பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / வங்கி மற்றும் தபால்துறை சேவை / இந்திய ரிசர்வ் வங்கி / அந்நியச் செலாவணி / குடியிருப்போர் அல்லாத இந்தியருக்கான (NRI) வைப்புக் கணக்குகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

குடியிருப்போர் அல்லாத இந்தியருக்கான (NRI) வைப்புக் கணக்குகள்

குடியிருப்போர் அல்லாத இந்தியருக்கான (NRI) வைப்புக் கணக்குகள் தொடர்பான கேள்வி பதில்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

1. FCNR(B) வைப்புத்தொகைகளை ஈடு வைத்து பெற்ற கடன்களை அந்நிய நாணயத்தில் திருப்பிச் செலுத்தினால் சலுகை வட்டி வீதம் அனுமதிக்கப்படுமா?

FCNR(B) வைப்புத்தொகைகளை ஈடு வைத்துபெற்ற கடனுக்கு வசூலிக்கப்படும் வட்டியை முடிவு செய்ய வங்கிகளுக்கு உரிமை உண்டு. கடனைத் திருப்பிச் செலுத்துவது ரூபாய் அல்லது அந்நிய நாணயம் எதுவாக இருந்தாலும் முதன்மைக் கடன் வழங்கு வட்டிவீத அளவைக்குறியீட்டை (BPLR) ஒப்பிடாமலேயே வட்டி விகிதத்தை நிர்ணயிக்கலாம்.

2. FCNR(B)ன் கீழ் வங்கிகள் தொடர் (ரிக்கரிங்) வைப்புக் கணக்குகளை அனுமதிக்கலாமா?

இத்திட்டத்தின் கீழ் தொடர் வைப்புக் கணக்கை அனுமதிக்க இயலாது.

3. NRE/FCNR(B) வைப்புகளுக்கு வட்டி நிர்ணயிப்பது யார் ?

NRE/FCNR(B) வைப்புக் கணக்குகளுக்குரிய வட்டியை முடிவு செய்யும் அதிகாரத்தை வங்கி மன்றக் குழு இயக்குநர்கள் வங்கியின் சொத்து கடன் மேலாண்மைக் (Asset Liability Committee) குழுவிற்கு ரிசர்வ் வங்கியின் உச்சவரம்பிற்குட்ப்பட்டு வழங்க அதிகாரமுண்டு.

4. NRE/FCNR(B) வைப்புத் தொகைகளுக்கு வேறுபட்ட வட்டி வீதம் விதிக்க அனுமதி உண்டா?

உண்டு. 15 இலட்சம் மற்றும் அதற்குக் கூடுதலான தொகைக்குமான உள்நாட்டு வைப்புகளுக்கு, அறிவுறுத்தப் பட்ட உச்ச வரம்பிற்கு மிகாமல் வட்டி வழங்குவது போன்றே, NRE வைப்புத்தொகைகளுக்கும் வேறுபட்ட வட்டி வழங்க வங்கிகள் அனுமதிக்கப்படுகின்றன. FCNR(B) வைப்புகளைப் பொறுத்தவரை அறிவிக்கப்பட்ட உச்சவரம்பிற்கேற்ப,வேறுபட்ட வட்டிவீதத்திற்கு குறைந்தபட்சத் தொகை எந்தெந்த நாணயத்திற்கு எவ்வளவு என முடிவு செய்யும் அதிகாரம் தற்போது வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

5. மறுமுதலீட்டு வைப்புக் கணக்கு என்பது யாது?

வைப்புத்தொகைக்கு குறிப்பிட்ட காலத்தில் வட்டித் தொகை வழங்காமல் அவ்வட்டிக் தொகையையும் வைப்புக் கணக்கிலேயே மறுமுதலீடு செய்யும் முறை இது. அவ்வாறு சேர்ந்த தொகையை முதிர்வு நாளில் அசலுடன் சேர்த்துப் பெற்றுக் கொள்ளலாம். இச் செயல்முறை உள்நாட்டு வைப்புக்கணக்குகளுக்கும் பொருந்தும்.

6. FCNR(B) வைப்புக் கணக்கு முதிர்வு நாளுக்குப் பின்னர் புதுப்பிக்கப்பட்டாலும் முதிர்வு நாளிலிருந்தே புதுப்பிக்கப்பட்டதாக செயலாக்கம் செய்யலாமா ?

வங்கி தன் தனி உரிமையின் அடிப்படையில் காலம் கடந்த FCNR(B) வைப்புக் கணக்கைப் புதுப்பிக்கலாம் அல்லது அத்தொகையின் ஒரு பகுதியை மட்டும் புதுப்பிக்கலாம். முதிர்வடையும் நாளிலிருந்து புதுப்பிக்கும் நாள் உட்பட்ட (இரு தினங்களும் சேர்க்கப்பட வேண்டும்) தாமதம் ஏற்பட்ட காலக்கெடு 14 நாட்களுக்கு மிகாதிருந்தால், புதுப்பிக்கப்பட்ட வைப்புத் தொகைக்கான வட்டிவீதம் முதிர்வடையும் நாள்வரை, அனுமதிக்கப்பட்ட ஏற்புடைய வட்டிவீதம் அல்லது வைப்புத்தொகை செலுத்துவோர் புதுப்பிக்கக்கோரிய நாள் வரையிலான வட்டிவீதம், இதில் எது குறைவோ அது வழங்கப்படும். காலங்கடந்த வைப்புக் கணக்கின் கால அளவு 14 நாட்களுக்குக் கூடுதல் எனில் எந்த தேதியில் புதுப்பித்தல் கோரப்படுகிறதோ அந்தத் தேதியிலிருந்து நடைமுறையிலுள்ள வட்டிவீதப்படி வைப்புக்கணக்கு புதுப்பிக்கப்படும். காலதாமதத்தொகை முழுவதையுமோ அல்லது பகுதியையோ FCNR(B)ன் கீழ் புதுவைப்புக்கணக்காக செலுத்தினால், வங்கிகள் அந்தத்தொகைக்கு தாமதமான காலத்திற்கு அதனைப் புதுக்கணக்காகக் கருதி வட்டி வழங்கலாம். புதுப்பிக்கப் பட்ட பிறகு அத்திட்டத்தில் குறிப்பிட்ட குறைந்த பட்ச காலத்திற்கு முன்னதாக அத்தொகை திரும்பப் பெறப்பட்டால் தாமதகாலத்திற்கு அளித்த வட்டியைத் திரும்பிப் பெற வங்கிகளுக்கு உரிமை உண்டு.

7. FCNR(B)ன் கீழ் ரூபாயாகக் கடன் பெறுவோருக்கு பொருந்தக் கூடிய வட்டி வீதக் கட்டு திட்டங்கள் அந்நிய நாணயக்கடன் பெறுவோருக்குப் பொருந்துமா?

பொருந்தாது. அந்நிய நாணயக்கடன் தொடர்பான வட்டிவீதக் கட்டு திட்டங்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் செலாவணித்துறையின் அறிவுறுத்தலுக்கேற்ப நடைமுறைப்படுத்தப் படுவதால் ரூபாய்க் கடனுக்குப் பொருந்தும் வட்டிவீதம் அந்நிய நாணயக் கடனுக்குப் பொருந்தாது.

8. FCNR(B) வைப்புத தொகைகளுக்கு எச்சூழ்நிலையில் அறிவிக்கப்பட்ட வட்டி வீதத்தைக் காட்டிலும் கூடுதலான வட்டி வீதம் வழங்கலாம்?

கீழ்க்கண்ட நபர்களின் பெயர்களில் வைப்புக் கணக்கு இருந்தால்:

(அ) வங்கிப் பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற ஊழியர் தனிப்பட்ட முறையில் அல்லது தனது குடும்பத்தாருடன் கணக்கு துவங்க நினைக்கும்போது

(ஆ) இறந்துபோன வங்கிப் பணியாளரது அல்லது ஓய்வுபெற்ற பணியாளரது துணைவர் / துணைவி FCNR(B) வைப்புக் கணக்கிற்கு அறிவிக்கப்படும் மொத்த உச்சவரம்பு விதிமுறைகள் மீறப்படாத சூழ்நிலையில் வங்கி அதன் தனி உரிமையைப் பயன்படுத்தி நடைமுறையிலிருக்கும் வட்டி வீதத்தைக் காட்டிலும் ஒரு விழுக்காடு கூடுதல் வட்டி ஓர் ஆண்டுக்கு கீழ்க் கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு வழங்கலாம்.

1) வைப்புத்தொகையாளர் அல்லது வைப்புத் தொகையாளர்கள் குடியிருப்போர் அல்லாத இந்தியர் அல்லது இந்திய வம்சாவளியினராக இருந்தால்

2) வைப்புத்தொகையாகச் செலுத்தப்பட்ட பணம் அல்லது காலத்துக்குக் காலம் செலுத்தப்படும் பணம் பிரிவு (அ) மற்றும் (ஆ) வில் குறிப்பிட்டமுறையில் அந்த வைப்புத் தொகையாளருக்கு உரியது என்ற உறுதிமொழியை வங்கி அந்த வைப்புத் தொகையாளரிடம் பெறவேண்டும்.

விளக்கம்:

குடும்பம் என்பது வங்கிப் பணியாளர்/ஓய்வுபெற்ற ஊழியரது  துணைவர் / துணைவி, அவரது குழந்தைகள், பெற்றோர், உடன் பிறந்த ஆண்கள், பெண்கள் ஆகியோர் வங்கி ஊழியர்/ஓய்வுபெற்ற ஊழியர் ஆகியோரைச் சார்ந்து வாழக்கூடியவர்களாக இருக்க வேண்டும். சட்டப்படி பிரிக்கப்பட்ட கணவன் / மனைவி இதில் சேர்க்கப்படமாடார்கள்.

9. NRE/FCNR(B) வைப்புக் கணக்குடையோர் இறந்துவிட்டால் சட்டப்படியான அவரது வாரிசுகளுக்கு குறிப்பிட்ட குறைந்தபட்சக் காலக்கெடு முடிவடையும் முன்னரே பணத்தைத் திருப்பிப் பெறும்போது வட்டி ஏதும் வழங்கவேண்டுமா?

தற்போதைய நடைமுறை விதிப்படி NRE/FCNR(B)க்கு அக்குறைந்த காலம் ஓராண்டாகும்.

10. முதிர்வு நாளுக்கும் பணம் பட்டுவாடா செய்யப்படும் நாளுக்கும் இடையே சனி, ஞாயிறு, ஏனைய விடுமுறைநாட்கள் குறுக்கிட்டால் அந்நாட்களுக்கு NRE/ FCNR(B) வைப்புத்தொகைகளுக்கு வட்டி வழங்கவேண்டுமா?

ஆம். முதலீட்டாளருக்கு எவ்வித நட்டமும் ஏற்படலாகாது என்பதால் பட்டுவாடா நாள், சனி, ஞாயிறு தவிர வங்கிப்பணி நடவாத விடுமுறைகள், விடுமுறை நாள் ஆகிய நாட்களில் அமையுமானால் NRE/ FCNR(B) வைப்புக் கணக்குகளின்,தொடக்க கால ஒப்பந்தப்படி அந்த இடைப்பட்ட காலத்திற்கும் வட்டி வழங்க வங்கிகள் அனுமதிக்கப்படுகினறன.

ஆதாரம் : இந்திய ரிசர்வ் வங்கி

3.22727272727
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top