பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

வங்கி மேம்பாடு மற்றும் செயல் துறை

வங்கி மேம்பாடு மற்றும் செயல் துறை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பணிகள்

வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949, ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934 மற்றும் ஏனைய சட்டங்கள், வங்கியியல் செயல்முறை கொள்கைகள் ஆகியவற்றின்கீழ், இத் துறைக்கு வணிக வங்கிகளை ஒழுங்கீடு செய்யும் பொறுப்பு தரப்பட்டது. வங்கிகள் விதிகளின்படி பணம், சட்டபூர்வ தயார்நிலை ஒதுக்கீடுகள், தலைமைசெயல் அலுவலரை நியமித்தல் மற்றும் சில செயலாக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களும் இதில் அடங்கும்.

இத்துறை செம்மையான போட்டியுள்ள வங்கி முறைகளை மேம்படுத்தவும், ஊக்குவிக்கவும் உழைக்கிறது. இதற்காக போதுமான முதலீடு, வருவாயை கண்டுணர்தல், சொத்துக்களை இனம்பிரித்தல், கடன் மற்றும் இதர இழப்புகளுக்கு தொகை ஒதுக்குதல், முதலீட்டை மதிப்பீடு செய்தல், கணக்கியல்/வெளியே தெரிவித்தல் குறித்த நியமங்கள், சொத்து-பொறுப்பு மேலாண்மை, இடர் வரவு மேலாண்மை முறைகள் ஆகிய தொடர்பான விவேக ஒழுங்கீட்டு முறைகளை கொணர்கிறது. மற்ற முக்கிய பணிகளில் புது வங்கிகளுக்கு அனுமதி அளித்தல், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வங்கிகளின் விரிவாக்கம், துணை நிறுவனங்கள் அமைக்க மற்றும் புது நடவடிக்கைகள் மேற்கொள்ள வணிக வங்கிகளுக்கு அனுமதி அளித்தல், நலிந்த வங்கிகளை சீராக்க தொடர் நடவடிக்கை ஆகியவையும் அடங்கும்.

நடப்பு முக்கியத்துவம்

 • நிறுவன ஆட்சியியல்
 • வெளிப்படுத்தலின் விதிகள் பற்றிய விவாதக் கட்டுறைகள்
 • சொத்துக்களை சீர்திருத்தும் குழுமம்
 • பெரிய கடன்களை மறு அமைப்பு செய்தல்
 • வங்கி ஒழுங்கீட்டியல் சட்டத்தை திருத்துதல்
 • வங்கிகளுக்கான சர்வதேச கணக்கியல் நியமங்களை செயல்படுத்தல்
 • கடன் தொடர்பான செய்தி அறிவிக்கும் அலுவலகம்
 • புதிய போதுமான முதலீட்டு கட்டமைப்பு
 • நலிந்த வங்கிகளை புணரமைத்தல்
 • விவேக நியமங்களை, சர்வதேச நன்னடவடிக்கைகளும் ஒத்திருக்கும்வகையில் மேம்படுத்தல்
 • சட்ட சீர்திருத்தம்
 • காப்பீட்டு வணிகத்தில் வங்கிகளின் நுழைவு
 • மின்னணு வங்கியியல் ஒழுங்கீடு
 • தனியார் துறையில் புதிய வங்கிகள் துவக்க அனுமதி விதிமுறைகள்
 • நாட்டுடமையாக்கப்பட்டுள்ள வங்கிகளின் அரசு முதலீட்டைக் குறைத்தல்
 • வங்கி ஒளிவுமறைவின்மையில் முன்னேற்றம் செய்தல்

இத்துறை பின்வருவனவற்றை கவனிக்கிறது.

1. ரிசர்வ் வங்கியில் கணினிமயமாக்கல்

2. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பயன்பற்ற திட்டங்களை வடிவமைத்தல்,  வளர்த்தல்

3. வங்கிகளின் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கண்காணித்தல்

ரிசர்வ் வங்கியில் கணிணி மயமாக்கல்

ரிசர்வ் வங்கியின் ஆண்டுக் கணக்கில் விளைவு ஏற்படுத்தும் வங்கித்துறை (வைப்பு கணக்குகள் துறை, பொது கணக்கு துறை, பொதுக்கடன் அலுவலகம், மத்திய கணக்குப்பிரிவு) மற்றும் பணம் வழங்கல்துறை (பணக் கருவூலங்கள் நிர்வாகம் மற்றும் கணக்குகள்) எல்லா நடவடிக்கைகளையும் கணிணி மயமாக்க DIT ஒருமுனைப்பட்டு இயங்கி வருகிறது.

தகவல் தொழில் நுட்பத்துறை

இத்துறைகள் வாடிக்கையாளர் சேவைகளையும் அளிக்கின்றன. ஆகையால் இந்த துறைகளை கணிணி மயமாக்கல் என்பது சிறந்த உள்ளக வேலைகள் (Housekeeping) மற்றும் திறனுள்ள வாடிக்கையாளர் சேவைகளையும் சிறப்புறச் செய்யும் நோக்குடன் உள்ளது. இத்துறை மேற்கொண்ட கடமைகள் வன்பொருள் வாங்குதல், மென்பொருள் தயாரித்தல், அவைகளின் பரிசோதனை மற்றும் அவைகளின் தரத்தினை உயர்த்துதல் என்பன ஆகும். இக்கடமைகள் கிட்டத்தட்ட முழுஅளவு நிறைவேற்றபட்டாலும் தரம் உயர்த்தும் நடைமுறைகள் இன்னும் செயல்படுத்தவிருக்கிறது. சிறப்புத்துறைகளுக்கு அமைப்பின் தேவை குறித்த திட்டவிவரங்கள் (SRS) தயாரித்தல், புதுச் செயல் திட்டம் அளிப்பதை வேண்டுதல் (RFP), வெற்றிகரமாக திட்டங்களை அமல்படுத்த தேவையான மென்பொருள் தயாரித்தல் அல்லது வெளியிலிருந்து பெறுதல் ஆகியவற்றில் உதவுகிறது.

வங்கிகள், நிதிநிறுவனங்கள் பயன்படுத்த திட்டங்களை வடிவமைத்தல் மற்றும் வளர்த்தல்

செயலமைப்பை திறன்மிக்கதாக நேர்வழியில் உதவ ஏற்படுத்திக் கொண்டிருக்கும் திட்டங்கள் கீழ்கண்டவையாகும்:

ஏற்கனவே ஏற்படுத்திய திட்டங்கள்

 • நான்கு பெருநகரங்களில் (மும்பை, புதுடெல்லி, கோல்கொத்தா மற்றும் சென்னை) MICR காசோலை செயலாக்கம்
 • மின்னணு தீர்வு சேவைகள் (பற்று / வரவு) - ரிசர்வ் வங்கி அலுவலங்கள் உள்ள 15 மையங்கள் மற்றும் இந்திய ஸ்டேட் வங்கியின் மேலாண்மையிலுள்ள 30 மையங்கள்
 • மின்னணு நிதி மாற்றம் - நான்கு பெருநகரங்கள் மற்றும் ஹைதராபாத், அகமதாபாத், பெங்களூர் ஆகிய இடங்களில்

செயலாக்கத்தில் உள்ள திட்டங்கள்

 • இந்திய நிதி வலையமைப்பு (INFINET)
 • பங்கு தீர்வு முறைமை (SSS) மற்றும் உடன்பாட்டுத் தீர்வு முறை (NDS)
 • மையப்படுத்தப்பட்ட நிதி நிர்வாக முறை (eFMS)
 • வடிவமைக்கப்பட்ட நிதிசார்ந்த தகவல் தீர்வு வழி(SFMS)
 • உடனுக்குடனான மொத்த தீர்வுமுறை (RTGS)

கண்காணிப்பு

 • 70% வணிகத்தை கணிணி மயமாக்குதல்/வலைப் படுத்தல் என்ற மத்திய ஊழல்தடுப்புக் குழு (CVC) இட்ட இலக்கை அடைவதில் உள்ள முன்னேற்றம்
 • பெருநகரமல்லாத இடங்களில் காந்தமை காசோலை செயலாக்க மையங்களை ஏற்படுத்தல்
 • வன்பொருள், இயக்க அமைப்பு மற்றும் தொடர்பு மேடை ஆகியவற்றில் தர நிர்ணயத்தை மேற்கொள்ளுதல்
 • உள்முக மற்றும் வரம்பு கடந்து பன்முக தொடர்புகளுக்கான கட்டமைப்புகளை (மர/நட்சத்திர வடிவமைப்புகள்) மேம்படுத்துதல்.

ஆதாரம் : இந்திய ரிசர்வ் வங்கி

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top