অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

கடன்

கடன்

1. கடனுக்கான வட்டி வீதத்தை வரையறுப்பதில் ‘வங்கிகளின் தன்னுரிமை’ எனச் சொல்வதின் பொருள் யாது?

வங்கிகள், வழங்கும் கடன் வரம்பு ரூ 2 இலட்சத்திற்கு மிகுமானால், தங்கள் வங்கிகளின் மன்றக்குழு அனுமதியோடு முதன்மைக் கடன்வழங்கு வட்டிவீத அளவுக் குறியீட்டை (BPLR) முடிவு செய்யும் அதிகாரம் படைத்தவை. இதனையே தன்னுரிமை எனக் குறிப்பிடுகிறோம். வங்கிகள் BPLR ஐ அறிவிப்பதுடன் அதனை அனைத்து கிளைகளுக்கும் பொருந்தச் செய்யவேண்டும். வங்கிகள் தங்கள் சொத்து-கடன்மேலாண்மை குழுவிற்கு (ALCO) அதிகாரம் அளித்து வைப்புக்கணக்குகளுக்கும் கடன்களுக்குமென வட்டிவீதத்தை முடிவு செய்யும்படி பணிக்கலாம். அத்தகைய முடிவுகளை உடனடியாக தங்கள் மன்றக்குழுவிற்கு தெரிவிக்கவேண்டும். அத்தோடு வங்கிகள் ALCO மற்றும் மன்றக் குழுவின் ஒப்புதலோடு BPLR ஐ அதிகபட்ச வகையில் அறிவிக்கவேண்டும்.

2. (1) இதில் இடை நிலை முகமைகள் எவை? (2) வீடுகட்ட நிதிவழங்குவதில் இடைநிலை முகமை எவை?

இடைநிலை முகமைகள் குறித்த விளக்கமான பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

(1) நலிந்த பிரிவினருக்குக் கடன் வழங்கும் அரசு நிறுவனங்கள் @

(2) வேளாண் இடுபொருள் உபகரணங்கள் விநியோகிப்போர்கள்

(3) பெருமளவு மாநில அரசு நிதியுதவி நிறுவனங்கள் (SFCS), மாநில அரசு தொழில் மேம்பாட்டு நிறுவனங்கள் வழங்கும் கடன்கள், நலிந்த பிரிவினருக்கு நிதி உதவி செய்வன

(4) தேசிய சிறுதொழில் கழகம் (NSIC)

(5) கதர் மற்றும் கிராமியத் தொழில் ஆணையம் (KNC)

(6) அதிகாரப்பரவலாக்கல் அடிப்படையிலான பிரிவுகளுக்கு நிதி உதவி செய்யும் முகமைகள்

(7) வீட்டுவசதி நகர்ப்புற மேம்பாட்டு கழகம் (KNC)

(8) தேசிய வீட்டுவசதி வங்கி (NHB) யால் மறுநிதி வழங்க அஙகீகரிக்கப்பட்ட வீட்டுவசதி நிதி நிறுவனங்கள்

(9) தாழ்த்தப்பட்ட பட்டியல் இனத்தவர்/பழங்குடியினர் மேம்பாட்டிற்காக அரசால் நிறுவப்பட்ட நிறுவனங்கள். இந்நிறுவனங்களுக்கு இடுபொருட்களை வாங்கவும் விற்கவும் மற்றும் இந்நிறுவனங்களால் பயன்பெருவோரின் உற்பத்திப் பொருட்களை சந்தையில் விற்கும் செயலில் ஈடுபட்டுள்ளவை.

(10) சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் உதவி செய்யும் சிறு கடன் உதவி நிறுவனங்கள் / அரசாங்கமல்லாத அமைப்புகள் (NGO)

@ முன்னுரிமை பெறும் பிரிவில் நலிந்த பிரிவினர் என்பது கீழ்க்கண்டோரைக் குறிக்கும்

(i) ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறு, நடுத்தர உழவர்கள்/குடியானவர்கள். நிலமற்ற வேளாண் பாட்டாளிகள் குத்தகைதாரர்கள், விளைச்சலில் பங்குபெறுவோர்

(ii) தங்கள் தொழில்முன்னேற்றத்திற்கு ஒரு நபருக்கு ரூ 25000க்கு மேலாக கடனுதவி தேவைப்படாத, கிராமிய குடிசைத்தொழில் பாட்டாளிகள்.

(iii) சிறு நடுத்தர உழவர்கள் விளைச்சலில் பங்கு பெறுவோர் வேளாண் மற்றும் வேளாண்துறை சாராத பாட்டாளிகள்,ஊரகக் கைவினைஞர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் குடும்பங்கள் போன்றோர் இதன்வழி பயனடைபவர்கள், அவர்களது குடும்ப வருமானம் ஓராண்டிற்கு ரூ10000க்கு மிகாமல் இருக்கவேண்டும்.

(iv) பட்டியலினத்தவர் / பழங்குடி மக்கள்

(v) நகர்ப்புறம் அல்லது ஓரளவு நகர்ப்புற பகுதியில் வாழும் பயனடையக் கூடிய நபர்களின் குடும்ப வருமானம் ஓராண்டுக்கு எல்லா ஆதாரங்களிலிருந்தும் ஒட்டுமொத்தம் ரூ7200க்கு மிகாமலும், ஊரகப்பகுதியெனில் ரூ6400க்கு மிகாமலும் இருக்கவேண்டும். அவர்கள் சொந்த நிலம் உடையவர்களாக இருக்கலாகாது. நிலம் இருப்பின் அதன் அளவு நன்செய் எனில் ஒரு ஏக்கர் புன் செய் எனில் 2.5 ஏக்கரும் உடையவராய் இருக்கலாம். (இந்நிபந்தனை பட்டியலினத்தாருக்கும், பட்டியலினப் பழங்குடியினருக்கும்பொருந்தாது).

(vi) சுத்திகரிப்பாளர் விடுதலை மற்றும் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் பயனடைவோர் (SLRS)

(vii) ஊரக ஏழைமக்கள் கடன்பெற உதவும் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்கள்.

3. வங்கிகள் அவர்களால் தீர்மானிக்கப்பட்ட BPLR வட்டி வீதத்தைக் கருத்தில் கொள்ளாது வேறு வட்டிவீதத்தை செயல்படுத்த இயலுமா?

ஆம், BPLR வட்டி வீதத்தை கருத்தில் கொள்ளாமல் அதன் அளவுக்குறியீட்டை அடிப்படையாக ஏற்காமல் வேறு வட்டி வீதத்தை வங்கிகள் முடிவு செய்ய உரிமை பெற்றவை. கீழ்க்கண்ட கடன்களுக்கு அது பொருந்தும்.

I (அ) நுகர்வோருக்கான நீடித்து உழைக்கக் கூடியவைகளை வாங்கக் கடன் உதவி (ஆ) தனிப்பட்டவர்களுக்கு அவர்களது பங்குப் பத்திரங்கள், கடனீட்டுப் பத்திரங்கள், பத்திரங்கள் மீது கடன்கள் (இ) ஏனைய முன்னுரிமையில்லாப் பிரிவின் தனிப்பட்டோர் கடன் (ஈ) வைப்புக் கணக்கு/கள் கடன் பெறுவோர்/கள் வைப்புக் கணக்கு கடன்பெறுபவர் அல்லது கடன் பெறுபவர்கள் பெயர்/பெயர்களிலோ அல்லது கடன் பெறுபவர் வேறு ஒரு நபரோடு இணைந்து அவர்கள் பெயர்களிலோ இருந்தால் வங்கிகளில் உள்நாட்டு/NRE/FNCR(B) வைப்புக் கணக்கின்மேல் கடனோ அல்லது இருப்பிற்குமேலாக பணம் பெறும் வசதி (உ) இறுதியாகப் பயனடைவோர் மற்றும் முகவைகள் உள்ளீடு செய்வதற்கு,ஆதரவளிப்பவர்களாக இருக்கும் நிலையில் அத்தகையோருக்குக் கடன் வழங்கும் (வீட்டு வசதி நிதி உதவி தவிர) இடைநிலை முகமைகளுக்கு நிதி உதவி அளித்தல் (ஊ) இறுதியாக பயனடைவோருக்கு வீட்டுவசதி நிதி உதவி வழங்கும் இடைநிலை முகமைகளுக்கு வீட்டுவசதிக் கடன் அளித்தல் (எ) பில்களுக்குக் தள்ளுபடி போக பணம் வழங்கல் (ஏ) குறிப்பிட்ட வரவு கட்டுக்கோப்பிற்கு உள்ளடங்கி பொருட்களின் மீது வழங்கப்படும் கடன்/பணமாகக் கடன்/ இருப்பிற்கு மீறிய பண அளிப்பு.

II

குறித்தகாலக் கடன் வழங்கு நிறுவனங்களின் வட்டி- மறுநிதி உதவித்திட்டங்களின் கீழ் அடங்கும் எல்லாக் கடன்களும் BPLR.. அளவுக்குறியீட்டின் அடிப்படையை மீறி வங்கிகள் மறு நிதி உதவி வழங்கும் நிறுவனங்களின் (ஒப்பந்த வரையறை) அறிவுறுத்தலுக்கேற்ப வட்டி வீதத்தை மாற்றி அமைக்க உரிமை பெற்றவை.

4. வங்கிகள் பல்வேறு முதன்மைக் கடன் வழங்கு வட்டிவீத அளவுக்குறியீடுகளை (BPLR) மேற்கொள்வது முறையாகுமா?

ஆகாது. கால அளவு அல்லது எதிர்பாரா விளைவை எதிர்கொள்வதற்கான கட்டணம் போன்றவற்றைக் கவனத்திற்கொண்டு BPLR அடிப்படையில்தான் கடன் வழங்கு வட்டிவீதம் முடிவு செய்யப்படுகிறது. எனவே பல்வேறு BPLR தேவையில்லை.

5. செயல்திட்டங்களுக்கு கடன் உதவி செய்வதன்றி ஏனைய நோக்கங்களுக்கு கடன் உதவி செய்யும்போது மாறுதலற்ற வட்டிவீதக்கடன்கள் அளிக்கலாமா?

சொத்து பொறுப்பு மேலாண்மைக் குழுவின் (ALM) வழிகாட்டலின் அடிப்படையில் வங்கிகள் மாறுதலற்ற வீதத்திலோ அல்லது மாறுதலுக்குரிய வீதத்திலோ கடன்களை வழங்க உரிமை பெற்றவை.

6. தற்போதைய கடன்களுக்குத் திருத்தியமைக்கப்பட்ட BPLR முறை ஏற்புடையதா?

ஏற்புடையதே. மாறுதலற்ற வட்டிவீதக் கடன்கள் நீங்கலாகக் குறிப்பிட்ட காலக் கடன் உட்பட எல்லாக்கடன்களுக்கும் இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தும் ஆணைக்கிணங்க ஏற்புடைய வட்டி வீதத்தை விதிக்க வங்கிகளுக்கு உரிமையுண்டு. வங்கிகள் கடன் ஒப்பந்தத்தில் கீழ்க்கண்ட வாக்கியத்தைத் தவறாமல் சேர்த்து கடன் வழங்கவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

“இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது மாற்றியமைக்கும் வட்டி வீதத்திற்கேற்ப கடன் பெறுவோர் செலுத்த வேண்டிய வட்டி வீதம் செயல்முறைப்படுத்தப்படும்.”

7. ரூ. 2 இலட்சத்திற்குக் கூடுதலான கடன்களுக்கு வங்கிகள் BPLR க்குக் குறைவாக வட்டிவீதத்தை வசூலிக்கலாமா?

ஆம். தற்போது ரூ.2 இலட்சத்திற்குக் குறைவான கடன்களுக்கு BPLRக்கு மிகாமல் வட்டி வசூலிக்கவேண்டும் என்பது நடைமுறைப்படுத்தப்படுகிறது. ரூ. 2 இலட்சத்திற்கும் அதிகமான தொகைக்கு BPLRக்கு ஏற்புடைய பரவலான வழிகாட்டலுக்கேற்ப வட்டி வீதத்தை முடிவு செய்ய வங்கிகள் உரிமை பெற்றவை. பன்னாட்டுச் செயல்முறைகளை கவனத்தில் கொண்டு, வணிகமுறை வங்கிகளுக்கு வட்டி வீதத்தை அவர்களாகவே முடிவு செய்து கொள்ளத் தேவையான செயல்முறை நெகிழ்வுப் போக்கை மேற்கொள்ள அந்தந்த வங்கி ஒப்புதல் அளித்த வெளிப்படையான நடுநிலைதவறாக் கொள்கையின் அடிப்படையில், பொது நிறுவனங்கள் உட்பட ஏற்றுமதியாளர்களுக்கும் ஏனைய நம்பிக்கைக்குரிய கடன் பெறுவோருக்கும் வங்கிகள் BPLRக்குக் குறைவான வட்டி வீதத்தில் கடன் வழங்கலாம்.

8. வங்கி கூட்டிணைப்பு ஏற்பாட்டின் அடிப்படையில் தலைமை வங்கி வழங்கும் வீதத்திற்கு ஓப்ப வங்கிகள் அவர்கள் வெளியிடும் BPLRக்கு குறைவான வட்டிவீதத்தை வசூலிக்க அனுமதி உண்டா?

இல்லை. வங்கி கூட்டிணைப்பு ஏற்பாட்டின்படி வங்கிகள் ஓரே தன்மையான வட்டிவீதத்தைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு உறுப்பு வங்கியும் BPLRன்படி அவரவருக்கு ஒதுக்கப்பட்ட கடன் வழங்கு எல்லைக்குட்பட்ட அளவிற்கு வட்டிவீதத்தை வசூலிக்கவேண்டும்.

9. அபராத / தண்ட வட்டிவீதம் எப்படி இருக்கவேண்டும்?

அக்டோபர் 10 2000 முதல் வங்கிகள் தங்கள் இயக்குநர்கள் குழு ஒப்புதலோடு தண்ட வட்டிவீதம் தொடர்பாக சுதந்தரமாக வெளிப்படையான கொள்கையைப் பின்பற்றலாம் என்றும் முன்னுரிமைப் பிரிவுகளில் ரூ.2,500க்கு குறைவாக இருப்பின் அக்கடன்களுக்கு எவ்விதத் தண்டவட்டியும் விதிக்கலாகாது. கடனைத்திருப்பி அடைக்கத் தவறியவர்களுக்கும் நிறுவன நிதி. நிலமை குறித்த விபர அறிவிப்புப் பட்டியல் அனுப்பாதோர் போன்றோர்க்கும் தண்ட வட்டி விதிக்கலாம். ஆயினும் வெளிப்படையான கொள்கை, நியாயத்தன்மை கடன் அடைப்புக்கான ஊக்கத்தொகை,வாடிக்கையாளரின் நியாயமான சங்கடங்கள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு தண்டவட்டிக் கொள்கை செயல்படுத்தப் படவேண்டும்.

10. அக்டோபர் 18, 1994 முதல் ரூ. 2 இலட்சத்திற்கு மேலான கடன் தொகைகளுக்கான வட்டி வீதம் முன்பிருந்த நெறிமுறைகளுக்கு உட்பட்டதல்ல என அறிவிக்கப்பட்டதன் விளைவாக முன்னுரிமை வகை நிறுவனக் கடன்களுக்கு DICGC பொறுப்பு நிதிக்கட்டணத்தை வங்கிகள் வழங்கவேண்டுமா?

DICGC பொறுப்புறுதிக் கட்டணத்தைப் பொருத்தவரை நலிவுற்ற பிரிவுனர்களுக்கு வழங்கிய கடனைத் தவிர ஏனைய ரூ. 25000 க்கும் அதிகமாக கடனாகப் பெற்ற வாடிக்கையாளர்களின் கடன்களுக்கான பொறுப்புறுதிக் கட்டணத்தை ஏற்கவோ அல்லது கடன் பெறுபவர் கட்டவேண்டுமெனக் கூறவோ வங்கிகள் விருப்புரிமை பெற்றவை. ரூ. 25000 வரையிலான, நலிந்த பிரிவினருக்கான கடன்கள் உட்பட எல்லாக் கடன்களுக்கும் DICGC பொறுப்புறுதிக் கட்டணத்திற்கும் வங்கிகளே பொறுப்பேற்க வேண்டும்.

11. கடன்களுக்கான வட்டியை மாதந்தோறும் அல்லது ஆண்டுக்கு ஒருமுறை என வெவ்வேறு காலஅளவில் கட்டவேண்டுமென அறிவிக்கும் முடிவை வங்கிகள் எடுக்கலாமா?

ஏப்ரல் 1 2002 முதல் வேளாண் கடன் தவிர ஏனைய கடன்களுக்கு மாதந்திர அடிப்படையில் வங்கிகள் வட்டி வசூலித்து வருகின்றன. (குறுகிய காலக்கடன், அது தொடர்பான செயல்பாடுகள் உட்பட) இந்நிலையே தொடர்கிறது.

12. வங்கி ஊழியர்கள் அல்லது கூட்டுறவுக்கடன் வழங்கு சங்க ஊழியர்கள் ஆகியோருக்கு வழங்கும் கடன்களுக்கு என்ன வட்டி வீதம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

வங்கிகளின் வட்டிவீதம் குறித்த செயல்முறைக் கட்டணங்கள் பட்டியல், வங்கி தன் ஊழியர்களுக்கு வழங்கும் கடன்கள் பிற வசதிகள் ஏனைய நிதிசார் நலன்கள், புதுப்பித்தல் ஆகியவற்றிற்குப் பொருந்தாது. கூட்டுறவுக் கடன் வசதி சங்கங்கள் வங்கி ஊழியர்களால் தொடங்கப்பட்டு வங்கி ஊழியர்களுக்கு கடன் வசதி செய்யும் நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டிவீதம் குறித்த செயல்முறைக் கட்டணங்கள் பொருந்தாது.

ஆதாரம் : இந்திய ரிசர்வ் வங்கி

கடைசியாக மாற்றப்பட்டது : 7/16/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate