பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / வங்கி மற்றும் தபால்துறை சேவை / இந்திய ரிசர்வ் வங்கி / அந்நியச் செலாவணி / அன்னியச் செலாவனி வணிகர்களுக்கும் முழுநேர பணம் மாற்றுபவர்களுக்குமான திட்டம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

அன்னியச் செலாவனி வணிகர்களுக்கும் முழுநேர பணம் மாற்றுபவர்களுக்குமான திட்டம்

அங்கீகரிக்கப்பட்ட அன்னியச் செலாவனி வணிகர்களுக்கும் முழுநேர பணம் மாற்றுபவர்களுக்குமான திட்டம் / கட்டுப்படுத்தப்பட்ட பணம் மாற்று நவடிக்கைகளை மேற்கொள்ளமுகவர்களையும் தனி உரிமைக் கிளைகளையும் நியமித்தல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

நாட்டிலுள்ள பணம் மாற்றும் வசதிகளை விரிவுபடுத்துவதன் மூலம் குடியிருப்போர் அல்லாத இந்தியர் உட்பட பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பணம் மாற்றுவதை எளிதாக்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இத் திட்டத்தின் மூலம் அனைத்து சுற்றுலா மையங்களிலும், பெரு நகரங்களிலும், விடுமுறை நாட்களிலும் வங்கிகள் மற்றும் முழு நேரப் பணம் மாற்றுபவர்கள் கூடுதலான வேலை நேரங்களில் செயல்பட வகை செய்யப்பட்டுள்ளது.

தற்போதுள்ள பணம் மாற்றும் வசதிகள்

அன்னிய நாட்டு பண நோட்டுகள், நாணயங்கள், பயணிகள் காசோலைகள், ஆகியவை தற்போது அங்கீகரிக்கப்பட்ட அன்னியச் செலாவணி வணிகர்கள் எனப்படும் வங்கிகள், முழுநேர பணம் மாற்றுபவர்கள் மற்றும் வரையறை செய்யப்பட்ட பணம் மாற்றுபவர்கள் ஆகியோர் மூலம் இந்திய ரூபாய்களாக மாற்றிக் கொள்ளப்படுகின்றன. குறிப்பிட்ட சிலரைத் தவிர வரையறை செய்யப்பட்ட பணம் மாற்றுபவர்களுக்கான உரிமம் புதிப்பிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்தி வைத்துள்ளது. முழுநேரப் பணம் மாற்றுபவர்கள் அன்னியச் செலாவனி வாங்கவும், விற்கவும் அனுமதிக்கப்படுபவர், வரையறுக்கப்பட்ட பணம் மாற்றுபவர்கள் இந்திய ரூபாய்க்கு ஈடாக இந்தியச் செலாவனி வாங்குவதற்கு மட்டும் அனுமதிக்கப்படுபவர்.

திட்டம்

இந்திய நாட்டுப் பண நோட்டுகள், நாணயங்கள், பயணிகள் காசோலைகளை இந்திய ரூபாயாக மாற்றும் பணியை, முழுநேரப் பணமாற்றுபவர்கள் முகவர்கள்/தனி உரிமைக் கிளைகள் ஆகியோரை நியமிப்பதன் மூலம் செய்து கொள்ளலாம் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவிக்கிறது. இக்கிளைகள்/முகவர்கள் வரையறுக்கப்பட்ட பணம் மாற்றுபவர்களின் பணியை மேற்கொள்ளவேண்டும்.

கிளைகள்

அங்கிகரிக்கப்பட்ட அன்னியச் செலாவனி வணிகர்கள் எனும் வங்கிகள், முழுநேரப் பணமாற்றம் செய்வோர் தங்கள் விருப்பம்போல் வியாபார இடமுள்ள எந்த நடு நிறுவனம்/அமைப்பையும் தனி உரிமைக் கிளையாக ஏற்றுக் கொள்ள ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். இந்தக் கிளைகள் வரையறுக்கப்பட்ட பணம் மாற்றும் பணியினைச் செய்யலாம்.

முகவர் / தனி உரிமைக் கிளை ஒப்பத்நம்

தனியுரிமை வழங்குபவர் தனியுரிமை பெறுவோரிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு ஒப்பந்தக் காலத்தையும் கமிஷன் கட்டணத்தையும் முடிவு செய்து கொள்ளலாம்.

வங்கிகள்/முழுநேரப் பணம் மாற்றுவோரும் செய்து கொள்ளும் முகவர் / தனி உரிமைகளான தொழில் ஒப்பந்தத்தில் கீழ்கண்ட குறிப்புகள் இருக்க வேண்டும்.

(அ) தனியுரிமையாளர், செலாவணி வீதத்தை காட்சிக்கு வைக்க வேண்டும். வங்கிகள்/முழுநேரப்பணம் மாற்றுவோர் ஆகியோரது கிளைகளில் நடைமுறையிலுள்ள அன்றாட செலாவணி நெருக்கமான விகிதமாகவோ அல்லது அதற்கு நெருக்கமான விகிதமாகவோ தான் தனியுரிமையாளரின் செலாவனி வீதம் இருக்க வேண்டும்.

(ஆ) தனியுரிமை பெற்றவர் தனியுரிமை அளித்தவரிடமோ அல்லது அவரால் அங்கீகரிக்கப்பட்ட உங்களிடமோ தன்னுடைய வசூலை 7 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும்.

(இ) தனியுரிமை பெற்றவர் வணிகச் செயல்பாடுகள் குறித்த முறையான பதிவேடுகள் வைத்திருக்க வேண்டும்.

(ஈ) தனியுரிமை பெற்றவரை தனியுரிமை அளித்தவர் வருடத்திற்கு ஒரு முறையாவது கள ஆய்வு செய்தல் வேண்டும்.

விண்ணப்பத்திற்கான முறை

திட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக, இணைக்கப்பட்டுள்ள படிவத்தில், தங்களுடைய தலைமை அலுவலகம் எந்த ரிசர்வ் வங்கி அலுவலகத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டதோ அந்த வட்டார அலுவலகத்திற்கு வங்கிகள் அல்லது முழுநேரப் பணமாற்றுபவர் விண்ணப்பிக்க வேண்டும். பணம் மாற்றுதல் தொடர்பான தனியுரிமை ஒப்பந்தங்கள்/ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறைகள் ஆகியவற்றோடு முழுதும் உடன்பாடு உள்ளவையும், தனி உரிமைக் கிளைகளின் தேர்வு நல்ல முறையில் செய்யப்பட்டுள்ளது என்றும் உறுதிமொழி விண்ணப்பத்தோடு இணைக்கப்பட வேண்டும். முதல் தனியுரிமையாளருக்கான ஒப்புதல் ரிசர்வ் வங்கியால் தரப்படும். இதற்குப் பிறகு புதிய முகவர் / தனியுரிமை ஒப்பந்தங்கள் செய்யும்பொழுது அதற்குப்பின் ரிசர்வ் வங்கிக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்; அவற்றோடு மேற்குறிப்பிட்ட உறுதிமொழியும் இணைக்கப்பட வேண்டும்.

மையங்களைத் தேர்வு செய்தல்

திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தனியுரிமையாளர்கள் மையங்களைத் தேர்வு செய்யலாம்.

பயிற்சி

பதிவேடுகளைப் பராமரித்தல் மற்றும் செயல்முறைகள் குறித்த பயிற்சிகளை முகவர்கள்/தனியுரிமையாளர்கள் ஆகியோருக்கு உரிமை வழங்குவோர் அளிக்க வேண்டும். பரஸ்பர வசதிக்கு ஏற்றபடி ரிசர்வ் வங்கியும் இத்தகைய பயிற்சிக்குத் தேவையான உதவிகள் செய்யும்.

விவர அறிவிப்பும் ஆய்வும்

மாதாந்திர இடைவெளிகளில் விவர அறிவிப்புக் கொடுப்பதற்கான எளிமையான வடிவத்தை உரிமை வழங்குவோர் உரிமை பெற்றோருக்குத் தரவேண்டும்.

மேற்குறிப்பிட்டபடி, உரிமைபெற்றவரின் பதிவேடுகளை ஆய்வு செய்வதற்கான முறைமை உருவாக்கப்பட வேண்டும். பணம் மாற்றும் தொழில், ஒப்பந்த விதிகளின் படியும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் படியும் நடைபெறுகிறது என்பதை உறுதி செய்யவும், தனியுரிமையாளர்கள், தேவைப்படும் பதிவேடுகளை வைத்துள்ளார் என்பதை அறியவும் வருடத்திற்கு ஒரு முறையாவது நடத்தப்படும் ஆய்வு உதவும்.

ஆதாரம் : இந்திய ரிசர்வ் வங்கி

3.29411764706
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top