பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சிறு முதலீடு திட்டம்

சிறு முதலீடு திட்டம் குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

நம் வாழ்வில் நமக்கு லட்சியங்கள் அதிகம். அதை நிறைவேற்றும் முயற்சியை நாம் எடுக்க அன்றாடம் தவறுகிறோம். அந்த முயற்சியின் முதல் படி தான் இந்த சிறு முதலீட்டு திட்டம்.

“சிறு துளி பெருவெள்ளம்”என்று ஒரு பொன்மொழி உண்டு. அதற்கேற்ப நாம் செய்யும் சேமிப்பின் விகிதம் தான் மாதந்திர சிறு சேமிப்புத்திட்டம். நாம் வேலை செய்யும் காலத்தில் நமது வருமானத்திற்கேற்றார் போல் சேமிப்பை நாம் பழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

விலைவாசி உயர்ந்து கொண்டே வருவதனால், இன்றைய ஆடம்பர தேவைகளுக்கான செலவிடும் பணத்தை முதலீடாக மாற்றினால் நமது ஓய்வு காலத்தின் அத்தியாவசிய தேவைகளுக்கு உறுதுணையாக இருக்கும்.

சேமிப்புக்கான வழிமுறைகளும் விழிப்புணர்வும் அதிகமில்லாத அக்காலத்திலேயே நமது முன்னோர்கள் நிலம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்து வளத்தை பெருக்கினர். இன்றைய காலகட்ட்த்தில் சேமிப்பதற்கு பல வழிகள் உள்ளது, அதிலும் நமக்கு எளிதாக இருக்கும் மாதாந்திர முறையில் சேமிக்கும் திட்டங்கள் பல உள்ளது. உதாரணமாக, வங்கி Recurring Deposit, Post Office Deposit போன்றவை.

மாறிவரும் பொருளாதார சூழ்நிலையில் (Inflation adjusted return) பரஸ்பர நிதி (Mutual Fund SIP) திட்டத்தில் சேர்வதன் மூலம் நமது இலக்கை எளிதாக அடையலாம்.

பொருளாதா ர சூழ்நிலைக்கு தக்கவாறு திட்டமிட்டு முதலீடு செய்வதன் மூலம் குழந்தைகளின் மேற்ப்படிப்பு, நம்முடைய ஓய்வு ஊதியத்திற்கான கணிசமான தொகையை சேமித்துக்கொள்ள முடியும். நாம் செய்யும் ஒவ்வொரு சேமிப்பும் நம்முடைய பிற்கால அத்தியாவசிய தேவையை நிறைவேற்றும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

இந்த சிறு முதலீட்டுத்திட்டதில் பல வழிமுறைகள் உள்ளன. அதில் ஒன்று தான் பரஸ்பர நிதி(Mutual Fund).

பரஸ்பர நிதி திட்டம் (Mutual Fund)

சேமிப்பின் அவசியத்தை உணர்ந்த நம்மை போன்ற பொதுமக்களின் பணத்தை வசூலித்து அதனை பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதன் மூலம் ஈட்டும் லாபத்தை மீண்டும் முதலீட்டாளர்களுக்கு பிரித்து கொடுப்பதே பரஸ்பர நிதியாகும். பொதுவாக ஏற்ற இறக்கங்கள் கொண்ட பங்குச் சந்தையில் ஒரு சிறு முதலீட்டாளர் லாபம் அடைவது என்பது சற்று கடினமான விஷயம். அதே அவர் ஒரு பரஸ்பர நிதியின் மாதாந்திர சிறு முதலீட்டு திட்ட்த்தில் முதலீடு செய்வதால் பரஸ்பர நிதியின் நிர்வாக திறனாலும் திட்டமிட்ட முடிவினாலும் அவருடைய முதலீடு நன்கு வளர வாய்ப்புள்ளது.

மாதாந்திர சிறு சேமிப்பு திட்டம் (Systematic Investment Plan)

நாம் சேமிக்க திட்டமிடும் பணத்தை பிரதி மாதம் ஒரு குறிப்பிட்ட தேதியில் நேர்த்தியான முறையில் முதலீடு செய்வதே மாதாந்திர சிறு சேமிப்பு திட்டம் (Systematic Investment Plan).

நன்மைகள்

  • அத்தியாவசிய தேவைகள் போக மீதமிருக்கும் சிறிய அளவிலான பணத்தை கூட முதலீடு செய்யலாம். குறைந்த பட்ச முதலீடு ரூ.500ல் இருந்து தொடங்குகிறது.
  • பிரதி மாதம் ஒரு குறிப்பிட்ட தேதியில் முதலீடு செய்வதால் பங்கு சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் நமது முதலீட்டின் வளர்ச்சியினை பாதிக்காது. இதை Rupee cost averaging என்று கூறுவர்.
  • எதிர்பாராத பணத்தேவை ஏற்படும் போது இந்த முதலீட்டில் உள்ள பணத்தை திரும்ப பெறலாம்.

படம் ஆதாரம் : இந்திய ரிசர்வ் வங்கி

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

2.84848484848
மணிகண்டன் Sep 26, 2018 09:26 PM

இதை பற்றி நான் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top