অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

சேமநல நிதிகளின் முதலீட்டுக்கான வாய்ப்புகள்

சேமநல நிதிகளின் முதலீட்டுக்கான வாய்ப்புகள்

அரசுப் பத்திரங்கள் எதற்காக?

சேமநல நிதிகள், தம் இயல்பினால், அபாயமற்றதும், தகுந்த வட்டியைத் தருவதுமான பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டியனவாய் இருக்கின்றன. பொன்மூலாம் பூசப்பட்ட பத்திரங்கள் என்று அழைக்கப்படும் அரசுப்பத்திரங்கள் (G-Secs) புறக்கணித்த அப்பயங்களிலிருந்து விடுபட்டவை மட்டுமல்லாது தகுந்த வட்டியை தருபவையாதலால், உயர்ந்ததும் தகுந்ததுமான முதலீட்டு வாய்ப்பினை சேம நிதிகளுக்கு அளிக்கின்றன.

அரசுப் பத்திரங்கள் (G-Secs) யாவை?

இந்திய அரசாங்கத்தாலும், மாநில அரசுகளாலும் வெளியிடப்படும் காலவரையறை உடைய பத்திரங்களையும், கருவூல உறுதிச் சீட்டுக்களையும் உள்ளடக்கியவை அரசுப் பத்திரங்கள். இந்திய ரிசர்வ் வங்கி, அரசாங்கத்தின் முகவர் என்னும் தன்மையினால், பல்வேறு இடங்களில் உள்ள, தனது பொதுக்கடன் அலுவலகங்கள் மூலமாக இப்பத்திரங்களின் நிர்வாகத்தையும், சேவையையும் செய்கிறது.

கருவூல உறுதிச் சீட்டுக்கள்

வகைகள்

கருவூல உறுதிச் சீட்டுக்கள் (T-bills), ஒரு வருட காலத்திற்கு மிகாத குறுகியகால முதலீட்டு வாய்ப்புக்களை நல்குகிறது. இவை குறுகிய கால ரொக்கத்தன்மையை நிர்வகிப்பதில் உபயோககரமானவை ஆகும். தற்போது, இந்திய அரசாங்கம், 14-நாள், 91-நாள், 182-நாள் மற்றும் 364-நாள் என்ற பெயருள்ள நான்கு வகை கருவூல உறுதிச் சீட்டுக்களை வெளியிடுதிறது.

தொகை

கருவூல உறுதிச் சீட்டுக்கள் குறைந்த பட்சம் ரூ.25000க்கும் மற்றும் 25000த்தின் மடங்குகளிலும் கிடைக்கின்றன. கருவூல உறுதிச் சீட்டுக்கள் (T-bills) தள்ளுபடியுடன் வெளியிடப்பட்டு, அசல் விலைக்கு மீட்சியுடையவை.

ஏலம்

14-நாள் மற்றும் 91-நாள் கருவூல உறுதிச் சீட்டுக்கள் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமையிலும், 182-நாள் மற்றும் 264-நாள் கருவூல உறுதிச் சீட்டுக்கள் ஒன்றுவிட்ட ஒவ்வொரு புதன் கிழமையிலும் ஏலமிடப்படுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கி, கருவூல உறுதிச் சீட்டுக்களின், ஏலங்களின் கால அட்டவணையை வெளியிடுகிறது. அது, ஒவ்வொரு ஏலத்திற்கு முன்னும், ஏல தேதி ஏலத்தை மற்றும் தொகை செலுத்தும் தேதி முதலியவற்றை பத்திரிகை வெளியீடு மூலமாக அறிவிக்கிறது.

கருவூல உறுதிச் சீட்டுக்களின் வகைகள்

ஏல நாள்

தொகை செலுத்த வேண்டிய நாள்*

14-நாள்

வெள்ளிக் கிழமை

அடுத்த சனிக்கிழமை

91-நாள்

வெள்ளிக் கிழமை

அடுத்த சனிக்கிழமை

182-நாள்

அறிக்கையிடாத வாரத்தின் புதன்கிழமை

அடுத்த சனிக்கிழமை

364-நாள்

அறிக்கையிடாத வாரத்தின் புதன்கிழமை

அடுத்த சனிக்கிழமை

* தொகை செலுத்த வேண்டிய நாள், விடுமுறை நாளானால், அடுத்தநாள் தொகை செலுத்தப் படவேண்டும்

தொகை செலுத்தும் முறை

14-நாள் மற்றும் 91-நாள் கருவூல உறுதிச் சீட்டுக்களை வாங்குவதற்கு, வெற்றிபெற்ற ஏலதாரர்களால், ஏலம் நடந்த வெள்ளிக் கிழமையை அடுத்த சனிக்கிழமையன்று தொகை செலுத்தப்படவேண்டும். 182-நாள் மற்றும் 364-நாள் கருவூல உறுதிச் சீட்டுக்களுக்கு, வெற்றிபெற்ற ஏலதாரர்களால் அடுத்த வியாழக்கிழமையன்று தொகை செலுத்தப்படவேண்டும். ஏலத்தில் வெற்றிபெற்ற ஏலதாரர்களால் தொகையானது ரொக்கமாகவோ, இந்திய ரிசர்வ் வங்கி பெயரில் வரையப்பட்ட காசோலை மூலமாகவோ, வங்கி வரைவோலை மூலமாகவோ செலுத்தப்படவேண்டும்.

பங்குபெறுதல்

சேமநல நிதிகள், 14-நாள், 91-நாள் கருவூல உறுதிச் சீட்டின் ஏலங்களில் போட்டிக்குரியதல்லாத ஏலதாரர்களாக பங்குபெறலாம். சேமநல நிதிகள், 182-நாள் மற்றும் 364-நாள் கருவூல உறுதிச் சீட்டுக்களை, போட்டிக்குரியரல்லாத ஏலதாரர்களாக, வாங்குவதற்கு இன்றளவில் அனுமதி இல்லை. போட்டிக்குரியரல்லாத ஏலதாரராக பங்குபெறுவது என்பது, சேம நல நிதிகள், தாம் வாங்க விரும்பும் உறுதிச்சீட்டுக்களின் வட்டி விகிதத்தை எடுத்துக் கூறாமல் இருப்பதாகும். ஏலத்தில் போட்டியிட்ட ஏலதாரர்கள் கேட்ட வட்டி விகிதத்தினுடைய சராசரி விகிதத்தில், இந்திய ரிசர்வ் வங்கி, போட்டிக்குரியரல்லாத ஏலதாரர்களுக்கு ஏலத்தை நிர்ணயிக்கிறது. போட்டிக்குரியரல்லாத ஏலதாரர்களுக்கு நிச்சயிக்கப்பட்ட ஏலத்தொகை, விற்பனைக்கென்று அறிவிக்கப்பட்ட தொகையினின்றும் வேறுபட்டதாகும்.

எங்கே வாங்குவது?

கருவூல உறுதிச் சீட்டுக்களின் ஏலம், மும்பையிலுள்ள இந்திய ரிசர்வ் வங்கியில் நடத்தப்படும். இதற்காக, சேமநலநிதிகள், தகுந்த படிவத்தில், ரிசர்வ் வங்கியின் மும்பை அலுவலகத்திற்கு, தங்களின் ஏலதை சமர்பிக்க வேண்டும். மும்பைக்கு வெளியிலுள்ள சேமநல நிதிகள், தங்களது ஏலத்தை, முன்னதாகவே ஃபாக்ஸ் எண் (022-2693332) மூலமாகவோ அல்லது தபாலில், உயர்பொது மேலாளர், பொதுக் கணக்குத் துறை, இந்திய ரிசர்வ் வங்கி, கோட்டை, மும்பை-400001 என்ற முகவரிக்கோ அனுப்பலாம்.

தேதியிட்டப் பங்குகள்

ஒரு வருட காலத்திற்கு மேற்பட்ட, அரசாங்கப் பத்திரங்கள், தேதியிட்டப் பங்குகள் என்றழைக்கப்படும். தற்போது, 20 வருடம் வரை காலவரையறையுள்ள தேதியிட்டப் பங்குகள் சந்தையில் உள்ளன.

ஏலம் அல்லது விற்பனை

தேதியிட்டப் பங்குகள் ஏலத்தின் மூலமாகவோ அல்லது விற்பனையின் மூலமாகவோ விற்கப்படுகின்றன. உண்மையில், தேதியிட்டப் பங்குகளின் ஏலம் அல்லது விற்பனை என்பது, சீட்டுக்கள் ஏலத்தின் மூலமாகவோ அல்லது நிச்சயிக்கப்பட்ட தொகையில் தரப்படும். சில சமயங்களில், நிச்சயிக்கப்பட்ட விலையுள்ள பங்குகள், சில நாட்களுக்கு கால வரம்பின்றி விற்கப்படும்.

அறிவிப்பு

அரசாங்கப் பத்திரங்களுக்கு (G-secs) கால அட்டவணை இல்லாத போதிலும், இந்திய அரசாங்கமும், இந்திய ரிசர்வ் வங்கியும், பத்திரிகை வெளியீட்டின் மூலம், விற்பனையின் அறிவிப்பைத் தரும். பத்திரிகை வெளியீடு என்பது பத்திரிகை ஊடகங்கள் மற்றும் செய்தி நிறுவனங்களின் மூலம் பரவலாக அறிவிக்கப்படுவதாகும். இந்திய அரசாங்கம், முன்னோடி நிதி செய்திதாள்களில் விளம்பரத்தை வெளியிடும். ஏலம் மற்றும் விற்பனையும் அதன் முடிவுகளும் இந்திய ரிசர்வ் வங்கியின் வெப்சைட்டில் (URL:http://www.rbi.org.in) பிரகடனம் செய்யப்படும்.

தொகை

சந்தா குறைந்தபட்சம் ரூபாய் 10,000 ஆகவும் மற்றும் பத்தாயிரத்தின் மடங்குகளாகவும் இருக்கும்.

விற்பனை எங்கு நடைபெறுகிறது?

பொதுவாக, ஏலமும் விற்பனையும், மும்பையிலுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் அலுவலகத்தில் நடத்தப் பெறுகின்றன. சேமநல நிதிகள், தங்களது போட்டிக்குரிய ஏலத்தையும், மனுக்களையும், ஏலம் மற்றும் விற்பனையின் சமயத்தில் கிடைக்கக் கூடிய தகுந்த படிவத்தில், உயர்பொது மேலாளர், பொதுக் கடன் அலுவலகம், இந்திய ரிசர்வ் வங்கி, கோட்டை, மும்பை-400001 ((ஃபாக்ஸ்:022-2662721 அல்லது 022-2660817) என்ற முகவரிக்குச் சமர்பிக்கலாம்.

பணம் செலுத்துதல்

ஏலத்தில், வெற்றிபெற்ற ஏலதாரர்களால் ரொக்கமானது சாதாரணமாக ஏலம் நடந்த நாளின் மறுநாள் செலுத்தப்பட வேண்டும். நிச்சயிக்கப்பட்ட விலையுள்ளதிலும், திறந்தமுறை விற்பனையிலும் மனுவுடன் தொகை செலுத்தப்பட வேண்டும். தொகை, ரொக்கமாகவோ, இந்திய ரிசர்வ் வங்கியின் பெயரில் வரையப்பட்ட காசோலை மூலமாகவோ அல்லது வங்கியின் வரைவோலை மூலமாகவோ செலுத்தப்பட வேண்டும்.

மாநில அரசின் பத்திரங்கள்

இவை மாநில அரசால் வெளியிடப்படும் பத்திரங்கள் ஆகும். இப்பத்திரங்களின் வெளியீடும் சேவையும் இந்திய ரிசர்வ் வங்கியினால் நிர்வகிக்கப்படுகின்றன.

மாநில அரசின் பத்திரங்களின் காலம், சாதாரணமாக பத்து வருடங்கள் ஆகும். மாநில அரசின் பத்திரங்கள் மதிப்பு குறைந்த பட்சம் ரூபாய் ஆயிரமாகவும் மற்றும் ஆயிரத்தின் மடங்குகளாகவும் கிடைக்கின்றன. இவை நிச்சயிக்கப்பட்ட சீட்டு விலையில் கிடைக்கின்றன. சிறிது காலமாக, சில மாநில அரசுகள் தங்களது பத்திரங்களை ஏலமிட துவங்கியுள்ளன. இப்பத்திரங்களை, இந்திய ரிசர்வ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அதன் துணை வங்கிகளின் விரிந்த கிளை அலுவலக நெட்வர்க் (Network) மூலமாக வாங்கலாம்.

அரசாங்க பத்திரங்களைப் (G-secs) பெறுதல்

அரசாங்கப் பத்திரங்கள், இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து, அதன் ஏலம் மூலமாகவோ, அல்லது விற்பனை மூலமாகவோ வாங்கப்படுவதோடு, எல்லா அரசாங்கப் பத்திரங்களையும் துணைச் சந்தையில் வாங்கலாம். முறைப்படுத்தப் பட்ட முதல்நிலை வியாபாரிகளும், துணை வியாபாரிகளும், பத்திரங்களை வாங்கவும், விற்கவும் செய்கிறார்கள். இந்திய ரிசர்வ் வங்கியும் தனது திறந்த சந்தை செய்முறை வடிவில் அரசாங்கப் பத்திரங்களை விற்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் திறந்த சந்தை செய்முறை வடிவில் கிடைக்கக் கூடிய பத்திரங்களின் பட்டியல், இந்திய ரிசர்வ் வங்கியினால், அவ்வப்பொழுது, தகுந்த விளம்பரமாக வெளியிடப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் திறந்தச் சந்தை செய்முறை விற்பனையில் விற்கப்படும் பத்திரங்கள், அஹமதாபாத், பெங்களூரு, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், கான்பூர், புதுதில்லி, மற்றும் மும்பையிலுள்ள அலுவலகங்களில் வாங்கலாம்.

ஆதாரம் : இந்திய ரிசர்வ் வங்கி

கடைசியாக மாற்றப்பட்டது : 5/3/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate