অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

வெளிநாடு வாழ் இந்தியர் மற்றும் இந்திய வம்சா வழியினருக்கான முதலீட்டு வசதிகள்

வெளிநாடு வாழ் இந்தியர் மற்றும் இந்திய வம்சா வழியினருக்கான முதலீட்டு வசதிகள்

I. வங்கிக் கணக்குகளும் வைப்பு நிதிகளும்

அ) வெளிநாடு வாழ்வோர் (வெளிப்புற) ரூபாய் (NRE) கணக்குகள் (அசலும் வட்டியும் வாழும் நாட்டுக்கு எடுத்துச் செல்லத்தக்கது).

  • சேமிப்பு (NRE) - சேமிப்புக் கணக்குகளின் வட்டி வீதம் உள்நாட்டுச் சேமிப்புக் கணக்குகளுக்கு உள்ள வட்டி வீதத்தைப் போன்றதே
  • குறித்த கால வைப்புத் தொகை - 1 வருடத்திலிருந்து 3 வருடத்துக்கு, வெளி நாட்டில் வாழ்வோர் (வெளிப்புற) ரூபாய் (NRE) குறித்த கால வைப்புத் தொகைகள், முந்தைய மாதத்தின் இறுதி வேலை நாளின்போது உள்ள அதே முதிர்வு கால அமெரிக்க டாலரின் LIBOR / SWAP வீதங்கள் + 75 அடிப்படை புள்ளிகள் – இதை விட மிகுதியாக இருக்கக் கூடாது.

மூன்று ஆண்டு கால வைப்புத் தொகைகளுக்கென்று நிர்ணயிக்கப்பட்ட மேலே கூறப்பட்ட வட்டி வீதங்கள் முதிர்வடையும் காலம் மூன்றாண்டுக்கு மிகுந்தாலும் அதற்கும் பொருந்தும்.

NRE வைப்புத் தொகைகள் தற்போது உள்ள முதிர்வடையும் காலத்துக்குப்பின் புதுப்பிக்கப்பட்டாலும் வட்டிவீத மாற்றங்கள் பொருந்தும்.

ஆ.) FCNR (B) அசலும் வட்டியும் வாழும் நாட்டுக்குக் கொண்டு செல்லத்க்கது.

ரிசர்வ் வங்கியால் அவ்வப்போது நிர்ணயிக்கப்படும் அனுமதிக்கத்தக்க நாணயங்களில் இந்தக் கணக்குகளில் வைப்புத் தொகையின் நிதிகள் ஏற்கப்படும்.

  • தற்போது குறித்த கால வைப்புத் தொகைகள் AD களிடம் 6 குறிப்பிடத்தக்க நாணயங்களில் வைத்துக் கொள்ளலாம் (அமெரிக்க டாலர், பவுண்டு ஸ்டெர்லிங், யூரோ, ஜப்பானிய யென், ஆஸ்திரேலிய டாலர், கனடா டாலர்)
  • வட்டி வீதம் - நிலையானது அல்லது மாறக்கூடியது LIBOR / SWAP இன் உச்சநிலை வீதங்களுக்குள் குறிப்பிட்ட நாணயங்களில் / ஈடான மதிப்பில் 25 அடிப்படைப்புள்ளிகள் குறைந்தது (ஐப்பானிய யென்னைத் தவிர)
  • வைப்புத் தொகை முதிர்வுக்காலம் 1-5 ஆண்டுகள்

இ) NRO கணக்குகள் (வாழும் நாட்டுக்கு கொண்டு செல்லத்தக்க வருவாய்கள்)

  • சேமிப்பு - பொதுவாக ரூபாய் வருவாய்கள் / ஆதாயப்பங்கு வட்டி போன்றவை வரவு வைப்பதற்காக இயக்கப்படுவது - இப்போதுள்ள வட்டி வீதம் 3.5 விழுக்காடு
  • குறித்த கால வைப்புத் தொகைகள் வட்டி வீதங்களை வங்கிகளே முடிவு செய்யலாம்.

ஈ) NRO இருப்பிலுள்ள தொகையிலிருந்து வாழும் நாட்டுக்குக் கொண்டு செல்லுதல்

அங்கீகரிக்கப்பட்ட அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் நேர்மையான நோக்கங்களுக்காக, அதற்குரிய வரியைச் செலுத்தும் பட்சத்தில் NRO கணக்குகளிலிருந்து ஒரு காலண்டர் ஆண்டுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் வரை செலுத்த அனுமதிக்கலாம். அனுமதிக்கப்பட்ட வரம்பான 1 மில்லியன் டாலர் என்பது NRO/PIO வின் 10 ஆண்டுக்காலம் வைத்திருந்து விற்ற அசையாச் சொத்தின் விற்ற தொகையையும் உள்ளடக்கியது. சொத்து 10 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலத்துக்குத்தான் வைத்திருந்து விற்கப்பட்டதெனில் விற்கப்பட்ட தொகை குறையும் காலத்துக்கு ஏற்கப்பட்ட முதலீட்டில் இருந்தது எனில் செலுத்த அனுமதிக்கலாம்.

II. வாழும் நாட்டுக்குத் திருப்பி எடுத்துச் சொல்லப்படும் அடிப்படையில் உள்ள மற்ற முதலீடுகள்

  • தேதியிட்ட அரசின் பத்திரங்கள் / கருவூல உண்டியல்கள்
  • உள்நாட்டு பரஸ்பர நிதியின் அளவைகள்
  • இந்தியாவிலுள்ள பொதுத்துறை நிறுவனங்களால் (PSU) வெளியிடப்படும் கடன் பத்திரங்கள்
  • இந்தியாவில் சட்டப்படி உருவாக்கப்பட்ட குழுமத்தின் மாற்றமுடியாத கடனீட்டுப் பத்திரங்கள்
  • பங்கு விற்பனைக்கென அழைப்பு விடுக்கும் அறிவிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் பொருந்தி இருக்குமெனில், இந்திய அரசினால் முதலீட்டைத் திரும்பப்பெறும் திட்டத்தின்கீழ் விற்கப்படும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை வாங்குதல்
  • FDI திட்டத்தின் கீழ் இந்தியக் குழுமங்களின் பங்குகளும் மாற்றத்தக்க கடனீட்டுப் பத்திரங்களும் (தானியங்கு வழிமுறைத் திட்டம் & FIPB உட்பட)
  • தொகுப்பு முதலீட்டுத் திட்டத்தின் கீழ் பங்குச் சந்தைமூலமாக விற்கப்படும் இந்தியக் குழுமங்களின் பங்குகளும் மாற்றத்தக்க கடனீட்டுப் பத்திரங்களும்
  • இந்திய வங்கிகளால் வெளியிடப்படும் நிலைத்த கடன் ஒப்பந்தப் பத்திரங்கள், மூலதனக்கடன் ஒப்பந்தப் பத்திரங்கள்

III. வாழும் நாட்டுக்கு எடுத்தும் செல்ல இயலா அடிப்படையில் உள்ள மற்ற முதலீடுகள்

  • தேதியிட்ட அரசின் பத்திரங்கள் (கொணர்பவர் பத்திரங்கள் அல்லாத மற்றவை)/ கருவூல உண்டியல்கள்
  • உள்நாட்டு பரஸ்பர நிதியின் அளவைகள்
  • இந்தியாவில் உள்ள பணச்சந்தை பரஸ்பர நிதியின் அளவைகள்
  • இந்தியாவில் சட்டப்படி உருவாக்கப்பட்ட குழுமத்தின் மாற்ற இயலா கடனீட்டுப் பத்திரங்கள்
  • வேளாண்தொழில் அல்லது தோட்டத்தொழில் அல்லது ரியல் எஸ்டேட் வணிகத்தில் ஈடுபடாத இந்தியாவிலுள்ள ஒரு நிறுவனத்தின் அல்லது தனியுரிமை அமைப்பின் மூலதனம்.
  • குழுமங்கள் சட்டம் 1956 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட, ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட NBFC உட்பட குழுமத்தில் செய்யப்பட்ட வைப்புத்தொகை அல்லது பாராளுமன்றம் அல்லது ஒரு மாநில சட்டசபையால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு அல்லது ஒரு தனியுரிமை அமைப்பு அல்லது ரூபாய் நிதியில் அல்லாமல் உட்புறப் பணம் செலுத்துதல் அல்லது NRE/FCNR (B) கணக்கிலிருந்து NRO கணக்குக்கு மாற்றுதல் செய்தல் மூலம் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு
  • தொகுப்பு முதலீட்டுத் திட்டத்தின் கீழ்வராத இந்தியக் குழுமங்களின் பங்குகளும் மாற்றத்தக்க கடனீட்டுப் பத்திரங்களும்

IV அசையாச் சொத்தில் முதலீடு செய்தல்

  • வாழும் நாட்டுக்குக் கொண்டு செல்லத்தக்க நிதியிலிருந்து அல்லது கொண்டு செல்லதகாத நிதியிலிருந்து, வேளாண் நிலம், தோட்டச் சொத்து அல்லது பண்ணை வீடு போன்றவை தவிர பிற அசையாச் சொத்தைப் பெறலாம்.அது போன்ற முதலீடுகளில் வெளிநாடுவாழ் இந்தியர் பின்வருவனவற்றைத் தாம் வாழும் நாட்டுக்கு எடுத்துச் செல்ல இயலும்.
  • இரண்டு குடியிருப்புச் சொத்துக்கள் வரை, கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய காலம் எதுவும் இல்லாமல் அந்தச் சொத்தினை வாங்குவதற்குச் செலவிடப்பட்டதில் வாழும் நாட்டுக்கு எடுத்துச் செல்லத்தக்க அளவுக்கு இந்தியாவில் பெறப்பட்ட அந்தச் சொத்தினை விற்றுக்கிடைத்த பணம், மீதம் உள்ள பணம் NRO கணக்குமூலமாக பிரிவு 1(O) இல் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு வாழும் நாட்டுக்கு எடுத்துச் செல்லலாம்.
  • (அ) விண்ணப்பப் பணம் / அச்சாரப் பணம் / வீடு கட்டும் முகமைகளால் வீடு வாங்குவதற்காக பணம் செலுத்துதல் NRE/FCNR(B) கணக்கில் உட்புறப் பணம் செலுத்துதன் மூலம் செலுத்தப்பட்டிருந்தால், பெறப்பட்டதை குடியிருப்பு / மனை ஒதுக்கப்படாமைக்காகத் திருப்பித் தரப்படும் பணம் / பதிவு அல்லது ஒப்பந்தம் முடிவுற்ற போது திரும்பிப் பெறப்படும் வட்டியுடன் கூடிய வரிபிடித்தம் போக உள்ள மீதிப்பணம்.
  • AD களிலிருந்து NRI களால் பெறப்பட்ட வீட்டுக்கடன் / வீட்டுவசதி நிதி வழங்கும் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட கடன் ஆகியன கடன் வாங்கியோரின், இந்தியாவிலுள்ள நெருங்கிய உறவினர்களால் திரும்பச் செலுத்தப்படலாம்.

V. திரும்ப வரும் NRI/PIO க்களுக்கு உள்ள வசதிகள்

திரும்ப வரும் NRI/PIO

  • அந்த நாணயம், பத்திரம் அல்லது சொத்து, அவர் வெளிநாட்டில் இருந்தபோது வைத்திருக்கப்பட்டது சொந்தமாக்கப்பட்டது எனில் அதனை வைத்திருக்கலாம்; சொந்தமாக்கிக் கொள்ளலாம்; மாற்றுதல் செய்யலாம்; வெளிநாட்டு நாணயத்தில், அந்நியப் பிணையம் அல்லது ஏதாவது அசையாச் சொத்தில் முதலீடு செய்யலாம்.
  • NRE/FCNR(B) கணக்குகளில் உள்ள இருப்பினை மாற்றுதல் செய்ய இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட முகவரிடம் ஒரு உள்நாட்டில் வாழ்வோரின் அன்னியப் பணக்கணக்கினைத் தொடங்கலாம்; வைத்திருக்கலாம்; பராமரிக்கலாம். திரும்பும்போது வெளிநாட்டில் உள்ள சொத்தினை விற்ற பணத்தினை RFC கணக்கில் வரவு வைக்கலாம். RFC கணக்கில் உள்ள நிதி வெளிநாட்டுப் பணத்தின் இருப்பினைப் பயன்படுத்துதல் தொடர்பான வெளிநாட்டில் எந்த வகையிலும் முதலீடுசெய்தலில் தடை உள்ளிட்ட எந்தத் தடையும் இல்லாதது.

ஆதாரம் : இந்திய ரிசர்வ் வங்கி

கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate