பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பணத்திற்கான பாரத ஊடுமுகம் (பீம்)

பணத்திற்கான பாரத ஊடுமுகம் (பீம்) Bharath Interface for Money (BHIM) செயலியை பயன்படுத்தும் முறை பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

பணத்திற்கான பாரத ஊடுமுகம் (பீம்) - Bharath Interface for Money (BHIM)

மக்களின் கைபேசி மூலமாக துரிதமாகவும், பாதுகாப்பகவும் நம்பகமான முறையிலும் ரொக்கமில்லாத பரிவர்த்தனைகளை நடத்துவதற்கான ஏற்பாடே பீம் (பணத்திற்கான பாரத ஊடுமுகம்) ஆகும்.  ஒருங்கிணைந்த பணம் வழங்கு ஊடுமுகம் மூலமாக வங்கிகளிடமிருந்து நேரிடையாக மின்னனு பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுகிறது பீம். பிற ஒன்றிணைந்த ஊடுமுகங்கள் மற்றும் வங்கிக்கணக்குகளுடன் கலந்து செயல்படக்கூடியது அது. வங்கிக்கணக்கு வைத்துள்ள இருதரப்பினரிடையே உடனடியாக மின்னணு பரிவர்த்தனையை பீம் நடத்திவரகிறது. இந்திய தேசிய பணவழங்கு கழகமே பீம் - ஐ உருவாக்கியுள்ளது.

பீம் செயல்படத் தேவையானவை

 1. இனணயத் தொடர்பு கூடிய ஸ்மார்ட் கைபேசி
 2. இந்தியாவில் ஏதேனும் ஒரு வங்கியில் கணக்கு
 3. வங்கிக் கணக்குடன் கைபேசி எண் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் சேர்க்கபடாவிட்டால் வங்கிக்கிளைக்குச் சென்று விவரத்தை கூறி சேர்த்துக்கொள்ளலாம்.
 4. வங்கிக்கணக்கு ஒன்றிணைத்த பணம் செலுத்து ஊடுமுகம் (Upi) செயல்படுவதாய் இருக்க வேண்டும். அல்லது பற்று அட்டை வேண்டும்.

பீம் முலமாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள்

 • பணம் செலுத்து முகவரி மூலமாகப் பணம் கேட்கலாம் அல்லது அனுப்பலாம்.
 • ஆதார் எண்ணுக்குப் பணம் அனுப்பலாம்
 • கைபேசி எண்ணுக்குப் பணம் அனுப்பலாம் அல்லது கேட்கலாம்.
 • MMID மற்றும் கைபேசி மூலமாக பணம் அணுப்பலாம்.
 • IFSC குறியீடு வங்கிக் கணக்கு எண் மூலமாக பணம் அனுப்பலாம்.
 • வியாபார நறுவனங்களுக்குப் பணம் செலுத்த ஸ்கேன் வசதியையும் பயன்படுத்தலாம்.

பீம் செயலியை (BHIM App) செயல்படுத்தும் வழி

 1. ஆண்ட்ராய்டு கைபேசிகளில் பீம் செயலியைப் பதிவறக்கவும்.  தற்போது ஆண்ட்ராய்ட் (4.1.1 மாடல்) கைபேசிகளில் மட்டும் பதிவிறக்கம் செய்யலாம். விரைவிலேயே மற்ற இயங்கு தளங்களிலும் பதிவிறக்க வசதி செய்யப்படும்.  தற்போது ஆங்கிலம் இந்தி ஆகிய இருமொழிகளில் இது செயல்படுகிறது.  விரைவிலேயே மற்ற மொழிகளிலும் பீம் செயலி செயல்படும்.
 2. உங்கள் கைபேசி எண் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்க பீம் செய்லி ஒரு குறுந்தகவலை உங்கள் கைபேசிக்கு அனுப்பும். கைபேசியின் குறுஞ்செய்தியை அணுக அந்த செயலிக்கு அனுமதிதரவும்.
 3. உங்களது UPI PIN ஐ உருவாக்குவது: பீம் செயலியைப்பதிவு செய்யும்போது நீங்கள் உருவாக்கிக் கொள்கிற நான்கு முதல் ஆறு இலக்கம் வரையுள்ள ரகசியக் குறியீடே Upi pin ஆகும்.  பீம் மூலமான உங்களது எல்லாப் பரிவர்த்தனைகளுக்கும் இந்த UPI PIN – ஐக் கட்டாயம் பயன்படுத்தியாக வேண்டும். மெயின் மெனுவில் வங்கிக் கணக்கு UPI PIN - ஐ உருவாக்கு என்ற தொடர்பில் இந்த ரகசியக் குறியீடை உருவாக்கிக் கொள்ளலாம்.  உங்களுடைய பற்று அட்டை / கடன் அட்டையின் கடைசி ஆறு இலக்கங்களையும் அட்டையின் காலாவதி தேதியையும் பதிவிடுமாறு செயலி அறிவுறுத்தும்.  அதற்குப்பின்னர் ஒருமுறை மட்டும் பயன்படும் கடவுச் சொல் கைபேசிக்கு வரும்.  அதனைப் பதிவிட்டால் UPI PIN ஐ உருவாக்கி விடலாம். வேறு ஒன்றிணைத்த பணம் வழங்கு ஊடுமுகச் சேவைக்கு UPI PIN - ஐ ஏற்கனவே உருவாக்கி இருந்தால் அதனையே பீம் செயலிக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

குறிப்பு : வங்கிகள் தருகின்ற மொபைல் பின் (MPIN) என்பது வேறு.  UPI PIN என்பது வேறு.  UPI PIN - ஐ நாம் தான் உருவாக்கி கொள்ள வேண்டும். இந்த UPI PIN - ஐ யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. பீம் செயலி இதனைச் சேமித்து வைப்பதும் இல்லை.  வங்கியினரும் இந்த விவரங்களைக் கேட்க மாட்டார்கள்.

 1. உங்களது பணம் செலுத்து முகவரியை உருவாக்குதல் : ஒருவருடைய வங்கிக் கணக்கைக் குறிப்பிடும் பிரத்யேக முகவரியே பணம் செலுத்து முகவரி எனலாம். அதாவது, பீம் வாடிக்கையாளர்களுக்கு பணம் செலுத்து முகவரி என்பது XYZ@UPI என்பது போல இருக்கலாம். இந்த உருவாக்கப்பட்ட அடையாள முகவரியை மற்றவர்களிடம் சொன்னாலேயே (வங்கிக் கணக்கு விவரங்களைச் சொல்லாமல்) யாரிடம் இருந்தும் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் பெற்றுக் கொள்ளலாம். இதே போல மற்றவர்களின் பணம் செலுத்து முகவரியைப் பயன்படுத்தி அவர்களுடைய வங்கிக்கணக்குக்குப் பணம் அனுப்பலாம். இந்த மெய்நிகர் முகவரி (Virtual payment address Vpa) ஒன்றுக்குமேலும் ஏற்படுத்தி கொள்ளலாம்.
 2. வங்கிக்கணக்குடன் பீம் செயலி இணைக்கப்பட்டிருந்தால் மற்றவருடைய வங்கிக் கணக்கும் அவ்வாறு இணைக்கப்பட்டிருந்தால் கைபேசி எண் அல்லது பணம் செலுத்து முகவரி மூலமாக பணத்தை மின்னணுப் பரிமாற்றம் செய்யலாம்.  அவ்வாறு மற்றவர் கணக்கு பீம் செயலி மூலம் இணைக்கப்படாமல் இருந்தால் IFSC குறியீடு, வங்கிக்கணக்கு எண் அல்லது MMID மூலமாகப் பணம் அனுப்பலாம்.

எவ்வாறு அனுப்புவது?

 • பீம் செயலி திரையில் முதலில் பணம் அனுப்பு என்பதை செலக்ட் செய்யவும்
 • பணம் பெறுபவரின் கைபேசி எண் அல்லது மெய்நிகர் முகவரியை (பணம் செலுத்து முகவரியை) அல்லது அவரது ஆதார் எண்ணைப் பதிவிடவும்.
 • எவ்வளவு பணம் என்று பதிவிடவும்
 • உங்கள் வங்கிக் கணக்கு தேர்வாகும்
 • UPI PIN - ஐ பதிவிட்டு அனுப்புக என்பதை க்ளிக் செய்யவும்
 • இவ்வாறு பரிவர்த்தைனை முடிந்தவுடன் பீம் செயலியின் திரையில் வெற்றிகரமாகப் பணம் அனுப்பப்பட்டுவிட்டது என்று தெரியும். மேலும் வங்கியில் இருந்து ஒரு குறுந்தகவல்வரும்.  ஒரு மணி நேரத்திற்குள் பரிவர்த்தனை பற்றி எவ்விதத் தகவலும் வராவிட்டால் வங்கியின் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொள்ளவும்.
 • ஏற்கனவே நடத்திய பரிவர்த்தனைகள் இன்றும் முற்றுப்பெறாமல் உள்ள பரிவர்த்தனைகள் பற்றித் தெரிந்து கொள்ள Home திரைக்குச் சென்று பரிவர்த்தனை விவரங்கள் என்ற இணைப்பில் பார்க்கலாம்.

எவ்வாறு பணம் பெறுவது?

பீம் செயலிதிரையில் முதலில்

 • பணம் வேண்டு (Request Money) என்பதை செலக்ட்செய்யவும்
 • பணம் தருபவரின் கைபேசி எண் அல்லது மெய்நிகர் முகவரியை அல்லது ஆதார் எண்ணைப் பதியவும்
 • எவ்வளவு தொகை என்பதைப் பதியவும்
 • அனுப்பு என்பதைக் களிக் செய்யவும்
 • பணம் உங்களது வங்கிக் கணக்குக்கு வந்து சேரும் வரை இந்தப்பரிவர்த்தனை தொங்கலில் (pending) இருக்கும். வங்கிக் கணக்கிற்கு பணம் வந்தவுடன் அந்த விவரம் குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கப்படும்.

பணம் அனுப்பவும் பெறவும் Q.R. கோடைப் பயன்படுத்தலாம்.  அதற்கு செயலியின் Home திரையில் > profile> QR கோடைப் பெற கணக்கைத் தெரிவு செய்க என்ற இணைப்பைத் தொடரவும்.

ஆதாரம் : http://www.npci.org.in/

3.03225806452
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top