பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ஊரகத் திட்டம் மற்றும் கடன் துறை

ஊரகத் திட்டம் மற்றும் கடன் துறை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

விவசாயம் மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டங்கள் ஆகியவற்றிற்கு தேவையான கடன்நிதி கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஊரகக் கடன் திட்டக் கொள்கைகளை ஊரகத் திட்டம் மற்றும் கடன் துறை வகுக்கிறது. முன்னுரிமைப் பிரிவுக்கான கொள்கைகளையும் இத்துறை வடிவமைக்கிறது. நாட்டிலுள்ள கிராமப்புறங்கள் எல்லாவகையிலும் ஒட்டுமொத்த முன்னேற்றம் பெற்றிட ஒருங்கிணைந்த வங்கிக்கடன் வசதிக்கு வழிவகுக்கும் முன்னோடி வங்கித் திட்டத்தை இத்துறை அமல்படுத்துகிறது. மேற்பார்வையிடுகிறது. வங்கிக் குறைதீர்ப்பாளர் திட்டத்தை அமல்படுத்துவதையும் இது மேற்பார்வையிடுகிறது.

இத்துறையின் பரந்த பணியெல்லைகள்

 • கிராமப்புற விவசாய மற்றும் சிறுதொழில் பிரிவுகளுக்கு கடன் கிடைக்க வசதி செய்து தருவதும் அதை மேற்பார்வையிடுவதும்
 • முன்னுரிமைப் பிரிவுக்கான கடன்கள் குறித்த கொள்கை வடிவமைத்தல்
 • பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளுக்கிடையே கிராமப்புற கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (RIBF)க்கான நிதி ஒதுக்கீடுகளை செய்தல்
 • கிராமப்புறங்கள் ஒட்டுமொத்த முன்னேற்றம் கண்டிட ஒருங்கிணைந்த வங்கிக்கடன் வசதியை நோக்கமாகக் கொண்ட முன்னோடி வங்கித் திட்டத்தை அமல்படுத்தி மேற்பார்வையிடல்
 • நபார்டு (தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி) வங்கிக்கு நிதி மற்றும் கொள்கையளவில் ஆதரவு அளித்தல்
 • பிராந்திய கிராமப்புற வங்கிகள் மற்றும் மாநில, மத்திய கூட்டுறவு வங்கிகளின் நெறிமுறையாளராக செயல்படுதல்
 • வறுமை ஒழிப்பிற்கான அரசு மானியத்துடன் கூடிய திட்டங்கள் அமல்படுத்தப்படுவதை மேற்பார்வையிடல்
 • வங்கிக்குறை தீர்ப்பாளர் திட்டத்தை அமலாக்கம் செய்தல். வங்கிகளுக்கு எதிரான பொதுமக்களின் புகார்களை சுலபமாக செலவின்றி தீர்த்திட அமைக்கப்பட்ட ஒரு திட்டமே வங்கிக்குறை தீர்ப்பாளர் திட்டமாகும்

மிக முக்கிய பகுதிகள்

 • கடன் அளிப்பில் புதிய உத்திகள்
 • குறுநிதி குறித்த முனைப்பான முயற்சிகள்
 • விவசாயக் கடன் அட்டைகள்
 • கூட்டுறவு சங்கங்களை மறுவடிவமைத்தல்
 • நலிவுற்ற சிறுதொழில் நிறுவனங்களை மீட்டிடும் முயற்சிகளுக்கான வழிகாட்டுதல்கள் வழங்கிடல்

வணிக வங்கிகள் அளிக்கும் முன்னுரிமைப் பிரிவுக் கடன்கள் குறித்த முக்கிய அம்சங்கள்

இலக்குகள் / உப இலக்குகள்

இந்தியாவிலுள்ள உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு வங்கிகளுக்கான முன்னுரிமைப் பிரிவுக் கடன்களுக்காக விதிக்கப்பட்ட இலக்குகள், உப இலக்குகள் பின்வருமாறு:

கடன்களின் வகை

உள்நாட்டு வங்கிகள்

இந்தியாவிலுள்ள அயல் நாட்டு வங்கிகள்

1. முன்னுரிமைப் பிரிவுக்கான மொத்தக் கடன்

வங்கியின் நிகர கடனில் 40%

வங்கியின் நிகர கடனில் 32 %

2. விவசாயத்திற்கான கடன்

வங்கியின் நிகர கடனில் 18%

இலக்கு ஏதுமில்லை

3. நலிவுற்ற பிரிவினருக்கான கடன்

வங்கியின் நிகர கடனில் 10%

இலக்கு ஏதுமில்லை

4. சிறுதொழிலுக்கான கடன்

இலக்கு ஏதுமில்லை

வங்கியின் நிகர கடனில் 10%

5. ஏற்றுமதிக் கடன்

உள்நாட்டு வங்கிகளைப் பொறுத்தவரை ஏற்றுமதிக் கடன் முன்னுரிமைப் பிரிவில் ஒரு பகுதியாகாது

வங்கியின் நிகர கடனில் 12%

செயல்பாடுகள்

வங்கிகள் நிதியளிக்கும் முன்னுரிமைப் பிரிவைச்சார்ந்த செயல்பாடுகள், நோக்கங்கள் பரவலாக பின்வரும் வகையில் அமைந்திடும்

a. விவசாயம்

b. சிறுதொழில்

c. சிறுசாலை மற்றும் நீர்போக்குவரத்து ஏற்பாட்டாளர்கள்

d. சில்லறை வியாபாரிகள் மற்றும் சிறு வாணிபம் செய்வோர்

e. வாழ்க்கைத் தொழிலாக சுயதொழில் முனைவோர்

f. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான அரசு சார்ந்த நிறுவனங்கள்

g. உள்நாட்டில் கல்விக்காக 0.75 மில்லியன் ரூபாய் வரையும், அயல்நாட்டில் 1.5 மில்லியன் ரூபாய் வரையும் வழங்கப்படும் கல்விக் கடன்கள்

h. தனிநபருக்கு எந்தவொரு இடத்திலும் 1.5 மில்லியன் ரூபாய் வரை வழங்கப்படும். வீட்டு வசதிக்கடன் கிராமப்புறம் - கிராமப்புறத்தில் 0.1 மில்லியன் ரூபாய் வரையிலும் வழங்கப்படும், வீட்டுவசதிக் கடன்கள் நகர்ப்புறம் – மாநகரப் பகுதிகளில் இருக்கும் இடங்களை மராமத்து செய்ய 0.1 மில்லியன் ரூபாய் வரையிலும் கடன் வசதி

i. நலிவுற்ற பிரிவினருக்கு வழங்கப்படும் நுகர்வோர் கடன்கள்

j. அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் / சுய உதவிக்குழுக்கள்

k. கணினி மென்பொருள் தொழில் (வங்கிகளிடமிருந்து ரூ.10 மில்லியன் வரை கடன் உதவி பெற்றவை)

l. விவசாயம் மற்றும் உணவு சார்ந்த பதப்படுத்தும் தொழில்கள்

நலிவுற்ற பிரிவினர்

i. 5 ஏக்கர் மற்றும் அதற்கும் குறைவான நிலமுடைய சிறு மற்றும் குறு விவசாயிகள், நிலமில்லாத விவசாயக் கூலிகள், குத்தகை விவசாயம் செய்வோர், பங்குப்பயிர் வளர்ப்போர்

ii. கைவினைஞர், கிராம மற்றும் குடிசைத் தொழில்கள் - இதில் கடன் தேவை ரூ.50000/-க்கு அதிகமில்லாமல் இருக்க வேண்டும்

iii. மத்திய அரசின் திட்டப்பயனாளிகள்

iv. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்

v. மாறுபட்ட வட்டிவிகிதத் திட்டப்பயனாளிகள்

vi. சுயஉதவிக்குழுக்கள்

ஆதாரம் : இந்திய ரிசர்வ் வங்கி

3.07692307692
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top