பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மின்னணு வங்கிச் சேவை

மின்னணு வங்கிச் சேவை குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

மின்னணு வங்கிச் சேவை (E-Banking) என்பது 'மைய வங்கிச் சேவையில் ஒரு கூடுதல் சிறப்பாகும். வாடிக்கையாளர்கள், தங்களுக்கு வசதியான நேரங்களில் இணைய தளம் வாயிலாக வங்கிப் பரிவர்த்தனைகளை செய்து கொள்ள ஏதுவாக இந்தச் சேவை அமையும். தற்போது வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வந்துதான் எந்தவித வங்கிப் பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள முடிகிறது. வங்கியில் ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கோ அல்லது மற்றொரு வங்கியில் உள்ள கணக்கிற்கோ நிதி மாற்றம் செய்வதற்கு, பணம் எடுக்கும் படிவம் காசோலை வாயிலாக கணக்கில் பற்று வைத்து, பணம் செலுத்தும் படிவம் வாயிலாக மற்றொரு கணக்கில் வரவு வைக்கும் நிலையே தற்போது உள்ளது. ஆனால், மின்னணு வங்கிச் சேவை வாயிலாக தன்னுடைய இடத்தில் இருந்து கொண்டே இணைய தளம் வாயிலாக இவ்வித பரிவர்த்தனைகளை வாடிக்கையாளர் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

மின்னணு வங்கிச் சேவையின் பலன்கள்

தங்கள் கணக்கிலிருந்து தமிழ்நாடு மாநில தலைமை வங்கியில் (TNSC) உள்ள மற்றொரு கணக்கிற்கு நிதி மாற்றம் செய்யும் வசதியை வாரம் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

TNSC வங்கியில் இருந்து மற்ற வணிக வங்கிகளில் உள்ள கணக்குகளுக்கு நிதி மாற்றம் செய்வதற்கு வங்கியின் வேலை நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நிகழ்நேர மொத்தத் தீர்வு மற்றும் தேசிய மின்னணு பரிமாற்றம் (RTGS / NEFT) முறைகள் வாயிலாக தங்கள் பரிவர்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ள இயலும்.

ஒருங்கிணை அமைப்புகளுக்கான வங்கிச் சேவை (Corporate Banking)

வங்கியின் 'ஒருங்கிணை அமைப்பு’ (Corporate Banking) வாடிக்கையாளர்களான மாவட்ட மத்திய மற்றும் நகரக் கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், இதர தலைமைக் கூட்டுறவுச் சங்கங்கள், கூட்டுப் பங்கு நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களுக்கான ஒருங்கிணை அமைப்பு வங்கியியற் சேவை இந்தப் பயன் கருவியின் (E-Banking Application) வாயிலாக வழங்கப்படும்.

ஒவ்வொரு ஒருங்கிணை அமைப்பு வாடிக்கையாளருக்கும் (Corporate customers) நிறுவன அடையாளம் (Corporate ID), நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்று கணக்கை இயக்குவோருக்கான பயனாளர் அடையாளம் மற்றும் அனுமதிச் சொல் (User ID and password) தனித்தனியே வழங்கப்படும். இவற்றைப் பயன்படுத்தி தங்கள் பரிவர்த்தனைகளை அவர்கள் பாதுகாப்புடன் நிறைவேற்றிக் கொள்ளலாம். இத்தகைய அங்கீகரிக்கப்பட்ட பயனாளிகளின் பணிகளை கண்காணிக்கவும், உரிய அறிக்கைகளை வங்கியின் நிர்வாகத்திற்கு சமர்ப்பிக்கவும் ஒரு நிர்வாகப் பொறுப்பாளரை (Local Administrator) ஒவ்வொரு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியும் நியமிக்க வேண்டும்.

வழங்கப்படும் சேவைகள்

 • தங்கள் கணக்கின் விவரங்களைக் கணினியில் கண்டு, கணக்கில் உள்ள இருப்புத் தொகை அறிந்து கொள்ளுதல்,
 • கணக்கின் விவர அறிக்கையை (Statement) தகவல் இறக்கம் (Download) செய்துகொள்ளுதல்.
 • TNSC வங்கியில் உள்ள கணக்குகளுக்கும் மற்றும் வணிக வங்கியில் உள்ள கணக்குகளுக்கு RTGS NEFTவாயிலாக நிதி மாற்றம் செய்தல்.
 • நிலுவையில் உள்ள பரிவர்த்தனைகள் (Pending transactions) பற்றிய நிலையை அறிந்து கொள்ளுதல்.
 • RTGS / NEFT பரிவர்த்தனைகளின் நிலையை அறிந்து கொள்ளுதல்.

பயனுறும் ஒருங்கிணை அமைப்புகள்

 1. மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள்
 2. நகரக் கூட்டுறவு வங்கிககள்
 3. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள்
 4. தலைமைக் கூட்டுறவு சங்கங்கள்
 5. கூட்டுப் பங்கு நிறுவனங்கள் (Joint Stock Companies)
 6. கூட்டாண்மை நிறுவனங்கள் (Partnership Firms)

நிறுவனத்தின் பயனாளிகளுக்கான செயல்பாட்டு அமைப்பு முறை

மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் தலைமைக் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகள்

 1. உதவியாளர் காசாளர் (பரிவர்த்தனையை ஆரம்பித்தல்)
 2. அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்கள் ((பரிவர்த்தனையை அங்கீகரித்தல்)

 

கணக்கை இயக்கும் வழிமுறைகள்

 1. இணையதளத்தைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகள் மேற்கொள்ள முதல்கட்டமாக ஒவ்வொரு பயனாளிக்கும் தனிப்பட்ட பயனாளர் அடையாளம் (User ID) மற்றும் 'அனுமதிச் சொல் (password) ஒதுக்கீடு செய்யப்படும்.
 2. அத்தகைய பரிவர்த்தனைகளை அனுமதிப்பதற்கும், அங்கீகரிக்கவும் தனித் தனியே ஒரு அனுமதிச் சொல் (password) ஒதுக்கீடு செய்யப்படும்.
 3. வாடிக்கையாளர்களுக்கான பரிவர்த்தனை நிதி வரம்புகள் அவர்களது தேவைகளுக்கு ஏற்ப வங்கியால் இறுதி செய்யப்படும்.
 4. இணையதள பயன் கருவியில் வங்கியின் மின்னணு வங்கிச் சேவையின் இணையதள முகவரியான https://www.tnscbank.net என்பதனை தட்டச்சு செய்திட வேண்டும்.
 5. கணினியின் திரையில் தோன்றும் இணையதள பயன்கருவி முகப்பில் பயனாளர் அடையாளத்தை (User ID) பதிவு செய்ய வேண்டும். பிறகு தோன்றும் திரையில் அனுமதிச் சொல்லைப் (Password) பதிவு செய்ய வேண்டும்.
 6. அதன் பின்னர் வெளிப்படும் திரையில் வங்கியின் அனைத்து சேவைகளுக்கான பட்டியல் காணப்படும். வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப வங்கிப் பரிவர்த்தனைகளை உதவியாளர்கள் ஆரம்பித்து வைக்க வேண்டும்.
 7. அதன்பின்னர், அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்கள் தங்களுடைய பயனாளர் அடையாளம் மற்றும் அனுமதி சொல்லை உபயோகித்து அத்தகைய பரிவர்த்தனைகளை அங்கீகரிக்க வேண்டும்.
 8. தங்களது கணக்கு விவர அறிக்கையை (Account Statement) தகவல் இறக்கம் (Download) செய்து, அச்சுப் படிவம் எடுத்துக் கொள்ளலாம்.

அனுமதிச் சொல் பாதுகாப்பு

 • மற்ற எவருடனும் தங்களுடைய அனுமதிச் சொல்லை பகிர்ந்து கொள்ளக் கூடாது.
 • அவ்வப்போது அனுமதிச் சொல்லை மாற்றிக் கொண்டே இருத்தல் வேண்டும். அவை நினைவில் நிறுத்திக் கொள்ள உகந்தவையாகவும், மற்றவர்களால் யூகிக்கப்பட முடியாததாகவும் இருத்தல் வேண்டும்.
 • அனுமதிச் சொல்லை எழுத்துப் பூர்வமாக பதிவு செய்து வைத்தல் கூடாது.

பொது அம்சங்கள்

 • இந்தச் சேவையினைப் பெற, முறையான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
 • இந்தச் சேவையினை அமல்படுத்த ஒவ்வொரு மத்தியக் கூட்டுறவு வங்கிக்கும் தனியே ஒரு புதிய கணக்கு, தலைமைக் கூட்டுறவு வங்கியில் துவங்கப்படும். ஒவ்வொரு நாளும் காலையில் மத்தியக் கூட்டுறவு வங்கியின் முதன்மைக் கணக்கிலிருந்து-புதிய கணக்கிற்கு நிதி மாற்றம் செய்து கொள்ள வேண்டும். அனைத்து பரிவர்த்தனைகளும் முடிந்த பிறகு அன்று மாலையில் புதிய கணக்கில் உள்ள இருப்புத் தொகையை முதன்மைக் கணக்கிற்கு மாற்றம் செய்து விட வேண்டும்.
 • மத்தியக் கூட்டுறவு வங்கிக் கிளையின் வாடிக்கையாளர்கள் பயன் பெறும் வகையில் RTGS / NEFT வாயிலாக உள் வரும் நிதி பரிவர்த்தனைகளைக் (nward Remitances) கையாள்வதற்கு என தனித்தனியே ஒவ்வொரு கிளைகளுக்கும் மற்றொரு கணக்கு துவங்கப்படும்.
 • வங்கிகளுக்கு இடையேயான கணக்குகளை எளிதாக சீர் செய்து கொள்ளும் விதமாக X (Reconciation), ஒருங்கிணை அமைப்புகள் ஒவ்வொரு பரிவர்த்தனையையும் தனித்தனியேகையாள வேண்டும்.

நடப்புக் கணக்கு துவங்கும் முறை மற்றும் மின்னணு வங்கிச் சேவையைப் பயன்படுத்துதல்

 • TNSC வங்கியில் கணக்கு துவங்குவதற்கான வங்கி நிர்வாக அவையின் தீர்மானம் (Board Resolution).
 • முறையாக பூர்த்தி செய்யப்பட்டு, கையொப்பத்துடன் ஒப்படைக்கப்பட்ட விண்ணப்பப் படிவம் (Current ACCount Opening Form).
 • கணக்கு இயக்குவதற்கு அங்கீகரிக்கப்பட்டவர்களின் (Authorised Officers) பட்டியல் மற்றும் அவர்களது புகைப்படங்கள்.
 • நிறுவனத்தின் பதிவுச்சான்றிதழின் நகல் (Copy of Registration Certificate).
 • சம்பந்தப்பட்ட அமைப்பின் முதன்மை வைப்புத் தொகையாக ரூ.500/-க்கான சென்னையில் மாற்றக் கூடிய ஒரு கேட்பு வரைவோலை,
 • முறையாகப் பூர்த்தி செய்யப்பட்டு, கையொப்பத்துடன் கூடிய மின்னணு வங்கிச் சேவைக்கான 65latioT600TL Lig6.jn (E-Banking Application)
 • . மின்னணு வங்கிச் சேவையினை கையாள்பவரின் பட்டியல் (Assistant / Cashier / Authorised Officers).
 • நிறுவனத்தின் மின்னணு வங்கிச் சேவை நிர்வாகப் பொறுப்பாளரின் (Local Administrator) பெயர் மற்றும் விவரங்கள்.
 • ஒருங்கிணை அமைப்பின் மின்னஞ்சல் அடையாளம் (Corporate Email ID) உட்பட அனைத்து பயனாளர்களின் மின்னஞ்சல் அடையாளங்கள் (User's email ID).
 • இணையதள இணைப்புடன் (internet facity) கூடிய தனியுடைமைக் கணினி.
 • நம்பகத் தன்மை மற்றும் நிர்ணய விதிமுறைகளுக்கு உட்பட்ட (static IP) இணைய தள இணைப்பு முகவரி

போன்றவற்றை தலைமைக் கூட்டுறவு வங்கியில் சமர்ப்பித்து வங்கிக் கணக்கினைத் தொடங்கி இந்தச் சேவையினை (E-Banking) பெற்று பரிவர்த்தனைகளை நடத்திக் கொள்ளலாம்.

கடன் வசூல்

தொடக்க கூட்டுறவுக் கடன் சங்கங்கள் வழங்கும் கடன்களை உரிய காலக்கெடுவுக்குள் வசூலிக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். ஒவ்வொரு கடன்தாரருக்கும் கடன் தவணைக்கெடு தேதியையும், அத்தேதியில் அவர் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன்தொகையில் அசல் மற்றும் வட்டித்தொகையையும் குறிப்பிட்டு, நேரிலோ அல்லது தபால் மூலமோ நினைவூட்டி, கடன்தவணைத் தொகையை உரிய காலக்கெடுவுக்குள் வசூலிக்க வேண்டும். குறிப்பாக பண்ணை சாராக்கடன்களை உரிய கெடு தேதிக்குள் வசூலிப்பதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். தவணைக் கெடு தேதி முடிந்து மூன்று மாதங்களுக்கு மேல் அசல் மற்றும் வட்டித் தொகையைத் திரும்பச் செலுத்த தவறிய உறுப்பினர்களின் கடன் கணக்கை உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்து சம்பந்தப்பட்ட சரக துணைப்பதிவாளரிடம் தாவா தொடர்ந்து தீர்ப்பாணை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். தீர்ப்பாணை பெறப்பட்டதும், உடனடியாக அத்தீர்ப்பாணைப்படி தொகையை வசூலிக்க நிறைவேற்று மனு சரக துணைப்பதிவாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும். நிறைவேற்று மனுக்களில் தாமதமின்றி நடவடிக்கையெடுத்து கடன் தொகை வசூலிக்கப்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தாவா தொடர்வதிலோ அல்லது நிறைவேற்று மனு தாக்கல் செய்வதிலோ காலதாமதம் ஏற்பட்டு கடன் தொகை வசூலிக்க முடியாமல் காலாவதியாகிவிட்டால் அதனால் ஏற்படும் இழப்புக்கு வங்கித் தலைவரும் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களும் பொறுப்பாக்கப்பட்டு அவர்களிடமிருந்து தொகை வசூலிக்க நேரிடும்.

ஆதாரம் : தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம், சென்னை

Filed under:
2.88888888889
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top