অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

செயலாளர் துறையின் பணிகள்

செயலாளர் துறையின் பணிகள்

  • மத்திய மன்றம், மத்திய மன்றக் குழு, ரிசர்வ் வங்கி அலுவலர் வருங்கால வைப்பு நிதி நிர்வகிப்பாளர்கள், ரிசர்வ் வங்கி அலுவலர் பொறுப்பு நிதி சம்பந்தமான கூட்டங்கள், அது சம்பந்தமான செயல்கள்
  • மூத்த நிர்வாகிகள் கூட்டங்கள், அது சம்பந்தமான செயல்கள்
  • துணை ஆளுநர்களது குழுக் கூட்டங்கள், அது சம்பந்தமான செயல்கள்
  • மேலே சொல்லப்பட்ட கூட்டங்களின் முடிவுகளை, மத்திய அலுவலகத்தின் சம்பந்தப்பட்ட துறைகளுக்குத் தெரியப்படுத்தல். மூத்த நிர்வாகிகளின் கூட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கியின் அனைத்துக் கிளைகளுக்கும் அறிவித்தல், அவைகளின் அமலாக்கச் செயல்பாட்டைக் கண்காணித்தல்
  • ஆளுநர் மற்றும் துணை ஆளுநர்களின் பணியில் சேர்தல், பணி ஓய்வு பெறுதல், பொறுப்புகளை ஒப்படைத்தலும் ஏற்றலும் ஆகியவை சம்பந்தமான பணிகள்
  • ஆளுநர், துணை ஆளுநர்களின் சேவை சம்பந்தமான விதிமுறைகள் சார்பான வேலைகள்
  • மத்திய மன்றம் (Central Board) / பிராந்திய மன்றம் (Local Board) அமைப்பது சம்பந்தமான பணிகள்
  • மேல்நிர்வாகத்திற்குத் தேவையான நிர்வாக உதவிகளை (பணியாளர்கள் உதவி உட்பட) அளித்தல்
  • IDMD, PRD போன்ற துறைகளை நிர்வகித்தல்
  • கணிணி, கணிணி சம்பந்தமான பொருட்கள், நகலனுப்பி, செல் போன்கள் மற்றும் கணிணி மென் பொருட்களை உயர் நிர்வாகத்திற்கும் உயர் மட்டக் குழுக்களுக்கும் அளித்தல்
  • அயல் நாடுகளிலிருந்து வரும் முக்கியஸ்தர்கள், பாராளுமன்றக் குழு உறுப்பினர்கள், உயர் நிர்வாக அதிகாரிகள், மத்திய மன்றத்தின் இயக்குநர்கள் போன்றவர்களுக்கு தேவையான வசதிகளையும் உதவிகளையும் செய்தல்
  • கருத்தரங்கம், ஆடிட்டோரியம், உயர் அதிகாரிகளின் உணவுக்கூடம், மிக மிக முக்கியஸ்தர்களின் விருந்தினர் மாளிகை இவைகளை அப்படிப்பட்டவர்கள் வருகைக்காக பதிவு செய்து பராமரித்தல்

ஆதாரம் : இந்திய ரிசர்வ் வங்கி

கடைசியாக மாற்றப்பட்டது : 6/20/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate