பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / வங்கி மற்றும் தபால்துறை சேவை / தபால் துறை சேவை / தமிழக தபால் அலுவலகங்களில் செல்போன் மற்றும் சிறிய ‘ஃபிரிட்ஜ்' விற்பனை
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழக தபால் அலுவலகங்களில் செல்போன் மற்றும் சிறிய ‘ஃபிரிட்ஜ்' விற்பனை

தமிழக தபால் அலுவலகங்களில் இனிமேல் செல்போன் மற்றும் சிறிய ‘ஃபிரிட்ஜ்' வகைகள் வாங்கலாம்

செல்போன்

காலத்துக்கு ஏற்ப தபால் துறை பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தபால் அலுவலகங்களில் தனியார் நிறுவனங்களின் பொருட்களை விற்பனை செய்யும் திட்டமும் அதில் ஒன்று. தமிழகத்தில் உள்ள பல்வேறு தலைமை தபால் நிலையங்கள், முக்கிய தபால் நிலையங்கள் என சுமார் 400 இடங்களில் செல் போன் விற்பனையை தமிழக அஞ்சல்துறை தொடங்கியது.

தபால் நிலையங்களில் செல் போன் விற்பனை தொடங்கியது முதலே அவை விறுவிறுப்பாக விற்பனையாகி வருகின்றன. ஒரு மாதம் ஆவதற்குள்ளாகவே, 4,800-க்கும் அதிகமான செல்போன்கள் விற்பனையாகியுள்ளன. செல்போன்களை வாங்குவதற்காக ஏராளமானோர் வருகின்றனர். நாடு முழுவதும் பரவலாக இந்த செல்போன்களுக்கு நல்ல மவுசு இருப்பதால், அவற்றை சப்ளை செய்யும் நிறுவனத்தால் அதற்கேற்ப ஈடுகொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த செல்போன்களின் விலை குறைவு (ரூ.1999) என்பதாலும், அதில் 2 சிம்கார்டுகளைப் பயன்படுத்த முடியும் என்பதாலும், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ‘பிரீபெய்ட் சிம்’, 2 ஆயிரம் நிமிட இலவச ‘டாக்-டைம்’ உடன் தரப்படுவதாலும் அதை அனைவரும் விரும்பி வாங்குகின்றனர்.

இதுபோன்ற, தனியார் நிறுவனங்களின் தயாரிப்புகளை நாங்கள் விற்றுத் தருகிறோம். அதற்கான கமிஷன் தொகையை அந்நிறுவனங்கள் தருகின்றன. தரமான நிறுவனங்களின் தயாரிப்புகளை மட்டுமே அங்கு விற்பனை செய்கின்றனர். விருப்பமுள்ளோர், அருகில் உள்ள தலைமை தபால் நிலையங்களை அணுகலாம்.

இன்வர்ட்டர் ‘ஃபிரிட்ஜ்’

இதேபோல, தபால் நிலையங்களில் விற்கப்படும் சிறிய (9 கிலோ) ‘சோட்டுக்கூல்‘ ஃபிரிட்ஜ்களின் விற்பனையும் சற்று அதிகரித்துள்ளது. பெட்டிக் கடைக்காரர்கள், ஒரே வீ்ட்டைப் பகிர்ந்து வசிக்கும் கல்லூரி மாணவ-மாணவியர், இளம் சாப்ட்வேர் துறையினர் போன்றோர் அதனை விரும்பி வாங்குகின்றனர். மேலும், இன்வர்ட்டர் மூலமாகவும் அதை இயக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. இவை பல்வேறு வண்ணங்களில் ரூ.5300 முதல் ரூ.6,000 வரையிலான விலைகளில் கிடைக்கும். சூரியமின்சக்தி விளக்குகளும் ரூ.500 முதல் விற்கப்படுகின்றன.

கல்லூரி புத்தகங்கள்

இதுதவிர, அண்ணா பல்கலைக் கழகம், ஐஐடி, சென்னைப் பல் கலைக்கழகம் போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்களில் உள்ள தபால் அலுவலகங்கள் மூலம் அங்கு பயிலும் வெளியூர் மாணவர்களின் புத்தகங்களை ‘பேக்’ செய்து அவர்களது வீடுகளுக்குப் பாதுகாப்பாக அனுப்பப்படுகின்றன.

ஆதாரம் : தலைமை தபால் அலுவலகம், சென்னை.

3.03703703704
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top