অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

மைக்ரோ ஏடிஎம்களின் பாதுகாப்பு

மைக்ரோ ஏடிஎம்களின் பாதுகாப்பு

மைக்ரோ ஏடிஎம் என்பது விற்பனை முனையக் கருவிகள் ஆகும். குறைந்த அளவிலான மின்சக்தியில் இயங்கும், GPRS என்ற இடம் சுட்டி முறை மூலம் வங்கிகளின் சர்வர்களுடன் இணைப்பு பெறும். இதனால் செயல்முறைச் செலவுகள் குறையும். வங்கி வசதிகள் இல்லாத கிராமப்புறங்களில் மக்களுக்கு வங்கிச்சேவைகளை வழங்க மைக்ரோ ஏடிஎம் உதவுகிறது. ஆதார் மூலமான பணம் வழங்கல் முறைகளில் இவை அதிகமாகப் பயன்படுகின்றன.

மைக்ரோ ஏடிஎம் வழங்கும் சேவைகள்

  • பணம் செலுத்துதல்
  • பணம் எடுத்தல்
  • மற்றவருக்குப் பணம் அனுப்புதல்
  • மிச்சம் இருக்கும் பணம் பற்றித் தெரிந்து கொள்ளுதல் மற்றும் சிறிய பரிமாற்ற விவரம் தருதல்.

மைக்ரோ ஏடிஎம்கள் கீழ்க்காணும் கூட்டுமுறைகளில் பரிமாற்றங்களை நடத்தத் துணைபுரியும். அவை:

  • ஆதார் + விரல்ரேகை
  • ஆதார் +  ஒருமுறை கடவுச்சொல்
  • காந்தப்புல அட்டை + விரல் ரேகை
  • காந்தப்புல அட்டை + ஒருமுறை கடவுச்சொல்
  • காந்தப்புல அட்டை + வங்கிக்கணக்குக் குறியீடு (PIN)

விவரத் தொகுப்புகளுக்கு அச்சுறுத்தல்

நினைவக விவரங்கள், இடம் மாறும் விவரங்கள், நிலையான விவரங்கள் என்ற மூன்று விதமான விவரத் தொகுப்புகளும் மைக்ரோ ஏடிஎம் – ல் இருந்து அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம்.

நினைவக விவரங்கள் என்பது ஊடுமுகப் புள்ளி (POINT OF INTERFACE) மூலமாக விற்பனை முனையக்கருவிகளுக்கு அட்டையின் பதிவுகளில் இருந்து வருபவையாகும்.

தாக்காளர் விற்பனை முனையக் கருவியை அணுகிவிட்டிருந்தால் நினைவக விவரங்களைக் களவு போகாமல் பாதுகாப்பது மிகமிகச் சிரமமாகும். பொதுவாகவே விற்பனை முனையக் கருவிகளின் உள்ளீட்டுத் தரவுகளின் நினைவகப் பதிவுகள் தெளிவான வார்த்தைகளில் இருப்பதால் தாக்ககாளர்களின் தகவல்களை எளிதாக திருடி விடுகிறார்கள். இந்த அபாயத்தைக் குறைக்க வேண்டுமானால், அட்டையின் தரவுகளை சந்தேக முறையில் பூட்டி வைத்ததாக வேண்டும். இதற்கென ஒரு முனையத்தில் இருந்து மற்றொரு முனையத்திற்கான பூட்டு முறை பயன்படலாம்.

மேலும் திரட்டி வழித்தல் முறையிலும் (Skimming) கடன் / பற்று அட்டைகளின் விவரத்தொகுப்புகள் மைக்ரோ ஏடிஎம்-ல் திருடப்படலாம். இதைத் தவிர வங்கியின் பணியாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் மோசடிப் பேர்வழிகளாலும் விவரங்கள் களவுபோகும். அந்த நபர் அட்டைகள் பழுதாகி உள்ளதா என்று பரிசோதிக்கும் படி வாடிக்கையாளரிடம் கூறுவார். அல்லது ஏடிஎம்-ல் பரிமாற்றம் செய்ய முயலும் வாடிக்கையாளரிடம் உதவுவதாகக் கூறியும் ஏ.டி.எம் பற்றி பரிச்சயம் இல்லாதவரிடமும் உதவி செய்வதாகச் சொல்லியும் விவரங்களைத் திருடிக் கொள்ளலாம்.

மைக்ரோ ஏடிஎம் – களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த சில யோசனைகள்

  • மைக்ரோ ஏடிஎம்-ஐப் பயன்படுத்தும் முன்பாக அட்டையைத் தேய்க்கும் அல்லது நுழைக்கும் இடத்தில் வேறு விநோதமான மின்னனு சாதனங்கள் இல்லையென்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.  இதனால் திரட்டி வழிக்கும் திருட்டில் இருந்து தப்பிக்கலாம்.
  • சந்தேக எண்ணை (pin) பதியும்போது மறைவாகப் பதிவிடவும்.  பரிமாற்றம் குறித்த துண்டுச்சிட்டுகள் அச்சாகிவரும் போது சரிபார்த்து விட்டுக் கிழித்துப்போட்டு விடவும்.
  • சந்தேக எண்ணை அவ்வப்போது மாற்றவும்.
  • வங்கியினர் அளிக்கும் உங்களுடைய கணக்கின் வரவு – செலவு விவரங்களை உன்னிப்பாகக் கவனிக்கவும்.  பிழையான வரவுசெலவு அல்லது அங்கீகரிக்கப்படாத பற்றுகள் பற்றி உடனடியாக வங்கியின் கவனத்திற்கு கொண்டு செல்லவும்.
  • கடன் அட்டையின் எண்போன்ற விவரங்கள் எழுதியுள்ள பட்டியலை கவனமாகப் பாதுகாக்கவும்
  • முகவரியில் மாற்றம் செய்தால் அது குறித்து கடன் / பற்று அட்டை வழங்கிய முகமைகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவும்.
  • வங்கியில் இருந்து பெறப்படும் கடன் / பற்று அட்டைகள் சேதம் அடைந்து இருந்தாலும் அல்லது உறை கிழிந்து இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டாம்.
  • கடன் பற்று அட்டைகளில் எந்த இடத்திலும் சந்தேக எண்ணை எழுதி வைக்காதீர்கள். கடன் அட்டை எண் அல்லது சந்தேக எண்ணை (pin) யாரிடமும் சொல்லாதீர்கள்.
  • வங்கியைச் சேர்ந்தவர் என்று சொன்னாலும் கூட யாரிடமும் அட்டைகளைக் கொடுக்க வேண்டாம்.
  • மைக்ரோ ஏடிஎம்களில் உதவி செய்வதாகக் கூறும் அன்னியர்கள் எவரையும் நம்பக் கூடாது.
  • வங்கிக்கணக்கு பற்றிய விவரங்களை அறிமுகம் இல்லாத /அங்கீகாரம் அற்ற நபர்களிடம் தெரிவிக்க கூடாது.
  • நீங்கள் மேற்கொள்ளாத பரிவர்த்தனை இருந்தாலும் அட்டைகள் தொலைந்து போனாலும் சேவை வழங்குவோர் அல்லது வங்கியாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.

ஆதாரம் : infosecawareness.in

கடைசியாக மாற்றப்பட்டது : 7/9/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate