பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / ஸ்மார்ட் நகரங்கள் / நவீன நகரங்கள் எதிர்கொண்டுள்ள சவால்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

நவீன நகரங்கள் எதிர்கொண்டுள்ள சவால்கள்

நவீன நகரங்கள் எதிர்கொண்டுள்ள சவால்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

மத்திய அரசு நாடு முழுவதும் சர்வதேச நகரங்களுக்கு இணையாக 'ஸ்மார்ட் சிட்டி' எனப்படும் 100 நவீன நகரங்கள் உருவாக்கல் திட்டம் 'அம்ருத்' எனப்படும் நகர்ப்புற உருமாற்றம் மற்றும் புத்துயிர் அளித்தல் திட்டம் அனைவருக்கும் வீடு வழங்கும் ‘பிரதமர் அவாஸ்' திட்டம் (பி.எம்.ஏ.ஒய்.) ஆகிய மூன்றுக்கும் முக்கியத்துவம் தந்து அதிரடி ஏற்பாடுகளை செய்து வருகிறது.

நவீன நகரங்கள்

 • ஸ்மார்ட் சிட்டிகளில் உலகத்தரம் வாய்ந்த சாலை வசதி, 24 மணிநேர மின்வசதி, குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள், தகவல் தொழில்நுட்பத்தை பெருமளவில் பயன்படுத்தி, இந்த நகரங்களில் தொழில் வாய்ப்புகளும் அதிகரிக்கப்பட உள்ளது.
 • ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு மேல் இருக்கும் நகராட்சிகளில், அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த, 'அம்ருத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நகரங்கள் எதிர்கொண்டுள்ள சவால்கள்

 • பி.எம்.ஏ.ஒய், திட்டம், நகர்ப்புற ஏழை மக்களுக்கு, சிறப்பான, வசிக்கத்தக்க வீடுகள் கிடைக்க உதவி செய்யும். 'அம்ருத், "பி.எம்.ஏ.ஒய், திட்டங்கள், தற்போதுள்ள நகரங்கள், நவீன நகரங்களாக உருவெடுக்க வகை செய்யும்.
 • நவீன நகரங்கள் திட்டப்படி, பல்வேறு மாநிலங்களில் தெரிவு செய்யப்பட்ட 100 நகரங்களில், வாழ்க்கைத் தரம் உயர்த்தல், தரமான உள்கட்டமைப்பு ஏற்படுத்தப்படும்.
 • நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் வசதிகள் மற்றும் மென்பொருட்களைக் கொண்டு, நிர்வாகம் மற்றும் தீர்வுகாணுதல், நீடிக்கத்தக்க, சுத்தமான சுற்றுச்சூழல் உருவாக்குதல் போன்றவை சாத்தியமாக்கப்படும்.
 • எம்.ஏ.ஒய், திட்டத்தின் கீழ், பொருளாதார ரீதியில் பின்தங்கியோர் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு, வீடுகள் கட்டித் தரப்படும். இதன்மூலம் இந்தியப் பொருளாதாரம் மேலும் வளர்ச்சி அடையும்.
 • தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகில் உள்ள பொன்னேரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள் ஸ்மார்ட் சிட்டி அமைய உள்ள பகுதிகளாக தேர்வு செய்யப்பட்டு அதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன.
 • ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு செய்யப்படும் நகரத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, தண்ணீர், மின்சாரம், கழிவுநீர் மேலாண்மை, ஆரோக்கியமான கல்வி, இயற்கை வளங்களை பொறுப்பாக பயன்படுத்துவது, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது, நிதிசேவை மையங்கள், வர்த்தக மற்றும் பொருளாதார வளர்ச்சியை உறுதிபடுத்துவது, முதலீடுகளை ஈர்ப்பது போன்ற திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
 • ஸ்மார்ட் சிட்டி அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதியின் வருவாய், சுகாதார நிலை, இயற்கை வளம், மின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வசதி, தொழில் அமைப்பதற்கான சாத்திய கூறுகள், தொழில்நுட்ப வசதிகள் மற்றும் மனித ஆற்றல் போன்றவை குறித்து முதலில் ஆய்வு செய்யப்பட உள்ளது.
 • வேலைவாய்ப்பு, உள்நாட்டு தேவைகள் மற்றும் ஏற்றுமதி பெருகும். சென்னை ஏற்கனவே ஆட்டொமொபைல் துறையின் முக்கிய உற்பத்தி மையமாக இருப்பதால் இதனடிப்படையில் முதலீடுகள் வருவதும் எளிது.
 • உற்பத்தி சார்ந்த தொழிற் சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தற்போதைக்குச் சுமார் 25 தொழில்கள் வரை அடையாளம் காணப்பட்டுள்ளன.
 • இதன் மூலம் தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முடியும். அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் அரசாங்கம் அதிக அக்கறை காட்டிவருகிறது. இதை ஒட்டி தொழில் பாதையும் அமைய வாய்ப்புள்ளதால் புதிய வேலைவாய்ப்புகள் பெருகும்.
 • மேலும் உற்பத்தியல்லாத 40% தொழில்கள் ஊக்குவிக்கப்படும் என்பதால் ஐ.டி. மற்றும் சேவைத் துறை சார்ந்த தொழில்கள் வளரவும் வாய்ப்புகள் உருவாகும்.
 • சுமார் 60% வரை உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கும், சேவை மற்றும் பிற தொழில் நிறுவனங்களுக்கு 40% இடம் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பும் உள்ளது.
 • உலகத்தர சாலை வசதி, 24 மணி நேரமும் மின் வசதி, குடிநீர், சுகாதாரம், மருத்துவம் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மக்கள்தொகை, இயற்கை அமைப்பு போன்றவற்றின் அடிப்படையில் அமைக்கப்படும். அதுபோல, தகவல் தொழில்நுட்பம், தொழில் வாய்ப்பிற்கும், இந்த நகரங்களில் அதிக வாய்ப்பு ஏற்படுத்தப்படும். வாழ்க்கைத் தரம் நகரங்களை உருவாக்குவது நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் உள்ளடக்கியது.
 • இந்த ஸ்மார்ட் சிட்டி உருவாக்கத்தின் மூலம் மென்பொருள் துறைக்கு அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு 3000 கோடி டாலர் முதல் 4000 கோடி டாலர் மதிப்பிலான தொழில் வாய்ப்புகள் உருவாகும். இதன் நோக்கம் ஸ்மார்ட் சிட்டியின் பிளானில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதாக இருக்கும்.
 • உள்கட்டமைப்பு, சமூக உட்கட்டமைப்பு சுற்றுச்சூழல் உட் கட்டமைப்பு, நிர்வாக உட்கட்டமைப்பு வாய்ப்புகள் உருவாகும்.
 • நகரில் உள்ள அனைத்து மக்களுக்கும் 100 சதவீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி உறுதி செய்யப்படும்.
 • 100 சதவீதம் சூரிய ஒளி, காற்றாலை மின்சக்தியுடன் கூடிய முழு நேர மின் விநியோகம் உறுதி செய்யப்படும்.
 • அனைத்து மக்களுக்கும் போதுமான சுகாதார வசதி ஏற்படுத்தி தரப்படும். அனைத்து மக்களுக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்ட வசதி செய்து தரப்படும்.
 • குடிசையில் வாழும் அனைத்து மக்களுக்கும் வீட்டு வசதி செய்யப்படும்.
 • நகரத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் கணிணி மயமாக்கப்பட்டு ஆன்லைன் மூலம் புகார்கள் பெற்று தீர்வு காணப்படும்.
  அனைத்து வீடுகளுக்கும் குடி நீர், கழிவறை வசதி செய்யப்படும். போக்குவரத்து, சுகாதாரம், மருத்துவ வசதி செய்யப்படும்.
 • 15 ஆயிரம் வீடுகளுக்கு ஒரு மருத்துவமனை அமைக்கப்படும். 'தீ தடுப்பு வசதி, தொலைத் தொடர்பு வசதி, மழை நீர் சேகரிப்பு வசதி என ஸ்மார்ட் சிட்டிக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்படும்.

ஒருங்கிணைந்த வசதிகள் ஒரே சமயத்தில் ஏற்படும்போது நகரம் முழுமையடைந்த நகரமாக மாறும் வாய்ப்பும் உள்ளது. தூய்மையான குடிநீர், சுகாதாரம், பூங்காக்கள், பொழுதுபோக்கு மையங்களும் ஸ்மார்ட் சிட்டியில் தேவை. அமைக்கப்படும் ஸ்மார்ட் சிட்டியில் தொழில் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் கட்டுமான நிறுவனங்களிடம் உள்ளது.

ஸ்மார்ட் சிட்டியில் பொருட்களை சந்தைப்படுத்துவதற்குத் தேவையான வசதிகளைச் செய்தாலே போதும், ஆட்டோமொபைல், விவசாயம், சேவைத் துறை, கட்டுமானத் துறை எல்லாத் துறைகளும் வளர்ச்சியடையும். இந்தத் திட்டங்களை நிறைவேற்ற ரூ.98 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் குடிநீர், மின்சாரம், கழிவுநீர் மேலாண்மை, மழைநீர் வடிகால், போக்குவரத்து, மரங்கள் வளர்ப்பு உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த வேண்டும் என்பதே இந்த இரண்டு திட்டங்களின் முக்கிய நோக்கம் ஆகும். அதுமட்டுமல்லாமல் வர்த்தகம் செய்வதற்கும் முதலீடு செய்வதற்கும் உகந்த நகரமாக மேம்பாடு அடையும். இதனால் ஏழைகளும் பயன்பெறுவர்.

வளர்ச்சிக்கு உதவும் திட்டம்

 • சவால்களையும் மீறி இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டம் நகர வளர்ச்சிக்கும், ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சிக்கும் வழி வகுக்கும் என்பது உண்மை. ஸ்மார்ட் சிட்டி அமைப்பதன் நோக்கமே சென்னை போன்ற பெருநகரங்களுக்கு மக்கள் படை எடுப்பதை தடுப்பது தான்.
 • இருபத்து நான்கு மணி நேர குடிநீர் சப்ளை, தடையில்லா மின்சாரம், மேம்படுத்தப்பட்ட விரைவான சாலை, ரயில், தண்ணீர் போக்குவரத்து வசதி, திட, திரவ கழிவு மேலாண்மை, ஏழைகளுக்கு வாங்கக்கூடிய விலையில் வீடுகள் என இன்னும் பல வசதிகளை ஸ்மார்ட் சிட்டி கொண்டிருக்கும்.
 • மழை நீர் வடிகால், பாதாள சாக்கடை, சோலார் தெருவிளக்கு, திடக்கழிவில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டங்கள், தடையற்ற மின்சாரம், ஒருங்கிணைந்த தடையற்ற குடிநீர் விநியோகம், ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள் ஏற்படுத்த வேண்டும்.
 • மல்டி லெவல் பார்க்கிங், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள், சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்கள், கட்டிடக்கழிவு மறுசுழற்சி, தொழில் பூங்கா மற்றும் வர்த்தக பூங்கா, சுகாதார மேம்பாடு, சுற்றுச்சூழல் மற்றும் பசுமைப்பூங்கா உருவாக்குதல் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். நாட்டில் உள்ள நகரங்களை சிங்கப்பூர், ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ளதுபோல சர்வதேச தரத்துக்கு மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும், 100 ஸ்மார்ட் சிட்டிகள் அமைக்கப்படும் என்றும் 500 நகரங்கள் அனைத்து வசதிகளுடன் புதுப்பிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

Filed under:
2.72727272727
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top