும் (24*7*365) பணப் பரிமாற்றத்திற்கு உதவுகிறது. வங்கியின் வாடிக்கையாளர் ஒருவரை, மின்னஞ்சல் போன்ற ஒரு மெய்நிகர் முகவரி மூலம் இனம்காண இது உதவுகிறது. பல்வேறு வங்கிகளில் ஒருவர் பலவிதமான கணக்குகளை வைத்திருந்தாலும் ஒவ்வொரு கணக்கிற்கும் பிரத்யேக மெய்நிகர் முகவரியை அவர் உருவாக்கிக் கொள்ளலாம். பணப்பரிமாற்றம் செய்பவரின் தனிப்பட்ட விவரங்கள் ரகசியமாக காக்கப்படுவதற்காக, அவருடைய வங்கிக் கணக்கைத் தவிர மற்ற இடங்களில், பணப்பரிமாற்றத்திற்கு அவர் எவ்வித விவரத்தையும் தரவேண்டியதில்லை. எனவே மெய்நிகர் முகவரியை (Financial address) அவர் தயக்கமின்றி பணப்பரிமாற்றத்திற்காக மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். அல்லது பெயருக்கு பதிலாக, தனது கைபேசி எண்ணை (எடு) 1234567890@sbi என்பது போல மாற்றி வைத்துக் கொள்ளலாம்.

பயன்பாட்டு உதாரணங்கள்:

UPI மூலம் பணப்பரிமாற்றத்தைப் பணம் செலுத்துபவர் அல்லது பணம் பெறுபவர் எவர் வேண்டுமானலும் நடவடிக்கையைத் தொடங்கலாம். பணம் பெற்றுக் கொள்பவர் நடவடிக்கையைத் தொடங்கும்போது NPCI மூலமாக பணம் செலுத்துபவரின் ஒப்புதலுக்காக வரும். எனினும், பணம் செலுத்துபவரை உடனடியாக இணைப்பில் கொண்டு வர இயலுகின்றபோது, பணம் பெறுகிறவர், பணம் கேட்டுக் கோரிக்கையை அனுப்பினால், அவரது அடையாளங்களை உறுதி செய்துக்கொண்டு பணம் செலுத்துபவர் உடனடியாக ஒப்புதல் கொடுத்து விடலாம்.

எடுத்துக்காட்டு 1 : செயல்மூலம் ஒரே செல்பேசிக்குள் பரிவர்த்தனை

 • அசோக் என்ற மாணவர், தன்னுடைய ஆண்ட்ராய்ட் கைபேசியில், ஆன்-டிமாண்ட் திரைப்படம் பார்க்கும் வீடியோ செயலியை (my star) பயன்படுத்துகிறார்.
 • அவர் Di வங்கியில் கணக்கு வைத்துள்ளார்; அந்த வங்கியின் கைபேசி செயலியைப் பயன்படுத்துகிறார். அந்தச் செயலி UPIயின் சிறப்பு அம்சங்களைக் கொண்டது.
 • My star செயலிமூலம் ரூ25க்கு அசோக் படம் பார்க்க விரும்புகிறார். அவருடைய my star செயலி UPI பணம் செலுத்துவதற்கான எல்லா அம்சங்களையும் உருவாக்குகிறது.
 • Di வங்கியின் PSP செயலி UPI இணைப்பைக் கவனிக்கிறவாறு பதிவு செய்யப்பட்டுள்ளதால், அசோக் நேரடியாக எல்லா விவரங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள பணம் செலுத்தும் திரையைக் காட்டுகிறது. திரையில் தெரியும் விவரங்களைச் சரிபார்த்த பின்னர் அசோக் பணம் செலுத்துவதை உறுதிப்படுத்துகிறார்.

எடுத்துக்காட்டு 2 : வீட்டில் இருந்து DTH கட்டணம் செலுத்துதல்

 • நதீம் என்பவர் DTH சேவையைப் பெற்று குறிப்பிட்ட ஒரு அலைவரிசைக்கான சந்தாத் தொகையை தன் வீட்டில் இருந்து செலுத்த விரும்புகிறார்.
 • எந்த டிவி அலை வரிசை என்று தெரிவு செய்து “buy now” என்பதில் கிளிக் செய்கிறார்.
 • DTHல் விவரங்களோடு UPI கட்டணத்திற்கான QR கோடு தோன்றுகிறது.
 • நதீம் தனது கைபேசியில் UPI செயலியைத் திறந்து, தொலைக்காட்சியில் தெரியும் QR கோடை ஸ்கேன் செய்கிறார்.
 • கட்டணம் செலுத்தும் திரைக்கு UPI அவரை இட்டுச் செல்கிறது. அங்கே எல்லா விவரங்களும் பூர்த்தியாக உள்ளன.
 • அவர் திரையில் தெரியும் விவரங்களைச் சரிபார்த்துவிட்டுக் கட்டணத்தைச் செலுத்துகிறார்.
 • தன்னுடைய கைபேசியில் உறுதிப்படுத்தும் செய்தி கிடைக்கிறது. தொலைக்காட்சித் திரையும், அவர் கட்டணம் செலுத்திய அலைவரிசைக்கு மாறிக்கொள்கிறது.

நடைமுறைப்படுத்தலுக்கான எடுத்திக்காட்டு

ஹைப்பர்லிங்க்

ஒருவர் தனது கைபேசியின் மூலமாக இ.வாணிக வலைத்தளத்திற்குச் சென்று ஏதேனும் சாமான் வாங்குகிறார். உடனே அந்த வலைத்தளம் ஓர் இணைப்பை உருவாக்கும். அதை கிளிக் செய்வதன் மூலம், பணம் செலுத்திவிட முடியும். பணம் பெறுகிறவரின் விவரங்கள், பணப்பரிமாற்றம் பற்றிய குறிப்பு, செலுத்த வேண்டிய பணம் ஆகியவை அங்கே தெரியும்.

எடுத்துக்காட்டு

upi://paypa=zeeshan@npci&pn=Zeeshan%Khan&mc=0000&tid=cxnkjcnkjdfdvjndkjfvn&tr=4894398 cndhcd23&tn=Pay%to%rohit%stores&am=1010&cu=INR&refUrl=https://rohit.com/orderid=9298yw 89e8973e87389e78923ue892

இந்த இணைப்பைத் தனது கைப்பேசியில் கிளிக் செய்தவுடன், உள்ளூர் PSP செயலியை அது தூண்டிவிடும் விவரங்களை உறுதி செய்த்தும் பணப் பரிமாற்றம் முழுமையாகிவிடும்.

எளிய வடிவமைப்பு, ஹைப்பர் லிங்க் கூடிய பயன்படுத்துவோரின் பரிச்சயம், எளிதாகப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றால், இதுபோன்ற இணைப்புகளை உருவாக்கு மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் போன்ற பல்வேறு தகவல் தொடர்பு தளங்களில் பகிர்ந்து கொள்ளலாம்.

QR கோடு

வெண்மைப் பின்னணியில் ஒரு சதுரத்திற்குள் கறுப்பு நிறத்தில் பல வடிவங்கள் கொண்டிருப்பது QR கோடு ஆகும். எண்கள் (Numeric) எண்ணும் எழுத்தும் (alpha numeric) பைட் / பைனரி (bite / binary) கஞ்சி (Kanji) என்ற நான்கு விதங்களில் தரவுகள் புதிர் வடிவமாக்கப்பட்டிருக்கும்.

UPI மூலமாக அருகில் உள்ளவரிடம் பணம் செலுத்துவது எளிது. எனவே நேரடி வாணிகப் பணப் பரிமாற்றத்திற்கு QR கோடு உருவாக்கிக் கொள்வது வசதியாக இருக்கும்.

படம் : இந்திய ரிசர்வ் வங்கி

ஆதாரம் : http://www.npci.org.in/

2.9375
Murthy Dec 08, 2016 10:43 AM

Good.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top